"சார் post"!!  

Posted by Matangi Mawley


வெகு நாட்களுக்குப் பிறகு அப்பா ஒரு forward mail அனுப்பினார் ! Reply செய்ய வேண்டும் என்று துவங்கி- அந்த பதில் ஒரு article ஆக மாறிப்போனது. ஆங்கிலத்தில் நான் எழுதிய அந்த பதிலை தமிழ் படுத்த முயற்சித்துப் பார்த்தேன். என் தமிழ் மொழி அறிவை இன்னும் "எவ்வளவு" வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்தியது அந்த முயற்சி! ஆனாலும் இந்த விஷயத்தை என்னால்- "மைத்துளிகள்" இல், ஆங்கிலத்திலாவது பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அப்பா அனுப்பிய "Forward":

---------- Forwarded message ----------
> From: *mahalingam v*
On 5/21/12, mahalingam v wrote:
> கிட்டத்திட்ட  ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து என் நண்பர்குழாமில் உள்ள
> சிலருக்கு இந்த மெயில்- ஐ forward  செய்துகொண்டிருக்கிறேன்..சிலரி
ன்
> re-actions களும்  நீ பார்க்கலாம் 

> -Subject:: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் !!!!! - A thought provoking
> article.
>
>
மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம்
இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது
திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு
கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...
சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்தமனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவலநிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின்தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலுமாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமேவேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர்  செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’ ‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல ண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு  பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க
கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு
தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி
போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன். கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே ?.  எனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம்.  நான் லைஃப்ஐ என்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம். ‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக
 காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்... ‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
 ‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன்
 வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க.  அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...  இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம்  பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து  கொள்ள முடிகிறது.
 இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
 வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான்
 திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று
 பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு
 பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா  பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும்  என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல  என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
 இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
 ‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’  என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம்  முற்றிலுமாகப் போய்விட்டது.
 ‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான்
 கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
 பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த  ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான  கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு  செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
 தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர்,
 வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை,  வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம்  கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும்  பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!... சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில்
இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்
அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது தனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.
 இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால்  இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?  இதோ பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய
திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற  துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய
நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித  குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன  உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை  அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
 இதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு  !.
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் ! காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று  உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்  நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும்  சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||. 

என்னுடைய பதில்:


Hi Appa,


So typical! This article, no wonder, is a hit among you all (parents).

I would not say that the entire view taken about the "attitude" of the girls mentioned here is wrong. Some of the views of these girls sound really silly! Especially the ones like "mood-out" when it comes to cooking, "yaar kooda pona" kind of things.

But one has to consider the fact that, women have been suppressed for such a long period of time that this sudden change leads to 2 possible outcomes-
  •  Society has not yet transformed to accommodate the ideals of the liberal women.
  •  Most women are not able to figure out the proper way to exploit this new-found freedom.

Thinking about it- though option 2 would mean that I must criticize about my own sex, I feel that it is a necessary introspection.

Only in 1829, Sati was abolished (1829 seems very near if you take into account the millions of years of suppressing women). Then came in various social movements- thanks to people like Ram Mohan Roy and Ishwar Chandra Vidyasagar, we women folk are now getting the education we deserve. Today, where we women are, is a junction that is a result of a life-long struggle of many great minds.  To think that only around 1975, "age of consent" for women was 15! To even think about marrying at the age of 15, feels now, like a crime! Past this phase, there was a wide-spread support for emancipation of women power. There was an ideological shift in the society. From what I have understood, in retrospect, more educated people, felt the need and importance of
economic independence of women. Please note that even then, the society was not purged of evils like dowry or female infanticide. But there was a popular appeal for the said cause.

The trend was to portray a "modern woman". A woman, unlike in the past, who could think, talk, work, and do all that a man can do. She had a voice and a vision. Be it the new wave of parallel cinema or the paradigm shift in the literary world- this popular thought was well-documented.

Post globalisation and with the entry of alien "fashion" into the Indian soil- now armed with a certain level of independence, women started out with their experiments with liberation! The booming Indian markets could supply women with the latest in everything. But here, those parents, who were once so proud of their dream of seeing a "modern woman" in their daughters/daughters-in-law, failed to recognize that- this phase of women's liberation is missing one crucial aspect that is almost essential for every social change. No change can happen to one part of the whole. The part must take along
the whole with it. Popular support from one section of the society, had blinded the change as a whole towards the other sections of the society. This resulted in the stagnation of progress in the "minds" of the rest of the society while the women moved along with the change.

Besides, other factors like the "craze" for a "boy" child, etc., that were typical of the social systems of the past, found their way into the more evolved society. The result is, as you can see, a square peg and a round whole. This group have failed to notice the social change around them and have never adapted themselves to the change. So now, they find themselves among women who are totally contradictory to what they have always regarded as-how a woman must be.

Also, when the women have changed for the better, leaving behind them a whole chunk of a society, the society now refuses to accept the change that is so visible. Something so  "normal", such as- say a working woman- that is "normal" for one section of the "changed" society, seems alien to the rest. But this situation cannot be changed. Any change can only take a society forward, never backwards. So we can only wait for the rest of the society to accept that which is "normal" and keep up with the change.

Now the other aspect of looking at this change is- though the change has given the women a certain power to explore their freedom, it has failed to bring about an overall change in their thought. The change has only broadened the participating platform of the women. It has, however, not contributed towards their intellectual upgradation. Now, "modern women", though have changed physically and mentally- juggling career and family- or being traditional and modern- they have not changed intellectually. They must understand that they must cultivate a certain level of intellect- that would help them survive through this transitional phase. Only this, could help them understand that they have "elevated" yet there are many "beneath" themselves who need the women's help to catch up to the change. Women must understand that the change they have undergone, would only take effect if they have a certain level of intellectual acumen to strengthen their stand amongst the society. It is evident from the examples cited in the mail, that this intellectual upliftment in women is nowhere to be seen. It is no use blaming the parents or the women themselves.

Though every year, public exam result boasts of women leading the race- we must understand that this "race" is just marks and numbers and not wholesome development. Be it men or women, our education lacks in giving them any sense of "responsibility". Men or women- their standing in the society is Rs. ***lakhs per annum, **_ flat, **/****/*** education at ***/*** college. Social status in the current scenario, is not determined by the level of intellectual emancipation but such and such schools/colleges/clothes-brands-accessories/fashion/etc. Parents have remained to be proud spectators of the social change in their children, but have lacked in putting in serious efforts towards their own intellectual upgradation- let alone providing the same to their children.

It is hence my belief, that if women cultivate this intellectual acumen- they can change and question their own thoughts and beliefs and could also take along with them, the other less privileged groups of society, towards a beautiful future...

 A female character named Marianne in Jane Austen's "Sense and Sensibility" remarks- "I suppose I have erred against decorum. I should have been dull and spiritless and talked only of the weather...". You well know that this I could never manage to do- thanks to the way you and amma have brought me up! I am also sure appa, that you could have never brought me up as someone similar to the role of actress Saritha in the last scene of movie "Aval Appadiththaan"- you could have never done that even if you had wanted to. I also don't believe that you had sent this mail to me as a "dig" at our own situation on the similar issue.

So please note, appa, that this was written just in reply to your mail, in defense against the accusations in the mail- which seemed to me- too brutal towards we- the women folk...

Matangi

Bushy -மா - EPISODE 7  

Posted by Matangi Mawley

மாசம் எப்புடி ஒடரதுன்னே தெரியல- அதுக்குள்ள ஓடி போய்டுத்து. வர May மாசம் ஆச்சு, Chotu-Cuppy க்கு ஒரு வயசாகும். அதுகள adopt பண்ணிண்டவர் photo ,video லாம் காமிச்சார். ரெண்டும் கரடி-குட்டி கணக்கா, வஞ்சன இல்லாத சாப்டுண்டு நிம்மதியா இருக்குகள். சந்தோஷம். இந்த புழுக்கையையும், Golu வையும் கூட கூப்படர மேனிக்கு இருக்கறாப்ல குடுத்திருக்கலாம். Video ல Golu குரல போட்டு கேட்டாலே Bushy அன்னிக்கு upset தான். "சும்மா நீயா நெனச்சுக்காத"-ங்கறா இவா ரெண்டு பேரும். "அம்மா"ன்னா எல்லாருக்கும் ஒண்ணு தான். பூனை-ன்னாலும் அதுக்கும் எல்லாம் இருக்க தான் இருக்கு. வாசல் பெருக்கரப்போ, mop அ தாவி பிடிச்சு விளையாடற Bushy ய பாக்க அவ்வளோ அழகா இருக்கும். குரு-குருன்னு கண்ணுல விஷமம் தாண்டவமாடும்- பாவம். ஆனா கொஞ்ச மாசம் முன்னாடி இது இப்படி விளையாடுமா-ன்னு ஆயுடுத்து!

பக்கத்தாத்து மாமி அப்போவே சொன்னா. பாவப்பட்டு பால் விடறேளே குட்டிகளுக்கு. 5 மாசத்துக்கு குட்டி ஒண்ணு போட்ட வண்ணம் இருக்கும், பூனைன்னு. இவர் friend ஒருத்தராத்துல 16 -20 பூனை இருக்காம். வீடு என்னத்துக்காகும்? அதுவும் நம்மளோடது தனி ஆம் கூட கிடையாது. Chotu -Cuppy ய குடுத்து 10 நாள் கூட ஆகல. வயறு 'டம்ம்'முன்னு இருக்கு, Bushy -க்கு. போன தடவ குட்டிகள் பொறந்த கணக்கு படி,
கொலு முதல் நாள் அன்னிக்கு குட்டிகள் போடும்-நு கணக்கு பண்ணினோம். இது உடனே-"Goluu ன்னு பேர் வைக்கலாம்"ன்னு "தை-தை"ன்னுது. ஆத்துக்குள்ளையே விடப்டாது இந்த தடவ-ன்னு தீர்மானிச்சாச்சு.

ராத்திரி
மூணு மணி இருக்கும். Gate ல ஏதோ சத்தம். கதவ திறந்து பாத்தா- வாய்ல குட்டிய கவ்விண்டு gate மேல ஏறி, எம்பி உள்ள குதிக்கறது, Bushy. எங்க ஒளிச்சு வேச்சிருந்துதோ, இத்தன நாள். அன்னிக்கு முதல் நாள் ஒரே மழை வேற. மாமி சொன்னா, பக்கத்தாத்து A /C க்கு மேல கொஞ்ச நாளா ஒரு கருப்பு வால் தெரியறது-ன்னு. இத பத்தர படுத்தி வெச்சுட்டு அடுத்த குட்டிய எடுத்துண்டு வர போய்டுத்து. 'இவா கிட்ட நம்பி விடலாம்'ன்னு தானே எடுத்துண்டு -வேகு-வேகு -ன்னு வருது பாவம்!


இது வால தூக்கி-தூக்கி பாத்துது. ஒண்ணும் புரியல. ஒரே மாதிரி தான் இருக்குகள் ரெண்டும். எதுவா இருந்தா என்ன. அவாத்து வாகு- எப்போதும் ஒரு கறுப்பு குட்டி ஒண்ணு உண்டு. இன்னொண்ணு Black and White. அதுல ஒண்ணு பையன், இன்னொண்ணு பொண்ணு தான் எப்புடியும். இன்னும் கொஞ்ச நாள் போனா தானா தெரியப் போறது. இப்போ புடிச்சு அதுகள் வால ஏன் துருவணும்? கறுப்பு குட்டிக்கு "Golu"ன்னு பேர் வச்சாச்சு. போன தடவ Chotu வ பாத்தோடனேயே தூக்கி வெச்சிக்கணும் போல இருந்துது. இந்த தடவ அந்த Black and White குட்டிய பாக்க வேடிக்கையா இருந்துது. அது நெத்தில 'தென்கல' நாமம் கணக்கா ஒரு design. எங்க ஊர் கோவில்-ல த்வாரபாலகா சிலைக்கு ரெண்டு பல்லு ரெண்டு பக்கம் நீட்டிண்டு இருக்கும். அத போல இருக்கு வாய் பக்கத்துல ரெண்டு கறுப்பு design. ரொம்ப யோசிச்சு "Nams" னு பேர் வச்சுது. ஆனா அது எழுந்து நடக்க ஆரம்ச்சப்ரம் என்னவோ தெரியல, அது பேர் "புழுக்க"ன்னு ஆயுடுத்து.

Chotu -Cuppy போல இல்லாம இதுகள் கொஞ்சம் சீக்கரமே வளர்ந்துடுத்துகள். இந்த Bushy ஒரு மாசத்துக்கெல்லாம் பால் கொடுக்கறத நிருத்திடுத்து. Nams பாவம் கொஞ்சம் சாப்டும், நன்னா. வாய வெச்சா எடுக்காது. அது பாதி குடிச்சுண்டிருக்கும் போது புஷி எழுந்து போய்டும். Bushy க்கு வயறு மறுபடியும் 'டம்ம்'ன்னு ஆயுடுத்து! அதுக்கும் strength வேண்டாமா? ஆனாலும் புழுக்க சரியான அம்மா கோண்டு. Bushy க்கும் அத ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் சோனி யா இருக்கரதுனாலையோ என்னவோ. பயங்கர training Bushy அதுக்கு. புழுக்கையும் அது அம்மாவுக்கு விழுந்து-விழுந்து சிஸ்ருஷ பண்ணும். நக்கி குடுக்கும், Bushy ய. Bushy யோட spy அது! "Golu" கொஞ்சம் சமத்து தான். துப்பாண்டியாட்டம். ஒரு மாசத்துக்கப்ரம் ஒரு வழியா புழுக்க-பொண்ணு, Golu பையன் ன்னு கண்டு பிடிச்சாயுடுத்து. சீக்கரமே இதுகள் வளர்ந்ததால வராண்டா-ல காலே வைக்க முடியல. குட்டிகள் அழகா இருக்கு, வச்சிக்கலாம்-னா, ஆறு தடவ Dettol போட்டு அலம்பரவாளுக்கு தானே தெரியும், கஷ்டம்?

"Blue Cross" ல கொண்டு போய் விட்டுடலாம். அப்படியே Bushy க்கும் vaccination போட்டு, sterelize பண்ணி அழைஷிண்டு வந்துடலாம்-னார் இவர். கஷ்டமா தான் இருக்கு. ஆனா 5 மாசத்துக்கு ரெண்டு-ரெண்டு குட்டியா போட்டுண்டே இருந்தா, என்னதான் தெம்பு இருக்கும்? இவரும், இவர் friend
ஒருத்தரும் auto ல தூக்கிண்டு போனா Bushy யையும் குட்டிகளையும். அங்க ஒரு ஆயா, குட்டிகள் இருந்த பைய அப்படியே கவுத்து கொட்டினாளாம். ஒடனே ரெண்டு பூனை குட்டி வந்து புழுக்கைய மோந்து பாத்து friend புடிச்சுண்டுதாம். பெரிய இடமாம், கிண்டி Blue Cross. நிறையா பூனை குட்டிகள் இருக்காம். நன்னா பாத்துக்கராளாம். Bushy க்கு vaccination போட்டு தூக்கிண்டு வந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு தான் operation பண்ணுவாளாம். அப்புறம் அது ஒரு வாரம் அங்கேயே இருக்கணுமாம். 'குட்டிகள் எங்க' ன்னு இது தேடராப்லேயே இருக்கு. அதுக்கு எல்லாம் புரியும். குட்டிகள எடுத்துண்டு போற அன்னிக்கு காலேல- ரொம்ப நேரம் வரிஞ்சு-வரிஞ்சு பால குடுத்துது Bushy ரெண்டுத்துக்கும். இது "Hindu" லியே ad குடுக்கலாம்-னுது. ஆனா நாள் ஆயிண்டே போறதே. Golu வையே 'ரெண்டு மாசம்' தான் ஆறது-ன்னா ஒத்துக்கலையாம், Blue Cross ல!

ஒரு வாரம் அங்கேயே இருந்துது, Bushy. இவர் நடுப்ற ஒரு நாள் போய் பாத்துட்டு வந்தார். நன்னா இருந்துதாம். நிறையா operation பண்ணின பூனைய தனித்
தனியா cage ல வெச்சிருந்தாளாம். அதுல சிலதுகள் ரொம்ப அழகா இருந்துதாம். இவா ரெண்டு பேரும் போய் அழைஷிண்டு வந்தா, Bushy ய. கிழிஞ்ச நாரா இருந்துது, பாவம். தையல் போட்டிருந்தா, வயத்துல. Green colour ல மருந்து ஏதோ தடவி இருந்தா. "Normal" ஆ இருக்கும் -நாளாம். சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ தும்மறது. ஏதோ ஒரு irritation. ராத்திரி என் பக்கத்லேயே படுத்துண்டுருந்துது. என்ன 'தடவி குடு'ங்கறது. நான் அத தொடவே மாட்டேன்-ன்னு தெரியும் அதுக்கு. ஆனாலும் அந்த 'வாஞ்ச' வேண்டியிருக்கு. ராத்திரி முழுக்க தட்டி குடுத்துண்டே இருந்தேன்.

மறுநாளும் அன்ன ஆஹாரமில்ல. எங்காத்து பக்கத்லேயே இருக்கற Blue Cross கு அழைஷிண்டு போனா இவா ரெண்டு பேரும். பெரிய doctor 'infection ஆயுடுத்து'ன்னாராம். ரெண்டு ஊசி, வாய்ல ரெண்டு மருந்து. மூணு நாள் தொடர்ந்து ஊசி போட்டுது. ஒரு வாரத்துக்கு குடுக்க சொல்லி மருந்து எழுதி குடுத்தார். தையல் போட்ட இடத்த அது நக்காம இருக்க, அது கழுத்துல ஒரு அட்டிய கட்டி வைக்க சொன்னாராம். இது உடனே அட்டிய வெட்டி, ஒட்டி- அதுல "I am Bushy" ன்னு எழுதி, அது கழுத்துல மாட்டி, நாலு photo எடுத்துது. அதுக்கே, பாவம், உடம்பு சரியில்ல. Bushy அந்த அட்டைய ரெண்டு நிமிஷத்துல பிச்சு எரிஞ்சுடுத்து! பத்து நாளாச்சு, சரியா போக!

"ங்கா...ங்கா..."ன்னு பிடுங்கி எடுக்கறது இப்போ. Bed, Chair, table - எல்லாம் அதோடதாம். "ஒரு நாளைக்கு எத்தன தடவ டா சாப்டுவ"? ன்னா "ங்கா..." ங்கும் பதில். "Chotu- Cuppy- Golu- புழுக்க- யார ரொம்ப பிடிக்கும்"ன்னு இது Bushy கிட்ட விரல காட்டி விளையாடும். அது ஏதோ ஒரு விரல தொடும். அந்த குட்டிய மனசுக்குள்ள நெனச்சுக்குமோ...? "Bushy-மா...'ங்கா'.. வேணுமாடா..."

PS: Bushy's pet- Nams video பாக்க click here.
PS: நம்ம "All time favourite" Chotu video
பாக்க click here.


நிழல் திருடன்  

Posted by Matangi Mawley


"The Mask" cartoon பார்க்க மிகவும் பிடிக்கும், சிறு பிராயத்தில். அதில் வரும் Mask மற்றும் Stanley Ipkiss- இருவரையுமே மிகவும் பிடிக்கும். அந்த cartoon இன் ஒரு பகுதியில்- Stanley வசிக்கும் Edge City யில் திடீரென்று, மர்மமான முறையில் மக்கள் முதியவர்களாக மாறி விடுவார்கள். அது எப்படி ஒரு நாளில் மாற முடியும்? உண்மையில்- இதற்க்குக் காரணம், Edge City ஐ புதிதாக எதிர்த்திருக்கும், வில்லன்- Skillit - ஒரு "Shadow Thief". மக்களின் நிழல்களைத் திருடி அவன் சக்திகளை வலு படுத்திக் கொள்ளும் அந்த வில்லனை- "Mask" எப்படி விரட்டுகிறான் என்பது தான் கதை.

இயற்ப்பியல் விதிகளுக்கிணங்கிய எல்லாவற்றிற்குமே நிழல் என்பதும் நிஜமே! அந்த நிழலுக்கு ஆழம் உண்டா? கனம் உண்டா? ஆனால் நிழலுக்கு இந்த விதிகள் பொருந்தாது. காற்றோ, நெருப்போ, நீரோ எதுவும் அதை பாதிக்காது. ஆனால் இயற்பொருள் சார்ந்த அனைத்து பொருட்களின் இயங்குமுறை ஒரு சில விதிகளுக்கு உட்பட்டது என்ற போது- நிழலுக்கு மட்டும் இப்படி சில சலுகைகள்!

Tom and Jerry யில் "The Invisible Mouse" என்ற cartoon இல் தன்னை அத்தனை நேரம் ஏமாற்றிக்கொண்டிருந்தது- அரூபமான Jerry தான்- என்று Tom, Jerry யின் நிழலைப் பார்த்து தான் புரிந்து கொள்ளும்! அவ்வளவு அழகான முறையில் அந்த காட்சி அமைந்திருக்கும். Jerry யின் நிழலைப் பார்த்து Jerry ஐ Tom அடிக்கும் போது- Jerry யின் நிழலின் தலையில் ஒரு வீக்கம் தெரியும்! என்ன கற்பனை வளம்! (Click Here)

நள-தமயந்தி கதையில், தமயந்தி சுயம்வரத்தின் போது, தேவர்கள் நளனைப் போல உரு
மாரிக்கொள்வார்க்களாம். தமயந்தி, தேவர்களுக்கே உரியதான சில குணாதிசயங்களைக் கண்டு கொண்டு, நளனைக் கண்டு பிடித்து மாலை அணிவிப்பாளாம். அதில், தேவர்களுக்கு உரியது- என்று கூறப்படும் குணாதிசயங்களில்- அவர்களுக்கு "நிழல் கிடையாது" என்றும் சொல்லி கேள்விப் பட்டதுண்டு. ஆனால் உரு கொண்ட அனைத்து பொருட்களுக்கும் நிழல் என்பது இதுக்கத் தான் வேண்டும். இப்படி இருந்திருக்கலாமோ? தேவர்களின் தலைக்கு மேல் "Halo" என்று சொல்லக் கூடிய "ஒளி வட்டம்" இருப்பதனாலோ என்னவோ- அவர்களது நிழலானது நம் கண்களுக்குத் தெரியாத படி- அவர்களுக்குக் கீழேயே விழுந்திருக்கக் கூடுமோ?

"Shadow Thief" என்னும் கோட்பாடு, இந்தியர்களுக்குப் புதிதென்று சொல்ல முடியாது. ராமாயணத்திலும் "சாயா க்ரஹீ" என்றவள் ஹனுமான் கடலைக் கடக்கும் போது அவரது நிழலைப் பறிக்க எத்தனிப்பாள் என்று படித்ததுண்டு. "Carl Sands" என்ற Comic Book வில்லன்- "Dimensiometer" கொண்டு நிழலாக மாறிக்கொள்வான். அப்படி மாறிக்கொண்டு- சுலபமாக, யாருக்கும் தெரியாத முறையில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். அது மட்டுமில்லாது- மற்றவர்களின் நிழலையும் அவனால் எடுத்துக்கொள்ள முடியும். திருடிய நிழல்களைக் கொண்டு, யாரிடம் திருடினானோ- அவர்களின் நகல் உருவங்களை உருவாக்க முடியும், அவனால்! என்ன ஒரு கற்பனை! சமீபத்தில் ஒரு முறை "சாயா க்ரஹீ" பற்றிப் படித்த போது, அது ஏன் ஒரு Bermuda Triangle போலதென்றாக இருக்கக் கூடாது என்று தோன்றியது.

யோசித்துப் பார்த்தோமேயானால், Cartoon களிலும், Comics களிலும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. "நம் புராணங்களிலோ, வேதங்களிலோ இல்லாத விஷயங்களா"- என்று உடனே மறுப்பு தெரிவிக்கும் சிலரும் உண்டு. புரியாத வார்த்தைகளின் பிரயோகத்தை Thesaurus- இல் பார்பதில்லையா? புரியாத கேள்விகளுக்கு பதில்- "Notes" இல் படிப்பதில்லையா? Shakespere கதைகளின் abridged version படிப்பதில்லையா? அதைப் போலத்தான் Cartoon களும், Comics களும். குழந்தை பிராயத்தில் "இல்லை, ஆனால் இருக்கு" என்று வேதாந்தம் பேசாமல் எப்படி "இது தான் கடவுள்" என்று ஒரு சிலையைக் காண்பித்துக் கொடுக்கிறோமோ- கிட்டத் தட்ட அது போலத்தான் Comics களும். படிக்கும்/பார்க்கும் விஷயங்கள்- ஆழ் மனதில் புதைந்து கிடக்கும். அவ்வபோது அவை மேலெழும்பும் போது- அதில் பல விஷயங்கள் புலப்படும்...

Cartoon பார்க்கலாமா? (The Mask - Shadow of a Skillit- Part 1 & Part 2)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

மாதர் தம்மை இழிவு செய்யும்...  

Posted by Matangi Mawley


பத்மா வ பத்தி இன்னிக்கு தான் பேச்சு வந்தது. 4 வருஷம் ஆச்சு. அவ என்ன ஆனா, எப்படி இருக்கா- ஒரு தகவலும் கிடையாது. 9th உம் 10th உம் என் கூட, என் class ல படிச்சா. என்ன நல்ல handwriting தெரியுமா? எல்லா miss உம் அவள தான் board ல எழுத சொல்லுவா. School prayer பாடுவா. ரொம்ப அழகா பரதநாட்யம் ஆடுவா. 4 வருஷத்துக்கு அப்புறம் அவள பத்தி நான் கேள்வி படர news இப்படியா இருக்கணும்?

11th / 12th கு வேற school மாறி போனா. Commerce படிச்சப்ரம், சென்னை ல ஒரு BPO ல வேலைல சேர்ந்தா. சென்னைல ஒரு Software company ல வேல பாக்கற பையன் கூட கல்யாணம் ஆச்சு-ன்னு 4 வருஷத்துக்கு முன்னாடி தெரிய வந்தது. இன்னிக்கு, என் கூட படிச்ச இன்னொரு friend மூலமா அவள பத்தின அந்த செய்தி கிடைச்சது. Recent ஆ அவளுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துதாம். "ஆஹா- எவ்வளவு நல்ல news" னு நினச்சேன். "பெண்" குழந்தை பிறந்ததுக்கு அவ தான் காரணம்-னு அவள அவ in-laws வீட்டுல, வீட்ட விட்டு அனுப்பிட்டாங்களாம். அவ husband உம் எந்த support உம் தரலியாம், அவளுக்கு!

இப்போ என்ன ஆச்சு அவளுக்குன்னு எனக்கு தெரியல! அவ contact எதுவும் என்கிட்ட இல்ல. ஆனா இந்த news கேட்டதிலேர்ந்து எனக்கு ஒரே கோவம்!

இப்போவே அவளோட in-laws வீட்டுக்கு போய், அவங்களையும், அவ husband யும் எல்லார் முன்னாடியும் அறையணும் போல இருக்கு! அவ mother-in-law வோட அம்மாவ யாரும் ஏன் வீட்ட விட்டு ஒதிக்கி வைக்கல? கிராமங்கள்-ல சரி- படிக்காத மக்கள், விவரம் தெரியாம நடக்கறாங்க-ன்னு விடலாம். Haryana, Jharkhand, Rajasthan, Maharashtra போன்ற இடங்கள்-ல ரொம்பவே common இந்த மாதிரி சம்பவங்கள். ஆனா town ல? படிச்ச சமுதாயத்துல? அந்த fellow B.Tech ஆம். அவனுக்காவது அவன் அம்மா/அப்பா சொல்றது தப்பு, "XX"/"XY" ய நிர்ணயம் பண்ணற சக்தி யாரு கைலயும் இல்ல ங்கற sense வேண்டாம்? There is no person in this world who does not get “Fooled by Randomness”.

இத்தன Acts இருக்கே! Domestic Violence, Sexual Harassment, Trafficking? International Women's Day வேற ஒண்ணு இருக்கு. என்ன use? சமுதாயம் முழிச்சுக்காத வரைக்கும் என்ன இருந்தும் use இல்ல! ஒரு சமுயாததொட சாபக்கேடு இது. நம்ப அக்கம் பக்கத்ல இத போல ஒரு விஷயம் நடக்கறது தெரிஞ்சா, அத தட்டி கேட்கறது நம்ம கடமை. அக்கம் பக்கத்து வீட்டுல யாராவது ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க? At least half a dozen reasonable and respectable people living in the same street , இந்த வீட்டுக்கு போய் இந்த முட்டாள்கள் கிட்ட ஞாயத்த பேச வேண்டாமா? நம்ம தெருவுல இப்படி நடக்கறது நம்ம எல்லாருக்குமே அவமானம்-னு நினைக்க வேண்டாமா? Social pressure build up பண்ணனும். Legal action must be the last resort. ஏன்னா அவங்க ஒரு case அ முடிக்கறதுக்கே 20 வருஷமாகும்! சம்பந்தப்பட்டவர்களுக்கு ஞாயம் கடைக்கர வாய்ப்புகளும் குறைவு தான்!

பத்மா வுக்கு அவ அக்கம் பக்கத்ல இருக்கறவங்க support கடைக்கும் னு நம்பறேன். Meanwhile, friends யாராவது இத படிச்சா- பத்மா contact details இருந்தா எனக்கு தெரிய படுத்தவும்...

PS : நிறையா English sentences /வார்த்தைகள் பிரயோகத்தை தவிர்க்க முடியல. எழுதணும்-னு plan பண்ணி எழுதல. எங்கயாவது இத சொல்லணும் போல இருந்தது. தோணினத அப்படியே எழுதினேன்... Please bear with me ...

26/11- ஒரு வரலாறு?  

Posted by Matangi Mawley


மூன்று வருடங்கள். இப்படி எண்ணுவதும் ஒரு அபத்தம் தானோ? எண்ணிக்கையின் பயன்? எண்ணிக்கையே வரலாற்றில் இடம் பிடிக்க முதல் படி. வரலாறு என்றால்? இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா? மறைந்துவிட்டதா அது? இன்னும் அப்படி நடக்கவில்லை. அதற்க்கு இன்னும் கொஞ்சம் காலம் உண்டு. இந்த நாள்- இன்னும் மடியவில்லை. சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. முதலில் மங்கிப் போகும். சாதாரண ஒரு நாளாக மாறும். நல்ல நாளாகவோ, கெட்ட நாளாகவோ... அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறையும். மறைந்து- வரலாறாக மாறிப்போகும். மனித உணர்வுகளை நீக்கிவிட்டு- கணக்குகளால் மட்டுமே கட்டப்பட்டு பதிக்கப்பட்ட ஒரு 'சம்பவம்'. ஜாலியன்வாலா பாக் போல... அல்லது- 172 இந்தியர்களை தூக்கிலிட்டர்களே- சௌரி சௌரா வில், காவல் நிலையத்தை, 23 காவலாளிகளுடன் எரித்ததற்காக... அதைப் போல- ஒரு வரலாற்று 'சம்பவம்'.

மீண்டும் இதே நாள்- ஒரு நாள்- கடிகார முள் நகரும். ஆனால் அதை நகர்த்தும் நாள் எது என்று யாருக்கும் தெரியாமல் போகும். இல்லையானால்- யாரோ இரண்டு பேர்- முதியவர்கள் - வெத்தலை போட்டுக்கொண்டு திண்ணையில் சாவகாசமாக- அவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு சம்பாஷணையாக மாறிப்போகும். ஆனால் அவர்களது கடலளவு வாழ்வினுள்- இந்த சம்பவம் ஒரு துளி தான். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து போகும். "பாட்டி, அந்த தாத்தா யாரு? அவர் எப்புடி இறந்து போனார்"? என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- "அவரா? ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும்? விதி..." - என்பாள். இது விதியா? மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை? நாளைய உலகத்தை - பஞ்சு மெத்தையில் லாவகமாக வைத்து அழகு பார்ப்போமே!

வருங்காலம் உணரும். பஞ்சு மெத்தையின் உண்மை புரிந்து கொள்ளும் காலம்- வருங்காலத்திற்கும் வரும். மூன்று வருடங்களுக்கு முன், அமைதியான எனது அறையில் ஒரு ஒலி. வீட்டிலிருந்து அம்மா. அம்மா- எப்போது பேசினாலும்- 'இங்க போகாதே... அத செய்யாதே' என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிப்பாள். எனக்கு அது மனப்படமாகியிருந்தது. "பெரிய hotel கு போகாதே" என்று சொல்லி விட்டு அழுதாள். "கோபு போய்ட்டான்... போய்ட்டான்...". இது எப்படி முடியும்? ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படி நடக்க வேண்டும்? மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா? சம்பவமா? எழுதி வைத்து விட்டு, பதிவு செய்து விட்டு மறந்து போய் விடலாமா? ஒரு மனிதனின் கடேசி வார்த்தை. அவன் குரல் இனியும் இந்த பூமியில் ஒலிக்கவே ஒலிக்காது. அது அமைதியாகிவிடப்போகிறது...

ஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புறிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புறிந்திருக்க வேண்டும்.

இந்த உணர்வை பல முறை உணர்ந்து விட்டேன். ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் 'முக்கியச் செய்தி'- அது எத்தனை பெரிய செய்தியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதன் தாக்கம், '
அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு. நம்மால் செய்ய முடிந்தது? இந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும்.

நினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள். அதில் கணிதம் மட்டுமல்ல- உணர்வுகளும் படர்ந்து இருக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அவை தான் நம்மை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும். வருங்காலத்திர்க்கான காரணம் இந்த நினைவுகளில் பதுங்கி இருக்கிறது. இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்...


Previous Article: 26/11- மற்றும் ஒரு கணக்கு...

Remembering.... P.K. Gopalakrishnan (Maternal uncle)

"தங்கச்சி..."!  

Posted by Matangi Mawley

"... Musical Trinity Concert கு, அந்த காலத்திலேயே நான் முப்பது ரூபா கொடுத்திருக்கேன்! இன்னிக்கு அது நூறு ரூபாய்-க்கு சமம்..." - என்று அப்பா சொன்னர், ஒரு பழைய receipt ஐ காட்டி. எத்தனை எத்தனை மாற்றங்களைக் கடந்து, இன்றைய நாளை நாம் எட்டிப் பிடித்திருக்கிறோம், என்று தோன்றியது! "... எல்லாராத்லேயும் கிணறு இருக்கும். பாத்ரம் பண்டம் ஏதாது அதுல விழுந்துடும்.கிணறு முழுகிறவன் மாசம் ஒரு தடவ குரல் கொடுத்துண்டே ரோடு வழியா போவான் ;அதை கிணறு முழுகி எடுத்து கொடுப்பான் ;. காலணாவோ அரை அணாவோ அவனுக்கு கூலி கொடுப்பா ...(உள்ள விழிந்திருக்கும் பாத்திரத்தோட மதிப்பிர்கேரப்ப ! ) . இப்போ நினைச்சு பாத்தா ஆச்சர்யமா இருக்கு. அவன் கிணத்துக்குள்ள இறங்கி, முழுகி, உள்ள போய் எடுத்துண்டு வர வரைக்கும் பாத்துண்டே இருப்போம். இன்னிக்கு உங்களுக்கெல்லாம் எத நின்னு வெடிக்க பாக்கவும் time கிடையாது. ரெக்கைய கட்டிண்டு பறக்கரேள்..." நிஜம் தான். என் சிறு பிராயத்தில், எனக்கு இருந்த அளவு நேரம் கூட இன்றைய குழந்தைகளுக்கு இல்லைதான். "... அவன் எடுத்து கொடுத்தப்றம், காலணாவ தூக்கி போடுவா. அத எடுத்துண்டு போவான்..." - இப்போது இதை கேட்கும் பொது- இப்படிப்பட்ட ஒரு சமுதாய சூழலில் நான் பிறவாதிருந்தல்- நான் செய்த புண்யம் என்று தோன்றியது. நமது "Constitution" இல் "FRATERNITY assuring the dignity of the individual..." என்ற ஒரு வாக்கியம் வரும், "Preamble" இல். எத்தனை அழகாக யோசிக்கப்பட்ட ஒன்று! ஆனால் அவர்கள் நடத்தப்பட்ட சூழலே அவர்களை அவ்வாறு யோசிக்க வைத்திருக்கிறது! எத்தனை ஆழமான ஒரு வார்த்தை!

"... Hotel ல போய் சாப்ட மாட்டா யாரும். அது அப்படி தான். ப்டாது. நான் எங்க அப்பா முன்னாடி உட்காரவே மாட்டேன். நீ என் முன்னாடி கால் மேல கால் போட்டுண்டு உக்காந்துக்க. அதுக்காக- அந்த காலத்துல அப்படி இருந்துதாக்கும்-னு பேசி பிரயோஜனமில்ல. எங்க அண்ணா school கே போகமாட்டான். எங்க அப்பா அவன வெரட்டு வெரட்டுன்னு வெரட்டுவா. ஆத்து வாசல்ல வந்து நிப்பான். நான் கூட, 'school கு போறேன்னு அப்பாட்ட சொல்லுடா'-ம்பேன். அப்பாக்கு தெரியாம அம்மா அவனுக்கு சாப்ட ஏதாவது தருவா. படிக்காம இல்ல. ரொம்ப நன்னா படிப்பான். பசி. சில பேரால பசி தாங்க முடியாது. அப்போ, எங்க அப்பா-க்கு அத புரிஞ்சுக்கற அளவுக்கு... அப்படியும் ஒரு காரணம்- அவன் school கு போகாததுக்கு இருக்கும்னே தொணிருக்காது... 'லால்குடி' சொல்லுவார். அவர் அப்பா, இவர் violin வாசிக்கலேன்னா, வேலி லேர்ந்து குச்சிய பிடுங்கி அடிப்பார்னு. 'நல்ல வேள அடிச்சார்'-னார். ஆனா இந்த காலத்து கொழந்தைகள் அப்படி கிடையாது. அதுகளும் mature ஆ இருக்கு. நாமும் அது மாதிரி செய்யறவா இல்ல... அந்த கால set-up ஏ வேற. அதுக்காக 'அதுதான் ஒசத்தி. அப்படி தான் இப்பவும் இருக்கணும்'-ங்கறதுல அர்த்தமே இல்ல..." 1st std class teacher - Rosy Miss. Home Work செய்யாமல் இருப்பவர்களுக்கு கை-முட்டியில் (knuckles) இரண்டு மர அடி scale ஆல் நல்ல அடி விழும். எனக்கும் பல முறை விழுந்துதான் இருக்கிறது. ஆனால் அதுவும் 'என் காலம்' என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு மாற்றங்கள். Teacher அடித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்! News channel களுக்கு நான்கு நாள் தீனி அது! அப்பா Rosy Miss கு ஒரு கடிதம் எழுதினார். இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். "...children are walking flowers ..." என்று எழுதிருக்கும். அன்று எனக்கு அந்த letter இல் அப்பா என்ன எழுதியிருந்தார் என்று தெரியாது. அந்த கடிதத்தை Rosy Miss படித்ததிலேர்ந்து என்னை அடிக்கவே இல்லை. இன்றும், என்னை நினைவு வைத்திருக்கிறார்- அன்புடன் விசாரிக்கிறார் அந்த Teacher. இதனால் எங்களுக்குள் வைரிபாவம் ஏற்படவில்லை .. அது தான் அந்த காலகட்டத்தின் விசேஷம் ...

"... நாங்க வளந்த சூழல் அப்படி. தயிர் காரி வருவா. அவ கிட்டேர்ந்து தயிர் வாங்குவோம். சில்லற இல்லேன்னா அவ கொடுக்கற பாக்கி காசு வாங்கபடாது-ன்னு எங்க அப்பா தெரு கோடில இருக்கற கடைலேர்ந்து சில்லற வாங்கிண்டு வர சொல்லுவார்..." தயிர் மட்டும் ஏன் அவளிடமிருந்து வாங்க வேண்டும்? "... அவோ ஏதாவது தண்ணி கேட்டாலோ- அவ குடிச்ச பாத்தரத்த கவுத்து வைப்பா. அதுல கொஞ்சம் தண்ணிய தெளிச்சு தான் எடுப்பா எங்க அம்மா... இது அந்த தயிர் காரிக்கும் தெரியும். அந்த காலத்துல அப்படி தான். ஏன்? எப்படி? ன்னுலாம் எனக்கு சொல்ல தெரியல. அப்படியே எனக்கு தெரிஞ்சு உனக்கு சொன்னாலும் உன்னால புரிஞ்சுக்க முடியாது. உனக்கு எச்சல், பத்து-ன்னாலே என்னன்னு தெரியாது... ஐயங்கார் மாமா வாதத்துக்கு போனா எங்க அப்பாவுக்கு வெள்ளி tumbler ல ஜலம் தருவா. வெள்ளிக்கு தோஷம் இல்ல-ன்னு ஏதோ ஒரு ஷாஸ்த்ரம்..."

அந்த கால சமூஹம் பல பாகங்களை/பரிமாணங்களைக் கொண்ட ஒரு வலை- என்று தான் சொல்ல வேண்டும். "அப்பா-அம்மா வை புறிந்து கொள்ள வேண்டும்"- என்ற வாதத்திற்கே இங்கு/இன்றைய கால கட்டத்தில் இடம் இல்லை என்று தான் தோன்றுகிறது. அப்படிப்பட்ட, ஒரு இறுக்கமான கலாசார சூழளுக்குள்ளிலிருந்து, வளர்ந்து வந்திருக்கும் அப்பா-அம்மா, பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உள் வாங்கிக்கொண்டு, தங்களையும் அந்த மாற்றங்களுக்கேற்றார்போன்று மாற்றிக்கொண்டு, எனக்கும்- ஓரளவு கலாசார உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால்- அது நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய விஷயம். ஆனால்- என்னால், அந்த கால சமுதாயத்தின் மனநிலையை புறிந்து கொள்ள முடியும் என்று சிறிதளவும் நம்பிக்கையில்லை. ஒரு மனிதன், அவன் செய்த வேலைக்கான கூலியைக் கூட அவன் கையில், அவன் செய்த வேலையை மதித்து, கொடுக்காத சமுதாய சூழலை புறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை. ஆனால்- தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சமூஹம் எப்படி மாறியிருக்கிறது என்பதை புறிந்து கொள்ள, அதன் துவக்கத்தில் அதற்கிருந்த தன்மையை புறிந்து கொள்ளத்தான் வேண்டும். மாற்றத்தின் பரிமாணத்தைக் கண்டு பிரமிக்க வேண்டுமென்றால், அந்த மாற்றத்தின் பாதையை கண்டு கொள்ளத்தான் வேண்டும்.

"... cultural refinement வேணும். ஒரு சில விஷயங்கள புரிஞ்சுக்க, அந்த விஷயத்தோட cultural backdrop அ புரிஞ்சுண்டு தான் ஆகணும். எனக்கு கோவம் வந்துதுன்னா, நான் சின்ன வயசுல ஒரு மகிழம்பூ மரம் ஒண்ணு இருக்கும். அதுக்கடீல போய் நிப்பேன். '..மாலிக்கு என்ன கோவமான்னு...' என்ன அவாத்துக்கு அழஷிண்டு போய்டுவா. தல வாரி விடுவா, எல்லாம் பண்ணுவா. உப்மா பண்ணிண்டுருக்கான்னு தெரிஞ்சுதோ இல்லையோ- எங்க நமக்கு கொடுத்துடுவாளோன்னு ஆத்துக்கு ஓடி வந்துடுவேன். அவாத்துல சாப்ட கூடாதுன்னு எனக்கு யார் சொல்லி கொடுத்தா? எனக்கு 6-7 வயசு இருக்கும். நம்பாதது பூனைக்குட்டி எப்படி பொறந்த ஒடனே அம்மாவ கண்டு பிடிச்சுண்டு போய் பால் குடிக்கறதோ- அத போல தான் இதுவும். அதுக்கு யார் சொல்லி கொடுத்தா"? ஆனால் இப்படிப்பட்ட சூழலிலிருந்து வந்த அவர்களால்- எப்படி எங்கள் Pizza Hut/ Mc Donalds கலாசாரத்தை உள் வாங்கிக்கொள்ள முடிகிறது? பெற்றோர்களிடம், அவர்கள் என்ன தான் ஒரு தோழர்களாக இருக்க முயன்றாலும், மனம் விட்டு பேச முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் தான் போலும். அவர்கள் வெளிப்பட காட்டிக்கொள்ளாது விட்டாலும்- 'எனக்கு இது ஒவ்வாது' என்ற திரை ஒன்று அவர்களின் கண்களில் அசைவது, அவர்களையும் மீறி நம் கண்களுக்கு புலப்பட்டு விடுகிறது. அவர்கள் சொல்லவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால்- அவர்கள் சிறு ப்ராயத்திலேர்ந்து நமக்கு கொடுத்த "cultural consciousness" என்றானது- அவர்களின் மன நிலையை நமக்கு நன்கு உணர்த்தி விடுகிறது. ஆனால்- என்னைப் பொறுத்த வரையில்- அவர்களுடன் எல்லாவற்றையும் பற்றி பேசுவது தான் நல்லது. அவர்கள் 'evolve' ஆனது சித்தி அடைய, அவர்கள் குழந்தைகள் 'evolve' ஆவதும் அவசியம்.

"... மன்னார்குடி அரிசி கடச்சந்து வழியா நானும் எங்க அம்மாவும் நடந்து போயிண்டுருந்தோம். எனக்கு ஒரு ஏழு வயசு இருக்குமோ என்னவோ. மீன் maarket வழியா போயிண்டுருக்கும்போது, அங்க வேகவச்ச சவ்வாரிகட்ட கிழங்கு வித்துண்டுருந்தா, ரஞ்சிதம் . எங்க அம்மாவ பாத்துட்டு ஓடி வந்தா... 'தங்கச்சி... சௌக்கியமா? அண்ணன் எப்புடி இருக்குது'? ன்னு உரிமையா கேட்டா. 'இது என்ன உம்புள்ளையா'? ன்னு என் கன்னத்த தொட்டு கிள்ளினா. திருஷ்டி கழிச்சா... அப்பறமா எங்க அம்மா சொன்னா. எங்க மாமா பொறக்கும் போது எங்க பாட்டிக்கு ஜுரம். பால் கொடுக்கப்டாதுன்னு சொல்லிட்டாராம் வைத்தியர். ரஞ்சிதத்தோட அம்மாவுக்கும் அப்போ தான் கொழந்தை பொறந்திருந்துது. அவ அம்மாக்கு ஒரு படி நெல்லு-ங்கராப்ல ஏதோ பேசிண்டு, எங்க மாமாவுக்கு ரஞ்சிதத்தோட அம்மா தான் பால் கொடுத்தாளாம். அந்த முறைல எங்க அம்மா அவளுக்கு 'தங்கச்சி'... "- இதை ஒற்றை வரியிலும் சொல்லலாம். ஆனால்- அந்த 'தங்கச்சி' என்ற வார்த்தையின் கனத்தை- அந்த சமூஹத்தின் தன்மையை புரிந்துகொண்டாலேயன்றி ரசிக்க முடியாது. 'இதனை ஏன் ரசிக்கவேண்டும்'- என்று கேட்பவர்களுக்கு, நாம் சொன்னாலும் புரியாது...

ஒரு மணி நேரம் அப்பாவுடன் நடந்த சம்பாஷணை. ஒரு மணி நேர -"Time Travel". ஒரு மணி நேர "Introspection"...

துப்பாண்டி குடும்பத்தினர்- EPISODE 6  

Posted by Matangi Mawley



"தா பார்! சாப்பாடு கடைல இருக்கு. 9 :30 தான் கட தொரப்பான். முதல் வேலையா அப்போ பாக்க உனக்கு வாங்கிண்டு வரேன். அது வரைக்கும் ஒரு சத்தம் வரப்டாது. ரொம்ப பசிச்சா, வெளீல போய் ஒரு கரப்பையோ, பல்லியையோ நீயே பிடிச்சு தின்னுக்க வேண்டியது தான். நான் என்ன வெச்சிண்டா வஞ்சன பண்ணறேன்? உனக்கு தானே தரப்போறேன்..." காலேலேர்ந்து ஒரே புடுங்கல். இந்த துப்பாண்டி, இத விட்டுட்டு எங்கயாவது போனாலே இப்படிதான். இதுக்கு பொழுது போகாத- சர்வ காலமும்- "ங்கா ங்கா..." ன்னு பிடுங்கி எடுக்கறது, Bushy. அதுவும் இப்போ வயத்துக்குள்ள குட்டிகள் வேற! இந்த தடவ ரெண்டோ, மூணு! "ரெண்டோட நிறுத்திக்கோடா" ன்னு சொல்லி வெச்சிருக்கேன்... போன installment, ரெண்டு குட்டிகள maintain பண்ணவே போரும் போரும்-னு ஆயுடுத்து. ஆனா, அதுகள் ரெண்டும் எத்தன அழகு...!

கொறஞ்சது ஒரு 10 -15 நாளுக்கு சரியா நடக்கவே ஆரம்பிக்கல, ரெண்டும். ஒண்ணு "Chotu"- பையன். அவன்
அப்பா துப்பாண்டி, சின்ன வயசுல எப்புடி துரு-துரு-ன்னு இருந்துதோ, அதே போல இதுவும் மஹா துரு-துரு! இன்னொண்ணு- "Cuppy" - பொண்ணு. அது அட்டசல் Bushy. எப்போவும் காரியத்துல (சாப்பாட்டுல) தான் கண்ணு, அதுக்கு. நடக்க ஆரம்பிச்சுதோ, இல்லையோ- ரெண்டும் ஒரே வெஷமம்! அதுலயும் இந்த Chotu இருக்கே- சரியா இன்னும் நடக்க வேற வராதைக்கு- side ஆல நடக்கும், balance இல்லாம. அப்புறம் steady பண்ணிக்கும். தலைய சாச்சுண்டு ஒரு பார்வை பாக்கும், "இவ என்ன பண்ணறா"? ன்னு.

அப்படியே அது பாட்டி ஜாட, அது முஹத்துல. துப்பாண்டி அம்மா இருக்கே, தெரு பூனையா இருந்தாலும் அத்தன களையா இருக்கும். நிறையா தெரு பூனைகள்- முகம் பெருசா- பாக்கவே பயமா இருக்கும். துப்பாண்டி பரம்பரைலியே- அது அம்மாவ தவிர்த்து- மீதி எல்லாமுமே பாக்க பயமா தான் இருக்கும். அப்பப்போ வந்து இதுகள பாத்துட்டு போகுங்கள். துப்பாண்டியாவது கொஞ்ச நாள் தெரு பூனையா இருந்துட்டு அப்புறம் எங்காத்துக்கு வந்துது. Chotu -Cuppy க்கு, கால் மண்ணுலையே படல!

வெளி உலகமே தெரியாத வளர்ற குழந்தைகளோட innocence கு ஈடு இணையே கிடையாது. அது போல, Chotu -Cuppy யும், எந்த சூது-வாதும் தெரியாம, அதுகள் பாட்டுக்கு விளையாடிண்டு இருக்குகள். ஆனா, அதுலயும் இந்த Cuppy கொஞ்சம் சமத்து தான். காரியவாதி. சொல்லி கொடுக்கறதெல்லாம் இந்த Bushy தான். "கொழந்தைகள கவனிப்போம்" -ன்னு எல்லாம் எண்ணமே கிடையாது. வேணும்னே- நம்ப கண்ணுக்கு நேர feed பண்ணிட்டு- "பத்தியா, நான் feed பண்ணறேன், எனக்கு 'ங்கா' தா..." ங்கும். இந்த Cuppy சாப்படற time ல ஒழுங்கா சாப்டுடும். ஆனா Chotu கு எப்போபாரு விளையாட்டு தான். நன்னா ஆட்டம் போட்டுட்டு- பால் குடிக்க வாய வைக்கும், அப்படியே தூங்கி போய்டும்! அது கிட் ட் ட் ட போய் சத்தம் போட்டா- எழுந்துண்டு மறுபடியும் பால குடிக்கும்.. பாவம்!

துப்பாண்டிக்கு இதுகள் ரெண்டுத்தையும் கண்டாலே பிடிக்காது. இதுகளால, அதுக்கு இருந்த importance கொறஞ்சு போனதா feel பண்ணித்தோ என்னவோ. இதுகள் இருந்த வரைக்கும் ஆத்து பக்கமே வரல. என்னிக்காவது, வெளீல ஒண்ணும் தேரலன்னா- இங்க வரும். இந்த Chotu, துப்பாண்டி சாப்டும் பொது, "இவன் என்ன திங்கறான்"? ன்னு கிட்ட போய் பாக்கும். துப்பாண்டி சீரிண்டு வெரட்டி விட்டுடும், அத. காலால அடிக்க போகும். பாத்துது, இந்த Chotu. ஒரு நாள், துப்பாண்டி சாப்டும் போய் ஓடி போய், அத ஒரு அடி அடிச்சுட்டு, ஓடி வந்துடுத்து...

ஒரு மாசம்- ஒண்ணர மாசம் கழிச்சு தான் குரலே எழும்பித்து. பூனை குரல் அப்போதான் வந்துது. ஒரு சில சமயத்துல- "மி...மி..."ன்னு கீச்-கீச்-னு சத்தம் வரும். என்னத்தையோ தரைல தேடும், இந்த Chotu. எதோ த்யானத்துல இருக்கறாப்ல, எதையோ பாத்துண்டு யோசிச்சுண்டே இருக்கும். அது எத பத்தி யோசிக்குமோ! அங்க-இங்க பார்வை போகாம, focused ஆ, ஆடாம அசையாம, அப்படியே உக்காண்டுருக்கும். அப்புறம், ஒண்ணுமே நடக்காத மாதிரி எழுந்து- விளையாட போய்டும். அது உக்காந்து இருந்த இடம் மட்டும்- துளி ஈரமா இருக்கும்...

ரெண்டு மாசத்துக்கெல்லாம்- பயங்கர வாலாயுடுத்துகள். சாப்பட வேற ஆரம்பிச்சிடுத்து (solid food). ஒரு நாளைக்கு எத்தன தடவ தான் வராண்டா வ அலம்பறது?! எதப்பாத்தாலும் அது மேல ஏறணும். இதுகள் எங்க பூந்துண்டு இருக்குகள்-னு பாத்து, விரட்டி விடறதே வேலையா போச்சு. "Hindu" paper ல Adoption காக Ad. கொடுத்தோம்- "ரெண்டுத்தையும் யாரவது எடுத்துக்கோங்கோ"-ன்னு. நல்ல response. 10 நாள் வரைக்கும் call வந்த வண்ணம் இருந்துது. ஆனா முதல் நாளே ஒருத்தர்- ரெண்டுத்தையும் எடுத்துக்கறேன்- ன்னு எடுத்துண்டு போய்ட்டார். எங்களுக்கு அதுகள் ரெண்டுத்தையும் பிரிக்க வேண்டாமே-ன்னு தான். அதுகள எடுத்துண்டு போனப்றம்- "போய் செந்தேன், குட்டிகள் சௌக்கியம்"-னு ஒரு தகவலும் இல்ல! ஒரே கவலை. எங்க எங்கயாவது கொண்டு போய் வித்துடுவாரோ, சரியா பாத்துக்க மாட்டாரோ-ன்னுலாம். இவருக்கு வேற ஒரே guilt, Bushy ய பாக்கரப்போலாம்- "என் குட்டிகள் எங்க?"-ன்னு அது கேக்கராப்லையே தோணறது -ன்னு! ஒரு வாரம் கழிச்சு- "குயட்டிகள் சௌக்கியம், Chotu நன்னா weight ஏரிடுத்து"-ன்னு ஒரு தகவல் வந்துது. அப்பறம் தான் நிம்மதியா இருந்துது!

"Bushy ஷீ ஷீ ஷீ.... என்னடா வேணும் ஒனக்கு.."? ன்னு அத தடவி குடுத்துண்டு கொஞ்சராராமாம்! அது நெனச்சிக்கும், மனசுல- "விடிய விடிய கத கேட்டுட்டு- Bushy க்கு துப்பாண்டி பாட்டன்-ங்கரானே"-ன்னு. "அதுக்கு என்ன சார் வேணும்? 'ங்கா' - தான் வேணும். போய் அத வாங்கிண்டு வந்து, கையோட அதுக்கு கொஞ்சம் போட்டு அது வாய அடைங்கோ... அப்றமா உங்களுக்கு நான் first class coffee போட்டு தரேன்..."

PS: Chotu Video
பாக்க- Click Here

குக்குளு குளு குளு குளு  

Posted by Matangi Mawley


சனிக்கிழமைகளில் அம்மாவிற்கு evening shift. அப்பாவிற்கு அரை நாள் விடுமுறை. அம்மாவிற்கு இரவு நேர சாப்பாடு தயார் செய்து கட்டிக் கொடுத்து விட்டு, அப்பா என்னை கவனித்துக் கொள்ளவேண்டும். சனிக்கிழமை மாலை நேரங்களில் அப்பாவின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர் எங்கெல்லாம் கூட்டிச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வது வழக்கம். திருச்சியில் பார்ப்பதற்கு இடங்கள் அவ்வளவு இல்லை. அதே கோவில், குளம் , யானை, அம்மா மண்டபம் படித்துறை , Main Guard Gate தான். தவறாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்ர வீதி மார்கெட்டில் பூசணிக்காய் காரியிடம் பூசணிக்காயும் , மற்ற காய் கறிகளும் வாங்கிக்கொண்டு, Sunday Special ( அப்பா சமையல் )- அவியல் கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வீடு திரும்புவோம்.

திருவானைக்கோவில் ஒரு தனி சுவாரஸ்யம். நான் மீண்டும மீண்டும் போகவேண்டும் என்று ஆசைப் பட்டு போகும் கோவில். அங்கு பிரகாரங்களில் நிறைய பெரிய பெரிய frame போட்ட படங்கள். அந்தப் படங்களுக்குக் கீழே , அந்தப் படங்கள் பற்றின கதைகள். சம்பந்தருக்கு ஞானப்பால் கிடைத்த கதை, ராவணன் தன் கைகள் , தலை, நரம்புகளால் ஆன வீணை ஒன்றை வாசித்து ஈசனிடம் ஆசி பெற்ற கதை என்று பல கதைகளை அப்பாவை படிக்கச் சொல்லிக் கேட்கவேண்டும் , எனக்கு. சில சமயங்களில் இந்த படங்களில் இல்லாத கதைகளும், கோவில் பிரஹாரத்தை சுற்றி வரும் சமயங்களில் அப்பா சொல்லிக் கேட்கும் வழக்கம். ஜம்புகேஸ்வரர் சந்நிதியில், பின் புறம் ஸ்தல வ்ரிக்ஷம் ஜம்பு பல ( நாகைப்பழ ) மரத்தின் முன் என்னை நிற்க வைத்து என் அப்பா கூறிய கதை தான் "குக்குளு குளு குளு குளு" !

காளிதாசரின் கவித்திறனை சோதிக்க எண்ணிய அரசர் - "குக்குளு குளு குளு குளு"- என்ற வாக்கியத்தைக் கொடுத்து பாடல் அமைக்கச் சொன்னாராம். மறுநாள் காளிதாசர் அரசரிடம் சென்று -

|| जम्भू पलानि पक्वानि
पतन्ति विमले जले गुग्गुलु ग्लु ग्लु ग्लु ||

(Jamboo phalaani pakhwaani
Padanthi vimale jale
Guggulu Glu Glu Glu)

- என்றாராம். இது தான் அந்தக்கதை ...
அதாவது பழுத்த நாவல் பழங்கள் தெளிந்த நீரில் விழும்போது, குக்குளு குளு குளு குளு-
என்ற சப்தம் வந்ததாம். இந்த இரட்டை வரி கதை - இத்தனை வருடங்களாக என் மனதில் ஆழமாக பதிந்து போன ஒன்றானது .

சப்தங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. எண்ணங்களுக்குக் கூட உருவம் கொடுத்து விடலாம். சப்தங்களுக்கு..? Dictionary யில்அர்த்தம் பார்க்கத்தெரிந்த பல பேர்களுக்குக் கூட Pronunciation (phonetics) படித்துப் பார்த்து புரிந்து கொள்ளத் தெரிந்திருப்ப்பதில்லை. நம் அன்றாட வாழ்கையில் நாம் எத்தனையோ சப்தங்களை உள் வாங்கிக்கொள்கிறோம். இதில் சில நம் ஆழ் மனதின் அமைதியை குலைக்கும் நாராசங்களாக இருக்கிறது. ஆனால் ஒருசில சப்தங்கள், நமக்கு மட்டுமே சொந்தமானவைகளாக, அழகான நினைவுகளாய் மாறிவிடுகின்றன. இந்த சப்தங்களை வார்த்தைகளில் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் காளிதாசராக பிறக்கவில்லையே!

பாட்டி வீட்டிற்கு விடுமுறைகளில் செல்லும்போதெல்லாம் வெந்நீர் தவலைக்கருகில் உள்ள அலுமினியத் தவலை ஒன்றைக் கவிழ்த்துப் போட்டு, அதில் என்னை உட்கார வைத்து, மிளகாய் வற்றல், உப்பு கொண்டு 'சுற்றிப் போட' --வெந்நீர் தவலை அடியில் அது வெடிக்கும் சப்தத்தோடு சேர்த்து, அது வெடித்து கிளம்பும் சிறுசிறு கரித்துகள்கள் பறந்து பறந்து வெந்நீர் தவலையின் அடிப்புறத்தில் மோதும் அதே தருணத்தில், தவலையின் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் வெந்நீரின் கொப்புளிக்கும் சப்தம். கொல்லையில் பறித்த தேங்காய்களை கடப்பாறையில் உரிக்கும் பொழுது எழும் சப்தம். குந்துமணிகளை கைகளால் அளையும் பொழுது வரும் சப்தம். இரும்பு gate இன் விளிம்புகளின் மீது ஏறிக்கொண்டு, காலால் தரையை உந்திக்கொண்டு, உள்ளே-வெளியே என்று, முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு விளையாடும்பொழுது , அந்த gate -கதவு "போதும்" என்பது போல் லேசாக ஒரு குரல் கொடுக்கும் --அந்த சப்தம்.

School விட்டு வீடு திரும்பும் நேரங்களில், வீடுகள் கட்ட குவித்து வைத்திருக்கும் ஜல்லிக் கற்கள் மீது ஏறி விளையாடுபோது எழும் சப்தம். Aeroplane பறக்கும் சப்தம் கேட்டு -எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை விட்டு விட்டு -தலை தெறிக்க மாடிக்கு ஓடிப்போய் அதைப் பார்க்க போகும் வேளைகளில், ஓட்டத்தின் வேகத்தில் இடறி கீழே விழும் தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களின் சப்தம். Aeroplane பார்த்து விட்டு திரும்பும் போது அம்மா திட்டுவாளே என்ற பயத்தில் கூடுதல் ஒலியில் துடிக்கும் இருதய துடிப்பின் சப்தம்!

ஆனால் இவை கூட எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்த சப்தங்கள் தான். இன்னும் சில சப்தங்கள் உள்ளன. வார்ததைகளால் விவரிக்க முடியாத சப்தங்கள். நமக்கு மட்டுமே தெரிந்த, நாம் மட்டுமே உணர்ந்த, ரசித்த சப்தங்கள்...

"அப்பா-அம்மா" பலூன் விற்கும் பாட்டி. ஒருநாள் கூட அவள் கொடுத்துக்கொண்டு செல்லும் அந்த பலூன் சப்தம் மாறுபட்டதே இல்லை. ஆனால் அந்த சப்தத்தை, நான் உணர்ந்த உணர்வை- வார்த்தைகளால் எப்படித் தெரிவிக்க முடியும்? ரோஜாப்பூ, சைக்கிளில் விற்றுச் செல்லும் ரோஜாப்பூக்காரன் கொடுக்கும் சப்தம். அவன் " ரோஜாப்" என்று ஒருமுறை கூவிவிட்டு , அதைக் கேட்டுவிட்டு அவனை ஓடிப்போய் பிடிப்பதற்குள் அவன் எங்கோ தெருக் கோடிக்குச் சென்றிருப்பான். தினமும் அவன் வரவை எதிர் நோக்கி, balcony யிலேயே காத்திருக்கும் நாட்கள் உண்டு. கல்கத்தாவில் புதன்கிழமைகளில் ஒரு அம்மாவும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் "ஹாரே ராமா, ஹாரே கிருஷ்ணா " என்று harmonium & தப்ளம் வாசித்துக்கொண்டு பாடுவார்கள். நாங்கள் இருந்த 6 -வது மாடி வரை கேட்கும் அவர்களது சுருதி சுத்தமான, வளமான குரல். அவர்கள் எந்த விதமான academy களிலும் சென்று சங்கீதம் கற்றவர்கள் இல்லை. அந்த ஒரு வரியை தான் அவர்கள் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால்- பக்தி, கலாசாரம் போன்ற சொற்களுக்கு அப்பாற்பட்டு, நமது அந்தராத்மாவின் மூல ஷ்ருதியை ஒரு க்ஷணம் சுண்டிப் பார்த்து விட்டு வரச்செய்யும்- த்வனி அது. 1/2 மணி நேரம் அங்கு நின்று பாடினால் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் தேறுமோ என்னவோ. அந்த 1/2 மணி நேரம்- நம் வாழ்வில் நமக்கு கிடைத்தது எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்து திருப்தி பட்டுக்கொள்ள தோன்றும்.

ஒவ்வொரு சப்தமும் ஒரு நினைவு. நம் வாழ்வெனும் தவத்திற்கு - பிரணவத்தின் பலன் அளிக்கும் மந்திரங்கள், இந்த சப்தங்கள். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரங்களை மனத்தில் நினைவு கூர்ந்து தான் பார்ப்போமே...

சினிமா பாடல்களில் ராகமாலிகை- Degree காபி 3  

Posted by Matangi Mawley


ராகமாலிகை-அப்டீங்கற ஒண்ணு- கர்நாடக சந்கீதத்துக்கே உரியதான ஒரு விஷயம். ஒரு பாட்டோட ஒவ்வொரு வரியோ, ஒவ்வொரு சரணமோ- வெவ்வேறு ராகத்துல அமைக்கப்பட்டிருந்தா அத ராகமாலிகை-ன்னு சொல்லலாம். ஒரு அழகான விஷயம் இதுல என்னன்னா- ஒரு கர்நாடக கச்சேரி-ல ஒரு வித்வானுக்கு, ஒரே பாட்டுல வெவ்வேற ராகங்கள "explore"/"experiment" பண்ண, இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனா சினிமா-ல ராகமாலிகை-ங்கறது, ஒரு தனி விஷயம் தான். சினிமா-ல ஒவ்வொரு scene /situation கு ஏத்தாப்ல பாடல்கள் அமைக்கப்படும் சூழ்நிலைல, ராகமாலிகைகள கையாளறது-ங்கறது ஒரு தனித்துவம் வாய்ந்த விஷயம்- அப்டீங்கறது என் கருத்து. அந்த காலத்துல, தமிழ் சினிமா பாடல்கள்-ல நல்ல strong கர்நாடக சங்கீத சாயல் இருந்தது. "Light music ", "சினிமா music "- வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சு. அது வரைக்கும், சினிமா பாடல்கள்-ல கர்நாடக சங்கீதம் தான் ப்ராதாநித்து இருந்தது.

Romance, comedy, Sentiment -னு எத்தனையோ விஷயங்கள் நிரஜ்ஞ்சு இருக்கும் சினிமா-ல, கர்நாடக சந்கீதத்துக்குன்னே உரியதான, ராகமாலிகைகள- எப்படி use பண்ணினார்கள்- அந்த காலத்துல-அப்டீங்கரதுதான் ஆச்சர்யம்!

ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அதன் தன்மை இருக்கு. அதிகாலை நேரத்த வரவேற்கும் ராகம், தூக்கத்தை அழைக்கும் ராகம், மோஹம் அளிக்கும் ராகம்- கல்லையும் கரைத்திடும் ராகம், இருட்டில் ஒளி தரும் ராகம்- னு எத்தனையோ ராகங்களும், அதற்க்கான தன்மைகளும் உண்டு. இத போல தனித்துவம் வாய்ந்த ராகங்களோட ஆற்றல, நான் test பண்ணி பாத்ததில்ல. ஆனா, அந்த கால music directors, இத test பண்ணிருப்பார்கள் போல தான் தோணறது. ராகமாலிகைகள சினிமா-ல use பண்ண வசதியான situations அமஞ்சிருந்துது, அந்த கால சினிமாக்கள்ல. உதாரணத்துக்கு, ராகங்கள பத்தியும், அதன் தன்மைகள பத்தியும் பேசினோம், இல்லையா? "சம்பூர்ண ராமாயணம்" ங்கற சினிமா-ல ராவணனோட அபூர்வமான வித்வத்-அ வெளி கொண்டுவரும் ஒரு காட்சி. ராவணன், அவர் சபைல பாடறது போல ஒரு scene. இந்த பாட்டுல என்ன interesting விஷயம்-னா, இந்த பாட்டுல கேள்விகள் கேட்பார்கள்- "காலையில் பாடும் ராகம்? யுத்த ராகம்"? னு. ராவணன், அந்தந்த கேள்விகளுக்கான பதில அழகா பாடி காமிப்பார். அந்த ஒரு வரி-ல அந்த ராகத்தோட முழு சாயலும் வரும், அந்த ராகத்தோட பெயரும் வரும்! இத விட அழகா, common man கு சங்கீதத்த கொண்டு சேர்க்க முடியுமா, தெரியல. அந்த பாட்ட கேக்க- click here.

சம்பூர்ண ராமாயணத்துல பாட்டுக்கா பஞ்சம்? எல்லா பாட்டுமே ரொம்ப அழகான பாட்டு தான்! "இன்று பொய் நாளை வா"-ன்னு திலங் ராகத்துல அமைக்கப்பட்ட அந்த பாட்டு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே போல ராகத்தோட பெயர் வராப்ல "அகஸ்தியர்", அப்டீங்கற சினிமா- லயும் ஒரு ராகமாலிகை இருக்கு. "வென்றிடுவேன்"- ங்கற அந்த பாட்ட கேக்க- click here.

யோசிச்சு பாக்கும் போது, அந்த காலத்துல இத போல ராகத்தோட பெயர் பாட்டிலேயே வராப்ல அமைக்கப்பட்ட பாடல்கள் நிறையாவே இருக்கு-ன்னு தான் தோணறது. எனக்கு, இந்த பட்டியல்-ல ரொம்பவே பிடிச்ச ஒரு ராகமாலிகை- 'சிவகவி' ('47) சினிமா-ல, பாபநாசம் சிவன் music ல அமஞ்ச "வசந்த ருது"-ங்கற பாட்டு! அந்த கால "Super Star"- MKT பாடின பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

அந்த காலத்துல ராஜா/ராணி/மாய மந்திரம் படங்கள் நிறையா வந்ததும், ராகமாலிகைகள அழகா சினிமால பிரயோகிக்க வசதியா அமஞ்சுருந்துது. ஏன்னா- இத போல Mythological சினிமாக்கள்-ல situation கு பஞ்சமே இருந்ததில்ல. இதனாலேயே- பல ரொம்ப அழகான ராகமாலிகைகள்- சினிமாக்கள்-ல நமக்கு கிடைச்சுது. "வேதாள உலகம்" சினிமா-ல DKP அம்மா பாடின பாரதியார் பாட்டு- "தீராத விளையாட்டு பிள்ளை"! இன்னுமும் அது ஒரு "concert favourite". இந்த பாட்டுக்கான situation லாம் Mythological கதைகள்-ல தானாவே அமைந்து போய்டும். ராஜ- சபைல நடக்கும் நடன காட்சியா. இன்னொரு ரொம்பவே அழகான பாரதியார் பாட்டு, ராகமாலிகை- '57 ல வந்த, கலைஞர் எழுதின "மணமகள்" அப்டீங்கற social drama ல இருக்கு. ரொம்ப பிரபலமான பாட்டும் கூட. Lyrics அ முழுசா உணர்த்தக்கூடிய ஒரு music. அமைதியான 'காபி' ல ஆரம்பிச்சு- கொஞ்ச கொஞ்சமா affection கும் passion கும் நடுவில் உலவும் 'மாண்டு' ராகத்த தொட்டு, ஒரு rage ஓட அந்த border அ 'வசந்தா' ராகத்தால கடந்து- கடந்தப்ரம் 'திலங்' ஒரு விதமான அமைதி- அமைதி-கப்ரம் ஏதோ ஒரு சொஹம் கலந்த சுகம்- 'சிவரஞ்சனி' ராகத்துல- ன்னு அந்த "சின்னஞ்சிறு கிளியே பாட்டு" ஒரு encyclopedia of ராகமாலிகா தான்!

இதே சினிமா-ல MLV -P லீலா combination ல இன்னும் ஒரு அபூர்வமான ராகமாலிகா இருக்கு. இந்த combination ல நிறைய பாடல்கள் இருந்தாலுமே- இந்த பாட்டுக்கு ஒரு தனி இடம் தான். "எல்லாம் இன்பமயம்" பாட்டு கேக்க- click here.

60s ல மறுபடியும் ராகமாலிகைகள பிரயோகிக்கும் கடமை- Mythological சினிமாக்களுக்கு போய் சேர்ந்தது. K. V. மஹாதேவன் அவர்களோட அபாரமான music ல "திருவிளையாடல்" சினிமால- வரும் "ஒரு நாள் போதுமா" பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here. இந்த பாட்டு பிரமாதம் தான். பாலமுரளிக்ருஷ்ணா அவர்களோட குரலும் பிரமாதம் தான். ஆனா- இத எல்லாத்த காட்டிலும்- T. S. பாலைய்யா-வோட histrionics - Chance ஏ இல்ல!

Romance ராகமாலிகைகள்-ல குறைவு தான்- என்றாலும்- அந்த area லயும் கொஞ்சம் பாடல்கள் கொண்டு வந்தது- பெரிய விஷயம் தான். Dance கு dance, romance கு romance- ங்கற விதத்துல அமைந்த பாட்டு- "உத்தம புத்திரன்" சினிமா-ல வந்த "காத்திருப்பான் கமல கண்ணன்". இந்த பாட்ட கேக்க- click here. ஆனா- இந்த ராகமாலிகா பாடல்களிலேயே- என்னோட ரொம்ப ரொம்ப இஷ்டமான பாட்டு- "மணாளனே மங்கையின் பாக்கியம்" சினிமா-ல வரும், ஆதிநாராயண ராவ்-ஓட inimitable music ல ஒலிக்கும்- "தேசுலாவுதே". இந்த படத்த, சின்ன வயசில 30-40 தடவ பாத்த அனுபவம் இருக்கு. பறக்கும் பாய், மந்திர தந்திர கமண்டலம்-னு- குழந்தைகளுக்கு தேவையான எல்லா சமாசாரமும் இருக்கும். இந்த பாட்டு- இத பாட தெரிஞ்சாச்சு-ன்னா எந்த Music contest யும் win பண்ணினடலாம். அத்தன கஷ்டமான- but அபூர்வமான பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

ராகமாலிகைகள்- சினிமா பாடல்கள்-ல இப்போலாம் அவ்வளவாக இல்லாம போய்டலாம். ஆனா- இந்த பாடல்கள் எல்லாமே- கடந்த காலம், நமக்கு கொடுத்த ஒரு பரிசு. இந்த பாடல்கள வருங்காலத்துக்கு கொண்டு போறது, நம்ம கடமை. இது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

PS: Degree காபி Series: மி மராதி -- GR -- Degree காபி

Paper - ல பேரு...  

Posted by Matangi Mawley

"The Hindu"- 13th July ., 2011 - "Letters to the Editor"...

"Paper ல பேரு வர அளவுக்கு நன்னா படிக்கணும்"னு- என் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது... :)