"சார் post"!!  

Posted by Matangi Mawley


வெகு நாட்களுக்குப் பிறகு அப்பா ஒரு forward mail அனுப்பினார் ! Reply செய்ய வேண்டும் என்று துவங்கி- அந்த பதில் ஒரு article ஆக மாறிப்போனது. ஆங்கிலத்தில் நான் எழுதிய அந்த பதிலை தமிழ் படுத்த முயற்சித்துப் பார்த்தேன். என் தமிழ் மொழி அறிவை இன்னும் "எவ்வளவு" வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்தியது அந்த முயற்சி! ஆனாலும் இந்த விஷயத்தை என்னால்- "மைத்துளிகள்" இல், ஆங்கிலத்திலாவது பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அப்பா அனுப்பிய "Forward":

---------- Forwarded message ----------
> From: *mahalingam v*
On 5/21/12, mahalingam v wrote:
> கிட்டத்திட்ட  ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து என் நண்பர்குழாமில் உள்ள
> சிலருக்கு இந்த மெயில்- ஐ forward  செய்துகொண்டிருக்கிறேன்..சிலரி
ன்
> re-actions களும்  நீ பார்க்கலாம் 

> -Subject:: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் !!!!! - A thought provoking
> article.
>
>
மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம்
இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது
திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு
கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...
சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்தமனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவலநிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின்தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலுமாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமேவேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர்  செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’ ‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல ண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு  பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க
கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு
தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி
போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன். கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே ?.  எனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம்.  நான் லைஃப்ஐ என்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம். ‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக
 காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்... ‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
 ‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன்
 வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க.  அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...  இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம்  பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து  கொள்ள முடிகிறது.
 இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
 வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான்
 திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று
 பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு
 பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா  பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும்  என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல  என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
 இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
 ‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’  என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம்  முற்றிலுமாகப் போய்விட்டது.
 ‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான்
 கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
 பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த  ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான  கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு  செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
 தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர்,
 வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை,  வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம்  கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும்  பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!... சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில்
இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்
அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது தனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.
 இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால்  இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?  இதோ பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய
திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற  துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய
நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித  குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன  உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை  அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
 இதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு  !.
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் ! காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று  உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்  நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும்  சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||. 

என்னுடைய பதில்:


Hi Appa,


So typical! This article, no wonder, is a hit among you all (parents).

I would not say that the entire view taken about the "attitude" of the girls mentioned here is wrong. Some of the views of these girls sound really silly! Especially the ones like "mood-out" when it comes to cooking, "yaar kooda pona" kind of things.

But one has to consider the fact that, women have been suppressed for such a long period of time that this sudden change leads to 2 possible outcomes-
  •  Society has not yet transformed to accommodate the ideals of the liberal women.
  •  Most women are not able to figure out the proper way to exploit this new-found freedom.

Thinking about it- though option 2 would mean that I must criticize about my own sex, I feel that it is a necessary introspection.

Only in 1829, Sati was abolished (1829 seems very near if you take into account the millions of years of suppressing women). Then came in various social movements- thanks to people like Ram Mohan Roy and Ishwar Chandra Vidyasagar, we women folk are now getting the education we deserve. Today, where we women are, is a junction that is a result of a life-long struggle of many great minds.  To think that only around 1975, "age of consent" for women was 15! To even think about marrying at the age of 15, feels now, like a crime! Past this phase, there was a wide-spread support for emancipation of women power. There was an ideological shift in the society. From what I have understood, in retrospect, more educated people, felt the need and importance of
economic independence of women. Please note that even then, the society was not purged of evils like dowry or female infanticide. But there was a popular appeal for the said cause.

The trend was to portray a "modern woman". A woman, unlike in the past, who could think, talk, work, and do all that a man can do. She had a voice and a vision. Be it the new wave of parallel cinema or the paradigm shift in the literary world- this popular thought was well-documented.

Post globalisation and with the entry of alien "fashion" into the Indian soil- now armed with a certain level of independence, women started out with their experiments with liberation! The booming Indian markets could supply women with the latest in everything. But here, those parents, who were once so proud of their dream of seeing a "modern woman" in their daughters/daughters-in-law, failed to recognize that- this phase of women's liberation is missing one crucial aspect that is almost essential for every social change. No change can happen to one part of the whole. The part must take along
the whole with it. Popular support from one section of the society, had blinded the change as a whole towards the other sections of the society. This resulted in the stagnation of progress in the "minds" of the rest of the society while the women moved along with the change.

Besides, other factors like the "craze" for a "boy" child, etc., that were typical of the social systems of the past, found their way into the more evolved society. The result is, as you can see, a square peg and a round whole. This group have failed to notice the social change around them and have never adapted themselves to the change. So now, they find themselves among women who are totally contradictory to what they have always regarded as-how a woman must be.

Also, when the women have changed for the better, leaving behind them a whole chunk of a society, the society now refuses to accept the change that is so visible. Something so  "normal", such as- say a working woman- that is "normal" for one section of the "changed" society, seems alien to the rest. But this situation cannot be changed. Any change can only take a society forward, never backwards. So we can only wait for the rest of the society to accept that which is "normal" and keep up with the change.

Now the other aspect of looking at this change is- though the change has given the women a certain power to explore their freedom, it has failed to bring about an overall change in their thought. The change has only broadened the participating platform of the women. It has, however, not contributed towards their intellectual upgradation. Now, "modern women", though have changed physically and mentally- juggling career and family- or being traditional and modern- they have not changed intellectually. They must understand that they must cultivate a certain level of intellect- that would help them survive through this transitional phase. Only this, could help them understand that they have "elevated" yet there are many "beneath" themselves who need the women's help to catch up to the change. Women must understand that the change they have undergone, would only take effect if they have a certain level of intellectual acumen to strengthen their stand amongst the society. It is evident from the examples cited in the mail, that this intellectual upliftment in women is nowhere to be seen. It is no use blaming the parents or the women themselves.

Though every year, public exam result boasts of women leading the race- we must understand that this "race" is just marks and numbers and not wholesome development. Be it men or women, our education lacks in giving them any sense of "responsibility". Men or women- their standing in the society is Rs. ***lakhs per annum, **_ flat, **/****/*** education at ***/*** college. Social status in the current scenario, is not determined by the level of intellectual emancipation but such and such schools/colleges/clothes-brands-accessories/fashion/etc. Parents have remained to be proud spectators of the social change in their children, but have lacked in putting in serious efforts towards their own intellectual upgradation- let alone providing the same to their children.

It is hence my belief, that if women cultivate this intellectual acumen- they can change and question their own thoughts and beliefs and could also take along with them, the other less privileged groups of society, towards a beautiful future...

 A female character named Marianne in Jane Austen's "Sense and Sensibility" remarks- "I suppose I have erred against decorum. I should have been dull and spiritless and talked only of the weather...". You well know that this I could never manage to do- thanks to the way you and amma have brought me up! I am also sure appa, that you could have never brought me up as someone similar to the role of actress Saritha in the last scene of movie "Aval Appadiththaan"- you could have never done that even if you had wanted to. I also don't believe that you had sent this mail to me as a "dig" at our own situation on the similar issue.

So please note, appa, that this was written just in reply to your mail, in defense against the accusations in the mail- which seemed to me- too brutal towards we- the women folk...

Matangi

This entry was posted on 24 May, 2012 at Thursday, May 24, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

9 comments

மாதங்கி, எங்க்க வீட்டிலயும் இந்த மாதிரி
மெயில்கள் வந்து போயிருக்கின்றன.
பையன் களுக்குப் பெண் பார்க்கும்போது:)

ஒரு பெண் அவளோட சினேகிதனோட தனியாக
முன் பின் சொல்லாமல் வந்துவிட்டாள்!
நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று செக்
செய்யத்தான்!!!

இன்னோரு பெண் நீ இருக்கிற ஊருக்கு வரணும்னால்
சமைக்க மாட்டேன். ஒரு குக்
ஏற்பாடு செய்த பிறகு பேச்சு வைத்துக் கொள்ளலாம்
என்று சொல்லிவிட்டாள்:)

மாப்பிள்ளை(பெண்ணுக்கு) பார்க்கும்போது வேற வேற அனுபவங்கள்:)

24 May 2012 at 19:21

As a dad opens up his heart as to what he feels about the younger generation, which appears in his angle and approach,a deviation or a departure from the traditional ways he is accustomed to, the daughter puts before him equally forcefully what she feels about what her dad says, in the light of her own educational, social and financial background.
Let us wait for another twenty years to listen to what would be the response of this daughter's daughter, as a similar letter is sent .
One thing is clear.
Old order changeth, yielding place to new.
and If this NEW is not palatable, better keep quiet and allow the younger generation to tread their own ways, experiment and learn from their own experiences.
subbu rathinam.

24 May 2012 at 19:44

ஒரு தந்தை மகளிடம் சில விஷயங்களை நேரிடையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதற்குத் தயக்கம் காட்டுகிறார் என்றால் அது அவர் வளர்ந்த வளர்க்கப்பட்ட சூழலாலும்,எதுவும் கைவிட்டு மீறிப் போகக் கூடாதே என்னும் பயத்தாலும்தான்.ஒரு முறை உங்களுடன் தொடர்பில் இருந்தபோது, இவ்வளவு பாசம் பொழியும் தந்தையைப் பெற நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று நான் சொன்னபோது, என்னை மகளாகப் பெற அவர்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பதில் கூறினீர்கள். அது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது,பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண் அடிமைத்தனம் என்றெல்லாம் கூறிக் கொண்டு மேலை நாடுகளை அப்பட்டமாகக் காப்பி அடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, ஒரு தந்தையின் பயம் நியாயமானதுதான். பெண்கள் முன்னேற்றம் என்னும் என் பதிவுக்கு பின்னூட்டம் எழுதிய அவருக்கு அந்த விவரங்கள் நம்ப முடியாததாக இருந்ததை உணர முடிந்தது. பெண் ஒரு வட்டம் போன்றவள்முனைகள் ஏதும் இல்லாதவளாக இருப்பதுதான் அழகு. அதனால் சுய மதிப்பையும் கருத்துக் கணிப்பையும் விட வேண்டும் என்று அர்த்தமல்ல. எந்த நிலையிலும் சுயம் இழக்காமல் அனைத்தையும் அரவணைத்துப் போகிறவளாக இருப்பது அனைவருக்கும் நலம். ஒரு குடும்பத்தின் நலமோ இழப்போ. பெரும்பாலும் பெண்களால்தான் உருவாகிறது.நான் என்னும் அகந்தை யாருக்கும் இருக்கக் கூடாது. பொதுவாக நம் சமுதாயத்தில் பெண்களுக்கு அது கூடவே கூடாது. Old order changeth, yielding place to new and if this NEW is not palatable,better keep quiet, and allow the younger to tread their own ways,experiment and learn from their own experiences. THAT I AM AFRAID IS NOT THE RIGHT THING. நெருப்பு சுடும் என்று தெரியும்போது சுட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று இருக்க நல்ல பெற்றோர்களால் முடியாது. மாதங்கி, கண்களையும் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக்கொண்டு வாயை இறுக மூடிக் கொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.

26 May 2012 at 21:37

//நெருப்பு சுடும் என்று தெரியும்போது சுட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று இருக்க நல்ல பெற்றோர்களால் முடியாது. மாதங்கி, கண்களையும் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக்கொண்டு வாயை இறுக மூடிக் கொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.//

That is exactly what i said GMB sir.
Advices nowadays have little value, albeit counselling has better effect.
Parents may do better if they sit by the side of their apparently erring children and allow them to analyse their anxieties, concerns, hopes, plans and also logistics so that they make their own decisions.

katti kodutha sorum etri vaikkum
eniyum ethanai naal irukkum?

subbu rathinam.

27 May 2012 at 16:54

இந்த விஷயங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு கதை எழுத எண்ணியிருந்தேன். தலைப்பு கூட
'கல்யாணத்திற்கு கல்யாணம்' என்று தீர்மானித்திருந்தேன். அதற்குள் உங்கள் பதிவு வந்து விட்டது.:))

கல்யாணம் என்பது புனிதமான ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில் ஒரு
ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கிற பந்தம் தானே தவிர, அதன் உண்மையான தாத்பரியம் முதுமை காலத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டாக இருப்பதற்கான ஏற்பாடே அது.

முதுமை எல்லோருக்கும் பொது.
கல்யாணத்திற்கு பின்னான ஒவ்வொரு நாள் பொழுதும், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமும், பிணைப்பும், பாசமும், நேசமும், விட்டுக் கொடுத்தலும், இடறி விழுதலும் அந்த இருவருக்கும் பொதுவான அந்த முதுமை நோக்கியே முன்னேறுகிறது.

உங்கள் அப்பா எடுத்துக்காட்டிய உதாரணங்களுக்கு ஏற்பவான அவரவர் குணநலங்களுக்கு ஏற்பவான ஆண் அவரவர்களுக்கு அமைவது தான் முக்கியம். பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இதே தான்.

பழகிப் பார்த்த பிறகு கல்யாணம் என்றில்லாமல் பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் கல்யாணமாக இருந்த காலத்தில், அவரவர் குணங்கள் எப்படியிருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இணங்கிப் போகும் தன்மை இருவருக்கும் இருந்தது. அப்படிப் போகமுடியாது என்று தீர்மானமாக இருப்போர்,தங்கள் குணநலங்களுக்கு ஏற்பவான கணவன்-மனைவி அமைவதில் கவனமாக இருக்க வேண்டியது தான்.

முதுமையில் இருவருக்கும் இறுகிப் போன 'உனக்கு நான்; எனக்கு நீ'என்கிற பந்தம் இருக்க வேண்டும்; அதான் முக்கியம்.

28 May 2012 at 00:35

உல‌க‌ம‌ய‌மாக்க‌ல், உல‌க‌த்தை ஒரு குட்டி கிராம‌மாய் ஆக்கிவிட்ட‌து. அமெரிக்காவுக்கு ஜ‌லதோஷம்ன்னா, இங்கே தும்முரா, சிலிகான் வேளிலே, ஆவணியாவிட்ட‌த்துக்கு லீவுட‌றாளாமே.
இவை போன்ற‌வை, மாற்றி இருக்கிற‌து நிறைய‌ இந்திய‌/த‌மிழ் க‌லாச்ச‌ர‌ங்க‌ளை. ப‌ண‌ம் ம‌ட்டுமே எல்லாவ‌ற்றையும் தீர்மானிக்கும்/நிர்ண‌யிக்க்கும் "அளவுகோல்" ஆக மாறிவிட்டால், ஆண்டான் அடிமையை முன்பு ஜாதிக‌ள் தீர்மானித்து போல்,இனி காசோலைக‌ள் தீர்மானிக்கும். அத‌னால் தான் நாட்டின் த‌லைமைமுத‌ல், அடிம‌ட்ட‌ம் வ‌ரை 'எப்ப‌டியாவது' ப‌ணம் ப‌ண்ணிவிட‌ப்பார்க்கிற‌து.
ல‌ட்சும‌ண‌ன் கோடுக‌ள் இன்றும் தேவைப் ப‌ட‌த்தான் செய்கிற‌து. கோட்டை மீறாவிடில் இராம‌ய்ண‌மே இல்லை என உச்சநீதிம‌ன்ற‌ முந்நாள் நீதிப‌‌தி க‌ங்குலி, பிர‌த‌ம‌ருக்கே ப‌தில‌ளித்தாலும், இங்கு எல்லோராலும், இராம‌ன் போல் இராவ‌ண‌னிட‌மிருந்து ம‌ணைவியை மீட்க‌ முடியாது தான். திடீர் க‌ல‌ச்சார‌ ம‌ற்ற‌ம்/க‌ல‌ப்பு குட்டையை குள‌ப்ப‌த்தான் செய்கிற‌து. இய‌ற்கையே, சீதோஷ்ண‌ங்க‌ள், ம‌ர‌ம், செடி, வில‌ங்கு, உண‌வு என‌ தேச‌ங்க‌ளுக்குள் ப‌ல‌ வித்தியாச‌த்தை கொண்டிருக்கும் போது நாம் எல்லா க‌லாச்சார‌த்தையும் ஒன்றாய் குழ‌ப்பி வாழ‌ இய‌லாது. ஆப்பிரிக்க‌ பெண்யானைக்கு வ‌ள‌ரும் த‌ந்த‌ம், ஆசிய‌ பெண்யானைக்கு இல்லை. ‌
நாம் ம‌துரை மல்லியை விட‌ காஷ்மீர‌ ரோஜாக்க‌ளை விரும்ப‌லாம், அத‌ற்காக, ம‌ல்லியை ரோஜாவாக்க‌ முடியாது. இய‌ல்புக‌ள் மாறாது (ம‌னசாட்சிக்கு தெரியும்) வாழ்த‌லே எளிதான‌தாய், இல‌குவாய் வாழ்வை ந‌ட்த்திச் செல்லும். இல்லையெனில், ந‌டிகை க‌ம் அர்சிய‌ல்வாதி சென்ன‌து போல‌ "இக்கால‌த்தில் யாரும் வ‌ரும் ....$$.., .####....... இருப்பார்க‌ள் என எதிர்பார்ப‌தில்லை" என்கிற‌ க‌லி முற்றும் கால‌ம் நெருங்கிவிட‌ நேர‌லாம்.

1 June 2012 at 17:28

ரெண்டு மூணு நாளா பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சிட்டிருக்கேன்.
//இந்த மாதிரி ஒரு பெண்ணைப் பெற அப்பாதான் கொடுத்து வைத்திருக்கணும்
சபாஷ். not only contextually correct but also rationally apposite. இது நிறைய பெற்றோருக்குத் தெரிவதில்லை. பிள்ளை பெற்றோரைப் பெறுவதில்லை.
//திருமணம் எனும் புனித..
புனிதம் எங்கே வந்தது? திருமணம் ஒரு socially relevant convenient arrangement. புனிதம் புரியவில்லை.

about the letter.. ஒரு personal exchangeஐப் பகிர்ந்து கொள்ள முன்வந்த துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். அசப்பில் நேரு-இந்திராகாந்தி exchange போலவே இருக்கு. இவ்வளவு பொறுமையா இரு தரப்பிலும் intellectual loitering பண்ணி எழுதுறது certainly bonding. மறுபடியும் kudos.

இதை ஒரு பதிவா பொதுவில் வைச்சிருக்கிறதால.. my first impression is that you might have missed the point of the letter; or did not respond to, or at least steered from, the subliminal question, seems there is one. was that a conscious choice? of course, i can understand if it was edited..

unfortunately, there seems no therapy for cerebral deficiency - இருந்தா i hope மேரேஜ் சென்டர் வைத்திருப்பவர் gets therapy.

2 June 2012 at 21:42

என்ன ஒரு சுவாரஸ்யமான பார்வைகள்!

இதை ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான உரையாடலாய் எனக்குப் பார்ப்பதை விடவும் விலகின தளத்தில் பார்க்கப் பிடித்திருக்கிறது.

கணவன் மனைவி உறவே சின்ன அளவில் தொடங்கி ஒரு சமூகத்தை வளர்ப்பதற்கான ஏற்பாடாய்த்தான் துவக்கத்திலிருந்து இருந்திருக்கவேண்டும். அது சுயநலம் சார்ந்த பொதுநலத்துக்கான பாதையாய் இருக்கிறது.இந்த நீண்ட நெடும் பயணம் ஏற்ற இறக்கங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிராய் இருக்கும் காமம் வெகு சீக்கிரமே அதன் கவர்ச்சியை இழந்து அடுத்தடுத்த தளத்துக்குக் கொண்டுபோய் இறுதியில் ஒருவரை ஒருவர் பார்வையாலே மட்டும் சம்பாஷிக்ககூடிய முதிர்ச்சியான கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

உறுப்புக்களில் தொடங்கி குணாதிசயங்கள் வரைக்கும் வேறு வேறாய்த்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் எந்த உறவும் ஆழமாவதே விட்டுக்கொடுத்தலிலும் சகித்துப் போவதிலும்தான்-அது வெளித்துறையானாலும், உள்துறையானாலும்.

பெண் சிங்கத்தின் கடமையும், ராணித்தேனியின் பாத்திரமும், பூக்களில் தொடங்கி மரங்கள் வரைக்கும் இப்படியான வேறுபாடுகள் இயல்பாய்த் தொடர மனிதனின் சிந்தனைதான் அவனை ஒரு சபிக்கப்பட்ட ஆப்பிள் கடியிலிருந்து இத்தனை நாள் வரைக்கும் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.

புராண இதிஹாசங்களிலும் மனுஸ்ம்ருதியிலும் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையும் அங்கீகாரமும் வேறெந்த நாட்டின் பாரம்பர்யத்துக்கும் கிடையாது. அது சார்ந்த பல விஷயங்களை இன்று விவாதிக்க புரிந்துகொள்ளக்கூட பொறுமையான மனம் இருக்குமா என்று தெரியவில்லை.

யாரையும் வெறுக்கத் தெரியாதிருந்த முன்னோர்களிடம் பலவற்றை இந்த சமூகம் கற்கத் தவறிவிட்டது. அன்பை நிராகரித்தவ்ர்களிடம் கூட அன்பு செலுத்தும் மனம் இருந்துவிட்டால் பல கேள்விகளுக்கு அவசியமே இருக்காது.

சமையலை விடுங்கள். எதையுமே உருவாக்கத் தேவையான பொறுமை இங்கே ஆணுக்கும் இல்லை. பெண்ணுக்குமில்லை.சிருஷ்டியின் மகரந்தம் இந்தச் சமூகத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது.

திருமணம் என்பது இன்று சமூகத்தில் தன் அந்தஸ்தை வெளிக்காட்ட மட்டுமே உபயோகப்படும் ஒரு சடங்காகவே பெரும்பாலும் மாறிவருகிறது. சடங்கின் விளைவாய் உருவாகும் குழந்தைகளுக்குக் கதை சொல்லப் பாட்டி தாத்தாக்கள் இல்லை. தாலாட்டில்லை. சுவையான தின்பண்டங்கள் இல்லை.நெருக்கமான அன்பில்லை. பந்தம் தொலைந்திருக்கிறது. முதுமையின் மலர் அழகாய் மலராது வெதும்பி வதங்கி இலை உதிர்க்கிறது இந்தச் சமூகம்.

உங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் நன்றிகள் பல.

5 June 2012 at 21:08

@ sundarji...


"சமையலை விடுங்கள். எதையுமே உருவாக்கத் தேவையான பொறுமை இங்கே ஆணுக்கும் இல்லை. பெண்ணுக்குமில்லை.சிருஷ்டியின் மகரந்தம் இந்தச் சமூகத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது." மிகவும் அருமையாகச்சொல்லியிருக்கிரீர்கள் ; இந்த விஷயம் பற்றி , இன்னும் கனமான subtle and metaphysical கருத்துக்கள் கூறப்படவெண்டும் ...' காலத்திற்கு' காத்திருக்கிறேன்

..அன்புடன் மாலி .

12 June 2012 at 20:49

Post a Comment