நிழல் திருடன்  

Posted by Matangi Mawley


"The Mask" cartoon பார்க்க மிகவும் பிடிக்கும், சிறு பிராயத்தில். அதில் வரும் Mask மற்றும் Stanley Ipkiss- இருவரையுமே மிகவும் பிடிக்கும். அந்த cartoon இன் ஒரு பகுதியில்- Stanley வசிக்கும் Edge City யில் திடீரென்று, மர்மமான முறையில் மக்கள் முதியவர்களாக மாறி விடுவார்கள். அது எப்படி ஒரு நாளில் மாற முடியும்? உண்மையில்- இதற்க்குக் காரணம், Edge City ஐ புதிதாக எதிர்த்திருக்கும், வில்லன்- Skillit - ஒரு "Shadow Thief". மக்களின் நிழல்களைத் திருடி அவன் சக்திகளை வலு படுத்திக் கொள்ளும் அந்த வில்லனை- "Mask" எப்படி விரட்டுகிறான் என்பது தான் கதை.

இயற்ப்பியல் விதிகளுக்கிணங்கிய எல்லாவற்றிற்குமே நிழல் என்பதும் நிஜமே! அந்த நிழலுக்கு ஆழம் உண்டா? கனம் உண்டா? ஆனால் நிழலுக்கு இந்த விதிகள் பொருந்தாது. காற்றோ, நெருப்போ, நீரோ எதுவும் அதை பாதிக்காது. ஆனால் இயற்பொருள் சார்ந்த அனைத்து பொருட்களின் இயங்குமுறை ஒரு சில விதிகளுக்கு உட்பட்டது என்ற போது- நிழலுக்கு மட்டும் இப்படி சில சலுகைகள்!

Tom and Jerry யில் "The Invisible Mouse" என்ற cartoon இல் தன்னை அத்தனை நேரம் ஏமாற்றிக்கொண்டிருந்தது- அரூபமான Jerry தான்- என்று Tom, Jerry யின் நிழலைப் பார்த்து தான் புரிந்து கொள்ளும்! அவ்வளவு அழகான முறையில் அந்த காட்சி அமைந்திருக்கும். Jerry யின் நிழலைப் பார்த்து Jerry ஐ Tom அடிக்கும் போது- Jerry யின் நிழலின் தலையில் ஒரு வீக்கம் தெரியும்! என்ன கற்பனை வளம்! (Click Here)

நள-தமயந்தி கதையில், தமயந்தி சுயம்வரத்தின் போது, தேவர்கள் நளனைப் போல உரு
மாரிக்கொள்வார்க்களாம். தமயந்தி, தேவர்களுக்கே உரியதான சில குணாதிசயங்களைக் கண்டு கொண்டு, நளனைக் கண்டு பிடித்து மாலை அணிவிப்பாளாம். அதில், தேவர்களுக்கு உரியது- என்று கூறப்படும் குணாதிசயங்களில்- அவர்களுக்கு "நிழல் கிடையாது" என்றும் சொல்லி கேள்விப் பட்டதுண்டு. ஆனால் உரு கொண்ட அனைத்து பொருட்களுக்கும் நிழல் என்பது இதுக்கத் தான் வேண்டும். இப்படி இருந்திருக்கலாமோ? தேவர்களின் தலைக்கு மேல் "Halo" என்று சொல்லக் கூடிய "ஒளி வட்டம்" இருப்பதனாலோ என்னவோ- அவர்களது நிழலானது நம் கண்களுக்குத் தெரியாத படி- அவர்களுக்குக் கீழேயே விழுந்திருக்கக் கூடுமோ?

"Shadow Thief" என்னும் கோட்பாடு, இந்தியர்களுக்குப் புதிதென்று சொல்ல முடியாது. ராமாயணத்திலும் "சாயா க்ரஹீ" என்றவள் ஹனுமான் கடலைக் கடக்கும் போது அவரது நிழலைப் பறிக்க எத்தனிப்பாள் என்று படித்ததுண்டு. "Carl Sands" என்ற Comic Book வில்லன்- "Dimensiometer" கொண்டு நிழலாக மாறிக்கொள்வான். அப்படி மாறிக்கொண்டு- சுலபமாக, யாருக்கும் தெரியாத முறையில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். அது மட்டுமில்லாது- மற்றவர்களின் நிழலையும் அவனால் எடுத்துக்கொள்ள முடியும். திருடிய நிழல்களைக் கொண்டு, யாரிடம் திருடினானோ- அவர்களின் நகல் உருவங்களை உருவாக்க முடியும், அவனால்! என்ன ஒரு கற்பனை! சமீபத்தில் ஒரு முறை "சாயா க்ரஹீ" பற்றிப் படித்த போது, அது ஏன் ஒரு Bermuda Triangle போலதென்றாக இருக்கக் கூடாது என்று தோன்றியது.

யோசித்துப் பார்த்தோமேயானால், Cartoon களிலும், Comics களிலும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. "நம் புராணங்களிலோ, வேதங்களிலோ இல்லாத விஷயங்களா"- என்று உடனே மறுப்பு தெரிவிக்கும் சிலரும் உண்டு. புரியாத வார்த்தைகளின் பிரயோகத்தை Thesaurus- இல் பார்பதில்லையா? புரியாத கேள்விகளுக்கு பதில்- "Notes" இல் படிப்பதில்லையா? Shakespere கதைகளின் abridged version படிப்பதில்லையா? அதைப் போலத்தான் Cartoon களும், Comics களும். குழந்தை பிராயத்தில் "இல்லை, ஆனால் இருக்கு" என்று வேதாந்தம் பேசாமல் எப்படி "இது தான் கடவுள்" என்று ஒரு சிலையைக் காண்பித்துக் கொடுக்கிறோமோ- கிட்டத் தட்ட அது போலத்தான் Comics களும். படிக்கும்/பார்க்கும் விஷயங்கள்- ஆழ் மனதில் புதைந்து கிடக்கும். அவ்வபோது அவை மேலெழும்பும் போது- அதில் பல விஷயங்கள் புலப்படும்...

Cartoon பார்க்கலாமா? (The Mask - Shadow of a Skillit- Part 1 & Part 2)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

This entry was posted on 01 January, 2012 at Sunday, January 01, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

13 comments

எல்லாருக்குமே Halo இருக்கிறதல்லவா மாதங்கி? நிழலைப் பற்றிய ஆராய்ச்சி நன்றாக இருக்கிறது :-) கார்ட்டூன்களில் கடினமான பல விஷயங்கள் எளிதாக்கிக் காட்டப்படுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.. அது தான் அதன் நோக்கமும் என நினைக்கிறேன்? நிதானமான எழுத்து நடை..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

2 January 2012 at 01:49

அரிய சிந்தனையை மிக எளிதான வார்த்தைகளில்
அழகாகச் சொல்லிச் சென்ற விதம் அருமை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

2 January 2012 at 02:34

interesting view. எளிமையான விளக்கம் கார்டூன்களில் கிடைப்பது உண்மையே. (புரிந்து கொள்ள முடியாத கார்டூன்கள் என்றால் யாரும் பார்க்க மாட்டார்கள் :)

2 January 2012 at 08:21

திடீர் திடீரென்று சில சிந்தனைகள் தோன்றும். அவற்றுக்கு வரிவடிவம் கொடுத்து ஒரு சிறந்த பதிவாக்குவது மாதங்கியின் ஸ்பெஷாலிடி. பாராட்டுக்கள்.

2 January 2012 at 11:43

நிழலை நிஜமாக்கிய பதிவு.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :-)

2 January 2012 at 13:22

good one to start with this year. Happy new year

3 January 2012 at 09:14

முகமூடியின் பின்னே துவங்கிய நிழல் இதிகாசங்களின் நிழல் வரை நீண்டுவிட்டதுதான் மாதங்கியின் ஸ்பெஷல்.அடிமுடி தேடும் உங்கள் ஆர்வமும் சிந்தனையும் எப்போதுமே தனி ருசி.அபாரம் மாதங்கி-நிழலாய் அல்ல நிஜமாய்.

3 January 2012 at 10:00

நிழல் பற்றிய என்ன அருமையான சிந்தனை ஓட்டம்.
GMB ஸார் சொன்னது போல இது உங்கள் ஸ்பெஷாலிட்டி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

3 January 2012 at 20:30

நிழல் ஆராய்ச்சி அருமை.

தேவர்கள் கண் சிமிட்ட மாட்டார்கள் என்று எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது.

3 January 2012 at 21:28

எனக்குப் பிடித்த தளமாக உங்கள் வலைப்பூவுக்கு 'லீப்ஸ்டர்' விருதை அறிவித்து மகிழ்கிறேன். சுட்டி இதோ: http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html

19 February 2012 at 13:25

@ madhavi...


Thanks so much award koduththathukku... koodiaya seekram, i shall post!

28 February 2012 at 12:00

நலமா?

18 March 2012 at 08:04

@ Appadurai...

Doing good! But was caught up in a lot of things... So couldn't be around blogsphere... Need to catch up with the lost words. Hope I get to meet with them real soon...

21 March 2012 at 22:53

Post a Comment