சினிமா பாடல்களில் ராகமாலிகை- Degree காபி 3  

Posted by Matangi Mawley


ராகமாலிகை-அப்டீங்கற ஒண்ணு- கர்நாடக சந்கீதத்துக்கே உரியதான ஒரு விஷயம். ஒரு பாட்டோட ஒவ்வொரு வரியோ, ஒவ்வொரு சரணமோ- வெவ்வேறு ராகத்துல அமைக்கப்பட்டிருந்தா அத ராகமாலிகை-ன்னு சொல்லலாம். ஒரு அழகான விஷயம் இதுல என்னன்னா- ஒரு கர்நாடக கச்சேரி-ல ஒரு வித்வானுக்கு, ஒரே பாட்டுல வெவ்வேற ராகங்கள "explore"/"experiment" பண்ண, இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனா சினிமா-ல ராகமாலிகை-ங்கறது, ஒரு தனி விஷயம் தான். சினிமா-ல ஒவ்வொரு scene /situation கு ஏத்தாப்ல பாடல்கள் அமைக்கப்படும் சூழ்நிலைல, ராகமாலிகைகள கையாளறது-ங்கறது ஒரு தனித்துவம் வாய்ந்த விஷயம்- அப்டீங்கறது என் கருத்து. அந்த காலத்துல, தமிழ் சினிமா பாடல்கள்-ல நல்ல strong கர்நாடக சங்கீத சாயல் இருந்தது. "Light music ", "சினிமா music "- வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சு. அது வரைக்கும், சினிமா பாடல்கள்-ல கர்நாடக சங்கீதம் தான் ப்ராதாநித்து இருந்தது.

Romance, comedy, Sentiment -னு எத்தனையோ விஷயங்கள் நிரஜ்ஞ்சு இருக்கும் சினிமா-ல, கர்நாடக சந்கீதத்துக்குன்னே உரியதான, ராகமாலிகைகள- எப்படி use பண்ணினார்கள்- அந்த காலத்துல-அப்டீங்கரதுதான் ஆச்சர்யம்!

ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அதன் தன்மை இருக்கு. அதிகாலை நேரத்த வரவேற்கும் ராகம், தூக்கத்தை அழைக்கும் ராகம், மோஹம் அளிக்கும் ராகம்- கல்லையும் கரைத்திடும் ராகம், இருட்டில் ஒளி தரும் ராகம்- னு எத்தனையோ ராகங்களும், அதற்க்கான தன்மைகளும் உண்டு. இத போல தனித்துவம் வாய்ந்த ராகங்களோட ஆற்றல, நான் test பண்ணி பாத்ததில்ல. ஆனா, அந்த கால music directors, இத test பண்ணிருப்பார்கள் போல தான் தோணறது. ராகமாலிகைகள சினிமா-ல use பண்ண வசதியான situations அமஞ்சிருந்துது, அந்த கால சினிமாக்கள்ல. உதாரணத்துக்கு, ராகங்கள பத்தியும், அதன் தன்மைகள பத்தியும் பேசினோம், இல்லையா? "சம்பூர்ண ராமாயணம்" ங்கற சினிமா-ல ராவணனோட அபூர்வமான வித்வத்-அ வெளி கொண்டுவரும் ஒரு காட்சி. ராவணன், அவர் சபைல பாடறது போல ஒரு scene. இந்த பாட்டுல என்ன interesting விஷயம்-னா, இந்த பாட்டுல கேள்விகள் கேட்பார்கள்- "காலையில் பாடும் ராகம்? யுத்த ராகம்"? னு. ராவணன், அந்தந்த கேள்விகளுக்கான பதில அழகா பாடி காமிப்பார். அந்த ஒரு வரி-ல அந்த ராகத்தோட முழு சாயலும் வரும், அந்த ராகத்தோட பெயரும் வரும்! இத விட அழகா, common man கு சங்கீதத்த கொண்டு சேர்க்க முடியுமா, தெரியல. அந்த பாட்ட கேக்க- click here.

சம்பூர்ண ராமாயணத்துல பாட்டுக்கா பஞ்சம்? எல்லா பாட்டுமே ரொம்ப அழகான பாட்டு தான்! "இன்று பொய் நாளை வா"-ன்னு திலங் ராகத்துல அமைக்கப்பட்ட அந்த பாட்டு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே போல ராகத்தோட பெயர் வராப்ல "அகஸ்தியர்", அப்டீங்கற சினிமா- லயும் ஒரு ராகமாலிகை இருக்கு. "வென்றிடுவேன்"- ங்கற அந்த பாட்ட கேக்க- click here.

யோசிச்சு பாக்கும் போது, அந்த காலத்துல இத போல ராகத்தோட பெயர் பாட்டிலேயே வராப்ல அமைக்கப்பட்ட பாடல்கள் நிறையாவே இருக்கு-ன்னு தான் தோணறது. எனக்கு, இந்த பட்டியல்-ல ரொம்பவே பிடிச்ச ஒரு ராகமாலிகை- 'சிவகவி' ('47) சினிமா-ல, பாபநாசம் சிவன் music ல அமஞ்ச "வசந்த ருது"-ங்கற பாட்டு! அந்த கால "Super Star"- MKT பாடின பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

அந்த காலத்துல ராஜா/ராணி/மாய மந்திரம் படங்கள் நிறையா வந்ததும், ராகமாலிகைகள அழகா சினிமால பிரயோகிக்க வசதியா அமஞ்சுருந்துது. ஏன்னா- இத போல Mythological சினிமாக்கள்-ல situation கு பஞ்சமே இருந்ததில்ல. இதனாலேயே- பல ரொம்ப அழகான ராகமாலிகைகள்- சினிமாக்கள்-ல நமக்கு கிடைச்சுது. "வேதாள உலகம்" சினிமா-ல DKP அம்மா பாடின பாரதியார் பாட்டு- "தீராத விளையாட்டு பிள்ளை"! இன்னுமும் அது ஒரு "concert favourite". இந்த பாட்டுக்கான situation லாம் Mythological கதைகள்-ல தானாவே அமைந்து போய்டும். ராஜ- சபைல நடக்கும் நடன காட்சியா. இன்னொரு ரொம்பவே அழகான பாரதியார் பாட்டு, ராகமாலிகை- '57 ல வந்த, கலைஞர் எழுதின "மணமகள்" அப்டீங்கற social drama ல இருக்கு. ரொம்ப பிரபலமான பாட்டும் கூட. Lyrics அ முழுசா உணர்த்தக்கூடிய ஒரு music. அமைதியான 'காபி' ல ஆரம்பிச்சு- கொஞ்ச கொஞ்சமா affection கும் passion கும் நடுவில் உலவும் 'மாண்டு' ராகத்த தொட்டு, ஒரு rage ஓட அந்த border அ 'வசந்தா' ராகத்தால கடந்து- கடந்தப்ரம் 'திலங்' ஒரு விதமான அமைதி- அமைதி-கப்ரம் ஏதோ ஒரு சொஹம் கலந்த சுகம்- 'சிவரஞ்சனி' ராகத்துல- ன்னு அந்த "சின்னஞ்சிறு கிளியே பாட்டு" ஒரு encyclopedia of ராகமாலிகா தான்!

இதே சினிமா-ல MLV -P லீலா combination ல இன்னும் ஒரு அபூர்வமான ராகமாலிகா இருக்கு. இந்த combination ல நிறைய பாடல்கள் இருந்தாலுமே- இந்த பாட்டுக்கு ஒரு தனி இடம் தான். "எல்லாம் இன்பமயம்" பாட்டு கேக்க- click here.

60s ல மறுபடியும் ராகமாலிகைகள பிரயோகிக்கும் கடமை- Mythological சினிமாக்களுக்கு போய் சேர்ந்தது. K. V. மஹாதேவன் அவர்களோட அபாரமான music ல "திருவிளையாடல்" சினிமால- வரும் "ஒரு நாள் போதுமா" பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here. இந்த பாட்டு பிரமாதம் தான். பாலமுரளிக்ருஷ்ணா அவர்களோட குரலும் பிரமாதம் தான். ஆனா- இத எல்லாத்த காட்டிலும்- T. S. பாலைய்யா-வோட histrionics - Chance ஏ இல்ல!

Romance ராகமாலிகைகள்-ல குறைவு தான்- என்றாலும்- அந்த area லயும் கொஞ்சம் பாடல்கள் கொண்டு வந்தது- பெரிய விஷயம் தான். Dance கு dance, romance கு romance- ங்கற விதத்துல அமைந்த பாட்டு- "உத்தம புத்திரன்" சினிமா-ல வந்த "காத்திருப்பான் கமல கண்ணன்". இந்த பாட்ட கேக்க- click here. ஆனா- இந்த ராகமாலிகா பாடல்களிலேயே- என்னோட ரொம்ப ரொம்ப இஷ்டமான பாட்டு- "மணாளனே மங்கையின் பாக்கியம்" சினிமா-ல வரும், ஆதிநாராயண ராவ்-ஓட inimitable music ல ஒலிக்கும்- "தேசுலாவுதே". இந்த படத்த, சின்ன வயசில 30-40 தடவ பாத்த அனுபவம் இருக்கு. பறக்கும் பாய், மந்திர தந்திர கமண்டலம்-னு- குழந்தைகளுக்கு தேவையான எல்லா சமாசாரமும் இருக்கும். இந்த பாட்டு- இத பாட தெரிஞ்சாச்சு-ன்னா எந்த Music contest யும் win பண்ணினடலாம். அத்தன கஷ்டமான- but அபூர்வமான பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

ராகமாலிகைகள்- சினிமா பாடல்கள்-ல இப்போலாம் அவ்வளவாக இல்லாம போய்டலாம். ஆனா- இந்த பாடல்கள் எல்லாமே- கடந்த காலம், நமக்கு கொடுத்த ஒரு பரிசு. இந்த பாடல்கள வருங்காலத்துக்கு கொண்டு போறது, நம்ம கடமை. இது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

PS: Degree காபி Series: மி மராதி -- GR -- Degree காபி

This entry was posted on 23 July, 2011 at Saturday, July 23, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

12 comments

ராக மாலிகை பற்றிய ரசனையினைத் தூண்டும் வண்ணம், அருமையான விவரணப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

23 July 2011 at 18:12

'எல்லாம் இன்ப மயம்' மறந்து போன பாட்டு. என்னுடைய சிறுபிராயத்தில் என் அம்மா முணுமுணுத்த பாட்டு.

ஆமா.. உண்மைல நீங்க யாரு? ஹேரிபாடர் தலைமுறைனு நம்பமுடியலியே? சிவகவியை எடுத்து விடறீங்க.. ராகமாலிகைனு சும்மா விளையாட்டா வீசுறீங்க.. i mean, சிவகவி?

பாராட்டுக்கள்.

23 July 2011 at 19:57

http://movieraghas.blogspot.com/search/label/raghamalika

இராகமாலிகை ஆக கர்னாடக சங்கீதத்தில் வெவ்வேறு ராகங்களை இணைப்பதற்கு சில‌
விதிகள் உள்ளன. இந்த பாராமீடருக்கு உட்பட்டு இணைக்கப்படும் ராகங்கள் கொண்ட‌
பாடல்கள் அவ்வப்போது வந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட சிவகவி பாடல் சிறந்ததே.

ஒரு ராகத்தின் ஸ்வரங்களுக்கும் இன்னொரு ராகத்தின் ஸ்வரங்களுக்கும் ஒன்று அல்லது
இரண்டு ஸ்வரங்கள் பொதுவாக இருக்கும்பொழுது, அவ்விரண்டு ராகங்களையும் ஒன்றன் பின்
ஒன்றாக பாடுவது எளிது, மற்றும் இனிமையாகவும் இருக்கும்.

அதே போல், ஒரே விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் ராகங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.
நீலாம்பரியை புன்னாக வராளியுடன் இணைப்பது போல . , ஒரு கம்பீரமான ராகம், உதாரணமாக நாட்டை
அல்லது அடாணாவுடன், நளினமான ஹம்ஸனாதம் அல்லது மோஹனத்தை இணைக்கலாம்.

இதற்கான உதாரணங்கள் பல என் பதிவில் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்பொழுது கேளுங்கள்.

சுப்பு தாத்தா.

23 July 2011 at 21:16

. அந்த ஒரு வரி-ல அந்த ராகத்தோட முழு சாயலும் வரும், அந்த ராகத்தோட பெயரும் வரும்! இத விட அழகா, common man கு சங்கீதத்த கொண்டு சேர்க்க முடியுமா, தெரியல.//

ராகமாலிகைபற்றி மாளிகையாய் மனதில் நிற்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

23 July 2011 at 23:09

ராகமாலிகா திரை இசையை ஆண்ட விதத்தை அழககாக பகிர்ந்திர்கள்...

அப்பாதுரையின் கருத்தே மீண்டும்....பாப்பா விலிருந்து பாட்டிமா வரை உங்கள் கருத்தாழம் வியக்கவைக்கிறது..கீப் ராக்கிங்....

24 July 2011 at 09:43

ப்ரிய மாதங்கி! உங்கள் ரசனை ஆச்சரியமளிக்கிறது. ராகமாலிகையில் பாட்டின் ராகம் டிரான்சிஷன் ஆனதே தெரியாமல் அடுத்த அனுபவத்தை வழங்க அமைப்பது பாடலாசிரியரின் இசையறிவு. பாடுபவரின் உணர்தல் இவையே.
நல்ல பாடல்களின் தேர்வு.

24 July 2011 at 11:05

ராகமாலிகைப் பதிவு அற்புதம்!

'மாசிலா நிலவே நம் காதலை..' எனனும் அம்பிகாபதி பாடலும் எனக்குப் பிடிக்கும்!

24 July 2011 at 18:51

மிக்க நன்றி மாதங்கி. "வீணைக் கொடியுடைய" பாடலை வெகு நாட்களாய் தேடிக் கொண்டிருந்தேன். என் தந்தைக்கு மிகப் பிடித்த பாடல் இது.
இந்தப் படமும் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். சிவாஜி பரதனாய் நடித்திருப்பார்.

24 July 2011 at 23:38

ராகமாலிகைகள்- சினிமா பாடல்கள்-ல இப்போலாம் அவ்வளவாக இல்லாம போய்டலாம். ஆனா- இந்த பாடல்கள் எல்லாமே- கடந்த காலம், நமக்கு கொடுத்த ஒரு பரிசு. இந்த பாடல்கள வருங்காலத்துக்கு கொண்டு போறது, நம்ம கடமை. இது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

ஆமோதிக்கிறேன்.. திகட்டாத அந்தப் பாடல்கள் எப்போது கேட்டாலும் ரம்யம்தான்.

25 July 2011 at 21:53

நான் இதுவரை அறிந்திராத பல தகவல்கள் இந்தப் பதிவில் . பகிர்ந்தமைக்கு நன்றி

1 August 2011 at 17:48

இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்

6 August 2011 at 06:41

நன்றாக இருக்கிறது.மணாளனே ம்ங்கையின் பாக்கியத்தை 30-40 பார்த்த அனுபவம்?! ஆச்சரியம்தான்! வாழ்த்துக்கள்!இன்னும் ரசியுங்கள் சினிமா பாடல்களை!

7 August 2011 at 20:36

Post a Comment