Degree காபி
Engineering படிக்கற பொது- இந்த final year ல Project - Project னு ஒண்ணு பண்ணுவா. 6 மாசம், college கு போகாம, வேற ஊருக்கு பொய் கொட்டம் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு அது. என்னோட போறாத காலம், என்கூட கூட்டு சேந்துண்ட கேசெல்லாம் "படிக்கற" கும்பல்! அஷோக் நகர் ல ஒரு firm ல "project" பண்ணினோம். பக்கத்லையே ஒரு hostel ல room எடுத்துண்டு மூணு பெரும் தங்கினோம். "போணும், படிக்கணும், வரணும்"- னு எனக்கு என் நண்பி உபதேசம் பண்ணித்து. என்னோட இந்த சொகக்கதைல எனக்கிருந்த ஒரே ஆறுதல்- hostel சாப்பாடு தான்.
Hostel சாப்பாடெல்லாம் பொதுவா நன்னா இருக்காது ன்னு ஒரு ஐதீகம் நம்ப மக்கள் மத்தில உண்டு. ஆனா, என் ஜாதக விசேஷம்-னு நெனைக்கறேன்- எங்க போனாலும் எனக்கு சாப்பாடு பிரச்சன மட்டும் இருந்ததே இல்ல. ஒரு பாட்டி-தாத்தா தான் சமையல். 4 am கு எழுந்துண்டு எல்லா பசங்களுக்கும் சமைப்பா. காரைக்குடி style சமையல். "எம்.ஜி.ஆர் வூட்டுல சம்சிருக்கேன்" ன்னு அந்த பாட்டி பேசறதையும் காத கொடுத்து கேக்கற ஒரே ஜீவனான என்கிட்ட சொன்னா அந்த பாட்டி. அதுக்கப்றம், ரசமாட்டம் கார கொழம்ப தாராளமா உடுவா அந்த பாட்டி, எனக்கு மட்டும்!
சரி. இப்போ இந்த விஷயமெல்லாம் OK. ஆனா, என் சோக கதையோட இன்னொரு அங்கம்- இவளோ சாப்பாடெல்லாம் நன்னா இருந்தும், coffee கு வழியில்ல. "எல்லாம்- இது போதும்"னு என் கூட இருந்ததுகள்-லாம் அந்த instant coffee ய எப்புடி தான் குடிச்சுதுகளோ, ரங்கனுக்கு தான் வெளிச்சம். ஒரு வாய் கூட என்னால குடிக்க முடியல. "Hindu Paper + Degree காபி + 8:45 A.I.R கச்சேரி" கேக்க வெச்சு வளத்தாளே- எல்லாம் அவாள சொல்லணும்!
எப்படியோ 15 நாள் ஒட்டிட்டேன். ஒரு நாள் evening, hostel வர வழில - அஷோக் நகர் "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்" வாசல்-ல, ஒரு நிமிஷம் அப்பிடியே நின்னுட்டேன். Usually, அந்த area வந்தாலே நான் சீக்கரமா நடப்பேன். ஏன்னா அங்க ஒரே நெய் smell வரும் - எனக்கு தல வலிக்கும். But அப்ப தான் அந்த "கும்பகோணம் Degree காபி இங்கு கிடைக்கும்"னு எழுதி வெச்சிருந்த board என் கண்ணுல பட்டுது. "தவிச்ச வாய்க்கு coffee கொடுத்த" அந்த கட நன்னா இருக்கணும்-னு மனசுல நெனைச்சுண்டு, கூட இருந்ததுகளையும் "நான் sponsor" பண்ணறேன் னு (இல்லேன்னா வராதுகள்) அழஷிண்டு பொய் 15 days கு அப்புறம் ஒரு நல்ல coffee சாப்டேன்! நல்ல coffee சாப்ட effect ஓ என்னவோ, அதுகளுக்கும் அந்த hostel காபி அதுக்கப்றம் பிடிக்கல. Daily evening , அங்க பொய் coffee சாப்டுவோம் நாங்க.
ஸ்ரீரங்கம் கோவில் வாசல்-ல "முரளி காபி"ன்னு ஒண்ணு உண்டு. நானும். என் அப்பாவும் சும்மாவே அங்க பொய் coffee சாப்டுவோம். Excellent Quality ! 5 ரூபாய்-லேர்ந்து படி படியா 8 ரூபாய் ஆச்சு இப்போ. ஆனா அதே நல்ல standard maintain பண்ணறா. அதே போல, சத்திரம் bus stand ரகுநாத் hotel லையும், ரவா தோசை and coffee ரொம்ப நன்னா இருக்கும். அர சக்கர போட்ட சுத்தமான degree coffee குடிக்க முடியலன்னா என்ன சம்பாதிச்சு என்ன ப்ரயோஜனம்?
"நன்னா வளந்திருக்கு இந்த பொண்ணுக்கு நாக்கு"ன்னு நீங்க நினைக்கலாம். "சத்து மாவு" பால் ஒரு tumbler அ கைல வெச்சுண்டு 1.5 மணி நேரம் ஒயட்டுவேன். "இது கிளம்பினா போரும் டாபா" ன்னு "ஒரு மொணர்" திருட்டு coffee கொடுப்பா என் அப்பா எனக்கு. அதோட result தான் இது.
என்னதான் Narasu 's /Bru /Nescafe /Coffee Day /Udhayam னு ஏகப்பட்ட Coffee market ல இருந்தாலும், தஞ்சாவூர்-ல "Nathan's " னு ஒண்ணு உண்டு. அந்த Coffee போல வேற எங்கயுமே கிடையாது அப்டீங்கறது என்னோட expert opinion! விளையாட்டுக்கு சொல்லல. எப்பயாவது தஞ்சாவூர் போனாலோ, இல்ல அங்கேர்ந்து தெரிஞ்சவா வந்தாலோ, வாங்கிண்டு வர சொல்லி Coffee போட்டு சாப்டு பாருங்கோ. அப்புறம் தெரியும் என் taste பத்தி!
சரி. இப்போ திடீர்னு ஏன் Coffee பத்தி இந்த post னு நீங்க கேக்கலாம். "Degree காபி" ங்கறது "Metaphor " ஆ சங்கீதத்துக்கும் உபயோகப் படுத்தற வழக்கம் உண்டு. Music Blog ஒண்ணு வெச்சுக்கணும் னு எனக்கு ரொம்ப வருஷமா ஆசை. ஆனா, அத start பண்ணி, அதுக்கு readership ஏற்படுத்தரதெல்லாம் முடியுமான்னு தெரியல. அப்புறம், "Music , Method and Madness" னு ஒரு group blog ல அழுத எனக்கு தெரிஞ்சவா அழைச்சா. அப்புறம் அங்க யாருமே இல்லாத கடைக்கு நாங்க கொஞ்சம் பேர் மட்டும் டீஆத்திண்டு.... sorry ... காபி ஆத்திண்டு இருந்தோம். அதுக்கப்றம் தான், "நம்ம கிட்ட தான் இங்க 2 blog இருக்கே"ன்னு தோணித்து. சரி- அதெல்லாம் இதுல ஏதாவது ஒண்ணுத்துல போட்டுக்கலாம்-னு decide பண்ணினேன். அப்டிதான் இந்த "Degree காபி" genre எனக்கு தோணித்து. அப்போ அப்போ ஏதாவது music related என்னோட ideas இந்த genre கீழ வரும், "மைத்துளிகள்"ல. எல்லாரும் படிக்கலாம். (செலபா, "காதலிக்க நேரமில்லை"ல ஒரு dialogue சொல்லுவார்-"நான் என்ன எடுக்கறேனோ அதான் படம். நீ என்ன நடிக்கறியோ அதான் நடிப்பு. இந்த ஜனங்க பாத்து தீரணும், அது அவங்க தலை எழுத்து..." ன்னு. ஏதோ தோணித்து, திடீர்னு...) கூடிய சீக்கரம், என்னோட ஒரு "Degree காபி" post -ஓட உங்கள சந்திக்கறேன்...