கொஞ்ச காலமாவே- நான் நிறையா மராத்தி பாட்டுகள் கேட்டுக்கொண்டு இருக்கேன். நம்ம ஊர்ல இப்போ almost நிறையா பேருக்கு அருணா சாய்ராம் புண்யத்துல நிறையாவே மராத்தி பாட்டுகள் பரிச்சயம் ஆகிக்கொண்டுருக்கு, அபங்கம் மூலமா. But நான் இங்க சொல்லறது cinema பாட்டுகள பத்தி. எனக்கு மராத்தி எல்லாம் தெரியாது. எதோ subtitles புண்ணியத்துலயும், பாஷ தெரிஞ்ச சில friends மூலமாகவும்- lyrics கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன். ஒரு சில lyrics லாம் கேக்கும் போது பாரதியார் சொன்னது- 'சிங்க மராத்தியர் தம் கவிதை ...' தான் நினைவிற்கு வருது. அத்தன அழகா இருக்கு. ஆனா- அது நல்லதா கேட்டதா தெரியல, எனக்கு என்னிக்குமே Music தான் முதல் favourite. ஒரு சில சமயங்கள்-ல 'lyrics' புரியலேன்னாலும்- பல பாஷைகளோட பாட்டோட இசை-ய நம்ம அந்த இசையினோட ஈர்ப்பினால தான் ரசிக்கறோம். என்ன இருந்தாலும்- அந்த இசை தான் நம்ம அந்த lyrics நோக்கியும் இழுத்து செல்லும் ஒன்று ங்கறது என் கருத்து.
நான் school ல படிச்ச காலத்துல, radio ல ராத்திரி-ல ஒரு programme போடுவான். அது பேரு மறந்து போச்சு. But அது ரொம்பவே நல்ல concept. Doordharshan ல Sunday அன்னிக்கு மத்த பாஷ ல award வாங்கற படங்கள் போடறாப்ல இது radio ல ஒரு programme. இந்தியா ல இருக்கற பல மாநினங்களிலேர்ந்து வந்த நல்ல நல்ல பாட்டெல்லாம் போடுவான். நாங்க தமிழ் பாட்டு போடறானா-ன்னு பாக்க அந்த programme regular ஆ கேப்போம். அப்படி கேட்ட ஒரு பாட்டு- பாட்டோ, அந்த வார்த்தைகளோ, ஏன்- அது என்ன பாஷன்னு கூட நினைவில்ல. ஆனா ரொம்ப நாள் அந்த இசை மட்டும் மனசில இருந்தது. ஒரு சில சமயம் தோணும்- Google ஆண்டவர் கிட்ட நம்ம hum பண்ணி, அந்த tune கு matching பாட்ட அவர் தேடி தர கூடாதோ-ன்னு! ரொம்ப வருஷம் கழிச்சு, ஒரு reality show ல யாரோ அந்த பாட்ட பாடினா. அப்போ தான் அது மராத்தி பாட்டு ன்னு தெரியும். அப்படியும் வெறும் த்வனி தான் காதில் விழுந்ததே தவிர- lyrics ஒண்ணுமே புரியல. இன்னும் நிறையா வருஷம் கழிச்சு, You Tube புண்ணியத்துல, எதோ தேட போக- இந்த பாட்டு வந்து நின்னுது! ஒரே குஷி!
இவ்வளோ build-up குடுத்த அந்த பாட்டு- ஒரு Kholi song. அதாவது நம்ம 'செம்மீன்' மலையாள படத்துல 'கடலினக்கர போனோரே' பாட்ட போல ஒரு மீனவ பாட்டு. இது ரொம்பவே பழைய பாட்டு. ஆனா ரொம்ப famous கூட. நீங்களும் இத எப்பவாவது கேட்டிருக்க வாய்ப்புண்டு. Hridaynath Mangeshkar music ல லதா வும் ஹேமந்த் குமாரும் பாடின பாட்டு. இதெல்லாம் நான் சமீப காலத்துல கண்டு பிடிச்சது தான். இத்தன வருஷமா என்ன haunt பண்ணின அந்த tune 'Mi Dolkar' (click here).
தேடல்கள் மூலமா நான் கண்டு பிடிச்ச இன்னொரு பாட்டு- 'Gaarva' ன்னு ஒரு Album song. இத Milind Ingle பாடிருக்கார். அத்தன ஒரு மெதுவான, இனிமையான tune. இதே போல இல்ல. ஆனா- இந்த மாதிரி ஒரு சாயல்-ல ஒரு அழகான மலையாள பாட்டு கூட உண்டு. அது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு- 'பீலி ஏழும் வீசி வா...' ன்னு 'பூவினு புதிய பூந்தென்னல்' ங்கற மலையாள சினிமா பாட்டு. அத நாலையோ என்னவோ- இந்த மராத்தி பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு! 'Gaarva' பாட்டு கேக்க- click here...
இத போல எத்தனையோ பாட்டுகள். மராத்தி பாடல்கள்-ல ரொம்பவே interesting aspect - லாவணி.
அந்த காலத்திலேர்ந்து ஆரம்பிச்சு- இப்போ வரைக்கும், இந்த லாவணி ங்கறது மராத்தி பாடல்-களோட ஒரு தனி எடத்த பிடிச்சிருக்கு. நம்ம 'ஹே ராம்' படத்துல கூட ஒரு லாவணி பாட்டு வரும். ஒரு பழைய- ஆனா ரொம்பவே பிரபலமான லாவணி பாட்டு Jeyashree Gadkar பாடினது கேக்க click here. இந்த பாட்டு எனக்கு ஒரு music forum மூலமா தெரிய வந்தது. Recent -ஆ, 'Zee Talkies' banner ல மராத்தி ல ''Natrang" நு ஒரு படம் வந்தது. அதுல் குல்கர்னி நடிச்ச அந்த படத்த- நான் recent ஆ பாத்தேன். ரொம்பவே சோகமான படம். அதனாலேயே அது ஒரு நல்ல படம். அந்த cinema ல வர பாட்டெல்லாம் ரொம்பவே அற்புதமா இருக்கு. ஒரு ரெண்டு லாவணி பாட்டு, அதுல. Lyrics, இசை- எல்லாமே A1!
Bela Shinde பாடின 'Apsara aali' ங்கற இந்த பாட்டு (click here) 'மாயா மாளவ கௌள' ராகத்தில இருக்கு. இப்படியும் இந்த ராகத்த பயன் படுத்த முடியும்-நு நினைக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது! இந்த பாட்டுல ஒரு அற்புதமான 'passion'. 'passion' கொஞ்சம் strong ஆன வார்த்த. 'Suggestive' இல்ல 'provocative' நு சொல்லலாமோ என்னவோ. simple ஆ சொல்லலும்-னா ரொம்ப அழகான பாட்டு. அந்த லாவணி dancer அ வருணிக்கறது போல எழுதப்பட்டிருக்கு. புரியணும்-னு கூட இல்ல. கூர்மையா கவனிச்சாலே அழகா புரியும் போல எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். ஆனா fortunately subtitles இருக்கற video வே இங்க இருக்கு.
அதே படத்துல வரும் இன்னும் ஒரு பாட்டு இது. 'jau dya na ghari' (click here) ங்கற இந்த பாட்டையும் Bela Shinde தான் பாடிருக்காங்க! போன பாட்டுல இருக்கும் 'sensuousness' இந்த பாட்டுல வேற ஒரு உருவம் எடுக்கறது. கேக்க இன்னும் 'captivating' ஆகவும் enjoyable ஆகவும் இருக்கு!
'Mi Radhika mi premika' (click here) ங்கற இந்த பாட்டு பாடினது- Aarti Ankalikar- Tikekar. இது 'maalkauns' ஆ 'basant mukhari' யா ன்னு எனக்கு சரியா தெரியல. அத்தன அழகான பாட்டு. கேட்டாலே 'Radha - Krishna' saga வ மையமா கொண்ட பாட்டு-ன்னு தெரியும். வார்த்தைல என்ன இருக்கு? எனக்கு இந்த பாட்ட கேட்டா 'எல்லா கோபிகா கூடவும் ஒரு கிருஷ்ணன் dance பண்ணுவானே'- அந்த scene mind ல வரும். சோகத்துலையும் சுகம் தேடும் tune. சோகம், சுகம், பிரேமை, பிரிவு, தடை போடப்பட்ட ஆசைகள்-னு எல்லா விதமான emotions கும் இந்த ராகமும், இந்த பாடலும் ஒரு 'திறக்கப்பட்ட கதவு' போல தோணும், இந்த பாட்ட கேக்கும் போது, எனக்கு! இதுவே கூட 'பக்தி' ன்னு சொல்லலாமோ என்னவோ!
இத போல எத்தனையோ மொழிகள்-ல எத்தனையோ பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் நம்மள ஒரு வேறு விதமான உலகிற்கும், கலாசாரத்துக்கும் அழைத்துச் செல்லுகிறது! அந்த அடுத்த கட்டத்துக்கு போக முதல் அடி ஒண்ணு தான் நாம எடுக்கணும். தேடல்கள் தொடர்கின்றன...
13 comments
இந்த போஸ்டிங் முலம் உன்னுடைய Musical awareness -ன் ஒரு புதிய
பரிமாணம் வெளிப்படுகிறது...எனக்கு மிகவும் பிடித்திருந்தது ...
உன்னுடைய Blog ஐ படிக்க வரும் நண்பர்களுக்கு நீ படைத்திருக்கும்
( தமிழர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத ) இசை விருந்துக்கு என்னுடைய பிரத்யேக பாராட்டுக்கள் ..இந்த போஸ்டிங் - காக, உனக்கு ஒரு பரிசு
( வழக்கமான இடத்தில் ) காத்திருக்கிறது ...மறக்காமல் எடுத்துக்கொள் ..!
மாலி
@ sundarji...
thanks, sir! ellaa paattaiyum kettu paarunga...
unga pazhaiya kaadhali-ya thiruppi unga kitta sertha perumai enakku-nnu ninaikkum pothu, santhoshamaa irukku! :)
@ appa...
hey! thanks-pa!
gift! aiiiiiiiiii! :D :D
enna gift? enna gift?
Impressed! very nice selections.
@chithra...
thanks! :)
இது என் பிழை திருத்த:
எல்லையில்லா என்பதை எல்லையில்லை ஆக்கிவிட்டேன்.
எல்லாவற்றையும் நாளை கேட்டுவிடுவேன்.
இது என் நன்றி கூற:
காதலியையும் சேர்ப்பித்துவிட்டீர்கள்.சமாளிக்கணும்.இத்தனை நாள் விட்டுப் போனதற்குத் தாஜா பண்ணுவாள்.
மாதங்கி! உண்மையான வார்த்தைகள்! இசைக்கு பாஷையில்லை. எனக்கும் வர்ஜியாவர்ஜியமில்லாமல் எந்த இசையானாலும் தேடிக்கேட்டு கரைந்து போவது வாடிக்கை. உங்கள் செலேக்ஷன் அருமை.
மராத்தி பாடல்கள் பஜனை பத்ததியில் முக்கிய இடம் வகிப்பவை. நீங்கள் சொன்னது போல் 'அபங்' பிரபலமாகி வருகிறது.வங்காளப் பாடல்களும் கேட்க அருமையானவை.ரபிந்திராசங்கீத் மட்டுமில்லாமல் அவர்களின் folklore கேட்க சுகமானது.
@ sundarji...
nice to see you both back together... ;)
@ mohanji...
atha paththiyum varum sir... bengali songs... ennoda main focus film music la thaan... may be Sathyajit Ray cinema-kkal-la robindro shonngeet-nu oru write-up ezhuthalaamo ennavo... :)
thanks!
@ philosophy...
WOW! thanks a ton... :) i was out of town and was caught up in loads of work... athanaala reply panna mudiyala, earlier...
@ philosophy...
WOW! thanks a ton... :) i was out of town and was caught up in loads of work... athanaala reply panna mudiyala, earlier...
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
8 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".