Bushy -மா - EPISODE 7
மாசம் எப்புடி ஒடரதுன்னே தெரியல- அதுக்குள்ள ஓடி போய்டுத்து. வர May மாசம் ஆச்சு, Chotu-Cuppy க்கு ஒரு வயசாகும். அதுகள adopt பண்ணிண்டவர் photo ,video லாம் காமிச்சார். ரெண்டும் கரடி-குட்டி கணக்கா, வஞ்சன இல்லாத சாப்டுண்டு நிம்மதியா இருக்குகள். சந்தோஷம். இந்த புழுக்கையையும், Golu வையும் கூட கூப்படர மேனிக்கு இருக்கறாப்ல குடுத்திருக்கலாம். Video ல Golu குரல போட்டு கேட்டாலே Bushy அன்னிக்கு upset தான். "சும்மா நீயா நெனச்சுக்காத"-ங்கறா இவா ரெண்டு பேரும். "அம்மா"ன்னா எல்லாருக்கும் ஒண்ணு தான். பூனை-ன்னாலும் அதுக்கும் எல்லாம் இருக்க தான் இருக்கு. வாசல் பெருக்கரப்போ, mop அ தாவி பிடிச்சு விளையாடற Bushy ய பாக்க அவ்வளோ அழகா இருக்கும். குரு-குருன்னு கண்ணுல விஷமம் தாண்டவமாடும்- பாவம். ஆனா கொஞ்ச மாசம் முன்னாடி இது இப்படி விளையாடுமா-ன்னு ஆயுடுத்து!
பக்கத்தாத்து மாமி அப்போவே சொன்னா. பாவப்பட்டு பால் விடறேளே குட்டிகளுக்கு. 5 மாசத்துக்கு குட்டி ஒண்ணு போட்ட வண்ணம் இருக்கும், பூனைன்னு. இவர் friend ஒருத்தராத்துல 16 -20 பூனை இருக்காம். வீடு என்னத்துக்காகும்? அதுவும் நம்மளோடது தனி ஆம் கூட கிடையாது. Chotu -Cuppy ய குடுத்து 10 நாள் கூட ஆகல. வயறு 'டம்ம்'முன்னு இருக்கு, Bushy -க்கு. போன தடவ குட்டிகள் பொறந்த கணக்கு படி, கொலு முதல் நாள் அன்னிக்கு குட்டிகள் போடும்-நு கணக்கு பண்ணினோம். இது உடனே-"Goluu ன்னு பேர் வைக்கலாம்"ன்னு "தை-தை"ன்னுது. ஆத்துக்குள்ளையே விடப்டாது இந்த தடவ-ன்னு தீர்மானிச்சாச்சு.
ராத்திரி மூணு மணி இருக்கும். Gate ல ஏதோ சத்தம். கதவ திறந்து பாத்தா- வாய்ல குட்டிய கவ்விண்டு gate மேல ஏறி, எம்பி உள்ள குதிக்கறது, Bushy. எங்க ஒளிச்சு வேச்சிருந்துதோ, இத்தன நாள். அன்னிக்கு முதல் நாள் ஒரே மழை வேற. மாமி சொன்னா, பக்கத்தாத்து A /C க்கு மேல கொஞ்ச நாளா ஒரு கருப்பு வால் தெரியறது-ன்னு. இத பத்தர படுத்தி வெச்சுட்டு அடுத்த குட்டிய எடுத்துண்டு வர போய்டுத்து. 'இவா கிட்ட நம்பி விடலாம்'ன்னு தானே எடுத்துண்டு -வேகு-வேகு -ன்னு வருது பாவம்!
இது வால தூக்கி-தூக்கி பாத்துது. ஒண்ணும் புரியல. ஒரே மாதிரி தான் இருக்குகள் ரெண்டும். எதுவா இருந்தா என்ன. அவாத்து வாகு- எப்போதும் ஒரு கறுப்பு குட்டி ஒண்ணு உண்டு. இன்னொண்ணு Black and White. அதுல ஒண்ணு பையன், இன்னொண்ணு பொண்ணு தான் எப்புடியும். இன்னும் கொஞ்ச நாள் போனா தானா தெரியப் போறது. இப்போ புடிச்சு அதுகள் வால ஏன் துருவணும்? கறுப்பு குட்டிக்கு "Golu"ன்னு பேர் வச்சாச்சு. போன தடவ Chotu வ பாத்தோடனேயே தூக்கி வெச்சிக்கணும் போல இருந்துது. இந்த தடவ அந்த Black and White குட்டிய பாக்க வேடிக்கையா இருந்துது. அது நெத்தில 'தென்கல' நாமம் கணக்கா ஒரு design. எங்க ஊர் கோவில்-ல த்வாரபாலகா சிலைக்கு ரெண்டு பல்லு ரெண்டு பக்கம் நீட்டிண்டு இருக்கும். அத போல இருக்கு வாய் பக்கத்துல ரெண்டு கறுப்பு design. ரொம்ப யோசிச்சு "Nams" னு பேர் வச்சுது. ஆனா அது எழுந்து நடக்க ஆரம்ச்சப்ரம் என்னவோ தெரியல, அது பேர் "புழுக்க"ன்னு ஆயுடுத்து.
Chotu -Cuppy போல இல்லாம இதுகள் கொஞ்சம் சீக்கரமே வளர்ந்துடுத்துகள். இந்த Bushy ஒரு மாசத்துக்கெல்லாம் பால் கொடுக்கறத நிருத்திடுத்து. Nams பாவம் கொஞ்சம் சாப்டும், நன்னா. வாய வெச்சா எடுக்காது. அது பாதி குடிச்சுண்டிருக்கும் போது புஷி எழுந்து போய்டும். Bushy க்கு வயறு மறுபடியும் 'டம்ம்'ன்னு ஆயுடுத்து! அதுக்கும் strength வேண்டாமா? ஆனாலும் புழுக்க சரியான அம்மா கோண்டு. Bushy க்கும் அத ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் சோனி யா இருக்கரதுனாலையோ என்னவோ. பயங்கர training Bushy அதுக்கு. புழுக்கையும் அது அம்மாவுக்கு விழுந்து-விழுந்து சிஸ்ருஷ பண்ணும். நக்கி குடுக்கும், Bushy ய. Bushy யோட spy அது! "Golu" கொஞ்சம் சமத்து தான். துப்பாண்டியாட்டம். ஒரு மாசத்துக்கப்ரம் ஒரு வழியா புழுக்க-பொண்ணு, Golu பையன் ன்னு கண்டு பிடிச்சாயுடுத்து. சீக்கரமே இதுகள் வளர்ந்ததால வராண்டா-ல காலே வைக்க முடியல. குட்டிகள் அழகா இருக்கு, வச்சிக்கலாம்-னா, ஆறு தடவ Dettol போட்டு அலம்பரவாளுக்கு தானே தெரியும், கஷ்டம்?
"Blue Cross" ல கொண்டு போய் விட்டுடலாம். அப்படியே Bushy க்கும் vaccination போட்டு, sterelize பண்ணி அழைஷிண்டு வந்துடலாம்-னார் இவர். கஷ்டமா தான் இருக்கு. ஆனா 5 மாசத்துக்கு ரெண்டு-ரெண்டு குட்டியா போட்டுண்டே இருந்தா, என்னதான் தெம்பு இருக்கும்? இவரும், இவர் friend ஒருத்தரும் auto ல தூக்கிண்டு போனா Bushy யையும் குட்டிகளையும். அங்க ஒரு ஆயா, குட்டிகள் இருந்த பைய அப்படியே கவுத்து கொட்டினாளாம். ஒடனே ரெண்டு பூனை குட்டி வந்து புழுக்கைய மோந்து பாத்து friend புடிச்சுண்டுதாம். பெரிய இடமாம், கிண்டி Blue Cross. நிறையா பூனை குட்டிகள் இருக்காம். நன்னா பாத்துக்கராளாம். Bushy க்கு vaccination போட்டு தூக்கிண்டு வந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு தான் operation பண்ணுவாளாம். அப்புறம் அது ஒரு வாரம் அங்கேயே இருக்கணுமாம். 'குட்டிகள் எங்க' ன்னு இது தேடராப்லேயே இருக்கு. அதுக்கு எல்லாம் புரியும். குட்டிகள எடுத்துண்டு போற அன்னிக்கு காலேல- ரொம்ப நேரம் வரிஞ்சு-வரிஞ்சு பால குடுத்துது Bushy ரெண்டுத்துக்கும். இது "Hindu" லியே ad குடுக்கலாம்-னுது. ஆனா நாள் ஆயிண்டே போறதே. Golu வையே 'ரெண்டு மாசம்' தான் ஆறது-ன்னா ஒத்துக்கலையாம், Blue Cross ல!
ஒரு வாரம் அங்கேயே இருந்துது, Bushy. இவர் நடுப்ற ஒரு நாள் போய் பாத்துட்டு வந்தார். நன்னா இருந்துதாம். நிறையா operation பண்ணின பூனைய தனித் தனியா cage ல வெச்சிருந்தாளாம். அதுல சிலதுகள் ரொம்ப அழகா இருந்துதாம். இவா ரெண்டு பேரும் போய் அழைஷிண்டு வந்தா, Bushy ய. கிழிஞ்ச நாரா இருந்துது, பாவம். தையல் போட்டிருந்தா, வயத்துல. Green colour ல மருந்து ஏதோ தடவி இருந்தா. "Normal" ஆ இருக்கும் -நாளாம். சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ தும்மறது. ஏதோ ஒரு irritation. ராத்திரி என் பக்கத்லேயே படுத்துண்டுருந்துது. என்ன 'தடவி குடு'ங்கறது. நான் அத தொடவே மாட்டேன்-ன்னு தெரியும் அதுக்கு. ஆனாலும் அந்த 'வாஞ்ச' வேண்டியிருக்கு. ராத்திரி முழுக்க தட்டி குடுத்துண்டே இருந்தேன்.
மறுநாளும் அன்ன ஆஹாரமில்ல. எங்காத்து பக்கத்லேயே இருக்கற Blue Cross கு அழைஷிண்டு போனா இவா ரெண்டு பேரும். பெரிய doctor 'infection ஆயுடுத்து'ன்னாராம். ரெண்டு ஊசி, வாய்ல ரெண்டு மருந்து. மூணு நாள் தொடர்ந்து ஊசி போட்டுது. ஒரு வாரத்துக்கு குடுக்க சொல்லி மருந்து எழுதி குடுத்தார். தையல் போட்ட இடத்த அது நக்காம இருக்க, அது கழுத்துல ஒரு அட்டிய கட்டி வைக்க சொன்னாராம். இது உடனே அட்டிய வெட்டி, ஒட்டி- அதுல "I am Bushy" ன்னு எழுதி, அது கழுத்துல மாட்டி, நாலு photo எடுத்துது. அதுக்கே, பாவம், உடம்பு சரியில்ல. Bushy அந்த அட்டைய ரெண்டு நிமிஷத்துல பிச்சு எரிஞ்சுடுத்து! பத்து நாளாச்சு, சரியா போக!
"ங்கா...ங்கா..."ன்னு பிடுங்கி எடுக்கறது இப்போ. Bed, Chair, table - எல்லாம் அதோடதாம். "ஒரு நாளைக்கு எத்தன தடவ டா சாப்டுவ"? ன்னா "ங்கா..." ங்கும் பதில். "Chotu- Cuppy- Golu- புழுக்க- யார ரொம்ப பிடிக்கும்"ன்னு இது Bushy கிட்ட விரல காட்டி விளையாடும். அது ஏதோ ஒரு விரல தொடும். அந்த குட்டிய மனசுக்குள்ள நெனச்சுக்குமோ...? "Bushy-மா...'ங்கா'.. வேணுமாடா..."
PS: Bushy's pet- Nams video பாக்க click here.
PS: நம்ம "All time favourite" Chotu video பாக்க click here.