முன் குறிப்பு 1: Degree காபி-ல decoction மட்டும் தான் இருக்கும்.
முன் குறிப்பு 2: Rahman கு நான் பூஜ பண்ணினாலும், அவருக்கு முன்னாடி இருந்தவர்கள தான் எனக்கு இவருக்கு முன்னாடி தெரியும்.
"ஓமன திங்கள் கிடாவோ..." ன்னு என் பாட்டியோட தாலாட்டு பாட்டு கேட்டு தான் நான் தூங்குவேன், சின்ன வயசுல. ஒரு சில நாட்கள்-ல, cassette ல பாட்டு போட்டு தூங்க பண்ணுவா. அது usually, MKT பாட்டுகளாதான் இருக்கும். அப்போலேர்ந்து பழக்கம் இந்த cinema, பாடல்களோட எனக்கு. அந்த காலத்துல, majority யான பாடல்கள் எல்லாமே கர்நாடக சங்கீதத்த மையமா கொண்டு தான் அமைக்க பட்டிருக்கு. ஹாஸ்ய பாடல்களும் சரி, romantic duets உம் சரி- எந்த மாதிரியான situation கும் ஏற்ற ராகமும், பாடலும் அந்த காலத்துல இருந்தது. சின்ன வயசுல, "இத நம்மால மேய்க்க முடியாதுன்னு"- பாட்டி ஆத்துல VCR ல பழைய cinema க்கள் போட்டு விட்டு "பாரு"ன்னு உக்காத்தி வெச்சுடுவா. "அசோக் குமார்" லேர்ந்து "மணாளனே மங்கையின் பாக்கியம்" வரைக்கும் நான் அங்க தான் பாத்தேன். அந்த படங்கள எல்லாம் இப்போ பாக்க பொறுமை இருக்காது. ஆனா- அப்போ நான் அத பாத்த விளைவுதான் இந்த "தமிழ் blog" னு என் அவிப்ராயம்.
கர்நாடக சங்கீதத்த சினிமாவில மிக அருமையா கையாண்ட பல music directors ல முதல் இடம், என்னை பொறுத்த வரைக்கும்- பாபநாசம் சிவனுக்கு தான். அவரோட பாடல்கள், வெள்ளித் திரையிலிருந்து மேல் எழும்பி மேடைக் கட்சேரி களிலும் இடம் பிடித்தாலும், ரிக்ஷா ஓட்டும் ஒரு சாதாரண மனிதனுக்கும் சினிமா பாடல்களின் மூலம் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற பெருமை- இவரையே சாரும். "MKT" ங்கறது எவ்வளவு பெரிய "phenomenon" அப்டீங்கறது, எனக்கு ஜெயகாந்தனோட "இருளில் ஒரு துணை" படிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும். அந்த "icon status" அவருக்கு கிடைத்ததுக்கு பாபநாசம் சிவனோட பாடல்களுக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு வார்த்தை மற்றும் ராகத்தினுடைய குணாதிசயங்கள மனதில் வைத்துக் கொண்டு இசை அமைத்திருக்கர், இவர்- என்பதில்- என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய ப்ரமிப்பு தான். அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் 'சிவகவி' சினிமாவில் வரும் இந்த "வசந்த ருது மன மோகனமே" ங்கற இந்த பாட்டு. வசந்தா-குந்தலவராளி-யதுகுலகாம்போதி-சுருட்டி-ன்னு ராகத்தினுடைய பெயரும் பாட்டிலேயே வரும். ரெண்டு வரி தான் ஒரு ராகத்துக்கு நாலும்- அந்த ராகத்தோட முழு சாரமும் அந்த ரெண்டு வரியில் இருக்கும்!
"மன்மத லீலை வென்றார் உண்டோ"- ங்கற 'ஹரிதாஸ்' சினிமா பாடலா இருக்கட்டும், "பூமியில் மானிடன்"-ங்கற 'அசோக் குமார்' சினிமா பாடலா இருக்கட்டும், இன்னிக்கு வரைக்கும், remixes மூலமா உயிர் பெற்று இருக்குன்னா- அதுக்கு பாபநாசம் சிவனுடைய இசையின் பெருமை தான். சிவாஜி/பானுமதி 'அம்பிகாபதி'க்கு முன்னாடியே 30s ல MKT /MS. சந்தானலட்சுமி நடிச்ச ஒரு 'அம்பிகாபதி' உண்டு. என்னதான் அத Ellis Dungan போன்ற பெயர் பெற்ற Director direct பண்ணினாலும்- இன்னிக்கு 'அம்பிகாபதி'ன்னா அது சிவாஜி/பானுமதி நடித்தது தான் நமக்கு நினைவில் இருக்கு. இதுக்கு, அந்த சினிமா-வின் பாடல்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
G. ராமநாதன் என்ற ஒடனே- "classical music" தான் இவர் போடுவார்-னு ஒரு எண்ணம் நமக்கு வந்துடலாம். அனால்- அந்த காலத்லேயே- western music அ நம்ம சினிமா பாடல்கள்-ல ரொம்ப அழகா இவர் புகுத்திருக்கார். என்னை பொறுத்த வரையில்- இது 'inspiration' and ஒரு 'stroke of innovation'. இப்படிப்பட்ட சில மாற்றங்களினால்தான்- நம் சினிமா இசை-க்கு மீண்டும் ஒரு புது வடிவம் கிடைச்சது. உதாரணமா- 'ஆரவல்லி'ங்கற சினிமா-ல வரும் "சின்ன பெண்ணான போதிலே' ங்கற பாட்டு- 'Que Sera Sera' ங்கற western song ஓட ஒரு 'inspiration'. அதையும் அவர் மிகவும் 'acceptable' ஆ கையாண்டிருப்பார். ஆனா- 'அம்பிகாபதி'யினால் தான்- அவர நாம இன்னி வரைக்கும் நினைவில் வைத்திருக்கோம். அந்த பாடல்களில்- கேட்பவர்களை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி! "மாசிலா நிலவே" பாடலோட- மிகவும் அருமையான 'progress' மாண்டு ராகத்திலேர்ந்து- நடை மாறி 'அன்பே இன்பம்'கு வந்து- பின்பு புன்னாகவராளி-யா ராகம் மாறி 'வானம் எங்கே'ன்னு முடியும். அந்த கால சினிமா பாடல்கள்-ல இது ஒரு பெரிய சாதனை தான். ஆனா எனக்கு 'அம்பிகாபதி'ல ரொம்பவும் பிடித்தமான பாட்டு- 'கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே'-ங்கற பாட்டு தான். அப்படி ஒரு பீம்ப்ளாஸ் ராக பிரயோகம் நான் கேட்டது இல்ல! Sheer creativity! பானுமதி அவர்கள் பாடினதா? GR ஓட இசையா? ன்னு சொல்ல முடியாது! கல்யாணி- predominantly ஒரு உச்ச ஸ்தாயி ராகமா பயன்படுத்தப் பட்டுவந்த அந்த காலத்துல- 'சிந்தனை செய் மனமே' ஒரு அருமையான change. அனாலும் என்னோட list -ல 'துணிந்த பின் மனமே' ங்கற 'தேவதாஸ்' பாட்டுக்கு தான் முதல் இடம்.
GR பத்தி பக்கம் பக்கமா எழுதிட்டு "உத்தம புத்திரன்" பத்தி ஒண்ணுமே சொல்லேன்னா எப்புடி? "இவரா-- carnatic தான் போடுவார்" ங்கற misconception அ மாத்தி, எல்லாரையுமே இன்னி வரைக்கும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல்- "யாரடி நீ மோகினி". சிவாஜி-ய பாக்கறதா, Helen அ பாக்கறதா, பாட்ட கேக்கறதா? ன்னு எல்லாமே A1! ஆனா- அந்த சினிமாவிலேயே best பாட்டு- 'உன் அழகை கன்னியர்கள் கண்டதனாலே' ங்கற பாட்டு தான். பாட்டு, லயம், picturisation ன்னு எல்லாமே அந்த பாட்டுல மிக அருமையா இருக்கும். கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கும் இந்த சினிமாவில் பஞ்சமில்ல. கானடா-ல 'முல்லை மலர் மேலே' லேர்ந்து 'காத்திருப்பான் கமல கண்ணன்' ங்கற அருமையான P. லீலா பாட்டு- பத்மினி-ராகினி dance ஓட ன்னு இந்த சினிமா வில வரும் பாட்டு எல்லாமே- இசைக்கு ஒரு சமர்ப்பணம் தான்.
'மதுரை வீரன்' ல யும் இவரோட அற்புதமான இசை வெளிப்பட்டிருக்கு. அனாலும் 'ஏச்சி பிழைக்கும் தொழிலே' பாட்டிற்கும் 'தீன கருணாகரனே நடராஜா' ங்கற 'திருநீலகண்டர்' ல வர பாபநாசம் சிவனோட பாடலுக்கும் இருக்கும் ஒற்றுமைய பத்தி என்னால எழுதாம இருக்க முடியல. இதுவே கூட சிவன் லேர்ந்து GR கு வர துக்கு ஒரு காரணமா இருக்கலாம்! 'கட்ட பொம்மன்' லேர்ந்து 'இன்பம் போனகம் வெண்ணிலா', 'கப்பலோட்டிய தமிழன்' லேர்ந்து 'காற்று வெளியிடை கண்ணம்மா' ன்னு GR ஓட புகழ அடுக்கிண்டே போகலாம். என்ன பொறுத்த வரைக்கும் GR இன்றைய திரை இசையோட முன்னோடி. GR , அவரோட பாடல்களிலும், அதன் ஆத்மாவிலும்- என்னை போன்ற degree காபி ரசிகர்கள் மனதிலும் என்றும் நிற்கிறார்...
20 comments
காபி மணம் குறையாமல், பாடலின் இனிமை மாறாமல் - ரசித்து நீங்கள் தந்து இருப்பதே, அழகு.
உங்கள் கட்டுரையை படித்தவுடனே நீங்கள் குறிப்பிட்ட பல பாடல்கள் என் காதில் ரீங்காரம் பண்ண ஆரம்பித்து விட்டது.. எப்படி இவ்வளவையும் உங்களால ஞாபகம் வைத்துகொள்ள முடிகிறது.பழைய படங்களின் பாட்டுக்கள் இன்னும்சற்று கூட மெருகோ ரசனையோ குறையாமல் இருக்க ,அந்த காலத்து வசனங்கள் தாள முடியவில்லை.
நல்ல பதிவு..பாராட்டுக்கள்
Nalla isaiyai rasikka vayathu vaentaam. aanaalum anthakkaala isaiyai inthakkaala yuvathi rasiththu ezhutha mutivathu, en ennaththil carnatic isaiyin basics therinthathaalthaan. neengkal kurippitta paatalkalil silavatrai en paeranum avvappothu paatuvaan.
காத்தால முதல்ல எழுந்திருக்கும் ஆட்களுக்கு முதல் டிகாஷன் காப்பி கிட்டுவது போல மாதங்கியோட பதிவும் மணமா இருக்கு, முதல் டிகாஷன் காப்பியிலும் முதல் காப்பியை குடிக்கும் வாய்ப்பு ரசிகமணிக்கு கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி!
முன்குறிப்பு படி சர்க்கரை இல்லாத முதல் டிகாஷன் காப்பியை சுந்தர்ஜியும் பழைய காதலியின் நினைவுடன் ரசித்து குடிக்கலாம்...;)
நுரைக்க நுரைக்க ஏ ஒன் காபி..
மணக்கிறது பதிவு முழுவதும்.
சபாஷ்.
//"MKT" ங்கறது எவ்வளவு பெரிய "phenomenon" அப்டீங்கறது, எனக்கு ஜெயகாந்தனோட "இருளில் ஒரு துணை" படிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்..//
மிகவும் நெகிழ்ச்சியான கதையாயிற்றே அது?..
அந்தக் கதையில் ரிக்ஷாவில் ஏறி தெரிந்தவர்களை நாடிப் போவதாக வரும் இல்லையா?.. அந்த ரிக்ஷாக்காரர் மறக்கமுடியாதவர்.
Mathangi madem
Ungalin pathivu
"Sithamellam isai mayam" nu solli pinnuthu. :)
Aamam intha paadalai patri ethaavathu therinjaa sollavum..
"Vaaraayo vennilaave, keelaayo enthan kathayaa"
"Koduthathellam koduthaan, athu yaarukkaga koduthaan..."
"Oru naal yaaro, enna paada solli"
Adade..
"Vasantha mullai pole vathu"
"Nee sollaavidil yaar solluvaar nilave"
"Oru bommalaattam nadakkuthu"
Oomi viligal padathilirunthu
"Tholivi nilayena ninaithaal, manithank vaalvi ninaikkalaamaa" :)
நல்ல இசைக்குக் காலம் கிடையாது.அது நிரந்தரமானது.
இசையில்லாத வாழ்க்கையை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
ஆனாலும் கடந்த பத்து வருஷங்களாகத் தொழில்-அரசியல் மாற்றம் மற்றும் எழுதுவது குறித்தே சிந்திக்கமுடிகிறது.தேக்கமுற்று நிற்பதால் இசையின் புதிய வேர்களைத் தேடமுடியாது காலம் ஒழுகிக் கொண்டிருக்கிறது.
உங்கள் பெற்றோர்களும் பாட்டியும் மிகச் சிறப்பான துவக்கத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.உங்கள் சிந்தனை வளத்துக்கும் சிந்திக்கும் கோணத்துக்கும் அது எல்லா விதத்திலும் முக்கியமான பங்காக இருக்கிறது.
ராமநாதனைத் தாண்டாமல் சினிமா சங்கீதம் பற்றிப் பேசமுடியாது. எல்லாரும் கேட்கும்படி சினிமாஇசைக்கு கர்நாடக சங்கீதத்தின் ஜன்னல்களையும் மேற்கத்திய சங்கீதத்தின் வாசல்களையும் திறந்துவிட்டதில் அவர்தான் முன்னோடி.
கேள்வி ஞானத்தால் மட்டுமே ராகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்-பாடும்-என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் சங்கீத ரசனையும் ஆராய்ச்சியும் பெரும் பாக்யம்.
தொடருங்கள் மாதங்கி.பூரணமாக ஆசீர்வதிக்கிறேன்.
கிறங்கிப் போனேன் சில நிமிஷங்கள்... இந்த இரவு GR பாடல்களோடு தான் என்று முடிவு பண்ணி விட்டேன்.இருங்க சி.டி தேடிகிட்டிருக்கேன்
@ padmanaban...
ha ha! :)
thanks!
@ chitra...
thanks!
@ parthasarathy...
paattugala maranthaathaane gyaabagam vechchukanum!
thanks!
@gmb...
carnatic music therinjaa nannaa rasikkalaam. rasikka, music theriyanum-nu avasiyam illa. rasana irunthaa porum... :)
thanks!
@ thakkudu boss...
thanks! :)
@ rishaban...
thanks! :)
@ jeevi...
nijamaa sir! brilliant story...
@vasakan...
intha paadalkalil silavatrai mikavum rasiththirukkiren.
vaaraayo vennilaave-- missiyamma cinema paadal. A1 music athula. aanaa antha cinemaavil ennnoda fav. song-- maayame naan ariyen-ngara paattu thaan.
koduththathellaam-- romba sogam. antha rasanaiyoda antha paatta intha kaalaththula vittu vaikkala. 'mann kudisai vaasalendraal' nu vara 2nd stanza music-a copy panni 'pottu thaakku'nnu oru kuththu song-oda 2nd song-la use pannirukkaratha paaththaa, rombave kovam varuthu.
vasantha mullai- saarangadaara. sudharshanam nu oruththar music nu ninaikkaren. ithu varaikkum naan ketathileye best charukesi raagam intha paattu thaan.
actually, ovvoru paattume eduththaalum ethaavathu atha paththi thona thaan seiyum. onnume thonaama entha paattayum kekka mudiyaathu. songs have mood and thoughts. degree coffee series follow pannunga...
thanks!
@ sundarji...
thanks a ton, sir! :)
@ mohanji...
thanks! :)
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
19 hours ago
-
1 day ago
-
2 weeks ago
-
2 weeks ago
-
5 weeks ago
-
5 weeks ago
-
5 weeks ago
-
1 month ago
-
7 months ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
2 years ago
-
3 years ago
-
3 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
10 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".