"தா பார்! சாப்பாடு கடைல இருக்கு. 9 :30 தான் கட தொரப்பான். முதல் வேலையா அப்போ பாக்க உனக்கு வாங்கிண்டு வரேன். அது வரைக்கும் ஒரு சத்தம் வரப்டாது. ரொம்ப பசிச்சா, வெளீல போய் ஒரு கரப்பையோ, பல்லியையோ நீயே பிடிச்சு தின்னுக்க வேண்டியது தான். நான் என்ன வெச்சிண்டா வஞ்சன பண்ணறேன்? உனக்கு தானே தரப்போறேன்..." காலேலேர்ந்து ஒரே புடுங்கல். இந்த துப்பாண்டி, இத விட்டுட்டு எங்கயாவது போனாலே இப்படிதான். இதுக்கு பொழுது போகாத- சர்வ காலமும்- "ங்கா ங்கா..." ன்னு பிடுங்கி எடுக்கறது, Bushy. அதுவும் இப்போ வயத்துக்குள்ள குட்டிகள் வேற! இந்த தடவ ரெண்டோ, மூணு! "ரெண்டோட நிறுத்திக்கோடா" ன்னு சொல்லி வெச்சிருக்கேன்... போன installment, ரெண்டு குட்டிகள maintain பண்ணவே போரும் போரும்-னு ஆயுடுத்து. ஆனா, அதுகள் ரெண்டும் எத்தன அழகு...!
கொறஞ்சது ஒரு 10 -15 நாளுக்கு சரியா நடக்கவே ஆரம்பிக்கல, ரெண்டும். ஒண்ணு "Chotu"- பையன். அவன் அப்பா துப்பாண்டி, சின்ன வயசுல எப்புடி துரு-துரு-ன்னு இருந்துதோ, அதே போல இதுவும் மஹா துரு-துரு! இன்னொண்ணு- "Cuppy" - பொண்ணு. அது அட்டசல் Bushy. எப்போவும் காரியத்துல (சாப்பாட்டுல) தான் கண்ணு, அதுக்கு. நடக்க ஆரம்பிச்சுதோ, இல்லையோ- ரெண்டும் ஒரே வெஷமம்! அதுலயும் இந்த Chotu இருக்கே- சரியா இன்னும் நடக்க வேற வராதைக்கு- side ஆல நடக்கும், balance இல்லாம. அப்புறம் steady பண்ணிக்கும். தலைய சாச்சுண்டு ஒரு பார்வை பாக்கும், "இவ என்ன பண்ணறா"? ன்னு.
அப்படியே அது பாட்டி ஜாட, அது முஹத்துல. துப்பாண்டி அம்மா இருக்கே, தெரு பூனையா இருந்தாலும் அத்தன களையா இருக்கும். நிறையா தெரு பூனைகள்- முகம் பெருசா- பாக்கவே பயமா இருக்கும். துப்பாண்டி பரம்பரைலியே- அது அம்மாவ தவிர்த்து- மீதி எல்லாமுமே பாக்க பயமா தான் இருக்கும். அப்பப்போ வந்து இதுகள பாத்துட்டு போகுங்கள். துப்பாண்டியாவது கொஞ்ச நாள் தெரு பூனையா இருந்துட்டு அப்புறம் எங்காத்துக்கு வந்துது. Chotu -Cuppy க்கு, கால் மண்ணுலையே படல!
வெளி உலகமே தெரியாத வளர்ற குழந்தைகளோட innocence கு ஈடு இணையே கிடையாது. அது போல, Chotu -Cuppy யும், எந்த சூது-வாதும் தெரியாம, அதுகள் பாட்டுக்கு விளையாடிண்டு இருக்குகள். ஆனா, அதுலயும் இந்த Cuppy கொஞ்சம் சமத்து தான். காரியவாதி. சொல்லி கொடுக்கறதெல்லாம் இந்த Bushy தான். "கொழந்தைகள கவனிப்போம்" -ன்னு எல்லாம் எண்ணமே கிடையாது. வேணும்னே- நம்ப கண்ணுக்கு நேர feed பண்ணிட்டு- "பத்தியா, நான் feed பண்ணறேன், எனக்கு 'ங்கா' தா..." ங்கும். இந்த Cuppy சாப்படற time ல ஒழுங்கா சாப்டுடும். ஆனா Chotu கு எப்போபாரு விளையாட்டு தான். நன்னா ஆட்டம் போட்டுட்டு- பால் குடிக்க வாய வைக்கும், அப்படியே தூங்கி போய்டும்! அது கிட் ட் ட் ட போய் சத்தம் போட்டா- எழுந்துண்டு மறுபடியும் பால குடிக்கும்.. பாவம்!
துப்பாண்டிக்கு இதுகள் ரெண்டுத்தையும் கண்டாலே பிடிக்காது. இதுகளால, அதுக்கு இருந்த importance கொறஞ்சு போனதா feel பண்ணித்தோ என்னவோ. இதுகள் இருந்த வரைக்கும் ஆத்து பக்கமே வரல. என்னிக்காவது, வெளீல ஒண்ணும் தேரலன்னா- இங்க வரும். இந்த Chotu, துப்பாண்டி சாப்டும் பொது, "இவன் என்ன திங்கறான்"? ன்னு கிட்ட போய் பாக்கும். துப்பாண்டி சீரிண்டு வெரட்டி விட்டுடும், அத. காலால அடிக்க போகும். பாத்துது, இந்த Chotu. ஒரு நாள், துப்பாண்டி சாப்டும் போய் ஓடி போய், அத ஒரு அடி அடிச்சுட்டு, ஓடி வந்துடுத்து...
ஒரு மாசம்- ஒண்ணர மாசம் கழிச்சு தான் குரலே எழும்பித்து. பூனை குரல் அப்போதான் வந்துது. ஒரு சில சமயத்துல- "மி...மி..."ன்னு கீச்-கீச்-னு சத்தம் வரும். என்னத்தையோ தரைல தேடும், இந்த Chotu. எதோ த்யானத்துல இருக்கறாப்ல, எதையோ பாத்துண்டு யோசிச்சுண்டே இருக்கும். அது எத பத்தி யோசிக்குமோ! அங்க-இங்க பார்வை போகாம, focused ஆ, ஆடாம அசையாம, அப்படியே உக்காண்டுருக்கும். அப்புறம், ஒண்ணுமே நடக்காத மாதிரி எழுந்து- விளையாட போய்டும். அது உக்காந்து இருந்த இடம் மட்டும்- துளி ஈரமா இருக்கும்...
ரெண்டு மாசத்துக்கெல்லாம்- பயங்கர வாலாயுடுத்துகள். சாப்பட வேற ஆரம்பிச்சிடுத்து (solid food). ஒரு நாளைக்கு எத்தன தடவ தான் வராண்டா வ அலம்பறது?! எதப்பாத்தாலும் அது மேல ஏறணும். இதுகள் எங்க பூந்துண்டு இருக்குகள்-னு பாத்து, விரட்டி விடறதே வேலையா போச்சு. "Hindu" paper ல Adoption காக Ad. கொடுத்தோம்- "ரெண்டுத்தையும் யாரவது எடுத்துக்கோங்கோ"-ன்னு. நல்ல response. 10 நாள் வரைக்கும் call வந்த வண்ணம் இருந்துது. ஆனா முதல் நாளே ஒருத்தர்- ரெண்டுத்தையும் எடுத்துக்கறேன்- ன்னு எடுத்துண்டு போய்ட்டார். எங்களுக்கு அதுகள் ரெண்டுத்தையும் பிரிக்க வேண்டாமே-ன்னு தான். அதுகள எடுத்துண்டு போனப்றம்- "போய் செந்தேன், குட்டிகள் சௌக்கியம்"-னு ஒரு தகவலும் இல்ல! ஒரே கவலை. எங்க எங்கயாவது கொண்டு போய் வித்துடுவாரோ, சரியா பாத்துக்க மாட்டாரோ-ன்னுலாம். இவருக்கு வேற ஒரே guilt, Bushy ய பாக்கரப்போலாம்- "என் குட்டிகள் எங்க?"-ன்னு அது கேக்கராப்லையே தோணறது -ன்னு! ஒரு வாரம் கழிச்சு- "குயட்டிகள் சௌக்கியம், Chotu நன்னா weight ஏரிடுத்து"-ன்னு ஒரு தகவல் வந்துது. அப்பறம் தான் நிம்மதியா இருந்துது!
"Bushy ஷீ ஷீ ஷீ.... என்னடா வேணும் ஒனக்கு.."? ன்னு அத தடவி குடுத்துண்டு கொஞ்சராராமாம்! அது நெனச்சிக்கும், மனசுல- "விடிய விடிய கத கேட்டுட்டு- Bushy க்கு துப்பாண்டி பாட்டன்-ங்கரானே"-ன்னு. "அதுக்கு என்ன சார் வேணும்? 'ங்கா' - தான் வேணும். போய் அத வாங்கிண்டு வந்து, கையோட அதுக்கு கொஞ்சம் போட்டு அது வாய அடைங்கோ... அப்றமா உங்களுக்கு நான் first class coffee போட்டு தரேன்..."
PS: Chotu Video பாக்க- Click Here
17 comments
chotu s damn cute
ரிஷபன் கருத்து எனதும்.
படிப்பவரைக் கட்டி இழுக்கும் narration. படங்களும் நன்று - ஒரு படம் exceptional.
background noise இல்லாம video நல்லா இருக்கு... கூடாரத்தை விட்டி வெளியே வரத் தயங்கி வெளியே வந்து மறுபடியும் கூடாரத்துள் சரணடையும் பூனை ஒரு சிறுகதைக் கருவைக் கொடுத்தது. சோடுனு பேர் வச்சு எழுதிடறேன் - உங்க அனுமதியோட.
@ரிஷபன்...
ரொம்ப ரொம்ப நன்றி... :)
credit goes to Thuppaandi and his family... :)
@ kalyan...
:) he sure is...
@ அப்பாதுரை...
நன்றி... :)
@அப்பாதுரை....
chotu கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
செல்லப் பிராணிகளை செல்லக் குழந்தைகளாக வளர்க்கும் உங்களுக்கு bluecross award நிச்சயம் கொடுக்கவேண்டும்..
என்ன ஈஸியா எழுதிட்டீங்க... பூனைகள் போட்டோக்கள் அழகு.
சோட்டு.. கப்பி... களையா இருக்கு!! உங்க எழுத்தைப் போலவே!! :-)
அழகுப்பூனைகள் அருமையான பகிர்வு!
//அது வரைக்கும் ஒரு சத்தம் வரப்டாது. ரொம்ப பசிச்சா, வெளீல போய் ஒரு கரப்பையோ, பல்லியையோ நீயே பிடிச்சு..//
//அப்படியே அது பாட்டி ஜாட, அது முஹத்துல...//
நிறைய ரசிச்சுப் படிச்ச இடங்கள்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரசனை.. வாயில்லா ஜீவங்களிடம் கொண்டுள்ள இந்த ஈடுபாடு, ஈடு இணையற்றது. இறைவன் கொடுத்த வரமே.
அப்படி அப்படியே சுடசுட வார்த்து தட்டில் தூக்கிப் போட்ட மாதிரி உங்களுக்கு பரிமாறத் தெரிந்திருக் கிறது. அதுவும் தமிழுக்கு இது புதுசே. என்னைக் கேட்டால், ஆர்.கே.நாராயணின் 'மால்குடி டேஸ்' மாதிரி இந்த 'துப்பாண்டி சரித்திரமு'ம் பேசப்பட வேண்டிய ஒன்றே. எந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தாலும் சோடை போகாத சொக்கத் தங்கமான ஒரு படைப்பே!
அப்பப்போ பகிர்ந்து கொள்ளும் கைங்கரியத்திற்கு மிக்க நன்றி, மாதங்கி!
எனக்கு பூனைனா ரெம்ப பயம்... அதனால ஓர கண்ணால உங்க அழகு தமிழை மட்டும் படிச்சுட்டு எஸ்கேப் ஆகிறேன் மாதங்கி...:)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
பாட்டி சொல்லற கதை மாதிரி இருந்தது இந்த துப்பாண்டி புராணம். That reference to பாட்டி is a compliment; சுவாரசியம் குறையாம அப்படியே கண்ணுக்கு முன்னால நடக்கற மாதிரி எழுதியிருக்கே. Lovely kittens.
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
11 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".