பத்மா வ பத்தி இன்னிக்கு தான் பேச்சு வந்தது. 4 வருஷம் ஆச்சு. அவ என்ன ஆனா, எப்படி இருக்கா- ஒரு தகவலும் கிடையாது. 9th உம் 10th உம் என் கூட, என் class ல படிச்சா. என்ன நல்ல handwriting தெரியுமா? எல்லா miss உம் அவள தான் board ல எழுத சொல்லுவா. School prayer பாடுவா. ரொம்ப அழகா பரதநாட்யம் ஆடுவா. 4 வருஷத்துக்கு அப்புறம் அவள பத்தி நான் கேள்வி படர news இப்படியா இருக்கணும்?
11th / 12th கு வேற school மாறி போனா. Commerce படிச்சப்ரம், சென்னை ல ஒரு BPO ல வேலைல சேர்ந்தா. சென்னைல ஒரு Software company ல வேல பாக்கற பையன் கூட கல்யாணம் ஆச்சு-ன்னு 4 வருஷத்துக்கு முன்னாடி தெரிய வந்தது. இன்னிக்கு, என் கூட படிச்ச இன்னொரு friend மூலமா அவள பத்தின அந்த செய்தி கிடைச்சது. Recent ஆ அவளுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துதாம். "ஆஹா- எவ்வளவு நல்ல news" னு நினச்சேன். "பெண்" குழந்தை பிறந்ததுக்கு அவ தான் காரணம்-னு அவள அவ in-laws வீட்டுல, வீட்ட விட்டு அனுப்பிட்டாங்களாம். அவ husband உம் எந்த support உம் தரலியாம், அவளுக்கு!
இப்போ என்ன ஆச்சு அவளுக்குன்னு எனக்கு தெரியல! அவ contact எதுவும் என்கிட்ட இல்ல. ஆனா இந்த news கேட்டதிலேர்ந்து எனக்கு ஒரே கோவம்!
இப்போவே அவளோட in-laws வீட்டுக்கு போய், அவங்களையும், அவ husband யும் எல்லார் முன்னாடியும் அறையணும் போல இருக்கு! அவ mother-in-law வோட அம்மாவ யாரும் ஏன் வீட்ட விட்டு ஒதிக்கி வைக்கல? கிராமங்கள்-ல சரி- படிக்காத மக்கள், விவரம் தெரியாம நடக்கறாங்க-ன்னு விடலாம். Haryana, Jharkhand, Rajasthan, Maharashtra போன்ற இடங்கள்-ல ரொம்பவே common இந்த மாதிரி சம்பவங்கள். ஆனா town ல? படிச்ச சமுதாயத்துல? அந்த fellow B.Tech ஆம். அவனுக்காவது அவன் அம்மா/அப்பா சொல்றது தப்பு, "XX"/"XY" ய நிர்ணயம் பண்ணற சக்தி யாரு கைலயும் இல்ல ங்கற sense வேண்டாம்? There is no person in this world who does not get “Fooled by Randomness”.
இத்தன Acts இருக்கே! Domestic Violence, Sexual Harassment, Trafficking? International Women's Day வேற ஒண்ணு இருக்கு. என்ன use? சமுதாயம் முழிச்சுக்காத வரைக்கும் என்ன இருந்தும் use இல்ல! ஒரு சமுயாததொட சாபக்கேடு இது. நம்ப அக்கம் பக்கத்ல இத போல ஒரு விஷயம் நடக்கறது தெரிஞ்சா, அத தட்டி கேட்கறது நம்ம கடமை. அக்கம் பக்கத்து வீட்டுல யாராவது ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க? At least half a dozen reasonable and respectable people living in the same street , இந்த வீட்டுக்கு போய் இந்த முட்டாள்கள் கிட்ட ஞாயத்த பேச வேண்டாமா? நம்ம தெருவுல இப்படி நடக்கறது நம்ம எல்லாருக்குமே அவமானம்-னு நினைக்க வேண்டாமா? Social pressure build up பண்ணனும். Legal action must be the last resort. ஏன்னா அவங்க ஒரு case அ முடிக்கறதுக்கே 20 வருஷமாகும்! சம்பந்தப்பட்டவர்களுக்கு ஞாயம் கடைக்கர வாய்ப்புகளும் குறைவு தான்!
பத்மா வுக்கு அவ அக்கம் பக்கத்ல இருக்கறவங்க support கடைக்கும் னு நம்பறேன். Meanwhile, friends யாராவது இத படிச்சா- பத்மா contact details இருந்தா எனக்கு தெரிய படுத்தவும்...
PS : நிறையா English sentences /வார்த்தைகள் பிரயோகத்தை தவிர்க்க முடியல. எழுதணும்-னு plan பண்ணி எழுதல. எங்கயாவது இத சொல்லணும் போல இருந்தது. தோணினத அப்படியே எழுதினேன்... Please bear with me ...
12 comments
பத்தாண்டுகளுக்கு முன்பு எனது உறவினர் ஒருவர்
மூன்றும் பெண்குழந்தைகளாகப் பிறந்ததற்காக
இப்படி காட்டன் போல நடந்து கொண்டார்.
நாங்கள் உறவினர்கள் எல்லாம் தொடர்ந்து முயன்று
அவரைஒரு மனிதனாக்கினோம்
இன்றும் இந்தப் பிரச்சனை தொடர்வது அருவருப்பாய் இருக்கிறது
அருமையான பதிவு.ஆங்கிலத்தில் ஆங்காங்கே வார்த்தைகள் வருவது
குறையாகத் தெரியவில்லை.உணர்வுகளை மிகச் சரியாக கோடிட்டுக்
காட்டுவது போலத்தான் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
இப்போ என்ன ஆச்சு அவளுக்குன்னு எனக்கு தெரியல! அவ contact எதுவும் என்கிட்ட இல்ல. ஆனா இந்த news கேட்டதிலேர்ந்து எனக்கு ஒரே கோவம்!
அந்த கோவம் இப்ப எங்க மனசுலயும்..
சீக்கிரம் பத்மாவைப் பத்தி தகவல் தெரியட்டும்.. நல்லாத்தான் இருப்பாங்க..
சமுதாயத்தோட சாபக்கேடு என்பது உண்மை. எங்களுக்கும் உங்களோட கோபம் தொற்றிக்கொள்கிறது.இந்த காலத்துல போய் இப்படியா?
you must check from the person from whom you got the news. only the known circle or the neighbours can help.this is one more instancw of insanity. i share your anger.
முதல்ல பத்மா இதை accept பண்ணிக்கிட்டு எப்படி சும்மா விட்டாங்க?
இந்த கோபம் அவங்களுக்கு வரணும்.பாதிக்கப் பட்டவங்களுக்கு வராத கோபம் வேற யாருக்கு வந்தாலும் அதனால மாற்றம் வர்ற possibility ரொம்ப கம்மி. இதே கோபம் பத்மாக்கு வந்திருந்தா மத்தவங்க ஹெல்ப்போட அவங்களை எல்லாம் ஒரு கிழி கிழிச்சுருக்கலாம்.sorry, படிச்சதும் நானும் கொஞ்சம் கோபமாய்ட்டேன்
அன்பு மாதங்கி நமக்குக் கோபம் வந்து என்ன செய்யறது. அவளுக்கு அல்லவா கோபம் பொங்கணும். இப்ப உங்க மூணு பேருக்குள் எரியும் கோபத் தீ இன்னும் நாலு தோழிகளுக்குப் பரவினால் அவர்களை நேரயே போய் எதிர்க்கலாம்.
நடக்கும் என்றே நினைக்கிறேன்.
மனம் ரொம்பவே வலிக்கிறது.
rajiயின் கருத்து என் மனதிலும் எதிரொலிக்கிறது.
இது போன்ற நிகழ்வுகளை social or statutory pressure எல்லாம் தடுக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகள் வளர்ந்த பெரியவர்கள் செய்யும் இழிவு - வெட்கம். இந்தப்பக்கம் அடாவடி, அந்தப்பக்கம் கோவிலுக்கும் பூஜைக்கும் தினம் நேரமும் பணமும் செலவழிக்கும் ரகமாக இருக்கும். சனியன்.
பத்மாவுக்கு இது பெரிய விடுதலை. எனினும், இனியாவது தன் sense of individuality, self respect and pride வளர்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். இதை எதிர்த்துத் தூள் கிளப்பியிருக்க வேண்டாமோ படித்த பெண்? அதுவும் இந்த நாளில் - இத்தனை media exposure வாய்ப்பு இருக்கும் பொழுது?
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
Can't believe this is happening in this century,too bad. I know many people who're longing for a girl child. Arumai theriyaadha jenmanga'nu thaan sollanum... wishing u to find ur friend's contact details
cheap phentermine can you buy phentermine gnc - phentermine online prescription
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
20 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".