"தலாஷ்"- ஆனால் "பேய் கதை" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் "தலாஷ்" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.
இந்த பதிவை "திரை விமர்சனம்" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், "தலாஷ்" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- "குறுக்குப் பாதை" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும்! கடேசியில் "ஆனதாண்டாபுரம் ஐயங்கார்" போல ஒரு மாந்த்ரீகர் அந்த "குறுக்கு வழியின்" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!
அன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். "பேய் மீது நம்பிக்கை உண்டா"? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் "கடவுள்" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.
இன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். "நேரப் பற்றாக்குறை" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், "சந்திரலேகா", "ஹரிதாஸ்" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும்? இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை "வாழ்கை" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...
Bhaje Sargam... Click Here
Remembering my beloved maternal uncle, Shri. P.K. Gopalakrishnan, who lost his life on the fateful day- 26/11: Click Here
பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".
Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.
நேரம் கிடைத்தல் பார்க்கவும்.
Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.
எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....
ஒரு சில சமயத்துல, குரல்-ல divinity ய விடவும் earthiness தான் முக்கியம் னு தோணும். இந்த எண்ணம் எனக்கு எங்க பாட்டியோட குரல் கேட்டு வளந்ததால கூட இருக்கலாம். ஆனா- சில நேரங்கள்-ல, "கீச்" னு high -pitch குரல் இருக்கும் "heroine" அ விட, deep- sensual குரல் ல பாடும் "vamp" ஓட voice ரொம்பவே அழகா தோணும், எனக்கு. ஒரு சில குரல்கள்- நம்ம சினிமாக்கள் ல அபூர்வமான கண்டுபிடிப்புகள் தான். "நீல வண்ண கண்ணா வாடா" பாட்டு முதல் தடவ கேட்ட போது, அன்னிக்கு full day அந்த பாட்ட மட்டும் தான் கேட்டேன். What a voice! அத விட பத்மினி என்ன அழகு!
எனக்கு அதே போல பானுமதி அம்மா குரல் ரொம்பவே பிடிக்கும். பாட்டிக்கு அப்புறம் இவங்க பாடின "நகுமோமு" தான் A1! அழகான "light" touch ஓட- fabulous சங்கதிs! Especially "nanu brOvaga rA -dA" அந்த "rA -dA" transition! "கண்ணிலே இருப்பதென்ன", "அழகான பொண்ணு நான்" இதெல்லாமே என் favourites! எங்க வீட்டுல நிறையா cassettes உண்டு. Second hand cassettes ல AIR ல வரும் சில நல்ல programmes அ அப்பா record பண்ணி வெச்சிருப்பார். அதுல ஒரு cassette ல, பானுமதி அம்மா வோட ஒரு தெலுங்கு பாட்டு இருந்தது. ரொம்பவே அழகான பாட்டு! "உய்யால ஜமபால", "சக்ரபாணி" movie லேர்ந்து.
Letter ஐ படிக்க, image ஐ click செய்யவும்...
சாதாரண ஒரு விஷயத்திற்கு, கற்பனை வடிவங்கள் பல கொடுத்துப் பெரிய விஷயமாக மாற்றுவதற்கு நம் அரசியல் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் "அம்பேத்கர்" கார்டூன் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள NCERT புத்தகத்தை புரட்டிப் பார்த்த நம் தலைவகளுக்கு ஒரே குஷி! "தமிழ் மொழி"/"ஹிந்தி agitation" சம்பந்தப் பட்ட ஒரு கார்டூனும் கிடைத்து விட்டது, இப்போது! சில காலமாக "2G Scam", "ராடியா tapes" என்று பிரச்சனைகள் பலவற்றினுள் சிக்கியிருந்த தலைவர்களுக்கு மக்களது கவனத்தை திசை திருப்ப ஒரு நல்ல வாய்ப்பு!
நான்: LOL! நீயும் உண்டா அந்த set ல?
அப்பா: நான் லாம் 'Down Down' ஓட சரி. அதுலயும் ஒரு நாள் எங்க சொந்தகாரர் ஒரு police, நான் bus ல போய் பிட் நோட்டீஸ் குடுக்கறத பாத்துட்டு ஆத்துல பொய் சொல்லிட்டார்...
நான்: ஹி ஹி ... நல்ல டோஸ் ஆ?
அப்பா: என் அம்மா-அப்பாக்கெல்லாம் துளி கூட involvement கிடையாது politics ல லாம். சின்ன வயசுல பெரியார், அண்ணாத்துரை meeting லாம் முதல் row ல உக்கார்ந்து கேட்டிருக்கேன்.
நான்: நான் ஒரு கட்சி meeting கூட பார்த்ததே இல்லையே!
அப்பா: இப்போலாம் பாக்கறா மாதிரியும் இல்ல. அப்போ பெரியார் லாம் பெரிய ரதத்துல வருவார்... M.R.ராதா குதிரைல வருவார். Interesting ஆ இருக்கும்!
நான்: என்ன பேசுவா?
அப்பா: "நீங்கள்லாம் பத்தினிங்களா" ? அப்டீம்பார் பெரியார். கூட்டத்துல இருக்கரதுகல்லாம் 'ஆமாம்...ஆமாம்' ங்கும். "மள பெய்ய சொல்லுங்க பாக்கலாம்", அப்டீம்பார். எல்லாம் பேசாம இருக்கும். "நான் சொல்லல... அப்படி தான் எளுதி வெச்சிருக்காங்க..." ம்பார்...
நான்: ROFL!!! WOW! Superb!
அப்பா: அந்த movement நல்ல movement தான். But in due course, its leaders lost their integrity.
நான்: ஏ! சரி... Violence பார்த்தேன்னியே! என்ன நடந்துது?
அப்பா: அதுவா? மன்னார்குடி ல School பசங்க procession ல சில anti-social elements லாமும் செர்ந்துண்டுடுத்துகள். Police வந்து- ஒரு level கு மேல போகக்கூடாதுன்னு block பண்ணினா. "நாங்க அமைதியா போறோம்" ன்னு இவா சொன்னா. ஆனா போலீஸ் கு தெரியும் ல இதுல students மட்டும் இல்லன்னு. அதுல சிலதுகள் street light அ கல்லால அடிச்சு ஒடச்சுதுகள். Firing start ஆச்சு. ஒருத்தர் bullet பட்டு போய்ட்டார் போலருக்கு.
நான்: ஓ!
அப்பா: இப்படியும் ஒரு சில இடத்துல நடந்துது. ரொம்ப ஜாஸ்தி brainwash ஆன பசங்க மூணு பேர் immolation பண்ணிண்டா, வேற ஊர்ல. But agitation ன்னா இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். Dr. ராதாக்ருஷ்ணன் வீட்டுக்கு போய் ஒரு கும்பல் books லாம் எரிச்சிட்டு வந்துதுகள். Paper ல வந்துது. கேட்டா ஹிந்தி book ஆம் அதெல்லாம். அதுல பாதி sanskrit books. அது வே தெரியாது அந்த கும்பல் ல இருந்தவாளுக்கு... இதுவும் report ஆச்சு.
நான்: What about women?
அப்பா: What about them?
நான்: I mean, didn't they participate in the agitation?
அப்பா: அதுகள எல்லாம் கொஞ்ச நாள் ஆளையே காணும், road ல.
நான்: என்னப்பா இப்படி சொல்லர...?!
அப்பா: ஆமாம். "College லாம் போகாதே! அங்க road ல ரௌடி பசங்கள்லாம் சுத்திண்டிருப்பான்னு" அவாத்துல பாட்டி/அம்மா லாம் சொல்லி இருப்பா...
நான்: அப்போ College நடந்து நீ bunk அடிச்சியா? இல்ல லீவா?
அப்பா: 2 மாசம் affect ஆச்சு. ஒண்ணும் நடக்கல. March ல நடக்க வேண்டிய final exam May end ல தான் நடந்துது. July ல தான் result வந்துது.
நான்: அப்போ நீலாம் ஹிந்தி படிச்சதே இல்லையா?
அப்பா: படிச்செனே! B Com 1st Year additional language paper. "अ ... आ " லேர்ந்து நடத்தினா. ஏன்னா class ல யாருக்குமே தெரியாது. பிராத்மிக் கூட எழுதினேன். ப்ரதம் ஷ்ரேணி மே பாஸ் ஹுஆ!
நான்: நான் ஏதோ பெரிய level ல இருக்கும்னு நினைச்சேன். நீ இத ஒரு joke ஆட்டம் சொல்ர!
அப்பா: இது தாண்டா பெரிய level. அப்படி தான் இருக்கும். இப்படியெல்லாம் சொல்லி சொல்லி தான் ஆட்சிக்கு வந்ததே! ஆனா அப்போ அப்படி பேசின யாரோட வாரிசு இப்போ தமிழ் படிக்கறது? அவாள விடு! பொதுவா இப்போலாம் எந்த குழந்தை தமிழ்ல பேசறது? படிக்கறது? "Don't touch that Adi" ன்னு தமிழ் அம்மா சொல்லரா. "Sorry Mom" ன்னு தமிழ் பையன் பதில் சொல்லரான். 'என்னோட தமிழ் பேசறது நின்னுடும்' ங்கற மாதிரி அப்பாதுரை கூட எழுதிருக்கார் பாத்தியா? This is a cause for worry. கல்கி, ஜயகாந்தன், சுந்தர ராமசாமி லாம் எந்த தமிழ் மக்கள் படிக்கறா இப்போ? This is a lost cause. Even amongst their own party!
நான்: நான் படிப்பேன்.
அப்பா: சந்தோஷம்.
நான்: அம்மா! நீ என்ன பண்ணிண்டு இருந்த agitation போது?
அப்பா: அம்மாலாம் school ல படிச்சிண்டு இருந்திருப்பா டா! இப்படி ஒண்ணு நடக்கறதே தெரிஞ்சிருக்காது!
அம்மா: இப்படி ஒண்ணு நடக்கரதுன்னு தெரியும். அனா involve லாம் ஆகல.
நான்: ஓ! ஏன்? But you must have had some impact right?
அம்மா: நாங்க பாட்டுக்கு ஏதோ "மேஜ் பர் க்யா ஹை"? "மேஜ் பர் கிதாப் ஹை" ன்னு படிச்சுண்டு இருந்தோம். அத படிக்க உடாம பண்ணியாச்சு... அவளோ தான் agitation! "ஹிந்தி அரக்கிய" ஒழிச்சாச்சு! போ... போய் வேலைய பாரு போ... காலங்காத்தால...
You might also like: Tamil Comedy- Click Here!
அப்பா அனுப்பிய "Forward":
> From: *mahalingam v*
> கிட்டத்திட்ட ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து என் நண்பர்குழாமில் உள்ள
> சிலருக்கு இந்த மெயில்- ஐ forward செய்துகொண்டிருக்கிறேன்..சிலரி
> re-actions களும் நீ பார்க்கலாம்
> article.
>
>
மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம்
இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது
திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு
கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...
சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்தமனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவலநிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின்தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலுமாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமேவேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’ ‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல ண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு
தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி
போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்... ‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன்
வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்... இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான்
திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று
பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு
பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான்
கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர்,
வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!... சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில்
இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்
அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது தனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா? இதோ பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய
திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய
நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
இதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு !.
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் ! காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.
So typical! This article, no wonder, is a hit among you all (parents).
I would not say that the entire view taken about the "attitude" of the girls mentioned here is wrong. Some of the views of these girls sound really silly! Especially the ones like "mood-out" when it comes to cooking, "yaar kooda pona" kind of things.
But one has to consider the fact that, women have been suppressed for such a long period of time that this sudden change leads to 2 possible outcomes-
- Society has not yet transformed to accommodate the ideals of the liberal women.
- Most women are not able to figure out the proper way to exploit this new-found freedom.
Thinking about it- though option 2 would mean that I must criticize about my own sex, I feel that it is a necessary introspection.
Only in 1829, Sati was abolished (1829 seems very near if you take into account the millions of years of suppressing women). Then came in various social movements- thanks to people like Ram Mohan Roy and Ishwar Chandra Vidyasagar, we women folk are now getting the education we deserve. Today, where we women are, is a junction that is a result of a life-long struggle of many great minds. To think that only around 1975, "age of consent" for women was 15! To even think about marrying at the age of 15, feels now, like a crime! Past this phase, there was a wide-spread support for emancipation of women power. There was an ideological shift in the society. From what I have understood, in retrospect, more educated people, felt the need and importance of
economic independence of women. Please note that even then, the society was not purged of evils like dowry or female infanticide. But there was a popular appeal for the said cause.
The trend was to portray a "modern woman". A woman, unlike in the past, who could think, talk, work, and do all that a man can do. She had a voice and a vision. Be it the new wave of parallel cinema or the paradigm shift in the literary world- this popular thought was well-documented.
Post globalisation and with the entry of alien "fashion" into the Indian soil- now armed with a certain level of independence, women started out with their experiments with liberation! The booming Indian markets could supply women with the latest in everything. But here, those parents, who were once so proud of their dream of seeing a "modern woman" in their daughters/daughters-in-law, failed to recognize that- this phase of women's liberation is missing one crucial aspect that is almost essential for every social change. No change can happen to one part of the whole. The part must take along
the whole with it. Popular support from one section of the society, had blinded the change as a whole towards the other sections of the society. This resulted in the stagnation of progress in the "minds" of the rest of the society while the women moved along with the change.
Besides, other factors like the "craze" for a "boy" child, etc., that were typical of the social systems of the past, found their way into the more evolved society. The result is, as you can see, a square peg and a round whole. This group have failed to notice the social change around them and have never adapted themselves to the change. So now, they find themselves among women who are totally contradictory to what they have always regarded as-how a woman must be.
Also, when the women have changed for the better, leaving behind them a whole chunk of a society, the society now refuses to accept the change that is so visible. Something so "normal", such as- say a working woman- that is "normal" for one section of the "changed" society, seems alien to the rest. But this situation cannot be changed. Any change can only take a society forward, never backwards. So we can only wait for the rest of the society to accept that which is "normal" and keep up with the change.
Now the other aspect of looking at this change is- though the change has given the women a certain power to explore their freedom, it has failed to bring about an overall change in their thought. The change has only broadened the participating platform of the women. It has, however, not contributed towards their intellectual upgradation. Now, "modern women", though have changed physically and mentally- juggling career and family- or being traditional and modern- they have not changed intellectually. They must understand that they must cultivate a certain level of intellect- that would help them survive through this transitional phase. Only this, could help them understand that they have "elevated" yet there are many "beneath" themselves who need the women's help to catch up to the change. Women must understand that the change they have undergone, would only take effect if they have a certain level of intellectual acumen to strengthen their stand amongst the society. It is evident from the examples cited in the mail, that this intellectual upliftment in women is nowhere to be seen. It is no use blaming the parents or the women themselves.
Though every year, public exam result boasts of women leading the race- we must understand that this "race" is just marks and numbers and not wholesome development. Be it men or women, our education lacks in giving them any sense of "responsibility". Men or women- their standing in the society is Rs. ***lakhs per annum, **_ flat, **/****/*** education at ***/*** college. Social status in the current scenario, is not determined by the level of intellectual emancipation but such and such schools/colleges/clothes-brands-accessories/fashion/etc. Parents have remained to be proud spectators of the social change in their children, but have lacked in putting in serious efforts towards their own intellectual upgradation- let alone providing the same to their children.
It is hence my belief, that if women cultivate this intellectual acumen- they can change and question their own thoughts and beliefs and could also take along with them, the other less privileged groups of society, towards a beautiful future...
A female character named Marianne in Jane Austen's "Sense and Sensibility" remarks- "I suppose I have erred against decorum. I should have been dull and spiritless and talked only of the weather...". You well know that this I could never manage to do- thanks to the way you and amma have brought me up! I am also sure appa, that you could have never brought me up as someone similar to the role of actress Saritha in the last scene of movie "Aval Appadiththaan"- you could have never done that even if you had wanted to. I also don't believe that you had sent this mail to me as a "dig" at our own situation on the similar issue.
So please note, appa, that this was written just in reply to your mail, in defense against the accusations in the mail- which seemed to me- too brutal towards we- the women folk...
Matangi
மாசம் எப்புடி ஒடரதுன்னே தெரியல- அதுக்குள்ள ஓடி போய்டுத்து. வர May மாசம் ஆச்சு, Chotu-Cuppy க்கு ஒரு வயசாகும். அதுகள adopt பண்ணிண்டவர் photo ,video லாம் காமிச்சார். ரெண்டும் கரடி-குட்டி கணக்கா, வஞ்சன இல்லாத சாப்டுண்டு நிம்மதியா இருக்குகள். சந்தோஷம். இந்த புழுக்கையையும், Golu வையும் கூட கூப்படர மேனிக்கு இருக்கறாப்ல குடுத்திருக்கலாம். Video ல Golu குரல போட்டு கேட்டாலே Bushy அன்னிக்கு upset தான். "சும்மா நீயா நெனச்சுக்காத"-ங்கறா இவா ரெண்டு பேரும். "அம்மா"ன்னா எல்லாருக்கும் ஒண்ணு தான். பூனை-ன்னாலும் அதுக்கும் எல்லாம் இருக்க தான் இருக்கு. வாசல் பெருக்கரப்போ, mop அ தாவி பிடிச்சு விளையாடற Bushy ய பாக்க அவ்வளோ அழகா இருக்கும். குரு-குருன்னு கண்ணுல விஷமம் தாண்டவமாடும்- பாவம். ஆனா கொஞ்ச மாசம் முன்னாடி இது இப்படி விளையாடுமா-ன்னு ஆயுடுத்து!
பக்கத்தாத்து மாமி அப்போவே சொன்னா. பாவப்பட்டு பால் விடறேளே குட்டிகளுக்கு. 5 மாசத்துக்கு குட்டி ஒண்ணு போட்ட வண்ணம் இருக்கும், பூனைன்னு. இவர் friend ஒருத்தராத்துல 16 -20 பூனை இருக்காம். வீடு என்னத்துக்காகும்? அதுவும் நம்மளோடது தனி ஆம் கூட கிடையாது. Chotu -Cuppy ய குடுத்து 10 நாள் கூட ஆகல. வயறு 'டம்ம்'முன்னு இருக்கு, Bushy -க்கு. போன தடவ குட்டிகள் பொறந்த கணக்கு படி, கொலு முதல் நாள் அன்னிக்கு குட்டிகள் போடும்-நு கணக்கு பண்ணினோம். இது உடனே-"Goluu ன்னு பேர் வைக்கலாம்"ன்னு "தை-தை"ன்னுது. ஆத்துக்குள்ளையே விடப்டாது இந்த தடவ-ன்னு தீர்மானிச்சாச்சு.
ராத்திரி மூணு மணி இருக்கும். Gate ல ஏதோ சத்தம். கதவ திறந்து பாத்தா- வாய்ல குட்டிய கவ்விண்டு gate மேல ஏறி, எம்பி உள்ள குதிக்கறது, Bushy. எங்க ஒளிச்சு வேச்சிருந்துதோ, இத்தன நாள். அன்னிக்கு முதல் நாள் ஒரே மழை வேற. மாமி சொன்னா, பக்கத்தாத்து A /C க்கு மேல கொஞ்ச நாளா ஒரு கருப்பு வால் தெரியறது-ன்னு. இத பத்தர படுத்தி வெச்சுட்டு அடுத்த குட்டிய எடுத்துண்டு வர போய்டுத்து. 'இவா கிட்ட நம்பி விடலாம்'ன்னு தானே எடுத்துண்டு -வேகு-வேகு -ன்னு வருது பாவம்!
இது வால தூக்கி-தூக்கி பாத்துது. ஒண்ணும் புரியல. ஒரே மாதிரி தான் இருக்குகள் ரெண்டும். எதுவா இருந்தா என்ன. அவாத்து வாகு- எப்போதும் ஒரு கறுப்பு குட்டி ஒண்ணு உண்டு. இன்னொண்ணு Black and White. அதுல ஒண்ணு பையன், இன்னொண்ணு பொண்ணு தான் எப்புடியும். இன்னும் கொஞ்ச நாள் போனா தானா தெரியப் போறது. இப்போ புடிச்சு அதுகள் வால ஏன் துருவணும்? கறுப்பு குட்டிக்கு "Golu"ன்னு பேர் வச்சாச்சு. போன தடவ Chotu வ பாத்தோடனேயே தூக்கி வெச்சிக்கணும் போல இருந்துது. இந்த தடவ அந்த Black and White குட்டிய பாக்க வேடிக்கையா இருந்துது. அது நெத்தில 'தென்கல' நாமம் கணக்கா ஒரு design. எங்க ஊர் கோவில்-ல த்வாரபாலகா சிலைக்கு ரெண்டு பல்லு ரெண்டு பக்கம் நீட்டிண்டு இருக்கும். அத போல இருக்கு வாய் பக்கத்துல ரெண்டு கறுப்பு design. ரொம்ப யோசிச்சு "Nams" னு பேர் வச்சுது. ஆனா அது எழுந்து நடக்க ஆரம்ச்சப்ரம் என்னவோ தெரியல, அது பேர் "புழுக்க"ன்னு ஆயுடுத்து.
Chotu -Cuppy போல இல்லாம இதுகள் கொஞ்சம் சீக்கரமே வளர்ந்துடுத்துகள். இந்த Bushy ஒரு மாசத்துக்கெல்லாம் பால் கொடுக்கறத நிருத்திடுத்து. Nams பாவம் கொஞ்சம் சாப்டும், நன்னா. வாய வெச்சா எடுக்காது. அது பாதி குடிச்சுண்டிருக்கும் போது புஷி எழுந்து போய்டும். Bushy க்கு வயறு மறுபடியும் 'டம்ம்'ன்னு ஆயுடுத்து! அதுக்கும் strength வேண்டாமா? ஆனாலும் புழுக்க சரியான அம்மா கோண்டு. Bushy க்கும் அத ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் சோனி யா இருக்கரதுனாலையோ என்னவோ. பயங்கர training Bushy அதுக்கு. புழுக்கையும் அது அம்மாவுக்கு விழுந்து-விழுந்து சிஸ்ருஷ பண்ணும். நக்கி குடுக்கும், Bushy ய. Bushy யோட spy அது! "Golu" கொஞ்சம் சமத்து தான். துப்பாண்டியாட்டம். ஒரு மாசத்துக்கப்ரம் ஒரு வழியா புழுக்க-பொண்ணு, Golu பையன் ன்னு கண்டு பிடிச்சாயுடுத்து. சீக்கரமே இதுகள் வளர்ந்ததால வராண்டா-ல காலே வைக்க முடியல. குட்டிகள் அழகா இருக்கு, வச்சிக்கலாம்-னா, ஆறு தடவ Dettol போட்டு அலம்பரவாளுக்கு தானே தெரியும், கஷ்டம்?
"Blue Cross" ல கொண்டு போய் விட்டுடலாம். அப்படியே Bushy க்கும் vaccination போட்டு, sterelize பண்ணி அழைஷிண்டு வந்துடலாம்-னார் இவர். கஷ்டமா தான் இருக்கு. ஆனா 5 மாசத்துக்கு ரெண்டு-ரெண்டு குட்டியா போட்டுண்டே இருந்தா, என்னதான் தெம்பு இருக்கும்? இவரும், இவர் friend ஒருத்தரும் auto ல தூக்கிண்டு போனா Bushy யையும் குட்டிகளையும். அங்க ஒரு ஆயா, குட்டிகள் இருந்த பைய அப்படியே கவுத்து கொட்டினாளாம். ஒடனே ரெண்டு பூனை குட்டி வந்து புழுக்கைய மோந்து பாத்து friend புடிச்சுண்டுதாம். பெரிய இடமாம், கிண்டி Blue Cross. நிறையா பூனை குட்டிகள் இருக்காம். நன்னா பாத்துக்கராளாம். Bushy க்கு vaccination போட்டு தூக்கிண்டு வந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு தான் operation பண்ணுவாளாம். அப்புறம் அது ஒரு வாரம் அங்கேயே இருக்கணுமாம். 'குட்டிகள் எங்க' ன்னு இது தேடராப்லேயே இருக்கு. அதுக்கு எல்லாம் புரியும். குட்டிகள எடுத்துண்டு போற அன்னிக்கு காலேல- ரொம்ப நேரம் வரிஞ்சு-வரிஞ்சு பால குடுத்துது Bushy ரெண்டுத்துக்கும். இது "Hindu" லியே ad குடுக்கலாம்-னுது. ஆனா நாள் ஆயிண்டே போறதே. Golu வையே 'ரெண்டு மாசம்' தான் ஆறது-ன்னா ஒத்துக்கலையாம், Blue Cross ல!
ஒரு வாரம் அங்கேயே இருந்துது, Bushy. இவர் நடுப்ற ஒரு நாள் போய் பாத்துட்டு வந்தார். நன்னா இருந்துதாம். நிறையா operation பண்ணின பூனைய தனித் தனியா cage ல வெச்சிருந்தாளாம். அதுல சிலதுகள் ரொம்ப அழகா இருந்துதாம். இவா ரெண்டு பேரும் போய் அழைஷிண்டு வந்தா, Bushy ய. கிழிஞ்ச நாரா இருந்துது, பாவம். தையல் போட்டிருந்தா, வயத்துல. Green colour ல மருந்து ஏதோ தடவி இருந்தா. "Normal" ஆ இருக்கும் -நாளாம். சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ தும்மறது. ஏதோ ஒரு irritation. ராத்திரி என் பக்கத்லேயே படுத்துண்டுருந்துது. என்ன 'தடவி குடு'ங்கறது. நான் அத தொடவே மாட்டேன்-ன்னு தெரியும் அதுக்கு. ஆனாலும் அந்த 'வாஞ்ச' வேண்டியிருக்கு. ராத்திரி முழுக்க தட்டி குடுத்துண்டே இருந்தேன்.
மறுநாளும் அன்ன ஆஹாரமில்ல. எங்காத்து பக்கத்லேயே இருக்கற Blue Cross கு அழைஷிண்டு போனா இவா ரெண்டு பேரும். பெரிய doctor 'infection ஆயுடுத்து'ன்னாராம். ரெண்டு ஊசி, வாய்ல ரெண்டு மருந்து. மூணு நாள் தொடர்ந்து ஊசி போட்டுது. ஒரு வாரத்துக்கு குடுக்க சொல்லி மருந்து எழுதி குடுத்தார். தையல் போட்ட இடத்த அது நக்காம இருக்க, அது கழுத்துல ஒரு அட்டிய கட்டி வைக்க சொன்னாராம். இது உடனே அட்டிய வெட்டி, ஒட்டி- அதுல "I am Bushy" ன்னு எழுதி, அது கழுத்துல மாட்டி, நாலு photo எடுத்துது. அதுக்கே, பாவம், உடம்பு சரியில்ல. Bushy அந்த அட்டைய ரெண்டு நிமிஷத்துல பிச்சு எரிஞ்சுடுத்து! பத்து நாளாச்சு, சரியா போக!
"ங்கா...ங்கா..."ன்னு பிடுங்கி எடுக்கறது இப்போ. Bed, Chair, table - எல்லாம் அதோடதாம். "ஒரு நாளைக்கு எத்தன தடவ டா சாப்டுவ"? ன்னா "ங்கா..." ங்கும் பதில். "Chotu- Cuppy- Golu- புழுக்க- யார ரொம்ப பிடிக்கும்"ன்னு இது Bushy கிட்ட விரல காட்டி விளையாடும். அது ஏதோ ஒரு விரல தொடும். அந்த குட்டிய மனசுக்குள்ள நெனச்சுக்குமோ...? "Bushy-மா...'ங்கா'.. வேணுமாடா..."
PS: Bushy's pet- Nams video பாக்க click here.
PS: நம்ம "All time favourite" Chotu video பாக்க click here.
"The Mask" cartoon பார்க்க மிகவும் பிடிக்கும், சிறு பிராயத்தில். அதில் வரும் Mask மற்றும் Stanley Ipkiss- இருவரையுமே மிகவும் பிடிக்கும். அந்த cartoon இன் ஒரு பகுதியில்- Stanley வசிக்கும் Edge City யில் திடீரென்று, மர்மமான முறையில் மக்கள் முதியவர்களாக மாறி விடுவார்கள். அது எப்படி ஒரு நாளில் மாற முடியும்? உண்மையில்- இதற்க்குக் காரணம், Edge City ஐ புதிதாக எதிர்த்திருக்கும், வில்லன்- Skillit - ஒரு "Shadow Thief". மக்களின் நிழல்களைத் திருடி அவன் சக்திகளை வலு படுத்திக் கொள்ளும் அந்த வில்லனை- "Mask" எப்படி விரட்டுகிறான் என்பது தான் கதை.
இயற்ப்பியல் விதிகளுக்கிணங்கிய எல்லாவற்றிற்குமே நிழல் என்பதும் நிஜமே! அந்த நிழலுக்கு ஆழம் உண்டா? கனம் உண்டா? ஆனால் நிழலுக்கு இந்த விதிகள் பொருந்தாது. காற்றோ, நெருப்போ, நீரோ எதுவும் அதை பாதிக்காது. ஆனால் இயற்பொருள் சார்ந்த அனைத்து பொருட்களின் இயங்குமுறை ஒரு சில விதிகளுக்கு உட்பட்டது என்ற போது- நிழலுக்கு மட்டும் இப்படி சில சலுகைகள்!
Tom and Jerry யில் "The Invisible Mouse" என்ற cartoon இல் தன்னை அத்தனை நேரம் ஏமாற்றிக்கொண்டிருந்தது- அரூபமான Jerry தான்- என்று Tom, Jerry யின் நிழலைப் பார்த்து தான் புரிந்து கொள்ளும்! அவ்வளவு அழகான முறையில் அந்த காட்சி அமைந்திருக்கும். Jerry யின் நிழலைப் பார்த்து Jerry ஐ Tom அடிக்கும் போது- Jerry யின் நிழலின் தலையில் ஒரு வீக்கம் தெரியும்! என்ன கற்பனை வளம்! (Click Here)
நள-தமயந்தி கதையில், தமயந்தி சுயம்வரத்தின் போது, தேவர்கள் நளனைப் போல உரு மாரிக்கொள்வார்க்களாம். தமயந்தி, தேவர்களுக்கே உரியதான சில குணாதிசயங்களைக் கண்டு கொண்டு, நளனைக் கண்டு பிடித்து மாலை அணிவிப்பாளாம். அதில், தேவர்களுக்கு உரியது- என்று கூறப்படும் குணாதிசயங்களில்- அவர்களுக்கு "நிழல் கிடையாது" என்றும் சொல்லி கேள்விப் பட்டதுண்டு. ஆனால் உரு கொண்ட அனைத்து பொருட்களுக்கும் நிழல் என்பது இதுக்கத் தான் வேண்டும். இப்படி இருந்திருக்கலாமோ? தேவர்களின் தலைக்கு மேல் "Halo" என்று சொல்லக் கூடிய "ஒளி வட்டம்" இருப்பதனாலோ என்னவோ- அவர்களது நிழலானது நம் கண்களுக்குத் தெரியாத படி- அவர்களுக்குக் கீழேயே விழுந்திருக்கக் கூடுமோ?
"Shadow Thief" என்னும் கோட்பாடு, இந்தியர்களுக்குப் புதிதென்று சொல்ல முடியாது. ராமாயணத்திலும் "சாயா க்ரஹீ" என்றவள் ஹனுமான் கடலைக் கடக்கும் போது அவரது நிழலைப் பறிக்க எத்தனிப்பாள் என்று படித்ததுண்டு. "Carl Sands" என்ற Comic Book வில்லன்- "Dimensiometer" கொண்டு நிழலாக மாறிக்கொள்வான். அப்படி மாறிக்கொண்டு- சுலபமாக, யாருக்கும் தெரியாத முறையில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். அது மட்டுமில்லாது- மற்றவர்களின் நிழலையும் அவனால் எடுத்துக்கொள்ள முடியும். திருடிய நிழல்களைக் கொண்டு, யாரிடம் திருடினானோ- அவர்களின் நகல் உருவங்களை உருவாக்க முடியும், அவனால்! என்ன ஒரு கற்பனை! சமீபத்தில் ஒரு முறை "சாயா க்ரஹீ" பற்றிப் படித்த போது, அது ஏன் ஒரு Bermuda Triangle போலதென்றாக இருக்கக் கூடாது என்று தோன்றியது.
யோசித்துப் பார்த்தோமேயானால், Cartoon களிலும், Comics களிலும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. "நம் புராணங்களிலோ, வேதங்களிலோ இல்லாத விஷயங்களா"- என்று உடனே மறுப்பு தெரிவிக்கும் சிலரும் உண்டு. புரியாத வார்த்தைகளின் பிரயோகத்தை Thesaurus- இல் பார்பதில்லையா? புரியாத கேள்விகளுக்கு பதில்- "Notes" இல் படிப்பதில்லையா? Shakespere கதைகளின் abridged version படிப்பதில்லையா? அதைப் போலத்தான் Cartoon களும், Comics களும். குழந்தை பிராயத்தில் "இல்லை, ஆனால் இருக்கு" என்று வேதாந்தம் பேசாமல் எப்படி "இது தான் கடவுள்" என்று ஒரு சிலையைக் காண்பித்துக் கொடுக்கிறோமோ- கிட்டத் தட்ட அது போலத்தான் Comics களும். படிக்கும்/பார்க்கும் விஷயங்கள்- ஆழ் மனதில் புதைந்து கிடக்கும். அவ்வபோது அவை மேலெழும்பும் போது- அதில் பல விஷயங்கள் புலப்படும்...
Cartoon பார்க்கலாமா? (The Mask - Shadow of a Skillit- Part 1 & Part 2)
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
6 days ago
-
2 weeks ago
-
1 month ago
-
1 month ago
-
2 months ago
-
4 months ago
-
1 year ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".