45 நிமிடங்கள்...  

Posted by Matangi Mawley

ஒரு வருஷம் போனதே தெரியல! புது வருஷம் வந்தாச்சே- ன்னு நானும் போன வருஷம் உருப்படியா என்ன நடந்தது-ன்னு 45 நிமிஷமா ceiling அ பாத்து யோசிச்சதுல, சொல்லும்படியா ஒண்ணுமே நடக்கல-ன்னு தான் தோணித்து. ஆனா- அதுக்கப்றம் யோசிச்சு பாத்த போது- நான் வாழ்ந்த வாழ்க்கைல 365 நாள் நான் என்ன பண்ணினேன்-ன்னு கூட எனக்கு நெனவு இல்லன்னா- அது கூட நெனவு இல்லாம நான் என்ன பண்ணி கிழிச்சேன்-ன்னு நெனக்க தோணித்து? இன்னும் ஒரு முயற்சியா- 2010 பத்தி யோசிச்ச போது- இந்த 3 விஷயம் கிடைச்சுது!

மைத்துளிகள். போன 2009 25th Dec . அன்னிக்கு- office ல வேல ஏதும் இல்லாம இருக்கும் போது- பொழுத
போக்கறதுக்காக- ஒரு கிழிஞ்சு போன 'காகிதத்துல' என் பெயர தமிழ்-ல எழுதி பாக்கும் போது- அது, எனக்கு தமிழ் தெரியுமா-ன்னு சோதிச்சு பாத்துக்கற ஒரு முயற்சியா தான் இருந்தது. இன்னிக்கு வரைக்குமே- 'மைத்துளிகள்' எப்படி start ஆச்சு- இன்னி வரைக்கும் அது எப்படி ஓடிக்கொண்டிருக்கு? இது எதுவுமே எனக்கு புரியல! 'காகிதம்'னு நான் அன்னிக்கு எழுதின கட்டுரை- தான் என் வாழ்கைலையே முதல் முதலா நான் தமிழ் ல எழுதின எதோ ஒண்ணு! இது ஒரு எதிர் பாராத பயணம் தான். ஆனா- ஒரு சுவையானதும் கூட! Jan 28th ஓட ஒரு வருஷமாகும் இந்த blog start பண்ணி. உங்க எல்லாருக்கும்- இந்த blog அ இன்னி வரைக்கும் ஓட வெச்சதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய "Thank you " ஒண்ணு சொல்லிக்கறேன்!

துப்பாண்டி. எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பூனை வளக்கணும்-னு ஆசை. எங்க அம்மா-க்கு இந்த விஷயத்துல லாம் உடன்பாடு இல்ல. ஆனா- இவன் எப்ப எங்க வீட்டுக்கு வந்தான், எப்போ ஜன்னல் வழியா ஏறி உள்ள குதிச்சான், எப்போ sofa அடீல பூந்துண்டான், எப்போ iron பண்ணி வெச்சிருந்த எங்க அப்பா ஓட dress கு மேல சொஹுசா நாலு காலையும் மேல தூக்கி வெச்சுண்டு படுத்டுண்டான்- எங்க யாருக்குமே நெனவு இல்ல! அவனோட curiosity உம் , ஒரு சில சமயங்கள்-ல அவனோட சோம்பேறித்தனமும்- கூட எங்க எல்லாரியுமே அவன் பக்கம் இழுத்துடுத்து! பேச ஒரு விஷயமும் இல்லேங்கற சமயத்திலும்- அவன பத்தி பேசலாம். எங்க எல்லார் life லேயும் ஒரு 'புன்னகை' அவன்!

"The Banyan Trees ". நிவி, thebanyantrees.com னு e -zine ல எழுத Nov 2009 ல எனக்கு mail போட்டிருந்த போது- எனக்கு அத பத்தி ஒரு
எண்ணமும் இல்ல. என்ன எழுத போறோம்? எப்படி எழுத போறோம்-னு. Saturday மதியம் Office லேர்ந்து அந்த mail அ படிச்சதனாலோ என்னவோ! ஆனா- அதுக்கப்றம் "The Other son of Ganges" உருவாச்சு. May 2010 லேர்ந்து கிட்ட தட்ட தொடர்ந்துஅந்த தொடர்-அ அந்த magazine ல எழுதறேன். எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.

எவ்வளோவோ நிகழ்வுகளோட ஒவ்வொரு வருஷமும் வருது- போறது. ஆனா- அந்த எல்லா நிகழ்வுகளிலும் ஒரு சிலது தான் நமக்கு நினைவில் இருப்பது! புது வருஷம் நம்மை வரவேர்க்கற தருணத்துல- நமக்கு வேணும்கறத அந்த வருஷத்திலிருந்து எடுத்துக்க வேணும்- ங்கற எண்ணம் தான் எனக்கு இந்த 45 நிமிஷமா ceiling பாத்ததுல கிடைச்ச பாடம்!


எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Have a great year ahead ...

This entry was posted on 02 January, 2011 at Sunday, January 02, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

12 comments

உங்க அம்மாவோட”இதுக்கு” “தமிழ்ல நல்லாவே எழுத வருது. என்ன பேச்சுத் தமிழ் தானா வருதா, இல்லை வேண்டி வருதா புரியல. எப்படி இருந்தாலும் நெனச்சத சொல்ல முடிஞ்சா சரி. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 January 2011 at 19:25

போன 2009 25th

வாவ்.. ஃபிளாஷ் பேக் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

2 January 2011 at 19:27

மைத்துளிகள் நான் விரும்பி படிக்கும் ஒரு ப்ளாக். சில சமயம் உங்களுடைய எழுத்தாற்றல் என்னை பிரமிக்க வைத்து இருக்கு.உங்கள் கற்பனையும் அதற்கு ஈடு கொடுக்கிறது. ஒரு சாரார் பாஷை சில சமயம் நன்னா இருக்கு, சில சமயங்களில் நெருடலாக இருக்கிறது .எழுதும்போது பேசும்படியாக இருக்கணும்னு அவசியம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது..உங்கள் யோசனைக்கு இதை முன் வைத்தேன்.சில சமயம் ரொம்ப philosophical ஆக இருக்கு.மொத்தத்தில் மிகவும் அருமையாக இந்த சின்ன வயதில் எழுதும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேன் மேலும் நீங்கள் வளர ஆண்டவனை பிரார்த்திக்கறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 January 2011 at 19:42

யார் லைஃப்ல எப்ப என்ன டர்ன் வரும்னு தெரியாது.. ஆனா உங்களுக்கு சுவாரசியமா வந்திருக்கு.. ஜமாய்ங்க..
புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

2 January 2011 at 20:31

Matangi Mawley... இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதே என்று யோசித்தால்... நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் என்னை ஆதரித்த மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்... அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

அடிக்கடி எழுதுங்கள்...

3 January 2011 at 03:55

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாதங்கி. சீலிங் நினைவுகள் நல்லா இருக்கு. ;-)

3 January 2011 at 09:58

Wish you very happy new year. your profile looks great in banyantrees :)Keep writing :)

3 January 2011 at 10:49

Wish u a very happy new year

3 January 2011 at 13:34

நான் பார்த்து பொறாமை படும் எழுத்து திறன் உள்ளவர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதுங்கள்

3 January 2011 at 17:38

Listla intha "Ithuvai" pathi azlakaa swarasiyamaa sollum yennoda all time favrt j..i mamiyaiyum add panni irukkalaam...;)

yennoda best 5 blogsla mythuliyum onnu...:) gud luck madam!

4 January 2011 at 14:14

Wow... I can't believe you started writing in tamil so recently... your writing doesn't seem so.. it is much more matured and good... Happy Anniversary to ur blog and happy new year to you Matangi... all the best in 2011 too

4 January 2011 at 23:34

இவ்வாண்டில் தமிழ் மைத்துளிகள் பெருவெள்ளமாக பாயவும்..துரு துரு துப்பாண்டி இன்னமும் துரு துருப்பாக இருக்கவும்... ஆங்கிலப்பயணமும் சிறப்பாக இருக்கவும் இனிய நல்வாழ்த்துக்கள்....

5 January 2011 at 22:21

Post a Comment