மாக்கான்  

Posted by Matangi Mawley


இது LKG படிச்சது - Holy Cross St. Antony's Nursery School-la. "Christmas போது நிறைய programs இருக்கு- நீ என்ன பண்ணுவ"? ன்னு miss இது கிட்ட வந்து கேட்டப்போ- "பேசுவேன்" அப்டீன்னுருக்கு. Class ல இதுதான் நிறையா பேசும் னு , miss எப்போ பாரு complaint தான் என்கிட்டே. நன்னாருக்கே! கொழந்த class ல friends-ஓட பேசாம- வேறெங்க பேசும்? ஆனா இது இப்டி சொன்னத- அங்க ஒரு ரொம்ப நல்ல HM sister இருந்தா- நல் spirit-ல எடுத்துண்டு இத "Vote of thanks சொல்லு" அப்டீன்னு சொல்லிட்டா. அவ்வளவுதான். ஆத்துக்கு வந்து- "நான் mike பேசுவேன்.. mike ல பேசுவேன்" னு ஒரே குஷி!

அன்னிக்கு அடுத்த நாள் ஆத்துக்கு வந்து ஒரே அழுக. ஏன்னா- dance ஆடற கொழந்தைகளுக்கெல்லாம் frock வாங்கி கொடுத்திருக்காளாம். "எங்கு மட்டு ஒண்ணுமே ஆங்கி தல்ல"-னு ஓ-ன்னு அழுக. அப்புறம் என்ன? கட கடையா ஏறி- இதுக்கொரு dress-அ "ஆங்கி" கொடுத்துது. இதோட "costume" என்ன-ன்னு நாங்களும் இதோட மீஸ், HM sister எல்லாருமா கலந்தாலோசிச்சு- பைஜாமா-ஜிப்பா- white color-னு decide பண்ணினோம். அதுக்கப்றம் தான் முக்கியமான விஷயமான "vote of thanks" சொல்லறதே வந்துது. இவர் உக்காந்து அழகா எழுதிகொடுத்து- சொல்லிகொடுத்தார். அத கத்துண்டு சொல்லறதுல அத்தன ஒயட்டல். இது ஒரு தடவ சொல்லி, நான் ஒரு தடவ சொல்லி, அது அப்பா ஒரு தடவ சொல்லி- tape ல record பண்ணி, அப்புறம் "நா இனொன்னு இன்னொன்னு"ன்னு இது இன்னொரு தடவ சொல்லி... (இதுக்கு சொல்லிகொடுத்து ஓஞ்சு போனத tape பண்ணிநோமொல்யோ? அந்த sample இங்க கேளுங்கோ!-click here )

அப்டியா-இப்டியா-ன்னு Christmas-உம் வந்தது. "participants"-லாம் காலேலையே வரணும்-னு சொல்லிட்டா. காலேல இத கொண்டோய் விட்டாச்சு. இதுக்கு "costume"-ஓ ஒரு வெள்ள color 'பைஜாமா-ஜிப்பா'. மத்த கொழந்தைகளுக்கு frock-choli-pant-shirt னு அத்தன variety. அதுகள்-எல்லாம் make-up room-ல உக்காந்து இருந்துதுகள். எலி புழுக்க கணக்கா இதுக்கு அங்க என்ன வேல? 4 inch கூட தலேல முடி கெடயாது. இது தாத்தாவாத்துக்கு போரபோதெல்லாம்- தாத்தாக்கு hair-cut பண்ணும்-போதெல்லாம் இதுக்கும் ஒரு 'summer-crop' உண்டு. எதோ இதுவும் பாவம் உக்காந்திருக்கே-ன்னு free-யா இருந்த miss- இது தலையையும் நாலு வார வாரி, ஒரு lip-stick ஒண்ண ஈஷி விட்டா. (அது எந்த சீப்ப போட்டாளோ! அந்த நாலு வாரல்-ஓட பலன்- அடுத்தநா காலேல- நான் அந்த நாலு inch கூந்தல நாலாயிரம் தடவ வாரினேன்!) அங்கேர்ந்து வந்து- "எனக்கும் make-up போட்டாளே"-ன்னு ஒரே பீத்தல். lip-stick போய்டும்-னு தண்ணி கூட குடிக்காம உக்காண்டுருந்துது. என் தம்பி ஊர்லேர்ந்து வந்திருந்தான். School கு program பாக்க வந்தவன் சும்மா இல்லாம- "ஐயைய.. ஒதட்டுல லாம் என்ன இது சேப்பு சேப்பா-"? ன்னு நன்னா துணியால புடிச்சு தொடச்சு விட்டுட்டான், கடங்காரன்! அத்தன கோவம் இதுக்கு! காதெல்லாம் செவந்துடுத்து. எங்க இது அழுதுடுமோ-ன்னு பயந்துண்டு உக்காண்டுருந்தேன். நல்ல வேள. miss வந்து- "front ல உக்காந்துக்கோ" ன்னு சொன்ன ஒடனே கோவம் லாம் போச்சு.

Christmas நா என்ன-ன்னு அங்க எல்லா கொழந்தைகளுக்கும் சொன்னா. இது எதோ ரொம்ப கவனமா கவனிச்சுண்டு இருந்துதேன்னு- கூப்டு- இது கிட்ட "அப்டீன்ன என்னடா"? ன்னு கேட்டப்போ- "அப்ப்டீன்ன எனக்கு நெறைய 'gift' வாங்கி தருவாளே ஏ ஏ ஏ "- ன்னுது. இது ஆசய ஏன் கெடுப்பானேன்-னு தான் " 'மாக்கான்' னு ஒண்ணு இருக்கு. கருப்பா இருக்கும். சேப்பு color மூக்கு இருக்கும். பெரிய கண்ணு இருக்கும். எப்போலாம் நீ சமத்தா இருக்கியோ- 'மாக்கான்' உனக்கு chocolate தரும்"-னு சொல்லி வெச்சேன். அன்னிக்கு இருந்தாப்ல இப்போ வரைக்கும் என்னிக்குமே அவளோ சமத்தா இருந்ததே இல்ல! அதோட அப்பா office லேர்ந்து வந்த ஒடனே- நாற்காலி எடுத்துண்டு வந்து வெச்சுது. தூத்தம் எடுத்துண்டு வந்து குடுத்துது. Rhymes லாம் correct-ஆ சொல்லி காட்டித்து. அடுத்த நாள் காலேல- எங்காத்து வாசல்-ல இருக்கற வேப்ப மரத்து கெளைல ஒரு plastic bag-ல நாலு chocolate தொங்கிண்டுருந்துது. "கொஞ்சம் நெறையா வாங்கிருக்கலாமோல்யோ"-ன்னு 'மாக்கான்'-ட சொன்னேன். "பல்லு கெட்டு போய்டும்"நுடார்.

அதுக்கப்றம்- 'மாக்கான்' chocolate லாம் தர அளவுக்கு ஒண்ணும் நடக்கல.



This entry was posted on 26 December, 2010 at Sunday, December 26, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

அந்த தாங்கு!! பார்ட் சான்ஸே இல்லை மாதங்கி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல ஜலம் வந்தாச்சு!!..:)

26 December 2010 at 01:03

ஹா ஹா

26 December 2010 at 09:52

நான் சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். அங்கு என் பேரனுக்கு வெல்கம் ச்பீச் கற்றுக்கொடுக்க என் மகனும் மருமகளும் பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்தது உங்கள் பதிவு. இந்த மாதிரியான அனுபவங்கள் வாழும் வாழ்க்கைக்கு சுவை சேர்ப்பவை. They add spice to your life, Enjoy and live your life, Maathangi.Best wishes and a happy new year to you your husband and to your "ITHU"

26 December 2010 at 10:44

@ gmb..

sir!! anga "ithu" ngarathu naan... en amma enna paththi sollara maathiri oru series athu! :D

26 December 2010 at 10:52

@parvaiyalan...

thanks!

26 December 2010 at 10:53

@ thankkudu...

okay okay! control, boss! :) thanks!

26 December 2010 at 10:54

அப்பொ அந்த டேப் ரெகார்டிங்ஸ்.?

26 December 2010 at 11:10

@ gmb.. naan pesinathu thaan athu.. cassette la irunthu soft copy panninathu!

26 December 2010 at 11:14

"இதுக்கு" வாழ்த்துக்கள்.So sweet .
கடைசியில vote of thanks சொன்னுச்சா இல்லையா ?

26 December 2010 at 17:45

@ sivakumar...

thanks! :) solliyaachchu...

26 December 2010 at 21:37

படிக்க ஆரம்பிச்ச உடனே..உங்க அக்காவோ அண்ணனோ உங்க கதையை எழுதியிருக்காங்கன்னு நினச்சேன்..அம்மா அனுபவிப்பை பிரதிபலிச்ச மாதிரி இருந்த மாதிரி எழுத்து இருந்தது.

இதே மாதிரி எங்க விட்டம்மாவும் என் பசங்களுக்கு விவேகானந்தர், சேண்டாக்ளாஸ் வேஷம் கட்டி சொல்லவைச்சு துடிச்சிருக்காங்க..

தேன்கூ..விட்டாப் போதும்ங்கற் வேகம்..நல்லா சிரிக்க வச்சுது

27 December 2010 at 06:48

தக்குடுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும்..

என்னோட பெரியவளை "மார்கழித் திங்கள்" சொல்ல வச்சது ஞாபகம் வந்துது. சஞ்சய் கச்சேரி ஒன்னு என் சைட்ல இருக்கு. போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...நன்றி ;-)

27 December 2010 at 07:15

ஐயைய.. ஒதட்டுல லாம் என்ன இது சேப்பு சேப்பா-"? ன்னு நன்னா துணியால புடிச்சு தொடச்சு விட்டுட்டான், கடங்காரன்! அத்தன கோவம் இதுக்கு!

குழந்தையின் உணர்வு அப்படியே..

27 December 2010 at 20:48

cute post

27 December 2010 at 21:59

@ padmanabhan....

thanks! :)

28 December 2010 at 21:57

@ RVS...

thanks!

sanjay concert kettaachchu... nice!

28 December 2010 at 21:57

@ rishaban...

:) thanks!

28 December 2010 at 21:57

@ kalyan...

thanks!

28 December 2010 at 21:58

சுவையாக இருக்கிறது படிக்க. என்னுடைய பெண் சிறுவயதில் ஔவையார் வேடமிட்டு சன் தொலைக்காட்சிக்கு சென்று பேசியதும்..பள்ளியில் வாஞ்சிநாதன் வேடமிட்டுப்பேசியதும் மனத்திரையில் ஓடுகிறது. சுவை. சொல்லும்முறை நேர்த்தியாக உள்ளது. சுவை குறையாமல் போகிறது.

31 December 2010 at 19:00

இது செஞ்சதையெல்லாம் இதுவே
observe பண்ணி மனசிலே பதிஞ்சு வைச்சிண்டதும், இந்த இதுவே இப்போ அப்போ செஞ்சதையெல்லாம் இம்மி பிசகாம பதிவு பதிவா பதியறதும்..
அற்புதம்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 January 2011 at 14:22

@ harani...

thanks!

2 January 2011 at 14:32

@ jeevi...

thanks a ton sir! :) happy new year to u too!

2 January 2011 at 14:33

குழந்தை உணர்வுகளை அழகாக சித்தரித்திருக்கிறீர்கள். :-D

அந்த பேச்சை MP3யாக மாற்றியிருக்கக்கூடாதோ? That was awesomely cute. அந்த படபடப்பு, confidence was very much evident. :-த

3 January 2011 at 19:56

So cute Matangi... thanks for sharing the audio too... ganeer kural unakku appove... very cute memories for sure... you've made it sound hilarious too... How is your Maakan now? did you get an saakis recently? ha ha... good one...

4 January 2011 at 23:41

@ ramm...

thanks! :)

6 January 2011 at 21:23

@ appaavi...

thanks!! :D :D

6 January 2011 at 21:24

Post a Comment