45 நிமிடங்கள்...
ஒரு வருஷம் போனதே தெரியல! புது வருஷம் வந்தாச்சே- ன்னு நானும் போன வருஷம் உருப்படியா என்ன நடந்தது-ன்னு 45 நிமிஷமா ceiling அ பாத்து யோசிச்சதுல, சொல்லும்படியா ஒண்ணுமே நடக்கல-ன்னு தான் தோணித்து. ஆனா- அதுக்கப்றம் யோசிச்சு பாத்த போது- நான் வாழ்ந்த வாழ்க்கைல 365 நாள் நான் என்ன பண்ணினேன்-ன்னு கூட எனக்கு நெனவு இல்லன்னா- அது கூட நெனவு இல்லாம நான் என்ன பண்ணி கிழிச்சேன்-ன்னு நெனக்க தோணித்து? இன்னும் ஒரு முயற்சியா- 2010 பத்தி யோசிச்ச போது- இந்த 3 விஷயம் கிடைச்சுது!
மைத்துளிகள். போன 2009 25th Dec . அன்னிக்கு- office ல வேல ஏதும் இல்லாம இருக்கும் போது- பொழுத போக்கறதுக்காக- ஒரு கிழிஞ்சு போன 'காகிதத்துல' என் பெயர தமிழ்-ல எழுதி பாக்கும் போது- அது, எனக்கு தமிழ் தெரியுமா-ன்னு சோதிச்சு பாத்துக்கற ஒரு முயற்சியா தான் இருந்தது. இன்னிக்கு வரைக்குமே- 'மைத்துளிகள்' எப்படி start ஆச்சு- இன்னி வரைக்கும் அது எப்படி ஓடிக்கொண்டிருக்கு? இது எதுவுமே எனக்கு புரியல! 'காகிதம்'னு நான் அன்னிக்கு எழுதின கட்டுரை- தான் என் வாழ்கைலையே முதல் முதலா நான் தமிழ் ல எழுதின எதோ ஒண்ணு! இது ஒரு எதிர் பாராத பயணம் தான். ஆனா- ஒரு சுவையானதும் கூட! Jan 28th ஓட ஒரு வருஷமாகும் இந்த blog start பண்ணி. உங்க எல்லாருக்கும்- இந்த blog அ இன்னி வரைக்கும் ஓட வெச்சதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய "Thank you " ஒண்ணு சொல்லிக்கறேன்!துப்பாண்டி. எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பூனை வளக்கணும்-னு ஆசை. எங்க அம்மா-க்கு இந்த விஷயத்துல லாம் உடன்பாடு இல்ல. ஆனா- இவன் எப்ப எங்க வீட்டுக்கு வந்தான், எப்போ ஜன்னல் வழியா ஏறி உள்ள குதிச்சான், எப்போ sofa அடீல பூந்துண்டான், எப்போ iron பண்ணி வெச்சிருந்த எங்க அப்பா ஓட dress கு மேல சொஹுசா நாலு காலையும் மேல தூக்கி வெச்சுண்டு படுத்டுண்டான்- எங்க யாருக்குமே நெனவு இல்ல! அவனோட curiosity உம் , ஒரு சில சமயங்கள்-ல அவனோட சோம்பேறித்தனமும்- கூட எங்க எல்லாரியுமே அவன் பக்கம் இழுத்துடுத்து! பேச ஒரு விஷயமும் இல்லேங்கற சமயத்திலும்- அவன பத்தி பேசலாம். எங்க எல்லார் life லேயும் ஒரு 'புன்னகை' அவன்!
"The Banyan Trees ". நிவி, thebanyantrees.com னு e -zine ல எழுத Nov 2009 ல எனக்கு mail போட்டிருந்த போது- எனக்கு அத பத்தி ஒரு எண்ணமும் இல்ல. என்ன எழுத போறோம்? எப்படி எழுத போறோம்-னு. Saturday மதியம் Office லேர்ந்து அந்த mail அ படிச்சதனாலோ என்னவோ! ஆனா- அதுக்கப்றம் "The Other son of Ganges" உருவாச்சு. May 2010 லேர்ந்து கிட்ட தட்ட தொடர்ந்துஅந்த தொடர்-அ அந்த magazine ல எழுதறேன். எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.
எவ்வளோவோ நிகழ்வுகளோட ஒவ்வொரு வருஷமும் வருது- போறது. ஆனா- அந்த எல்லா நிகழ்வுகளிலும் ஒரு சிலது தான் நமக்கு நினைவில் இருப்பது! புது வருஷம் நம்மை வரவேர்க்கற தருணத்துல- நமக்கு வேணும்கறத அந்த வருஷத்திலிருந்து எடுத்துக்க வேணும்- ங்கற எண்ணம் தான் எனக்கு இந்த 45 நிமிஷமா ceiling பாத்ததுல கிடைச்ச பாடம்!
எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Have a great year ahead ...