"Mobile வாங்கலையோ, Mobile"!
<-- 31st Dec -->
நான்: New Year -கு புதுசா நான் ஏதாவது பண்ணனும்.
<-- வீட்டில் ஒரு அமைதி -->
நான்: எனக்கு என்ன வாங்கி தர போற, New Year -கு?
அப்பா: <--Hindu Paper லேர்ந்து கண்ணை வெளியில் எடுத்து--> அப்படியெல்லாம் ஒரு வழக்கம் நம்மாத்துல கிடையாதே!
நான்: ஆனா இந்த New year கு எனக்கு புதுசா ஏதாவது பண்ணனும் போலவே இருக்கே!
அப்பா: நீதான் வேலைக்கு போற, சம்பாதிக்கற- என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ...
நான்: <--தரைய 15 நிமிஷம் உற்று பார்த்து யோசித்த பின்--> நான் ஒரு புது Mobile வாங்கிப்பேன்!
அம்மா: <--சமையலறையிலிருந்து--> அதானே பாத்தேன்!
அப்பா: ஆஹா வாங்கிக்கோ! இப்ப இருக்கற Mobile வாங்கி எத்தன நாளாச்சு?
நான்: நாளெல்லாம் ஒன்னும் இல்ல. நிறையா மாசமாச்சு. இந்த Mobile அ நான் ஒன்னும் கொடுக்க போறதில்ல...
அப்பா: ஓஹோ!
நான்: நான் "flip " mobile வாங்கிப்பேன்...
அப்பா: அப்படீன்னா?
நான்: நான் college ல படிக்கும் பொது தொரக்கரா போல ஒரு mobile வெச்சிருந்தேன்-இல்ல? நீ கூட அந்த mobile அ தொலச்சிட்டியே... அத போல...
அம்மா: <--ஆசையான குரலில்--> நீ வாங்கிக்கோடா, ஒரு நல்ல mobile ஆ...
<-- Internet ல புது mobile தேடல்-ling -->
<-- அப்பா escape -->
அம்மா: ரொம்ப ஜாஸ்தி செலவு பண்ணாதடா...
நான்: இல்ல-மா! ஆனா இப்ப ஒரே confusion !
அம்மா: எதுவா இருந்தாலும் பாத்து செலவு பண்ணுடா...
நான்: அம்மா- இத பாரேன்...
<-- Select பண்ணியிருக்கற mobile அ காட்ட- ling -->
அம்மா: பாக்க ரொம்ப அழகா இருக்கு. ஆனா, நீ இப்போ வேச்சிண்டுருக்கறதும் ரொம்பவே அழகா இருக்கு...
நான்: அது இல்ல மா... இதுல எவ்வளவோ- வோ- வோ- வோ " features " இருக்கு தெரியுமா?
அம்மா: எனக்கு எங்கடா தெரியும் அதெல்லாம்?
<-- இன்னும் கொஞ்ச நேரம் internet தேடல் -->
நான்: அனா இந்த புது mobile ஒன்னும் அவ்வளவு நன்னா இல்ல. ரொம்ப சின்னதா இருக்கு!
அம்மா: <-- --- -->
நான்: ஆனா நான் இந்த mobile வாங்கிப்பேன்... நாளைக்கு அப்பா-வ என்கூட mobile வாங்க வர சொல்லு...
அம்மா: ஓ...
<-- 1st மற்றும் 2nd Jan அப்பா எங்க கை-ல சிக்கவே இல்ல! -->
<-- 1st Jan : நிறையா mobile அலசி கடேசியில் Ipod வாங்கலாம் னு Decide பண்ணியாச்சு! -->
<-- 2nd Jan : நிறையா Ipod அலசி கடேசியில் less features இருக்கும் "flip" mobile வாங்கலாம் னு Decide பண்ணியாச்சு! -->
<-- 3rd Jan -->
நான்: அம்மா, Ipod - எல்லாம் வேண்டாம்-னு decide பண்ணிட்டேன். அதெல்லாம் office ல allowed இல்ல. தவிர mobile ஒண்ணு, Ipod ஒண்ணு - லாம் கை-ல வெச்சுண்டு அலைய முடியாது!
<-- அம்மா/அப்பா No Reaction -->
நான்: "Flip" mobile அவ்வளவா "features" ஏ இல்ல! என் mobile ஓட நல்ல mobile , ரொம்ப வெல ஜாஸ்தி! New year பொது அவ்வளவு செலவு பண்ண வேண்டாம்-னு decide பண்ணிட்டேன்! நான் என் B 'day கு costly mobile வாங்கிப்பேன்...
அம்மா: நீ சொன்னா சரி...
அப்பா: இந்த Luxury லாமே இப்படி தான்! Higher Version போக போக Lower Version பிடிக்காது-தான்...
அம்மா: ரொம்ப செலவு பண்ணாம பாத்துக்கோ டா...
Friends , இந்த அப்பா-அம்மா, நம்ம எவ்வளவுதான் support பண்ணறத போல பேசினாலும், கடேசியில் அவங்க நினைச்சதத்தான் நம்ம மூலம் நடத்திக்கறாங்க! Trivial expenses, time கொடுத்து குறைக்கலாம். Diplomacy- decision making -ஓட அவசியமான பகுதி!
Mobile எனக்கு கடைச்சதோ இல்லையோ-- இவங்க "Parenting Technique" நல்லாவே புரிஞ்சது!