துப்பாண்டியார் - Episode 4
"தோ... தோ... வரேன்.."-ன்னு குச்சிய எடுத்துண்டு விரட்ட போனா, ஜம்முன்னு தரேல சயநிச்சுண்டு, வெண்ணைய திருடிட்டு, "என்னாச்சு மாமி", ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற கிருஷ்ணனாட்டம்- "மியாவ்" ங்கறது! இந்தாத்துல இருக்கரதுகளும் சரி, வந்து வாய்க்கரதுகளும் சரி- எல்லாம் ஒரே போல! Iron பண்ணி வெச்சுருந்த dress மேல- ஜம்முன்னு, மெத்து மெத்துன்னு, நாலு காலையும் ceiling அ பாக்க தூக்கி வெச்சுண்டு படுத்து தூங்கறது. 'இத ஏதாவது சொன்னியோ'-ன்னு என்கூட சண்ட பிடிக்க இந்தாத்துல இருக்கற ரெண்டும் ready யா நிக்கறதுகள். அது மேல போய் அப்படி என்ன ஈஷல் வேண்டி கடக்குரெண்டு பேருக்கும்?
நடுல வேற நாங்க ஒரு பத்து நாள் ஊர்ல இல்ல. இது என்ன பண்ணித்தோ தெரியல. Gate எல்லாம் முழுக்க அடச்சு வெச்சாச்சு, உள்ள நுழைய முடியாதக்கி. ஊர்லேர்ந்து, பக்கத்தாத்து மாமிக்கு எதோ காரியமா phone பண்ணினா- "துப்பாண்டி எப்புடி இருக்கான்"ன்னு கேளாம்! எனக்கே அது என்ன பண்ணுமோ-ன்னு கவலையாதான் இருந்துது. தானாவும் எதுவும் தேடிக்க தெரியாது, நம்ம போடறதையும் திங்காது! பின்ன என்ன தான் பண்ண முடியும்? இதுக்காக ஒரு 'cat food' ஒன்னு வேற! அது பாக்க புளியன்கொட்டையாட்டமா இருக்கும். அத எடுக்கறதுக்காக, cupboard அ தொறந்தா போரும். ஒரே சத்தம். அத குடுக்கற வரைக்கும் கத்திண்டே இருக்கும். ஆனா அது எப்புடி போரும்? எப்போ பாரு அதையே குடுக்கவும் முடியாது. நமக்கு கட்டுபடியாகாதோன்னோ?
ஒரே ஒரு கரப்பு ஒண்ணுத்த புடிச்சுடுத்தாம். அத விட்டுட்டு-விட்டுட்டு புடிச்சு எம்முன்னாடி வேட்டையாடி காட்டறது. பிடிச்சதையும் கடேசீல திங்கக்காணும். அந்த கரப்பு, இதுக்கு டிமிக்கி குடுத்துட்டு ஓடி போய்டுத்து! மறுபடியும் வால தூக்கிண்டு வந்து, கதவுல மூஞ்சிய தேச்சுண்டு நின்னுது. நாங்க ஊர்லேந்து வந்தப்றம், பக்கத்தாத்து மாமி சொன்னா. ரெண்டு நாள்- ஆத்து வாசல்-ல நின்னுண்டு கத்திண்டே இருந்துதாம். பாவம். சாயந்தரம் ஓடி வந்துடுத்து. அத பாத்தப்ரம் தான் எங்களுக்கே ஆத்துக்கு வந்தாப்ல இருந்துது!
எளச்சு போய்டுத்து, பாவம். முன்னாடி ஜம்முன்னு, புஷ்டியா இருக்கும். வாசல் gate கம்பிக்குள்ள நுழைய முடியாம கஷ்ட படும். நாங்க கூட எலி, அணில் ஏதாவது புடிச்சு சாப்பட கத்துண்டுடுத்தோன்னு சந்தோஷ பட்டோம். "Born Free" ன்னு ஒரு English சினிமா-ல ஒரு புலி குட்டிய ஆத்துக்கு தூக்கிண்டு வந்து வளத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாத போன கதையாட்டமாயுடுத்து!
இதுக்கு நடூல Bushy வேற. முன்னாடியெல்லாம் அது சாப்படவே சாப்படாது. இப்போ, "கொண்டா-கொண்டா"ன்னு சாப்படறத பாத்தா, வீடு முழுக்க பூனை பன்னையாட்டமாயுடுமோ-ன்னு வேற பயமா இருக்கு. Net ல வேற பூனைக்கு pregnancy 65 days தான்னு போட்டுருக்கு. Bushy சரியான 'அறிகரப்பான்'! முன்னாடியெல்லாம் துப்பாண்டி தான் கத்தும்- சாப்பாடு கேக்கும். Bushy அதுக்கு ஒத்து ஊதும். இப்போ துப்பாண்டி வாயே தொரக்கரதில்ல. அது சரி! கடேசீல நம்ப துப்பாண்டியாத்துலையும் 'மதுரை' தான் போலருக்கு!
அன்னிக்கு ஒரு நாள், ஆத்து வாசல்-ல புது சத்தம். துப்பாண்டி அம்மா, ஒரு ஈடு 'புது release' விட்டுருந்துது. ஒன்னு 'இஞ்சி' (அது இஞ்சி colour ல இருக்கும்), இன்னொண்ணு 'Binji' (Black இஞ்சி. மூஞ்சி மட்டும் கருப்பா இருக்கும்). துப்பாண்டி ஒடனே வெளீல போய் பாக்கறார். ஒரு 15 நாள் ஒரே கூத்து. எப்புடியாவது இந்த இஞ்சி-Binji ய நம்பாத்துல settle பண்ணிடனும் னுபிளான் போட்டுது, துப்பாண்டி. அந்த 'இஞ்சி'- துப்பாண்டியோட அட்ட அசல்! அவனோட 2 பங்கு சாப்படறது. நம்பளால முடியாதுடாப்பா-ன்னு ரெண்டுத்தையும் துரத்தி விட்டாச்சு.
ஒரு நாள் evening, துப்பாண்டி அம்மா அதோட parapet ல அசையாம கிடந்துது. அத எடுத்தப்ரம், அந்த parapet கு நேரா இருக்கற மதில்-ல உக்காந்து அந்த இடத்த வெச்ச கண் வாங்காம பாத்துண்டே இருந்துது. அன்னிக்கு ராத்திரி ஒரு அசாதாரணமான குரல்-ல ஒரு கத்து கத்தித்து. எனக்கு அத கேக்க, அதோட அம்மா-வ நெனச்சுண்டு அது அழராப்ல இருந்துது.
நம்ம தான் சொல்லறோம், அஞ்சறிவு-ன்னு. அதுகளுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்க தான் செய்றது. இஞ்சி-Binji ரெண்டுத்தையும் பத்தரமா கொண்டுபோய் இதுதான் விட்டுட்டு வந்துது. அது விட்டுட்டு வந்த அன்னிக்கு அத பாக்கரெச்ச எங்களோட குட்டி துப்பாண்டி வளந்து துப்பாண்டியார்-ஆ மாரிட்டாப்ல தோணித்து..... ஒரு க்ஷணத்துக்கு.
"தோ... தோ... வரேன்"..!
Cupboard மேல ஏறி குதிச்சுண்டுருக்கு...
"அடி... அடி..."