GR - Degree காபி 1
முன் குறிப்பு 1: Degree காபி-ல decoction மட்டும் தான் இருக்கும்.
முன் குறிப்பு 2: Rahman கு நான் பூஜ பண்ணினாலும், அவருக்கு முன்னாடி இருந்தவர்கள தான் எனக்கு இவருக்கு முன்னாடி தெரியும்.
"ஓமன திங்கள் கிடாவோ..." ன்னு என் பாட்டியோட தாலாட்டு பாட்டு கேட்டு தான் நான் தூங்குவேன், சின்ன வயசுல. ஒரு சில நாட்கள்-ல, cassette ல பாட்டு போட்டு தூங்க பண்ணுவா. அது usually, MKT பாட்டுகளாதான் இருக்கும். அப்போலேர்ந்து பழக்கம் இந்த cinema, பாடல்களோட எனக்கு. அந்த காலத்துல, majority யான பாடல்கள் எல்லாமே கர்நாடக சங்கீதத்த மையமா கொண்டு தான் அமைக்க பட்டிருக்கு. ஹாஸ்ய பாடல்களும் சரி, romantic duets உம் சரி- எந்த மாதிரியான situation கும் ஏற்ற ராகமும், பாடலும் அந்த காலத்துல இருந்தது. சின்ன வயசுல, "இத நம்மால மேய்க்க முடியாதுன்னு"- பாட்டி ஆத்துல VCR ல பழைய cinema க்கள் போட்டு விட்டு "பாரு"ன்னு உக்காத்தி வெச்சுடுவா. "அசோக் குமார்" லேர்ந்து "மணாளனே மங்கையின் பாக்கியம்" வரைக்கும் நான் அங்க தான் பாத்தேன். அந்த படங்கள எல்லாம் இப்போ பாக்க பொறுமை இருக்காது. ஆனா- அப்போ நான் அத பாத்த விளைவுதான் இந்த "தமிழ் blog" னு என் அவிப்ராயம்.
கர்நாடக சங்கீதத்த சினிமாவில மிக அருமையா கையாண்ட பல music directors ல முதல் இடம், என்னை பொறுத்த வரைக்கும்- பாபநாசம் சிவனுக்கு தான். அவரோட பாடல்கள், வெள்ளித் திரையிலிருந்து மேல் எழும்பி மேடைக் கட்சேரி களிலும் இடம் பிடித்தாலும், ரிக்ஷா ஓட்டும் ஒரு சாதாரண மனிதனுக்கும் சினிமா பாடல்களின் மூலம் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற பெருமை- இவரையே சாரும். "MKT" ங்கறது எவ்வளவு பெரிய "phenomenon" அப்டீங்கறது, எனக்கு ஜெயகாந்தனோட "இருளில் ஒரு துணை" படிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும். அந்த "icon status" அவருக்கு கிடைத்ததுக்கு பாபநாசம் சிவனோட பாடல்களுக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு வார்த்தை மற்றும் ராகத்தினுடைய குணாதிசயங்கள மனதில் வைத்துக் கொண்டு இசை அமைத்திருக்கர், இவர்- என்பதில்- என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய ப்ரமிப்பு தான். அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் 'சிவகவி' சினிமாவில் வரும் இந்த "வசந்த ருது மன மோகனமே" ங்கற இந்த பாட்டு. வசந்தா-குந்தலவராளி-யதுகுலகாம்போதி-சுருட்டி-ன்னு ராகத்தினுடைய பெயரும் பாட்டிலேயே வரும். ரெண்டு வரி தான் ஒரு ராகத்துக்கு நாலும்- அந்த ராகத்தோட முழு சாரமும் அந்த ரெண்டு வரியில் இருக்கும்!
"மன்மத லீலை வென்றார் உண்டோ"- ங்கற 'ஹரிதாஸ்' சினிமா பாடலா இருக்கட்டும், "பூமியில் மானிடன்"-ங்கற 'அசோக் குமார்' சினிமா பாடலா இருக்கட்டும், இன்னிக்கு வரைக்கும், remixes மூலமா உயிர் பெற்று இருக்குன்னா- அதுக்கு பாபநாசம் சிவனுடைய இசையின் பெருமை தான். சிவாஜி/பானுமதி 'அம்பிகாபதி'க்கு முன்னாடியே 30s ல MKT /MS. சந்தானலட்சுமி நடிச்ச ஒரு 'அம்பிகாபதி' உண்டு. என்னதான் அத Ellis Dungan போன்ற பெயர் பெற்ற Director direct பண்ணினாலும்- இன்னிக்கு 'அம்பிகாபதி'ன்னா அது சிவாஜி/பானுமதி நடித்தது தான் நமக்கு நினைவில் இருக்கு. இதுக்கு, அந்த சினிமா-வின் பாடல்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
G. ராமநாதன் என்ற ஒடனே- "classical music" தான் இவர் போடுவார்-னு ஒரு எண்ணம் நமக்கு வந்துடலாம். அனால்- அந்த காலத்லேயே- western music அ நம்ம சினிமா பாடல்கள்-ல ரொம்ப அழகா இவர் புகுத்திருக்கார். என்னை பொறுத்த வரையில்- இது 'inspiration' and ஒரு 'stroke of innovation'. இப்படிப்பட்ட சில மாற்றங்களினால்தான்- நம் சினிமா இசை-க்கு மீண்டும் ஒரு புது வடிவம் கிடைச்சது. உதாரணமா- 'ஆரவல்லி'ங்கற சினிமா-ல வரும் "சின்ன பெண்ணான போதிலே' ங்கற பாட்டு- 'Que Sera Sera' ங்கற western song ஓட ஒரு 'inspiration'. அதையும் அவர் மிகவும் 'acceptable' ஆ கையாண்டிருப்பார். ஆனா- 'அம்பிகாபதி'யினால் தான்- அவர நாம இன்னி வரைக்கும் நினைவில் வைத்திருக்கோம். அந்த பாடல்களில்- கேட்பவர்களை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி! "மாசிலா நிலவே" பாடலோட- மிகவும் அருமையான 'progress' மாண்டு ராகத்திலேர்ந்து- நடை மாறி 'அன்பே இன்பம்'கு வந்து- பின்பு புன்னாகவராளி-யா ராகம் மாறி 'வானம் எங்கே'ன்னு முடியும். அந்த கால சினிமா பாடல்கள்-ல இது ஒரு பெரிய சாதனை தான். ஆனா எனக்கு 'அம்பிகாபதி'ல ரொம்பவும் பிடித்தமான பாட்டு- 'கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே'-ங்கற பாட்டு தான். அப்படி ஒரு பீம்ப்ளாஸ் ராக பிரயோகம் நான் கேட்டது இல்ல! Sheer creativity! பானுமதி அவர்கள் பாடினதா? GR ஓட இசையா? ன்னு சொல்ல முடியாது! கல்யாணி- predominantly ஒரு உச்ச ஸ்தாயி ராகமா பயன்படுத்தப் பட்டுவந்த அந்த காலத்துல- 'சிந்தனை செய் மனமே' ஒரு அருமையான change. அனாலும் என்னோட list -ல 'துணிந்த பின் மனமே' ங்கற 'தேவதாஸ்' பாட்டுக்கு தான் முதல் இடம்.
GR பத்தி பக்கம் பக்கமா எழுதிட்டு "உத்தம புத்திரன்" பத்தி ஒண்ணுமே சொல்லேன்னா எப்புடி? "இவரா-- carnatic தான் போடுவார்" ங்கற misconception அ மாத்தி, எல்லாரையுமே இன்னி வரைக்கும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல்- "யாரடி நீ மோகினி". சிவாஜி-ய பாக்கறதா, Helen அ பாக்கறதா, பாட்ட கேக்கறதா? ன்னு எல்லாமே A1! ஆனா- அந்த சினிமாவிலேயே best பாட்டு- 'உன் அழகை கன்னியர்கள் கண்டதனாலே' ங்கற பாட்டு தான். பாட்டு, லயம், picturisation ன்னு எல்லாமே அந்த பாட்டுல மிக அருமையா இருக்கும். கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கும் இந்த சினிமாவில் பஞ்சமில்ல. கானடா-ல 'முல்லை மலர் மேலே' லேர்ந்து 'காத்திருப்பான் கமல கண்ணன்' ங்கற அருமையான P. லீலா பாட்டு- பத்மினி-ராகினி dance ஓட ன்னு இந்த சினிமா வில வரும் பாட்டு எல்லாமே- இசைக்கு ஒரு சமர்ப்பணம் தான்.
'மதுரை வீரன்' ல யும் இவரோட அற்புதமான இசை வெளிப்பட்டிருக்கு. அனாலும் 'ஏச்சி பிழைக்கும் தொழிலே' பாட்டிற்கும் 'தீன கருணாகரனே நடராஜா' ங்கற 'திருநீலகண்டர்' ல வர பாபநாசம் சிவனோட பாடலுக்கும் இருக்கும் ஒற்றுமைய பத்தி என்னால எழுதாம இருக்க முடியல. இதுவே கூட சிவன் லேர்ந்து GR கு வர துக்கு ஒரு காரணமா இருக்கலாம்! 'கட்ட பொம்மன்' லேர்ந்து 'இன்பம் போனகம் வெண்ணிலா', 'கப்பலோட்டிய தமிழன்' லேர்ந்து 'காற்று வெளியிடை கண்ணம்மா' ன்னு GR ஓட புகழ அடுக்கிண்டே போகலாம். என்ன பொறுத்த வரைக்கும் GR இன்றைய திரை இசையோட முன்னோடி. GR , அவரோட பாடல்களிலும், அதன் ஆத்மாவிலும்- என்னை போன்ற degree காபி ரசிகர்கள் மனதிலும் என்றும் நிற்கிறார்...