"சற்றே விலகி யிரும், பிள்ளாய்..."  

Posted by Matangi Mawley

நேரான ஒரு கோட்டில் திடீரென்ற கோணலைப் போல ஒரு எதிர்பாரா பயணம். புதிய இடங்கள் தேடிக் கொண்டு, போன இடங்கள் அத்தனையும் என்னவோ கோவில்கள் தான். பயணங்களில் பலன் தேடிப் போகவில்லை. பலன்கள் கிட்டுமோ என்ற எதிர் பார்ப்பும் இல்லை. சென்று வந்தோம். ஒரு சில மறக்க முடியாத நினைவுகளை/நிகழ்வுகளை, கொண்டு வந்தோம்.

விடியற்
காலை 4:30 மணிக்கும் திறந்து விரிந்த ராமேஸ்வரம் கோவில் கதவுகள். ஒலித்த பாடல்கள் என்னவோ 'அருணாச்சலமே போற்றி' என்று தான்! அத்தனை நேர பிரயாணத்திற்குப் பிறகு படுத்துறங்க மட்டும் தான் சம்மதித்தது, மனம். 'அக்னி குண்டத்தில்' குளிக்க வேண்டும்- என்றார்கள். பாவங்கள் எல்லாம் கரைந்து போகுமாம். பாபாத்மாக்களுக்கு 'அக்னி குண்டத்தில்' பஞ்சமில்லை. அவர்கள் அனைவரின் பாபங்கள் தூவப்பட்ட மலர்களும், பூஜையில் உபயோகித்த மற்ற சாமான்களும் நாங்கள் மூழ்கி எழுந்த பின், எங்களின் மீது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஓர் இடம் ஒன்று, இப்போது இல்லை. கடல் கொண்டு சென்ற 'தனுஷ்கோடி' யின் எஞ்சி இருக்கும் நினைவுகளில் பங்கு போட்டுக்கொள்ள சென்றிருந்தோம். மணலும், கடலும் மட்டும் வசிக்கும் அந்த இடத்தில் ஆங்காங்கே ஓரிரு மீனவ கிராமங்கள். ஒரு புறம் வங்காள விரிகுடா. மறுபுறம் இந்து மஹா சமுத்திரம். பல கடற்கரைகளில் அலைகளோடு மல்லு கட்டி நின்று தோற்றுப்போன செருப்புகளின் கடைசி இருப்பிடம், அங்கிருந்த மணல்.

அவசர அவசரமாக சிறகுகளை அடித்துக் கொண்டு கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியை பார்த்து அம்மாவிற்கு வருத்தம். "அது பாட்டுக்கு கடல்-ல போறதே... எங்க rest எடுத்துக்கும்.."? என்று! பறந்து விரிந்த அவனியில் கடலையும், வானத்தையும் தவிர வேறொன்றுமில்லை. மிகுதியை மட்டும் கண்டு வியந்திருந்த என் கண்களுக்கு அந்தச் சிறிய பட்டாம்பூச்சியை காண முடியவில்லை. அம்மாவின் பார்வை- என் மிகுதியின் நிறைவில் முடிவு கண்டிருந்த மனதிற்கு மீண்டும் ஒரு துவக்கத்தைக் காட்டியது!

வைதீஸ்வரன் கோவில். ஸ்தல வ்ருக்ஷமான வேப்பமர நிழலில் அநேக மந்திகள். பூஜையில் படைக்கப்பட்ட பழுத்த வாழைப்பழங்களினால் அழகாக ஓடிக்கொண்டுருந்தது அந்த கொழுத்த மந்திகளின் சுக ஜீவனம். புறாக்களின் சிறகுகளின் பட படப்பிலும், வவ்வால்களின் மிகுதி உணர்த்திய அந்த கந்தத்திலும், மந்திகளின் குறும்பிலும், தெப்ப குளப் படிக்கரை பாசியிலும் உயிர் பெற்று இருந்தது அக்கோவிலின் பழமை வாய்ந்த அழகு. அம்பாள் சந்நிதி குருக்களின் அட்டகாசமான பஞ்சகச்சம்- 'திருவிளையாடல்' படத்தின், 'தருமி' கதையில்- சிவாஜி-க்கு கட்டப் பட்டிருந்த அதே பாணியில்!

சீர்காழியில், ஒரு பாட்டி. சிரித்த முகம், சிறிய உருவம், நெற்றி நிறைய குங்குமம். 'மீனுக்கு பொறி போடுங்க...', என்று அவள் சொல்ல- அதை தட்டிக் கழிக்க மனமில்லை. எத்தனை மீன்கள்! காலை முதல், கோவில் பிரகாரங்களை சுற்றிக்கொண்டிருந்த கால்களில், மேலும் நடக்க வலு இல்லை. 'நல்லா கால வீசி போட்டு நடங்க...' என்று அவள் குரல் மட்டும், அருகில் கேட்டது! ஆடுகள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் குழந்தைகள்- கோவில் வழியாக போவதால் ஒரு கையில் புத்தகப் பையும், மற்றொரு கையில் செருப்புகளும் சுமந்து கொண்டு ஆடுகளுடனும், மற்ற தோழர்களுடனும் விளையாடிக்கொண்டே போன காட்சிகள். சட்டநாதர் கடவுளுக்கு இரும்புத்திரை. பெருச்சாளிகள் தொல்லை, கவுளைச் அச்சிறையில் தள்ளியதாம்! வெளிச்சமும் இல்லை. "பாவம் செஞ்சவா கண்ணுக்கு சுவாமி தெரியமாட்டார்", என்று கிண்டல் அடிக்க- கண்ணுக்குத் தெரியாத அந்த கடவுளைக் கண்டதாகச் சொல்லித் திரிந்தோம், பதிலுக்கு.

நந்தனார் பார்வை மறைத்த நந்தியை நகரச் செய்தாராம், ஈசன். விலகி இருக்கும் நந்திக்கு புகழ் கிடைத்தது, திருப்புங்கூரில். பிரம்மாண்டமான நந்தியின் காதுகளை அலங்கரித்திருந்தது, வெண்கல மணி. ப்ரதொஷநாதரும் மின் வெட்டிற்கு பலியாகியிருந்தார். இருட்டில் புதைந்திருந்த அவரை ஓரளவு கண்ணுக்கு காட்டியது, சுடர் விட்ட கற்பூரம். கோவில் வாசலில், சுந்தர ராமசாமி சொல்வது போல- 'நிக்கரை பஹிஷ்கரித்து' விட்டு அபீட் எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்கள்.

'
மானசரோவர்' இல்லத்தில், குச்சி ஐஸ். ஊஞ்சலில் பொழுதுகள் கழித்து, திண்ணையின் குளுரில் உறக்கம். முற்றத்துக் கம்பிகளின் நடுவே ஒளி தந்து கொண்டிருந்த சூரியக் கிரணங்களின் ஒளி, அவ்வபோது அந்த ஓட்டு வீட்டின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த ஹரிக்கன் லைட் கண்ணாடியில் மோதி, வெளிவந்த ரஸ்மிகள். தோட்டத்தில் காய்த்துக் குலுங்கிய பலா, செவ்விளநீர் பறித்துக் கொடுத்த ஒருவர்- மரம் ஒன்றிற்கு ரூபாய் 20. முல்லை, மல்லி, செம்பருத்தி, அரளி- இன்னும் எத்தனை எத்தனையோ பல வண்ண மலர்கள். ஊசி மிளகாய் இலையில் மறைந்து நிற்க- காய்த்துக் குலுங்கிய எலுமிச்சையின் பளுவில் வளைந்த கிளைகள். வெந்நீர் தவலையை படம் பிடித்த எனக்குப் ப்ராந்தென்று கருதிய உறவுகளும் அங்குண்டு. இப்படிக் கோவில்களில் கழிந்தது 'சிவராத்திரி' பகல். அன்று இரவு கேபிள் டி-வி யில் 'மன்மதன் அம்பு' சினிமா.

'பாட்டி சமையல்'
ருசியின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்த இந்த சில நாட்களுக்கு விடை கொடுக்கும் பொழுதும் நெருங்கியது. ரயில் வண்டியில் பயணத்தின் போது பின்னே விட்டுச் செல்லும் இடங்கள் கண்ணில் தெரியும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தது என் கண்கள். பழைய நினைவுகளின் தாக்கத்தினால் சாப்பிட்ட ஒற்றை குச்சி ஐஸ்-இன் பலன், தண்ணீரும் தொண்டை வழியே செல்லாது, வருத்தியது.

பத்து நாட்களாக நகரம் காணாத கண்களுக்கு, நகரத்தை உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது. பத்து நாட்களில் ஒரு கிலோ இடை குறைந்திருந்தான், துப்பாண்டி!

This entry was posted on 06 March, 2011 at Sunday, March 06, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

34 comments

அழகு தமிழில் அருமையான கட்டுரை

6 March 2011 at 20:15

ஏற்கனவே நான் வலம் வந்த கோயில் ட்ரிப் மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளால் போய் வந்தேன். நன்றி. ;-)
ஒரு முக்கியமான கேள்வி.... துப்பாண்டி இளைச்சுட்டானா? ;-)

6 March 2011 at 22:04

பயணங்கள் முடிவதில்லை மாதங்கி.. பயணம் முடித்த பின்னரும், நினைவுகளில் பயணம்..

//வண்ணத்துப்பூச்சியை பார்த்து அம்மாவிற்கு வருத்தம். "அது பாட்டுக்கு கடல்-ல போறதே... எங்க rest எடுத்துக்கும்.."? //

அம்மாங்கிரவ உங்களுக்கு மட்டும்தான் அம்மான்னு நினச்சிடீங்களா.. வண்ணத்துப்பூச்சிக்கும் அவள் தானே அம்மா..
once a mother,always a mother..

6 March 2011 at 23:23

படங்களும் பயணக்கட்டுரையும் மிக அருமை
ஆனாலும் ஒரு கவிதையைப் போல
மிகச் சுருக்கமாய் சொல்லிபோக முயன்ற
அவசரம் தெரிகிறது.கொஞ்சம் விரிவாக
எழுதிப்போயிருக்கலாமோ என்ற எண்ணத்தை
தவிர்க்க இயலவில்லை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

7 March 2011 at 05:42

ரமணி சொன்ன மாதிரி பிட் பிட்டா இங்க இருந்து திடீர்னு அங்க அங்க இருந்து திடீர்னு குடில் அப்புறம் அங்க இருந்து ரயில்ன்னு இருக்கு,.கொஞ்சம் பெருசா எழுதி இருக்கலாமோ

7 March 2011 at 06:27

nice write up of the tour

7 March 2011 at 09:19

கூடவே பயணித்த சுகம் கிடைத்தது. சுவையான விவரிப்பு. உண்மையில் கடலைநோக்கிய வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு அம்மாவைப்போலவே மனதை வருடியது. ஏனெனில் திசை திரும்பாமல் சென்றால் அலையின் ஒரு துளி கூட அதனை வீழ்த்திவிடும். இப்படித்தான் மனித வாழ்க்கையும் சிலசமயம் அமைந்துவிடுகிறது. நன்றாக இருக்கிறது பதிவு.

7 March 2011 at 13:47

பயண நினைவுகள் எப்படியெல்லாம் விட்டு விட்டு வருமோ அதேபோல் வர்ணனைகளும். மாதங்கியின் எழுத்து நடையில் கொஞசம் மாற்றம் காண்கிறேன், FOR THE BETTER. வாழ்த்துக்கள்.

7 March 2011 at 15:06

முன்பு எனக்கொரு நண்பர்.. அருமையாய் ப்ளூட் வாசிப்பார்.. நான் போய் வாசிக்கக் கேட்டால்.. ஒரு பிட் - ஏதேனும் ஒரு ராகம்- சுனாதமாய் காட்டிவிட்டு.. படக்கென்று அடுத்த ராகம் தாவுவார்.. இப்படி அஞ்சு நிமிஷத்தில் ஏழெட்டு பிட்டுகள்.. இந்தப் பதிவிலும் அப்படி உணர்ந்தேன்.. எல்லாம் சுகம். ஆனால் சாம்பிள் டேஸ்ட் காட்டின மாதிரி..

7 March 2011 at 18:11

ராமேஸ்வரத்தில் காலையிலும் மாலையிலும் கடலின் ஆழம் கண்டீர்களா.அப்துல் கலாமின் உறவினரின் கடைக்கு சென்றீர்களா. சீர்காழி சென்றவர் சித்ம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றீர்களா.கடவுளின் உருவ தரிசனம் கிடைக்காதபோது, என் நினைவு வந்ததா.இப்படி நிறைய கேள்விகள் என் மனசில்.

7 March 2011 at 18:51

ஹா! க்ளாஸ் மாதங்கி.

எனக்கு இது மாண்டேஜ் ஷாட்ஸ் போலத் தெரிந்தது.அற்புதமான எழுத்தும் சிந்தனையும்.

//நேரான ஒரு கோட்டில் திடீரென்ற கோணலைப் போல ஒரு எதிர்பாரா பயணம்//

//அலைகளோடு மல்லு கட்டி நின்று தோற்றுப்போன செருப்புகளின் கடைசி இருப்பிடம், அங்கிருந்த மணல்.//

//அம்மாவின் பார்வை- என் மிகுதியின் நிறைவில் முடிவு கண்டிருந்த மனதிற்கு மீண்டும் ஒரு துவக்கத்தைக் காட்டியது!//

//புறாக்களின் சிறகுகளின் பட படப்பிலும், வவ்வால்களின் மிகுதி உணர்த்திய அந்த கந்தத்திலும், ந்திகளின் குறும்பிலும், தெப்ப குளப் படிக்கரை பாசியிலும் உயிர் பெற்று இருந்தது அக்கோவிலின் பழமை வாய்ந்த அழகு//

//பத்து நாட்களாக நகரம் காணாத கண்களுக்கு, நகரத்தை உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது//

இந்த வரிகளின் சௌந்தர்யம் என்னை நகரவிடாது செய்தது.

அடிக்கடி ஊர் சுற்றுங்கள் மாதங்கி.

7 March 2011 at 18:58
This comment has been removed by the author.
8 March 2011 at 01:54

அழகு தமிழில் அகம் மகிழ்ந்து நின்றேன். பயணத்தில் நீங்கள் சுவாசித்ததை எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பொருள் கொள்ளும் படியாய் வருவதால் திரும்ப திரும்ப வாசித்தேன்! பிறகுதான் உணர்ந்தேன்!.....தேன்!...:) வாழ்த்துக்கள் மாதங்கி!

8 March 2011 at 14:10

போடோக்கள் ஒவ்வொன்றும் - zoom பண்ணிப்பார்த்தால் --மிகவும் அருமை ; குறிப்பாக ஸ்தல வ்ருக்ஷமும் , திருப்புங்கூர் நந்தியும் , speaking photographs ..
.இரண்டு சமுத்ரங்களும் கூடுவதை , பூமியின் விளிம்பில் நின்று பார்க்கும் அனுபவம் - லா. ச. ரா. கூறுவது போல ஒரு மகத்தான தருணம் -- மறக்கமுடியாதது ..அதை நீ படம் பிடித்து நிரந்தரமாக்கியது பெருமைக்குரியது ..
ஓட்டுவீட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும் அரிக்கன் விளக்குகளும் , வீட்டின் பின்புறத்து முற்றத்தில் அணைந்திருக்கும் வேந்நீரடுப்பும் கிராமத்து மண் வாசனையை பரப்பிக்கொண்டிருக்கின்றன...
ஸ்ரீ G .M .B ..கூறியிருப்பது இந்த பதிவில் உன் எழுத்து நடை நன்றாகவே மிளிர்கின்றது ...
இந்த பகிர்வுக்காக உனக்கு என் பிரத்யேக வாழ்த்துக்கள் ...

மாலி.

8 March 2011 at 21:43

பத்து நாள் பயண அனுபவங்கள் மிகவும் அருமை! சிதம்பரம்,சீர்காழி,வைதீஸ்வரன் கோயில் போனதுண்டு. ஆனால் இராமேஸ்வரம் பார்த்ததில்லை.

நன்றி.

10 March 2011 at 20:03

//அது பாட்டுக்கு கடல்-ல போறதே... எங்க rest எடுத்துக்கும்.."//
I guess that what they call "Mother's Nature..."

Lovely round-up Matangi... Made us feel we travelled with you... expressive as-usual... Thanks..:)

11 March 2011 at 20:43

'கோவில் ப‌ய‌ணத்தில்" சாமியைப் ப‌ற்றி ம‌ட்டுமே சொல்லி விட்டு முடியும் ப‌திவாய் இல்லாம‌ல்
வாணையும் ம‌ண்ணையும், ம‌ல‌ர்க‌ளையும், ம‌ந்தியையும், ப‌ழ‌ங்க‌ளையும், வ‌ண்ண‌த்துப்பூச்சியையும், மீனையும், பொரிவிற்கும் குங்கும‌ப் பொட்ட‌ம்பாளையும்,
ஆடு மேய்க்க‌வும், ப‌ள்ளிக்கும் செல்லும் சிறார்க‌ளுமாய் நிறைந்திதிருக்கிற‌து. ப‌டைப்பாளியின் குச்சிஐய் அனுப‌வ‌ம் க‌ர‌க‌ர‌ப்பான‌ சில். தாயின் நுண்பார்வை மூல‌மே, க‌ட‌வுளை ப‌திவியில் க‌ட்டி வ‌ந்து விட்டீர்க‌ள்.

17 March 2011 at 16:19

@ parvaiyalan...

thanks!

20 March 2011 at 15:25

@ rvs...

avanukku 1 kg koranjirunthuthu.. ippo paravaa illa... grill kulla nuzhaiya mudiyarathilla... naanga thaan darwaan aattam kathava thuranthu vittundurukkom...

20 March 2011 at 15:26

@ mohanji...

thanks! :)

20 March 2011 at 15:26

@ ramani...

'short-trip' sir. athaan short-aa irunthathu... :) thanks!

20 March 2011 at 15:28

@ LK...

'short-trip' sir. athaan short-aa irunthathu... :) thanks!

20 March 2011 at 15:28

@ kalyan...

thanks!

20 March 2011 at 15:28

@ harani...

thanks a ton, sir! :)

20 March 2011 at 15:29

@ GMB...

thanks, sir! :D

20 March 2011 at 15:29

@ rishaban...

haa..ha! :D sometimes chumma oru kodi kaatrathula oru thani rasana thaan...

thanks!

20 March 2011 at 15:30

@ GMB...

'short-trip' thaan sir... niraiya idathtukku poga mudiyala... Kalam-a nera paaththirukken; avar uravinar kadaikku yen poganum? chidambaram- munnaadi ponathundu...

20 March 2011 at 15:32

@ sundarji...

haa ha! :D thanks a ton!

20 March 2011 at 15:33

@ sundarji...

haa ha! :D thanks a ton!

20 March 2011 at 15:33

@ thakkudu...

thanks a ton, boss! :)

20 March 2011 at 15:33

@ appa...

hey thanks pa! etho manasu vanthu ennayum, ammavaiyum itha pola engeyo koottindu ponathukku thanks! :P

20 March 2011 at 15:35

@ ganesan...

thanks! :D

20 March 2011 at 15:35

@ appaavi...

thanks! :)

20 March 2011 at 15:36

@ vasan...

WOW! :D thanks a ton, sir!

20 March 2011 at 15:36

Post a Comment