Bushy க்ரஹப்ரவேசம் : EPISODE 8  

Posted by Matangi Mawley


இப்போதான் நடந்தாப்ல இருக்கு. பாத்தா வருஷம் ஓடிடுத்து! ஆச்சு- மூணு வயசாயாச்சு Bushy-க்கு! துப்பாண்டி தான் எங்காத்துக்கு முதல்ல வந்துது. Bushy ய அப்றமா அது தான் அழச்சுண்டு வந்துது. ரெண்டு ஈத்துல- நாலு குட்டியும் போட்டுடுத்து பாவம் Bushy. 2012 April மாசம் துப்பாண்டி எங்கேயோ ஓடி போனது தான். அப்புறம் ஆளையே காணும்... Bushy க்கு தான் ஒரே கவலை. ஆனா துப்பாண்டி போனப்றம்- எங்காத்தையே அதோடதாக்கிண்டுடுத்து இந்த Bushy. அதோட ஒயிலென்ன... ஒய்யாரமென்ன... இந்த புது ஆத்துல- தெருல இருக்கற அரை ticket எல்லாம் எங்க Bushy யோட fans! ஆனா இந்த புது ஆத்துக்கு  கொண்டுவர நாங்க பட்ட பாடிருக்கே....

போன 2012 ஜூன் மாசம் வீட மாத்தினோம். Bushy க்காகவே flats வேண்டாம்-ன்னு தனி வீடா பாத்திருந்தோம். வீட மாத்தணும்னு பேசிண்டு இருக்கும்போதே Bushy ய என்ன பண்ணலாம் னு  தான் எங்க எல்லாருக்குமே யோசனையா போச்சு. Bushy ய நாம எங்க போறோமோ அங்க அழைச்சிண்டு போணும் னு- இது சொல்லிடுத்து. Bushy என்ன நாயா? பூனையலாம் அவ்வளோ easy யா இடத்த மாத்த வைக்க முடியுமா? அது எந்த இடத்துல பழகித்தோ அங்கேயே தான் இருக்கும். சொன்னா கேக்கவே மாட்டேங்கறது.

  
ஆனா பாவம்-- Bushy க்கு இப்போ துணைக்கு துப்பாண்டியும் இல்ல. தெரு-ல
விட்டுட்டு போனா சாப்பாட்டுக்கு எத்தன கஷ்ட படுமோ! அதுவும் இந்த sterilization operation பண்ணினதுலேர்ந்து அதோட 'புளியங்கொட்டை' cat feed அ தவிர வேற எதையுமே அது சாப்ட்ரதில்லை வேற. அதுவும் இல்லாம அந்த area தெரு பூனைகளெல்லாம் வேற அத வந்து சீண்டும். அதையும் கூட்டிண்டு புது ஆத்துக்கு போகலாம்ன்னு decide பண்ணியாச்சு.

ஆனா- பொட்டி படுக்கையெல்லாம் மூட்ட கட்டும் போது, Bushy க்கு ஒரே பயம். எல்லா அட்டை டப்பாவையும் பாக்கறது. பீரோக்குள்ள லாம் போய் என்னத்தையோ தேடறது. ரொம்ப uncomfortable/tensed ஆ feel பண்ண ஆரம்பிச்சுடுத்து. இது உடனே internet ல - "Behavioral changes in  cats" ன்னு லாம் தேடி பாத்து- அதுக்கு என்ன பண்ணனும்-னு லாம் பாத்துது. ஒண்ணும் பலிக்கல. நாங்க வீட்ட விட்டு களம்பும்போது Bushy ய  ஒரு பை-ல போட்டு எடுத்துண்டு போலாம்னு plan பண்ணினோம். கிளம்பற நேரத்துக்கு ஆளையே காணும். கூப்படறோம், கூப்படறோம்- கிட்டயே வர மாட்டேன்னுடுத்து. ஒரு மூலைலேர்ந்து எங்கள பாத்துண்டே இருந்துது. "என்ன மட்டும் இங்க விட்டுட்டு நீங்கள்லாம் போறேளே... என்ன யார் பாத்துப்பா"? ன்னு கேக்கறாப்ல இருந்துது, அது பார்வை... ஒரு பயம் அது முகத்துல. எங்களுக்கா- அழுகையா வருது! அத எப்படி எங்க கிட்ட வர வைக்கறதுன்னே தெரியல. அக்கம் பக்கத்துக் காராள்லாம் அத அப்பறமா வந்து கூட்டிண்டு போங்கோன்னா... ஒரு டப்பால அதோட சாப்பாட கொஞ்சம் போட்டு, பக்கத்தாத்து மாமி கிட்ட குடுத்து அது கேக்கும் பொது கொஞ்சம் போட சொல்லிட்டு- நாங்க கிளம்பினோம்.


புது ஆத்துக்கு வந்தப்றம்- கொஞ்சம் சாமானெல்லாம் அடுக்கி வச்சிட்டு Bushy ய கூட்டிண்டு வரலாம்ன்னு plan பண்ணினோம். ஏன்னா அது இந்த suitcase, box எல்லாம் பாத்து தான் பயப்பட்டுது. மறுபடியும் அதே போல சூழல் ல அது
எப்படி feel பண்ணுமோ! நாங்க shift பண்ணி ஒரு வாரம் கழிச்சு இவரும், இதுவுமா  பழையாத்துக்கு போனா. Bushy ய கூப்டு பாத்தாளாம். அது வந்துதாம். சாப்டுதாம். இவா தடவி குடுத்தாளாம். அத தூக்கி பைக்குள்ள போடப்போரான்ன ஒடனே எடுத்தாங்கட்டைன்னு ஓட்டமா ஓடி பொயிடுத்தாம்! பக்கத்தாத்து மதில் மேல உக்காந்துண்டு பாத்துண்டே இருந்துதாம். எப்போதுமே அது தொடப்பத்த எடுத்து பெருக்கினா வரும். அந்த தொடப்பத்தால அத தடவி விடச்சொல்லும். இது அங்க இருந்த ஒரு தொடப்பத்த எடுத்து Bushy கிட்ட காட்டித்தாம். மதில் மேலேயே நின்னுண்டு "வெளக்கமாறு பூஜை" எல்லாம் வாங்கிண்டுதாம். ஆனா கூட வர மாட்டேன்னுடுத்தாம்.

கிட்டத் திட்ட ஒரு 42 நாள் ஆகியிருக்கும். 4-5 தடவ மாத்தி மாத்தி போய் அத அழைச்சுண்டு வர try பண்ணிப் பாத்தாச்சு. வர மாட்டேன்-ன்னு வீம்பு பண்ணினா நாம என்ன பண்ண முடியும்? பக்கத்தாத்து மாமியும் எத்தன நாளைக்கு தான் சாப்பாடு போடுவா? பசி ல காஞ்சு போய், கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு போய், சோர்ந்து போய் இருந்துதாம். அன்னிக்கு இவா ரெண்டு பேரும் போய் அத கூப்ட போது அதுக்கு நடக்க கூட த்ராணியில்லையாம்! மெதுவா வந்துதாம். ஆகாரம் போட்டாளாம். சாப்டுதாம். எத்தன நாளா பட்டினியோ-பாவம்... சாப்டு முடிச்ச கையோட அத தூக்கி bag ல போட்டாளாம். கைய தள்ளி விட்டுட்டு ஓட கூட தெம்பில்லை அதுக்கு. "சரி. இவா கூடையே போயிடலாம்" ன்னு அதுக்கே எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ...

புது ஆத்துக்கு கூட்டிண்டு வந்தாச்சு. இது, முனாடியே- பூனைய இடம் மாத்தினா என்னல்லாம் precautions எடுத்துக்கணும்னு internet ல படிச்சு வெச்சிருந்துது. 10-15 நாளைக்கு அத வெளீலையெ விடப்டாது. ஆத்துக்குள்ளையே வெச்சிருக்கணும். Bathroom உம் "litter training" பண்ணி
ஆத்துக்குள்ளையே போக வைக்கணும் னு போட்டுருந்துதாம்-net ல. Bushy ய கொண்டு வந்து ஒரு room ல வச்சாச்சு. பைக்குள்ளேர்ந்து மெதுவ்வ்..வா வெளீல வந்துது. எங்கள எல்லாம் அடையாளம் கண்டுண்டுது. அந்த பயம் போகல இன்னும்! Room அ எல்லாம் நோட்டம் விட்டுது. எத்தன நேரம் ஒரே இடத்துல அடைச்சு வைக்கறது- பாவம்! Room கதவ திறந்த ஒடனே மெதுவா வீடு முழுக்க எல்லா இடத்துக்கும் போய் மோந்து பாத்துண்டுது. நன்னா சாப்டுது. எத்தன நாளா பசியோ- பாவம்... சமயகட்டுல cylinder க்கு பின்னாடி ஒரு இடுக்குல போய் படுத்துண்டுடுத்து, சோர்ந்து போய்!

அன்னிக்கு ராத்திரி- அதுக்கு பாத்ரூம் போக எல்லாம் ஏற்பாடெல்லாம் பண்ணினா இவா ரெண்டு பெரும். அதுக்கு பிடிக்கல. சரி- வெளீல கொண்டு போய் விட்டு பாக்கலாம்-ன்னு வெளீல கூட்டிண்டு போனா- அவ்வளவுதான். எங்க போச்சுன்னே தெரியல! Bushy...Bushy ன்னு கூப்டு பாக்கறா. தெரு ல இருக்கரவாள்லாம் வெளீல வந்து வெடிக்க பாக்கறா... இத கூட்டிண்டு வந்திருக்கக் கூடாதோ. At least அதுவான்னா அது பழகின இடம். புது இடத்துல இது எப்புடி இருக்குமோன்னுலாம் ஒரே கவலை. அடுத்த நாள் முழுக்க ஆளையே காணும்! அப்பரமா இவர் மொட்ட மாடிக்கு போய் பாத்துட்டு- parapet ல தான் படுத்துண்டு இருக்குன்னு சொன்னப்ரம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துது. அன்னிக்கு சாயங்காலம் வந்து நன்னா சாப்டுது. ஒரு வாரமாச்சு- settle ஆக.

இதுக்கு நடுவுல- "ஒரு புது girl பூனை வந்திருக்கு"ங்கற விஷயம் இந்த area ல இருக்கற மத்த பூனைகளுக்கெல்லாம் தெரிஞ்சுடுத்து. இது இங்க வந்த மூணாவது நாள்- எங்காத்து வராண்டாவுல ரெண்டு மஸ்தான் பூனைகளுக்குள்ள ஒரே சண்டை. அக்கம் பக்கத்ல இருக்கரவாள் -லாம் வேற- புதுசா வந்திருக்கரவா வீட்டு பூனை தான் சத்தம் போடறதுன்னு complaint பண்ண ஆரம்பிச்சுட்டா. Bushy வாயே தெறக்கல- ன்னு அவாளுக்கெல்லாம்
சொல்லறதுக்குள்ள போறும்-போறும் ன்னு ஆயுடுத்து!


ஒரு "இஞ்சி color" பூனை ஒண்ணுத்த Bushy friend புடிச்சுண்டுது. அது இது கூட இருந்தா இந்த மஸ்தான் பூனைகளெல்லாம் வராதுன்னு நினைச்சுதோ என்னவோ... எப்படியோ! ஒரு வழியா பழைய Bushy யா மாறிடுத்து... ஆனா- இப்பயும் அதோட குட்டிகள video எடுத்தத போட்டு பாக்கும் போது- அதுகள் கத்தர சத்தம் கேட்டா தேடிண்டு ஓடி வரும்... சுத்தி-முத்தி பாக்கும்... பழைய வீட்டையும், துப்பாண்டியையும், அதோட குட்டிகளையும் நினைச்சுக்குமோ என்னவோ...  


The Story so far... Episodes: 1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7  (Click on the numbers to read the post)

DAMINI  

Posted by Matangi Mawley

A meeting was organised, to discuss "Women's Rights".


The netas attended the meeting but few had anything to say. Suddenly, one of them thought of something "intelligent" to say and came up with a plan to cover up the "dented and painted" women with "over-coats".

"Let's forbid them to speak with the boys".

"Let's ban skirts for school girls".

"Let's stop women from going out on the streets after 6 pm"- another said.

"Let's enact a 'Nirbhaya Act'...", one said.

“Clever plan”! A few shouted.

“Wait-wait”, said a spiritual guru. “We need to teach them Indian culture”, he said.

The politicians had not thought of that earlier. So they invited the Swami to their meeting.

“We need to ask the girls to address the rapists as ‘brothers’..” said the Swami. “She needs to fall at his feet and plead for mercy”, he said. “She must chant Saraswathi mantra”, he said.

Politicians were mesmerized with this Swamiji. They lauded him.

“A woman is bound by contract to serve her husband” said a neta.

“A woman”, another said “shouldn’t talk back at men. Shouldn’t stay out at night or wear clothes- that are inappropriate”.

As they spoke, reports are in, that say: Girls/Women raped. Aged: 2 yrs old, 5 yrs old, 6 yrs old, 10 yrs old, 15 yrs old, 16 yrs old, 23 yrs old, 29 yrs old, 33 yrs old, 40 yrs old, 45 yrs old....70 yrs old, 75 yrs old...

Damini: As she breathed her last, a nation lay exposed.

ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  

Posted by Matangi Mawley



அப்பா: ச! இனிப்பெல்லாம் ஒரே எறும்பு...

அம்மா: பாவம்... பசி அதுகளுக்கு...

"தலாஷ்"  

Posted by Matangi Mawley


"தலாஷ்" சினிமா பார்க்க போயிருந்தோம். அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் அது "பேய்"/"பிசாசு" போன்ற விஷயங்கள் பற்றிய படமாம். இருந்தால் என்ன? இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கு "பேய்","பிசாசு" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா? மந்திர மாந்த்ரீகங்கள் நிறைந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ- அவள் சொல்லும்போதே காட்சிகள் நம் மனக் கண் முன் உண்மை நிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கேட்பவர்களை பிரமிக்க வைக்கும், பாட்டியின் கதை சொல்லும் விதம்!

"தலாஷ்"- ஆனால் "பேய் கதை" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் "தலாஷ்" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.

இந்த பதிவை "திரை விமர்சனம்" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், "தலாஷ்" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- "குறுக்குப் பாதை" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும்! கடேசியில் "ஆனதாண்டாபுரம் ஐயங்கார்" போல ஒரு மாந்த்ரீகர் அந்த "குறுக்கு வழியின்" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!

அன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். "பேய் மீது நம்பிக்கை உண்டா"? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் "கடவுள்" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.

இன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். "நேரப் பற்றாக்குறை" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், "சந்திரலேகா", "ஹரிதாஸ்" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும்? இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை "வாழ்கை" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...

Pt. RAVI SHANKAR...  

Posted by Matangi Mawley


Solidaire CAT 1000 TV ல், பல நாட்கள் காலை Doordharshan ல் நான் கேட்ட முதல் இசை- இவரது "Bhaje Sargam" என்ற Desh ராகத்தின் துவக்கம் தான்... ஹிந்துஸ்தானி இசை இன்னது என்று எனக்கு இவரின் இசையைத் தான் அடையாளமாகக் காண்பிக்கப் பட்டது. 


Pt . Ravi Shankar may not be with us any more. But his music would stay forever... 

Bhaje Sargam... Click Here

கார்திகை 2012  

Posted by Matangi Mawley



கார்திகை திருநாள் வாழ்த்துக்கள்!


KASAB HANGED  

Posted by Matangi Mawley

Kasab hanged: Kudos to the officials for carrying out the execution quietly, thank you President Pranab for being decisive and thank you India- finally the victims get some kind of justice!

Remembering my beloved maternal uncle, Shri. P.K. Gopalakrishnan, who lost his life on the fateful day- 26/11: Click Here

OMG : OH MY GOD  

Posted by Matangi Mawley


இன்று மதியம் Colors channel ல் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.

தீபாவளி வந்தாச்சு!  

Posted by Matangi Mawley


Photo ல இருப்பது தேஜஸ்வினி, நம்ம friend. எங்க தெரு-ல தீபாவளி 2 வாரமா நடந்துண்டே இருக்கு. எக்கச்சக்க அரை டிக்கெட்ஸ். இந்த தடவ எங்க வீட்டுல வெடி கொஞ்சம் கம்மி தான். பாட்டி இருந்த போது- ஒரு வீட்டுல மொத்தம் 20 பேர் இருப்பா கிட்ட தட்ட. Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண  வெச்சு விடுவா. 1 வாரம் 10 நாளைக்கு முன்னாடியே சமையல்காராள்லாம் ஜாங்கிரி, மைசூர் பாக், பாதுஷா, mixture எல்லாம் பாட்டி ஆத்து பின் புறத்துல செய்ய ஆரம்பிச்சுடுவா. நாங்க எல்லாரும் ஊருக்கு கெளம்பும் போது- 2-3 tin நிறையா தீபாவளி தின்பண்டம் கொடுத்தனுப்புவா!
Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....

Kaleidoscope -இன் ஊடே  

Posted by Matangi Mawley

ஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும் உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத் தெரிந்திருக்கக் கூடுமா? நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா? அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? என் பதத்தை நான் அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம் தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும் வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு திட்டம் இருக்கிறது.

சில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து  வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.

ஆனால் இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான் அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும் அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது?  எண்ணங்களையும்  kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள்! அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி? கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின் நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.

கோணல்-நேர் என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ! ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா? எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே? எப்படித் தாக்கம் ஏற்படும்? Science Fiction கதையைப் போல- ஒரு  எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்" போல, தோன்றிவிட்டால்? மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால்? யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்!

புத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து கொண்டிருக்கிறது! எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது! அவனுக்கும் தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...?