சாரல்  

Posted by Matangi Mawley

நாற்காலியை தரையோடு தேய்த்து நகர்த்திய போது- "க்ரீச்" என்ற சத்தம். அது இல்லாமல் கூட- அந்த சத்தம்- அது இல்லாமல் கூட நகர்த்தி இருக்கலாம். நகர்த்தி இருக்க வேண்டும். நாம் இந்த சத்தத்தை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. அரை வினாடி- அந்த சத்தத்தின்  வாழ்க்கை. ஆனால் எத்தனை  ஜென்மங்கள் அதற்க்கு! 

ஜன்னலின் சிறு விரிசல்களின் ஊடே நுழைந்து  முகத்தின் மீது தெளிக்கும் சாரல். ஜன்னல்களை திறந்து வைத்திருக்கத் தோன்றும் சில தருணங்கள். மழையை- மிகுதியாக நினைக்கின்ற சில நேரங்களில், சாரல் ஒரு குட்டி மழையாக மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மிகுதியின் மீது சில சமயம் - அதை "வெறுப்பு" என்று சொல்லலாமா? "வெறுப்பை" விட சிறிதளவு குறைவான - உணர்வு. "வெறுப்பும்" "மிகை"யை குறிக்கிறது. 

எண்ணங்களும் கூட- சாரல் போதும் என்ற இடத்தில் பொழியும் மழை போலத்தான். பல வண்ணங்களின் சிறு துளிகள்- கண்களின் முன்   விரைந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு துளியைக் கூட நிதானமாக   ரசிக்க முடிவதில்லை. "ஜிகு-ஜிகு" வென மின்னிக்கொண்டிருக்கும் காகிதத் தோரணங்கள். காற்றில் அசைந்து கொண்டிருக்கையில் பல வண்ண ஒளிக் கீற்றுகள் அதனிலிருந்து. ஒரு மாடு- அதன் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தம். ஒரு குருவி அதன் உறவுகளை அழைத்துக்கொண்டிருந்தது. 

கண்களை மூடவும் முடியவில்லை. எண்ணங்களுக்கு கண்கள் தேவையில்லையே! வானமும், மேகமும்- போர் வதைத்த நாடுகளின் நிழல் பட காட்சிகளும், கோவில் வாசலில் துலைந்து போன புதுச் செருப்பும், எழுத நினைத்து மறந்து போன எழுத்துக்களும், பாத்திரங்களில் பெயர் பதிப்பதை பார்த்த அனுபவமும் என- மூடிய கண்களினுள் எத்தனை காட்சிகள்!

மிகுதியை குறைத்துக் கொள்ளலாமே. எண்ணங்களின் மிகுதியை கட்டுப் படுத்த பல வழிகள் இருக்கின்றனவாம். "த்யானம்". ஏதேனும் ஒரு செயலில் "ஈடுபடுத்தி"க் கொள்ளலாம். நண்பர்கள் வட்டத்தை கூட்டிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்புத் தானே!? இப்படி சில வழிகளும் மிகுதியாகவே இருக்கின்றன. அவைகளும் எண்ணங்களில் பங்கு கேட்டு போட்டி போட்டுக் கொள்கின்றன. சரி. எல்லா எண்ணங்களுக்கும் "சம உரிமை" உண்டு இந்த நினைவோட்டத்தில்- என்று ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் போட்டு விட்டு எண்ணங்களின் மிகுதியை எண்ணிப்பார்தே குறைத்து விடலாம் என்று  எண்ணலானேன்.

குருவியின் அழைப்பும்- மாட்டின்  சலங்கை ஒலியும் ஒன்றாகிப் போனது. ஒரு பெரிய அரச மரம் குறைந்து கொண்டே வந்து- ஒரு செடியாக மாறியது. வண்ணச் சிதறல்கள்- தன் சுய உருவெடுத்து முதலில் வண்ணங்களாகவும்- பிண்பு அந்த வண்ணன்களுக்குச் சொந்தமான உருவங்களாகவும் மாறத் துவங்கின. வேகமாக சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம், மெதுவாக சுற்றி- நின்ற பிறகும் லேசாக ஆடுவது போல எண்ணங்களின் மிகுதி குறைந்து கொண்டிருந்தது. 

எண்ணிக்கொண்டிருந்தேன். நினைவுகளில் வண்ணங்களை  தேடிக்கொண்டிருந்தேன். கறுப்பும் வெள்ளையுமாக- கண்களின் பார்வை எதை நோக்கிப் போகிறதோ- அந்த காட்சியே எண்ணமாக- வேறேதும் இல்லை. மிகுதியில்லை. சாரலுமில்லை. ஜன்னல் கதவுகள் மூடியே  இருந்தன. அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்" என்ற சீரான-மென்மையான "காற்றை" விட- அது "தென்றலு"ம் இல்லை- "தென்றல்-துளி" யையும் தாண்டி- துளியான "தென்றல்". 

"மிகுதி"- எங்கே போனது? சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது...

This entry was posted on 10 November, 2013 at Sunday, November 10, 2013 . You can follow any responses to this entry through the comments feed .

15 comments

இது என்ன எண்ணம் மா. அழகு வர்ணம் பூசிய புது பசு போல ஓடிக்கொண்டே இருக்கிறது.வெகு அழகு. எண்ணங்களும் அவைகளை வண்ணமும் வெகு நேர்த்தி.

11 November 2013 at 15:16
This comment has been removed by the author.
11 November 2013 at 17:10

ஒரு பதிவாவது இப்படி வார்த்தையை
விலக்கி உணர்வை உணரவைக்கும்
மிகச் சரியாக எனில் உறையவைக்கும்
தரவேண்டும் என்கிற உணர்வு
எனக்குள் வந்து போனது
அதன் கூடவே கொம்புத்தேன் பழமொழியையும்.....
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

11 November 2013 at 17:11

//ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் போட்டு விட்டு எண்ணங்களின் மிகுதியை எண்ணிப்பார்தே குறைத்து விடலாம் என்று எண்ணலானேன்.//

ஹ! அசத்தல்!

11 November 2013 at 17:22

//அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்" என்ற சீரான-மென்மையான "காற்றை" விட- அது "தென்றலு"ம் இல்லை- "தென்றல்-துளி" யையும் தாண்டி- துளியான "தென்றல்".

"மிகுதி"- எங்கே போனது? சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது.//

'காற்று', 'தென்றல்', 'தென்றல் துளி'-- என்று குறுக்கிக் கொண்டே வந்து நாம் தான் அந்த ஒவ்வொரு குறுக்கலுக்கும் தனித்தனியாய் வெவ்வேறு பெயர்களிடுகிறோமோ?..

மிகுதி எங்கே போனது?.. ஒவ்வொரு பகுதியுமே மொத்த முழுமையின் அம்சமாய் இருக்கையில், குட்டியூண்டு குட்டியூண்டு முழுமைகளே பகுதிகளாய் தோற்றப்பிழை கொடுக்கின்றனவோ?.

11 November 2013 at 17:40

@jeevi...

Bull's EYE!
hence the realization - "சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது..."-- that is- though the parts form the whole- A "part" too is ultimately a "whole"...

11 November 2013 at 19:07

தொடர் சிந்தனைக்கு நன்றி.

இப்பொழுது பரமாத்வாவை முழுமையாவும், முழுமையின் அம்சம் பெற்ற துளிகளை ஜீவாத்மாவும் எண்ணிப் பாருங்கள்.

அல்லது பிரபஞ்சம் உள்ளடங்கிய வெளிமண்டலத்தை முழுமையாகவும் அதன் துளியாக அத்தனை உயிர்த் துகள்களையும்.

13 November 2013 at 09:02

@ Jeevi..

That's a brilliant way of looking at it...
But a drop of water- or the ocean- isn't the water same in both cases... So why the difference of "Jeevathma"/"Paramathma"-- or why think of the universe as being "contained" within a space- why can't it be the space in its entirety?

14 November 2013 at 18:44

profound.
கடைசி வரி.. மறக்க முடியாத loop.

24 November 2013 at 09:54

இப்பொழுது தான் பார்த்தேன்.

இப்படிப் பாருங்கள்.

நான்கு வேதங்களில் ஒவ்வொன்றிற்றிக்கும் ஒரு மஹா வாக்கியம் உண்டு.

சாம வேதத்தின் மஹா வாக்கியம் தத்வமஸி என்பது. இந்த வாக்கியம் சாமவேதம் சார்ந்த சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படுகிறது.

நீ அதுவாக இருக்கிறாய் என்பதை விளக்குவதே தத்வமஸி. அதாவது, ஜீவனும் கடவுளும் ஒன்றே. உயிர்களை உற்பத்தி செய்ய, பிரும்மமே உயிர்களாக உருமாறியது. எனவே, அனைத்து உயிர்களிலும் உறைந்திருப்பது பிரும்மமே. ஒவ்வொரு உயிரிலும் இருப்பது பிரும்மமே என்பதால், ஒவ்வொன்றுமே பிரும்மம் தான். பிரும்மத்திலிருந்து மாறுபட்டது எதுவுமில்லை.

2. பிரபஞ்சம் உள்ளடக்கிய வெளி மண்டல முழுமையின் உயிர்த்துகள்கள் வேதியியல் பொருட்களாய் உயிர்களின் உடல்களில் உறைந்திருப்பதை ஆயுர்வேதமும், அலோபதி மருத்துவமும் சொல்லும்.

27 November 2013 at 21:20


அன்பு மாதங்கி, ஒரு உண்மையை நான் சொல்லட்டுமா. ?abstract-ஆக ஆயிரம் எண்ணங்கள் உதயமாகலாம். அதன் பொருளைக் காண முயன்றால் , நினைக்காத பலவும் நினைக்கப் பட்டதாக கற்பிதம் செய்யப் படும் முழுமை . மிகுதி, துளி நிறம் வெறுமை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் என்ன எண்ணுகிறோமோ அல்லது சொல்ல விரும்புகிறோமோ அதை முழுமையாக unambigously சொல்ல முயலவேண்டும். ஒருவேளை நீங்கள் ஜீவாத்மா பரமாத்மா என்றெல்லாம் எண்ணி இருந்தீர்களென்றால் ‘அது’ இதுதான் என்று சொல்ல வேண்டும். எனக்கும் சில abstract எண்ணங்கள் வருவதுண்டு. ஆனால் அவற்றை வடிகட்டி நான் உணர்வதை புரியும்படி சொல்லிப் போவேன்.இந்தமாதிரி எண்ணங்களோடு பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போகலாம். இந்த எழுத்தும் நடையும் சாதாரணமாக உங்கள் பதிவில் தென்படாதது. ஒருவேளை இந்த எழுத்து நடை உங்களைக் கோர்வையாகச் சொல்ல வைக்க முடியாமல் போகிறதோ. ?உங்கள் எண்ணம் ஆன்மீகம் சம்பந்தப் பட்டதென்றால், நான் என் அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த பதிவுகளின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள். மனதில் பட்டதை எழிதிவிட்டேன்
gmbat1649.blogspot.in/2012/06/blog-post.html
gmbat1649.blogspot.in/2012/08/blog-post_19.html
வாழ்த்துக்கள்.

15 December 2013 at 15:34

@gmb..

Abstracts- for me can be thoughts. And thoughts cannot be finite. They can only lead to more thoughts. A patch of cloud on the blue sky can seem like a cat to me/but something else to someone else. Abstracts- my kind of them- I prefer leaving it to the reader's imagination. I am not for spoon feeding my readers and stuff my thoughts into their mind...
I own my words... I can use them any way I want to use them.. There is no "procedure" to be followed when it comes to creative writing... this is my view.

15 December 2013 at 18:02


The purpose of sharing one's feelings do not get fulfilled when one is abstract.That was precisely the point I wanted to make.Words are powerful tools. Once used they can not be taken back No one can help if abstract writings are considered creative. I would like to remind you of a thirukkurL couplet( Hope you can understand it) " தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு.”GOD BLESS YOU. !

16 December 2013 at 16:44

பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்களும், நடையும் என்னை ஈர்த்தன. நன்றி.
இன்று வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

23 June 2015 at 06:54

வலைச்சரம் வழியே வந்தேன். ஈர்க்கவைக்கும் எழுத்து... தென்றல் துளியில் நானும் ஐக்கியமானேன்! பாராட்டுகள்.

23 June 2015 at 18:27

Post a Comment