2010 -ஓட என்னோட ஹீரோ!
நான் 1st std படிக்கும்போது- எனக்கு "Bus Conductor " ஆகணும்-னு கொள்ள ஆசை! அப்போலாம் நம்ம Super Star கண்டக்டர்-ஆ இருந்ததெல்லாம் எனக்கு தெரியாது! ஆனா- எனக்கு நெஜமாவே பஸ் கண்டக்டர் னா ரொம்ப புடிக்கும். இந்த கூட்டத்துக்கு மத்தீல, கம்பிய கூட புடிக்காம பஸ்-கு இந்த கோடி-க்கு அந்த கோடி நடக்கறதே ஒரு பெரிய விஷயமா தோணும் எனக்கு. அத விட- அந்த கண்டக்டர் கைல இருக்கற பை! எவ்வளோ சில்லற! அவர் நகரும் போதெல்லாம் கலுக்-கிலுக் னு அதுலேர்ந்து சத்தம் வரத பாத்துட்டு- "அவா கிட்ட மட்டும் எவ்வளோ காசு" ன்னு நெனப்பேன்! ஆனா- ஒன்னங்க்லாஸ்- அந்த கலர்-கலர்-ஆ அவர் கிட்ட இருக்கற டிக்கெட் தான்! எல்லாரும்- "doctor, engineer-"னு சொல்லற இடத்துல- நான் மட்டும் யாரு என்கிட்ட "நீ பெருசானப்ரம் என்னவாகப்போற"? ன்னு கேட்டாலும்- "பஸ் கண்டக்டர்"னு தான் சொல்லுவேன்!
ஆனா- நாளடைவுல- இந்த "பஸ் கண்டக்டர்" மோஹம் கொஞ்சம் கொஞ்சமா என்ன விட்டு போய்டுத்து. ஒரு சில- சம்பவங்கள்-நால. நான் 12th படிக்கும்போது- ஒரு நாள் school கு கெளம்ப ரொம்ப late ஆச்சு. கூட்டமான பஸ்-ல நான் பொதுவா ஏற மாட்டேன். ஆனா அன்னிக்கு எதோ test ஓ என்னவோ! இல்லேன்னா அவளோ கஷ்ட பட்டிருக்க மாட்டேன். பஸ் வந்துது. அப்படி ஒரு கூட்டம். ஏறவே முடியல! எதையுமே புடிச்சுக்காம- foot board -ல தொங்கிண்டு school -கு போனேன்! எனக்கு பின்னாடி தொங்கினவாதான் எனக்கு support ! Driver break அழுத்த அழுத்த எனக்கு அவளோ பயம்! அந்நிய தேதி வரைக்கும்- இந்த "வளை ஓசை" பாட்டு பாத்து foot board- ல நாமளும் தொங்கணும்-னு இருந்த ஆசையெல்லாம், இருந்த எடம் தெரியாம போச்சு! கமல் ஹாசன் கிட்ட போய்- "செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து! ஸ்கூல்-கு ரெண்டு stop முன்னாடியே எறங்கி நடந்து போனேன். 45 நிமிஷம் class -கு வெளீல நின்னேன். Late- ஆ போனதுக்காக. Test -உம் எழுதல!
College படிச்ச காலம்- இன்னும் மோசம். ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம் நின்னும்டே போன பொழுதெல்லாம் உண்டு! அதுக்கும் மேல- exam பொது ஒரு வருஷமா படிக்காத பாடத்த எல்லாம் ஒரு மணி நேரத்துல கூட்டமான பஸ்-ல நின்னுண்டே படிச்ச அனுபவங்களும் உண்டு! அதனால- இப்போலாம் பஸ் ல போறத தவிர்க்க முடியற வரைக்கும் தவிர்க்கறது!
அன்னிக்கு எந்த ஆட்டோ வும் வரல! மாட்டு வண்டீலயாவது ஏறி வீட்டுக்கு போனா போரும் ங்கற நெலம. கூட்டமா இருந்தாலும் பரவா இல்ல-ன்னு கண்ண மூடிண்டு பஸ்-ல ஏறிட்டேன். ஒரு college பசங்க கும்பல் ஒண்ணு அடுத்த stop-ல எரித்துகள்! அந்த வயசுக்குள்ள அத்தன heroism-உம் பண்ணிண்டு- எந்த பொண்ணாவது நம்மள பாக்கறாளா-ன்னு பாத்துண்டு இருந்துதுகள். அதுல ஒண்ணு- கருமமே கண்ணா- foot board-ல தொங்கிண்டு, ஒத்த கையால மட்டும் பஸ் கம்பிய பிடிச்சிண்டு, ஒரு கால- பஸ்-கு வெளீல தொங்க விட்டுண்டு- அத்தன circus வேலையும் காட்டிண்டிருந்துது!
எதோ traffic problem திடீர்னு. Driver அண்ணா break- போட்டார். இந்த கோமாளி நடு ரோட்டுல நல்ல traffic மத்தீல விழுந்துது! ஆடோகாரன், பைக்-ல போறவன்- எல்லாரும் இத திட்டிட்டு போறா! எத பத்தியும் கவலை இல்ல. பஸ் கெளம்பி ஓட ஆரம்பிச்சப்ரம்- ஓடற பஸ்-ல ஏறி heroism காட்டித்து! அதோட friend கும்பல் எல்லாம்- "ஹாய்-ஊய்"ன்னு ஒரே கூத்து, இது இப்டி விழுந்து, எழுந்து வந்ததுக்கு!
ஒரு அம்மா. கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி-ல ஒரு tight கொண்ட. நெத்தி நெறையா குங்கும போட்டு. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ! பையன் தெறிச்சு போய்ட்டான்! செத்த நேரம் அவனுக்கு என்ன நடந்துதுன்னே புரியல. அந்த அம்மா-வா, வந்தது தெரியாத, தன்னோட seat கு போய் உக்காந்துட்டா! அப்புறம் என்ன? கூட்டத்துல ஒருத்தனா கலந்துட்டன் பைய்யன். வாய தெறக்கவே இல்ல, இரங்கற வரைக்கும்!
சில பேர் cinema-ல காட்டறத எல்லாம் பாத்துட்டு, "இப்படியெல்லாம் செஞ்சா தான் hero"ன்னு நெனச்சுன்க்கரா! தான் life-அ மதிக்கறவன்தான் hero. தன்னோட life- அ மதிக்கத் தெரியாதவனுக்கு எப்படி இன்னொரு life-அ மதிக்கத் தெரிய முடியும்? நம்ம எல்லாருக்குமே- இத போல கோமாளிகள அவா நன்மைக்காக- ஒண்ணு வெக்கணும்-னு தோணும்! ஆனா- அந்த அம்மா-க்கு அத பண்ணற தைரியமும், அந்த மனசும் இருந்தது. என்ன பொறுத்த வரைக்கும், அந்த அம்மா ஒரு ஹீரோ தான்! அவங்கதான்- 2010 -ஓட என்னோட ஹீரோ!