இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் ஒரு குடும்பம் தன் தலைவனை இழுந்தது. அந்தத் தலைவன்- ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு தமையன்- ஒரு மாமன்... இன்னும் அவன் என்னவெல்லாமோ இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி நடக்க அவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை விதி என்கிறார்கள், ஒரு சிலர். ஜென்ம பயன் என்கிறார்கள்- இன்னும் சிலர். காலம்- என்கிறார்கள் மற்றும் சிலர். என்னைப் பொறுத்த வரையில்- அன்று அந்த இடத்தில்- வேறு ஏதோ ஒன்று செயல் பட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் மீரியதொன்று. அதை என்னவென்று என்னால் இன்று வரையிலும் விவரிக்க முடிந்ததில்லை. அது- என்னை ஓர் பாடத்தை உணரச் செய்தது. "பயங்கரவாதம்" எனப்படுவது ஒன்று- மேடைப் பேச்சு வீரர்களின் கோர்வை மொழியின் ஒரு அங்கம் இல்லை, என்று. குட்டிச் சுவற்றின் மீது வெட்டிப் பேச்சும், உலகின் மீது போலிக் கோவம் கொண்டு சினிமா பட ஹீரோக்கள் போன்று ஆகத் துடிக்கும் இளைகனின் மனக் கோட்டையின் ஒரு செங்கல்லும் இல்லை- இந்த "பயங்கரவாதம்". இது- ஒரு உணர்வு. இதைப் பற்றி பெசுவதினாலோ, அல்லது இதைப் பற்றிப் படிப்பதினாலோ உணர்ந்து விட முடியாத ஒரு உணர்வு. அதை எப்போது நாம் உணருகிறோம்- என்று ஒரு கேள்வி உதிக்கிறதோ? உணர்ந்தேன். 200 , 300 என்று தொலைக்காட்சிப் பெட்டியில் சடலங்களை கூறு போட்டுக் கொண்டு எண்ணிக் கொண்டிருந்த பொது- அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- நான் அதில் யாரோ ஒருவரை நான் வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்கிறேன் என்று எந்த நொடியில் உணர்ந்தேனோ- அந்த நொடியில் உணர்ந்தேன். உலகெங்கும் பரவியிருக்கும் ஒன்றை அந்நாள் வரையிலும் நான் ஒரு வாக்கியமாகவே எண்ணியிருந்தேன். அதன் உணர்ச்சியை- அது என் வீட்டு கதவை இடித்த போது தான் உணர்ந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக- அவ்வபோது செய்திகள் இல்லாத நேரங்களிலோ- அல்லது யாரோ சில பிரபலங்கள் அதைப் பற்றி பேட்டி கொடுத்திருந்தபோதோ- தொலைக்காட்சிப் பெட்டியில் என்னையும் மீறி என் மனம் லயித்தது. ஏன்? எதற்கு நானே என் அறிவை கொறை பட்டுக் கொள்கிறேன்? இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீரும் என்று எப்படி என்னால் எண்ண முடிந்தது? ஆனால்- இப்படிப்பட்ட கேள்விகளை சிறிது நேரம் மறக்கத் தோன்றியது. மறுப்பு, வாக்கு, என்பது போன்ற- கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அதே சொற்கள். இது இல்லை என்றால்- பிடிபட்ட குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த ஒரே நபருக்கு பழைய சினிமா பாடல்களைப் பாடப் பிடிக்குமாம்! ஒள்ளூர என் அறிவின் வெற்றியை என் புத்தி பாடி மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் என் மனத்தின் பங்கு இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரிந்தவர்களின் ஜீவன் மெழுகுச்ச் சுடர்களை தீயிட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வைத்துக் கொள்வோமே. இன்னும் 20 வருடங்கள் கழிந்து- என்றோ ஒரு நாள்- "நீதி" என்பதற்கு சற்று அருகாமையில் வசிக்கும் ஏதோ ஒரு வார்த்தையின் அர்த்தம்- இந்த "பயங்கரவாதப்" பிரச்சனைக்கு தண்டனையாக அளிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோமே! ஆனால் அன்றைய தினம்- அந்த "நீதி"யை கேட்டு ஆனந்தம் கொள்ளும் ஜீவன்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும். அன்றைய தினம்- இன்று நான் உணருகின்ற அந்த 200 , 300 என்ற கணக்குகள்- மீண்டும் ஒரு முறை- உணர்வில்லா கணக்குகளாக இதிஹாச புத்தகங்களின் பக்கங்களில் பதிந்து போயிருக்கும். ஜாலியன்வால பாக் மற்றும் ஹீரோஷீமா/நாகாசாகி போன்ற ஒரு இதிஹாச நடப்பு. அதைப் படிக்கின்ற வருங்கால குழந்தைகளுக்கு- அந்த கணிதங்கள்- வெறும் பதில்கள்- வினாத்தாளில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள். அவை உணர்ச்சி அல்ல. வெறும் கணக்கு...
இது தானா நடக்கும்? உயிர் - உயிராக மதிப்பிடப்பட வேண்டும். கணக்காக அல்ல. அந்த நாள் வந்துத் தான் ஆக வேண்டும். அதை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்...
பி. கு.: எனக்குத் தெரிந்த அந்த ஒருவர் (mum's younger brother).
20 comments
எனக்கு என்னமோ அந்த நாள் விரைவிலோ அல்லது தாமதாகவோ வருமென்று தோணவில்லை.இன்னும் மனிதாபிமானம் இல்லாத கொடூர சம்பவங்கள் அதிகமாக நடக்கும் என்றே ஒரு பீதி. தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாய் முளையிலேயே கிள்ளி எரியாமல் அராஜகத்தை வளர விட்டு கொண்டு இருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
அஞ்சலிகள்
இந்த தேசத்தின் முழு கவனமும் தொலைக்காட்சியின் மீது திரும்பியிருந்த போது இந்த தேசத்தின் ஆன்மா களவு போனது.
தேசத்தின் மூளை தொலைக்காட்சிப்பெட்டிகளிலிருந்து உருவாகிறது என்ற மாயவாதத்தை முன்வைத்து பிறரின் மீதான அன்பு-அக்கறை எல்லாம் குறைந்து போனது.
பிந்தரன்வாலே இந்திராவால் உருவாக்கப் பட்ட போது பயங்கரவாதத்தின் துவக்கம் முளைவிட்டது.காலிஸ்தானின் கொட்டத்தை அடக்க ரிபெய்ரோவுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும் வீரப்பனை அழிக்க விஜயகுமாருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும் முன்னுதாரணங்கள்.
அரசுக்கு பிள்ளையின் தொட்டிலையும் ஆட்ட வேண்டும்.அதைக்கிள்ளி விடவும் வேண்டும் என்கிற மனோபாவம் இருக்கும் வரை பயங்கரவாதம் ஒரு நிலையான தொந்தரவுதான்.
மனம் தவிக்கிறது. அந்த கோரத்தை நினைக்குந்தோறும். பயங்கரவாதம் அரக்கர்குலம் இன்னமும் அழியவில்லை, ஜீவித்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அசுரவதத்துக்கு ஏதோவோர் பெருமாள் வந்து முடித்துவைப்பார் என்று காத்திருக்கும் அரசாங்கங்கள்! மடியக் காத்திருக்கும் ஜனங்கள்.மீடியா காட்டும் படங்கள்..மலர்வளையங்கள்,
மெழுகுவர்த்திகள் ,அமைதி ஊர்வலங்கள்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
'கத்தி எடுத்தவன் காத்தியால் சாவான்' என்பதாய்,
பிரந்தன்வாலேயை, பஞ்சாப் அரசியலுக்காய் வளர்த்து,
முடிவைத் தேடிக்கொண்டார் இந்திரா. ரஷ்ய ஆளுமையை ஆப்கானில்
குறைக்க, அமெரிக்கா ஒசாமாவை வளர்த்தது ஐஎஸ்ஐ துணையுடன்.
அவனால் அழிந்தது அமெரிக்க ஆணவம் இரட்டை கோபுரத்தோடு.
'அமைதியாய் வாழ போரிடத்தயாராய் இரு' என்றான் அலெக்ஸாண்டர்.
நாம் போர்த்தளவாடங்களில் ஊழல் செய்கிறோம். (போபர்ஸ், இத்தாலிய ஹெலிகாப்டர்கள் விபத்து) இந்தியா ஆட்சியாளரகளுக்கு மக்கள், நாட்டின் நலனை விட
அவர்களின் அடுத்த தலைமுறைக்கு வளம், பலம் சேர்ப்பதில் தான் கவனம்.
பணம் வருகிறதெனில், குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை கூட தரமின்றி வாங்குவோம்.
கர்கரே அதனால் உயிர் துறப்பார். அவரைக் காப்பாற்றாத அந்த ஜாக்கெட்டைக் கூடக் காப்பாற்றவில்லை காவல்துறை.காரணம் அதை வாங்கியதில் ஊழல்,விசாரணை வந்தால் சிக்கப் போவது அதிகராத்திலுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். இந்த வாய் சொல் வீரர்களை
இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகு ஆட்சிளர்கள் தான் கிடைப்பார்கள்.
சகித்துக் கொள்ள பழக்கியதில் நேர்ந்த துயரம் இது.. ஆரம்பத்திலேயே சிறுமை கண்டு பொங்கக் கற்றிருந்தால்.. பல அவலங்களுக்கு தாமதமாய் ‘உச்சு’ கொட்ட நேர்ந்திருக்காது
@ chithra...
thanks for visiting...
@ parthasarathy....
romba negative-a yosikka start panna vendaame-nnu paaththen
@ LK..
thanks.
@ sundarji..
sariyaaka sonneergal...
aanaal ippothaya prachchanai- pillayai killi mattume vidath therikira arasaangaththirkku- thottilai aattath theriya villai!
@ mohanji..
innum eththanai kaalam sahiththuk kolkiraarkal endruthaan paarpome!
@ vasan...
en appa dialogue onnu-
ஸ்கூல் க்கு போனால் ஆசிரியர் .... fraud
hospital க்கு போனால் டாக்டர் .... fraud
கோர்ட் க்கு போனால் ஜட்ஜே .... fraud
இறைவா எனக்கு என்ன வழி சொல்லப போகிறாய் ? endru pulambi-
கோவிலுக்குப போனால் அர்ச்சகர்... fraud ------மாலி
@ rishaban....
alatchiya gunam- nam makkalukku. sari thaan neengal solvathu!
பயங்கரவாதம் இப்பொழுது அடங்கியிருக்கிறது...எப்பொழுது வேண்டுமானலும் எழும் எனும் பயம் இருந்துகொண்டே இருக்கிறது...
அப்பாவின் ஆதங்கமும் உண்மைதான்...
@ padmanabhan...
true!
மனசு ரொம்ப கஷ்டமானதுல கமண்ட் போட மறந்துடுத்துப்பா!...:(
@ thakkudu..
that's fine boss!
அழுதே விட்டேன் மாதங்கி. அது ஒரு துர் கனவாக இருந்திரக்கூடாதோ என்று பலமுறை நினைத்திருக்கிறேன். தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் காணும் போது வெறும் செய்தியாகும் நிகழ்வுகள், நம் வீட்டிற்குள் நடக்கும் போது உணரும் வலி, இதுவரை நாம் கண்ட அத்தனைக்கும் சேர்த்தாற்போல்; இனி வரப்போகும் அத்தனைக்கும் சேர்த்தாற்போல். நான் உணர்ந்திருக்கிறேன். எனக்குப் புரிகிறது. தினம் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு விதத்தில்; நினைக்கும் போதே வலிக்கிறது மாதங்கி.
@ramkrishnan...
thnx for the comments...
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
14 hours ago
-
18 hours ago
-
1 week ago
-
1 week ago
-
4 weeks ago
-
4 weeks ago
-
4 weeks ago
-
1 month ago
-
7 months ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
2 years ago
-
3 years ago
-
3 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".