ப்ளாஸ்த்ரி
எனக்கெல்லாம் ஒரு ஒடம்புன்னு படுத்துக்கறதே பிடிக்காது! இதுக்கு எங்கேர்ந்து தான் வருதோ இந்த புத்தி! எல்லாம் அவராத்து வகயராகள்லேர்ந்து தான் வந்துருக்கும்னு நெனைக்கறேன். எங்க பாத்தாலும் ஒரே "வீரத் தழும்புகள்". "எப்டி அடி பட்டுது"? ன்னா தெரியாது! எங்கப் பாத்தாலும் ஒரு ப்ளாஸ்த்ரி ஒண்ண ஒட்டிண்டு school கு போணும். யாராது என்ன ஆச்சுன்னு கேக்கணும். அத சொல்றதுல இதுக்கொரு பெரும!
இதுகூட ஒரு கொழந்த படிச்சுது. அது பேரு மறந்து போச்சு! இது, அத விட எதோ 2 mark அதிகமா வாங்கிடுத்தாம். அதனால அந்த பொண்ணுக்கு இது ஒரு 'Leader'. இத யாராது "நாதான் Leader" ன்னுட்டா போரும். எதோ பெரிய கிரீடம் வெச்சா மாதிரி தான். அது எதோ ஒரு நா Homework எழுதலயாம். இது ஏன் எழுதலன்னுத்தாம். அந்த பொண்ணு ஒடனே- "இத பாஆஆஆஆஆ ரூஊஊஊஊ" ன்னு எதோ தங்கச்சி sentiment dialogue பேசர Hero மாதிரி பேசிருக்கு, அது. இது ஒடனே "ஐயோ பாவம்"னு மன்னிச்சுடுத்தாம். "என்ன ஒரு நல்ல மனசு, எம்பொண்ணுக்கு"ன்னு நெனச்சிண்டிருந்தேன். ஆனா இப்போ தானே தெரியறது- இதெல்லாம் எங்கேர்ந்து வந்துதுன்னு!
இது என்ன ஒரு 2nd std. படிக்கும். யாரோ "தலவலி" ன்னு சொல்லி கேட்டுருக்கு. கெட்டியா புடிச்சுண்டுடுத்து அந்த வார்த்தைய! "Homework பண்ணுடா"ன்னா- "போ மா... ஒரே தலவலி" ங்க வேண்டியது! 2nd std. கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்னு இன்னி வரைக்கும் புறியல!
யாருக்காது அடி பட்டு ஒரு Band Aid அ மாட்டிண்டு வந்துட கூடாது! "எனக்கும் இப்போவே Band Aid போட்டுவிடு" ன்னு அழுது தீக்கும், அத மாட்டி விடற வரைக்கும்! இவருக்கு fever வந்து பத்து போட்டு விட்டாலும் சரி. "நானும் போட்டுப்பேன்" ன்னு ஒரே அடம். ஐவரும் அதுக்கு நெத்தில, கன்னத்துல, மூக்கு மேல ன்னு கொஞ்சம் ஈஷி விடுவார். ஒடனே கண்ணாடில வேற பாத்துக்கும் தன்ன தானே! அதுல எதோ ஒரு அல்ப சந்தோஷம் இதுக்கு!
அதுலயும் நெஜமாவே fever வந்துடப்டாது! அவ்வளவுதான்! ரெண்டு நாள்ஜம்முன்னு மட்டம் போடும் school-கு. அதுக்கப்றம் இருப்பே கொள்ளாது ஆத்துல! மூணாவது நாள்- எப்படா school- கு போய் எல்லார் முன்னாடியும் colour-colour-ஆ மாத்தர சாப்படலாம்னு உக்காண்டுருக்கும்!
இது class ல யாருக்கோ "Madras Eye" வந்துடுத்து. அந்த கொழந்த "cooling glass" போட்டுண்டு வந்துருக்கு, class- கு! நானும் "cooling glass" போட்டுப்பேன்-ன்னு ஒத்த கால்-ல நின்னு கொஞ்ச நேரம் போட்டுண்டு லாத்தித்து!
"வரேன்...வரேன்... என்ன அம்மா-க்கு"? ன்னு கேட்டுண்டே நொழஞ்சேன்- இது எதோ கூப்படரதேன்னு. "அப்பா-க்கு ஓம்பு செப்படல"-ன்னுது! ரெண்டு கஞ்சிக்கு கொதிக்க வெக்கணும்...