சரஸ்வதி பூஜ
நம்பாத்ல தினமும் சரஸ்வதி பூஜ தான். விஜயதசமி உட்பட! யாரோ சொல்லிட்டா- சரஸ்வதி பூஜ அன்னிக்கு சரஸ்வதிக்கு rest- படிக்கப்டாது-ன்னுட்டு! அவ்வளவுதான். நல்ல நாள்லேயே நாழிப் பால்! படிக்கற நேரத்துல தான் வேற என்னல்லாமோ பண்ணத் தோணும். இன்னிக்கு கேக்கணுமா?
அதோட desk மேல சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சு- புஸ்தகத்து மேல லாமும் எல்லாம் வச்சு- அடுக்கி வச்சுடணும். Holiday Homework குடுத்துருக்கரத இன்னும் தொட்டு கூட பாக்கல! கேட்டா- "இன்னிக்கு படிச்சா அந்த subject -ல நல்ல mark வராது"-ன்னு வேற ஒரு பதில்!
இந்த exam பொது எல்லாம் ஒரு பெரிய "சந்திரலேகா" cinema-வே ஓடும்! "Lucky பேனா", "Lucky pencil", "Lucky set uniform", "Lucky.." எல்லாமே! இதோட "Lucky uniform"- வேற daily தோய்ச்சு போடணும்! Office-லேர்ந்து வந்து இதோட அடுத்த பரீட்சைக்கு மன்னாடரதோட சேந்துண்டு இந்த தோக்கற வேல வேற! "Lucky பாட்டு" கூட உண்டு தெரியுமோ? சொன்னா சிரிப்பேள்! தெனம்- ஒரு மூணு பாட்டு ஏதோ- அத பாடிட்டு போனா தான் exam நன்னா எழுதுமாம்! இப்டி கடேசி ஒரு நாள், அர நாள் ஏன் படிக்கணும்? எல்லாத்தியும் முன்னாடியே படிச்சு வச்சிக்க ப்டாதா? ப்டாதே! அதெப்படி முடியும்? எத்தன வேல கெடக்கு!? TV பாக்கணும், notebook- ல கிறுக்கனும், புதுசா வாங்கி குடுத்த sketch பேனா அத்தனையும் colour அடிச்சு காலி பண்ணனும்!
அன்னிக்கு எதையோ சுத்தம் பண்ணிண்டு இருக்கறச்ச இதோட L.K.G. Progress Report கடச்சுது! "Spelling" நு போட்டு 86% நு போட்டுருந்துது! இது அவளோலாம் Mark வாங்கிருக்குன்னே எங்களுக்கெல்லாம் ஞாபகமில்ல! நெஜத்த சொல்லனும்னா- இது serious-ஆ உட்கார்ந்து படிச்சதையே நாங்க என்னிக்குமே பாத்ததே இல்ல! ஆனா Rhymes-லாம் நன்னா சொல்லும். அங்க ஒரு sister-dance ஆடிண்டே Rhymes சொல்லிக்கொடுப்பா. அதுக்கு ரொம்ப புடிக்கும் அதெல்லாம்.
"Humpty Dumpty" Rhyme- அ drama வாட்டம் போட்டாளாம். இது தான் "Humpty Dumpty"யாம். ஒரே அழுக! ஏண்டா அழற? அதானே டா Main Role னா- இது சொல்றது- வெறும் அந்த குட்டி chair- ல ஏறி நின்னுண்டு உழறது மட்டும் தான் இது பண்ணுமாம். ஆனா, Lalith, Vasanth- எல்லாரும் அந்த மர- குதிர ல ஏறிண்டு ஆடுவாளாம். இது அந்த குதிர மேல ஏறணும்-னு அவாள்ட கேட்டுதாம். அவாள்லாம்- "Practice பண்ணனும்" னு இதுக்கு தரவே இல்லையாம்!
வந்துது அங்கேர்ந்து. "அம்மா, இன்னிக்கு பாட்டு class-க்கு லீவு தானே"? ன்னுது. ஏன்னா- இன்னிக்கு பாடினா பாட்டு நன்னா வராதாம். அது நான்னா வரலேன்னாலும் பரவா இல்லன்னு இத தர-தர ன்னு இழுத்துண்டு போயாச்சு! "மாமாவது ஸ்ரீ சரஸ்வதி"ன்னு ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தா பாட்டு மாமி! அந்த சரஸ்வதி-ய நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?