சரஸ்வதி பூஜ  

Posted by Matangi Mawley


நம்பாத்ல தினமும் சரஸ்வதி பூஜ தான். விஜயதசமி உட்பட! யாரோ சொல்லிட்டா- சரஸ்வதி பூஜ அன்னிக்கு சரஸ்வதிக்கு rest- படிக்கப்டாது-ன்னுட்டு! அவ்வளவுதான். நல்ல நாள்லேயே நாழிப் பால்! படிக்கற நேரத்துல தான் வேற என்னல்லாமோ பண்ணத் தோணும். இன்னிக்கு கேக்கணுமா?

அதோட desk மேல சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சு- புஸ்தகத்து மேல லாமும் எல்லாம் வச்சு- அடுக்கி வச்சுடணும். Holiday Homework குடுத்துருக்கரத இன்னும் தொட்டு கூட பாக்கல! கேட்டா- "இன்னிக்கு படிச்சா அந்த subject - நல்ல mark வராது"-ன்னு வேற ஒரு பதில்!

இந்த exam பொது எல்லாம் ஒரு பெரிய "சந்திரலேகா" cinema-வே ஓடும்! "Lucky பேனா", "Lucky pencil", "Lucky set uniform", "Lucky.." எல்லாமே! இதோட "Lucky uniform"- வேற daily தோய்ச்சு போடணும்! Office-லேர்ந்து வந்து இதோட அடுத்த பரீட்சைக்கு மன்னாடரதோட சேந்துண்டு இந்த தோக்கற வேல வேற! "Lucky பாட்டு" கூட உண்டு தெரியுமோ? சொன்னா சிரிப்பேள்! தெனம்- ஒரு மூணு பாட்டு ஏதோ- அத பாடிட்டு போனா தான் exam நன்னா எழுதுமாம்! இப்டி கடேசி ஒரு நாள், அர நாள் ஏன் படிக்கணும்? எல்லாத்தியும் முன்னாடியே படிச்சு வச்சிக்க ப்டாதா? ப்டாதே! அதெப்படி முடியும்? எத்தன வேல கெடக்கு!? TV பாக்கணும், notebook- கிறுக்கனும், புதுசா வாங்கி குடுத்த sketch பேனா அத்தனையும் colour அடிச்சு காலி பண்ணனும்!

அன்னிக்கு எதையோ சுத்தம் பண்ணிண்டு இருக்கறச்ச இதோட L.K.G. Progress Report கடச்சுது! "Spelling" நு போட்டு 86% நு போட்டுருந்துது! இது அவளோலாம் Mark வாங்கிருக்குன்னே எங்களுக்கெல்லாம் ஞாபகமில்ல! நெஜத்த சொல்லனும்னா- இது serious- உட்கார்ந்து படிச்சதையே நாங்க என்னிக்குமே பாத்ததே இல்ல! ஆனா Rhymes-லாம் நன்னா சொல்லும். அங்க ஒரு sister-dance ஆடிண்டே Rhymes சொல்லிக்கொடுப்பா. அதுக்கு ரொம்ப புடிக்கும் அதெல்லாம்.

"Humpty Dumpty" Rhyme- அ drama வாட்டம் போட்டாளாம். இது தான் "Humpty Dumpty"யாம். ஒரே அழுக! ஏண்டா அழற? அதானே டா Main Role னா- இது சொல்றது- வெறும் அந்த குட்டி chair- ஏறி நின்னுண்டு உழறது மட்டும் தான் இது பண்ணுமாம். ஆனா, Lalith, Vasanth- எல்லாரும் அந்த மர- குதிர ஏறிண்டு ஆடுவாளாம். இது அந்த குதிர மேல ஏறணும்-னு அவாள்ட கேட்டுதாம். அவாள்லாம்- "Practice பண்ணனும்" னு இதுக்கு தரவே இல்லையாம்!

வந்துது அங்கேர்ந்து. "அம்மா, இன்னிக்கு பாட்டு class-க்கு லீவு தானே"? ன்னுது. ஏன்னா- இன்னிக்கு பாடினா பாட்டு நன்னா வராதாம். அது நான்னா வரலேன்னாலும் பரவா இல்லன்னு இத தர-தர ன்னு இழுத்துண்டு போயாச்சு! "மாமாவது ஸ்ரீ சரஸ்வதி"ன்னு ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தா பாட்டு மாமி! அந்த சரஸ்வதி- நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?

This entry was posted on 16 October, 2010 at Saturday, October 16, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

:)

16 October 2010 at 11:57

good one

16 October 2010 at 13:04

Brings smile to the face.Thanks

16 October 2010 at 17:22

pl see my Tamil blog started very recently.
http://vasparth.blogspot.com/

16 October 2010 at 18:35

இந்த exam பொது எல்லாம் ஒரு பெரிய "சந்திரலேகா" cinema-வே ஓடும்! "Lucky பேனா", "Lucky pencil", "Lucky set uniform", "Lucky.." எல்லாமே! இதோட "Lucky uniform"- வேற daily தோய்ச்சு போடணும்! Office-லேர்ந்து வந்து இதோட அடுத்த பரீட்சைக்கு மன்னாடரதோட சேந்துண்டு இந்த தோக்கற வேல வேற! "Lucky பாட்டு" கூட உண்டு தெரியுமோ? சொன்னா சிரிப்பேள்! தெனம்- ஒரு மூணு பாட்டு ஏதோ- அத பாடிட்டு போனா தான் exam நன்னா எழுதுமாம்! இப்டி கடேசி ஒரு நாள், அர நாள் ஏன் படிக்கணும்? எல்லாத்தியும் முன்னாடியே படிச்சு வச்சிக்க ப்டாதா? ப்டாதே! அதெப்படி முடியும்? எத்தன வேல கெடக்கு!? TV பாக்கணும், notebook- ல கிறுக்கனும், புதுசா வாங்கி குடுத்த sketch பேனா அத்தனையும் colour அடிச்சு காலி பண்ணனும்!


...so cute!!!! :-)

16 October 2010 at 20:01

நன்றாக சிரித்தேன்! அருமை!

16 October 2010 at 22:31

அந்த சரஸ்வதி-ய நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?
அதானே!

17 October 2010 at 16:24

சரஸ்வதி பூஜ சூப்பர்!

17 October 2010 at 17:11

இன்னிக்கு சரஸ்வதி பூஜை. புஸ்தகத்தை எல்லாம் அம்மன் முன்னாடி வச்சுடணும். இன்னிக்கு
படிக்க வேண்டாம் என்று நான் சொன்னதைக் கேட்ட எனது பேரன்: ஏன் தாத்தா ! நம்ப சரஸ்வதி
பூஜை ஏன் தினமும் செலிப்ரேட் பண்ணக்கூடாது அப்படின்னு கேக்கறான்.

சுப்பு தாத்தா.
http://pureaanmeekam.blogspot.com
http;//movieraghas.blogspot.com

19 October 2010 at 21:36

@LK...

:)

20 October 2010 at 20:35

@kalyan...

thanks!

20 October 2010 at 20:36

@ parthasarathy...

thanks!

20 October 2010 at 20:36

@ parthasarathy...

i ll sure chk it!!

20 October 2010 at 20:36

@ chithra...

thanks! :)

20 October 2010 at 20:36

@ SK...

:) thanks!

20 October 2010 at 20:37

@ rishabhan..

:D !

20 October 2010 at 20:37

@ aarnyanivaas ...

:D nanri!!!

20 October 2010 at 20:38

@ sury...

:D :D super...

20 October 2010 at 20:39

//அந்த சரஸ்வதி-ய நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?//

படிப்பு மட்டுமா, ப்ளாக்கும் ப்ரமாதமா எழுதர்து அந்த பொல்லாத குழந்தை!..:P

25 October 2010 at 18:01

@thakkudu...

:D :D thanks !!

25 October 2010 at 20:59

//இன்னிக்கு படிச்சா அந்த subject -ல நல்ல mark வராது"-ன்னு வேற ஒரு பதில்!//
ஹா ஹா.. பழைய நினைவுகள கிளப்பி விட்டுடீங்க

Nice post Matangi... especially the way you write it is classic... keep up

27 October 2010 at 00:50

@ appaavi...

:) thanks!

27 October 2010 at 19:18

நல்ல பதிவு மாதங்கி .குழந்தைகளின் குறும்புகளை எரிட்சலோடு பார்க்கும்

எனக்கு உங்கள் பதிவு புது சிந்தனைகளை ஏற்படுத்தி இருக்கிறது........

நீங்கள் குறிப்பிட்டதில் சில என் குழந்தைகளும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனக்கும் சில பள்ளி பருவ நினைவுகள் ..
நன்றி., வாழ்த்துக்கள்!

27 October 2010 at 21:17

@priya...

:) i am very happy en post ungala yosikka vechchuthunnu padichchappa...

thanks!

27 October 2010 at 23:04

ரொம்ப நன்னா எழுதற. The narrative style is unique and nice, with a projected view from your mother, of you and the incidents. And you seem to have a phenomenal memory of your childhood. :-)

4 November 2010 at 14:01

@ ramm..

:) memories are something that makes you write!

thanks!

4 November 2010 at 20:05

Post a Comment