துப்பாண்டி புராணம்- அத்யாயம் 3  

Posted by Matangi Mawley

நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்... இதுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க- கதைய நீங்க மொதல்லேர்ந்து தெரிஞ்சுக்கணும்.

மூணு பூனை குட்டி இருந்துதொல்யோ? அதுல இந்த Vasco- அது என்ன பேரோ! நான் அத துப்பாண்டின்னுதான் கூப்படறது- அது எங்காத்துல நன்னா settle ஆய்டுத்து. ஏதோ நம்பாந்தான் ங்கராப்ல ஒரு சுவாதீனம். பந்தங்கள் வேண்டான்னு பாத்தா- நம்பள அது தேடி தேடி வருது! நாங்க அத adopt பண்ணிக்கல, அது தான் எங்கள adopt பண்ணிண்டுருக்கு. அது பசி ன்னு கேட்டா வெரட்ட மனசு வரதில்ல. என்னமோ தின்னு கிழிக்கராப்ல- கால்-கால்-கால் னு கத்தும். பால கொண்டோய் ஊத்தினா ரெண்டு வா சாப்டு அப்படியே வச்சுடும். மறுபடியும் கத்தும். மஹா வாலு! துரு-துறுன்னு ஏதாது பண்ணிண்டே இருக்கும். Fridge - அ தொறக்கற சத்தம் கேட்டா போரும்- ஓடி வரும் உள்ள. அத தொரத்தரதுக்கு அத்தன பிரயத்ன படணும். அவர் கிட்ட தான் ரொம்ப கொஞ்சல். காலுக்கு இடுக்குல பூந்து பூந்து வரும்.

ஒரு நாலு-அஞ்சு கொரல் வச்சுருக்கு அது. அப்ப-அப்ப சமயத்துக்கேத்தாப்ல ஒவ்வொண்ணு அவுத்து உடும். பசில கத்தரதுக்கு ஒண்ணு. அது கத்தும்போதே அப்டியே உலகத்தல இருக்கற அத்தன பாவப்பட்ட ஜீவன்களோட அழுகுரலையும் சேத்து பெசஞ்சு பண்ணினாப்ல ஒரு கொரல் அது. அத கேட்டா அதுக்கு ஏதாது போட்டே ஆகணும். போடாம இருக்க முடியாது. இன்னொண்ணு- அப்டியே கொஞ்சிண்டு- என்ன கொஞ்சு-ங்கராப்ல ஒரு கொரல். இன்னொண்ணு- இந்த சாப்ட அப்புறம்- என்ன disturb பண்ணாம உன் வேலைய நீ பாரு-ங்கராப்ல அலுத்துண்டு ஒரு கொரல்.

இதுக்கு ஒரு தங்கச்சி இருக்கோன்னோ! தங்கச்சியோ, தம்பியோ. தெரியல! Mosco ன்னு பேர் வச்சிருந்துது. இந்த China காராளும் சரி. பூனையும் சரி. எல்லாருமே ஒரே மாதிரி தான் இருப்பா என் கண்ணுக்கு. ஆனா வால் மட்டும் துப்பாண்டிக்கு மொழுக்குன்னு இருக்கும். இதுக்கு அணிலாட்டமா பொம்முன்னு இருக்கும். அதனால இத நான் Bushy ன்னு தான் கூப்படறது. ரொம்ப சமத்து. துப்பாண்டி என்னெல்லாம் இல்லையோ அதெல்லாம் Bushy . அதுக்கு கெட்ட பழக்கமெல்லாம் பழக்கி விடறதே இந்த துப்பாண்டி பய தான். "நீ என் கூட வாடா. உனக்கு நான் சாப்பாடு வாங்கி தரேன்"ன்னு சொல்லி இந்த Bushy ய கூட்டிண்டு வந்துடுத்து. இந்த Bushy அவளோ சமத்து. போட்டத ஓட்ட நக்கி சாப்டுடும் பாவம். இந்த துப்பாண்டி தான். அதுக்காவும் எதுவும் தேடிக்க தெரியாது- போட்டதையும் ஒழுங்கா சாப்டாது. இந்த Bushy யும் துப்பாண்டியும் அத்தன அன்யூன்யம். ரெண்டும் அப்டியே ஈஷிண்டு தான் படுத்துக்கும். அடிச்சிக்கும், புடிச்சுக்கும். ஆனா- ஒண்ணுக்கொண்ணு அத்தன கொஞ்சலும் நடக்கும்! ரெண்டும் ஜோடியா ஒண்ணுக்கொண்ணு மூக்க ப்ராண்டுண்டு வந்து நின்னுதுகள் அன்னிக்கு!

ஒரு நாள், என்னடாது- ரொம்ப நேரமா ஆள காணுமேன்னு நெனச்சுண்டே இருந்தேன். சௌக்யமா chair மேல ஏறி- நாலு காலையும் ceiling-அ தாங்கி புடிச்சுக்கற தோரணல, அவரோட dress-கு மேல நல்ல மெத்-மெத் ன்னு, சொஹுசா- சாவகாசமா தாச்சிண்டு, ஜம்முன்னு தூங்கிண்டுருக்கு இந்த துப்பாண்டி! அப்புறம் என்ன- தொரத்தி விட்டோம். திரும்ப வால தூக்கிண்டு இங்க தான் வரணும். என்ன பண்ணும்- அதுக்கு தெரியும். நம்ப ஏதோ தப்பு பண்ணிருக்கோம்னு. இந்த Bushy -ய அனுப்சு "டேய்! மொதல்ல நீ போய் கேளு டா. அப்புறம் நான் வரேன்" ன்னு சொல்லி அனுப்பும். Bushy வந்து கேட்டா இல்லன்னா சொல்ல போறோம். அதுக்கு போட்டப்ரம்- இது அப்டியே ஒண்ணுமே தெரியாத மாதிரி- வந்து சாப்டும். பயங்கர ஆளு!

அது பாட்டுக்கு இருந்துட்டு போறது போ! எம்பொண்ணுக்கும் போட்டி வேண்டிருக்கு. உனக்கு அது செல்லமா- நான் செல்லமா-ன்னுண்டு, அந்த பூனயோட வளயாடிண்டு- அது கூட சண்டையும் போட்டுண்டு கெடக்கட்டும்- னு விட்டுட்டோம்.

ஆனா நேத்திக்கு லேர்ந்து- துப்பாண்டி ஒரே dull ! ராத்திரி ஆனா ஒரு கத்து கத்தும். சாப்பட. ஆனா அது கூட கேக்கல. இந்த Bushy யும் ஆள காணும். அதுக்கு ஏதாது ஆயடுத்தா- அதனால தான் இது dull -ஆ ன்னு வேற கவலை. ராத்திரி எல்லாம்- முழிப்பு வரும் போதெல்லாம் இவர்- வெளீல பொய் பாத்துண்டே இருந்தார். துப்பாண்டி தூங்கவே இல்லையாம்! காலம்பரையும் சத்தத்தையே காணும். ஒரே கவலயாடுத்து! இப்படி எல்லாம் இருக்கவே இருக்காது. துரு துறுன்னு தான் எப்போதும் இருக்கும். கஷ்டமா இருக்கோன்னோ- பாக்கரவாளுக்கு!

நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்...

அப்புறம் இது போய் அத எழுந்துரு ன்னு சொல்லி பாத்துது. நிக்க வைக்க பாத்த பொது தான்- அதால நிக்கவே முடியலன்னு தெரிஞ்சுது! பின்னாடி கால் ஒன்னு- நன்னா வளைஞ்சு இருந்துது! எங்கேர்ந்தோ தாவி குதிக்க பாத்து- அடி பட்டுண்டுருக்கு! அதான் அத்தன சோர்வு! ஒரு வா சாப்படல! அதுவும் எழுந்துருக்க அத்தன பிரயத்ன படறது! அந்த கால் அத புடிச்சு பின்னாடி இழுக்கறது. ஒரு step நகர முடியல! இப்டி அவஸ்த படறதே இதுன்னு நெனச்சாலே ஒரே வருத்தம்.

எம்பொண்ணு இந்த mobile -ல map வருமே- அதுல Blue Cross எங்கயாது இருக்கான்னு பாத்துது! Besant Nagar Theosophical Society கு உள்ள
இருக்குன்னு கண்டுபிடிச்சாச்சு. துப்பாண்டிய ஒரு பை-ல போட்டு- வண்டி பின்னாடி இது புடிச்சுண்டு, அங்க கூட்டிண்டு போனா இவா ரெண்டு பேரும். யாருக்கு இப்டி தோணி ஒண்ணுபண்ணினாளோ ன்னு தெரியல. அத்தன மிருகங்கள் அங்க இருந்துதாம்! ஆட்டோ ல லாம் அவா அவா நாய் குட்டிய எல்லாம் அழச்சுண்டு வந்துருந்தாளாம். யாரு பண்ணினாலும்- அவாளுக்கு மஹா புண்ணியம்!

சாதாரண விஷயம் தான் போலருக்கு. ஒரு injection போட்டாளாம். அப்புறம் ஒரு மருந்து வாய்ல விட்டாளாம். அத எப்புடி புடிக்கணும் னு கூட தெரியாதா எங்களுக்கு! அங்க hospital -அ இது கழுத்த புடிச்சு தூக்கறா- அதுவும் பேசாத காட்டிண்டு இருந்துதாம்! ஒரே பயம் போலருக்கு அதுக்கு. கால்-எல்லாம் நடுங்கிண்டே இருந்துதாம்! அப்புடியும் injection போட்டப்ரம் அதோட பல குரல்-ல ஒரு குரல்-ல கத்திருக்கு! அந்த doctor அத தடவி குடுத்தாளாம்- "ஒண்ணுமில்ல"ன்னு! அப்புறம் பேசாத இருந்துதாம்!

ஆத்துக்கு கூட்டிண்டு வாந்தாயாச்சு! அந்த டாக்டர் அங்க- Whikosi ன்னு ஒரு fish flavour பூனை சாப்பாடு இருக்குன்னாளாம். அத வாங்கிண்டு வந்து சாதத்துல கலந்து குடுத்தாச்சு. ரெண்டு spoon சாப்டு போரும்-நுடுத்து! ஆனா காலேல யோட better ! இப்போ நொண்டறது! நொண்டிண்டே அதோட அட்ட பெட்டில பொய் படுத்துண்டுடுத்து! தூங்கிண்டு இருக்கு இப்போ!

வளந்துடுத்து! பொட்டி சின்னதா இருக்கு... பெரிய பொட்டி வாங்கணும்!

This entry was posted on 10 October, 2010 at Sunday, October 10, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

20 comments

அருமை! இனிமை!

10 October 2010 at 21:22

வாள் வாள்னு தன் கத்தும் கால் கால் நு கேள்வி பட்டது இல்லையே .இந்த பூனைகளை வெச்சு சுவாரஸ்யமான கதையை ஒப்பேத்தி விட்டெளே.ரொம்ப சாமர்த்தியம் தான்.எங்க ஆத்துல கூடதான் பூனை,நாய், எலி எல்லாம் இருக்கு. இந்த மாதிரி அழகா எழுத தெரியலையே எனக்கு!!!
உங்க ஈமெயில் என்ன?

11 October 2010 at 09:07

cute description

11 October 2010 at 09:16

பூனையை வைத்து ஒரு அருமையான பதிவு... உங்கள் எழுத்து நடை, நல்லா இருக்குதுங்க.

11 October 2010 at 11:31

அந்த doctor அத தடவி குடுத்தாளாம்- "ஒண்ணுமில்ல"ன்னு! அப்புறம் பேசாத இருந்துதாம்!

பாவம் வாயில்லா ஜீவன்!

11 October 2010 at 18:24

உங்கள் எழுத்திலேயே ஜீவகாருண்யம் மிக்க ஒரு அன்பான அம்மாவையும்,உங்கள் அப்பாவையும், கொஞ்சம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் உங்களையும் என்னால் காணமுடிகிறது. துப்பாண்டி உங்கள் அன்பிலேயே வெகு விரைவில் குணமாவான்!..:)

14 October 2010 at 22:16

@SK...

thanks!

15 October 2010 at 20:21

@parthasarathy...

i ve always used- Kaal Kaal....

:) thoniththu, ezhuthanumnu... summa irunthaa thaaney- athu ethaanum pannindey irukku!

15 October 2010 at 20:21

@kalyan..

thanks!

15 October 2010 at 20:22

@chithra...

thanks! :)

15 October 2010 at 20:22

@rishabhan..

unmai!

15 October 2010 at 20:22

@thakkudu...

unmai... avan ippo sari yaanathu mattumilla... cup board-la pootti vechchirukkara avan saappaada thedi thirudi thinnundum irukkaan!

15 October 2010 at 20:23
This comment has been removed by the author.
21 October 2010 at 21:09
This comment has been removed by the author.
21 October 2010 at 21:25

கேகய மகாராஜா போல , இந்த அம்மாவுக்கும் பூனை பாஷை புரியும் போலருக்கு ; அதுகள் behaviour ர பார்த்தா துப்பான்டிக்கும் புஷிக்கும் இடையே நடப்பதாக அம்மா சொல்லும் டயலாக் எல்லாம் சரியாதான் இருக்கு போலருக்கு ! ஏதோ , துப்பாண்டி நன்னா குண மாயிட்டதுல எனக்கு பரம சந்தோசம் ...
மாலி.

21 October 2010 at 21:28

@mawley....

neeyum ammavum atha thaangara thaangalla athu gunamaagalennaathaan aachcharyam!

21 October 2010 at 21:35

அந்த சிறுசுக‌ள் வ‌ழந்துடுத்தா?
நாய்க‌ள் வ‌ழ‌க்க‌ற‌வாளைத் தெய‌வ‌மா நினைக்குமா! ஆனா இந்த‌ பூனைக‌ள் தன்னையே அப்ப‌டி நினைச்சுகுமாம். அவ‌ஸ்தைப் படும் போது எது எப்ப‌டீன்னாலும், ம‌ன‌சுக் க‌ஷ்ட‌ந்தான்.

25 October 2010 at 21:37

@vasan...

nijam thaan... thuppaandi ku naalukku naal romba vishamam jaasthi aakarathu thaan!
enna panna? namma kitta vanthuttaan.. vida thaan mudiyumaa enna?

26 October 2010 at 19:44

Superb. You've got a wonderful story-telling ability. Takes along one to your point of view. I feel as if I am seeing it happening right before me. :-)

Keep up the nice work. :-)

4 November 2010 at 14:19

@ ramm..

:) thanks!

4 November 2010 at 20:06

Post a Comment