"ஊர்மக்கள்"
எதப்பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும்! டி.வி. ல "ஓம் நாம ஷிவாய" பாத்துட்டு ஒரே பக்தி! நடு கூடத்துல சாமி ரூம் லேருந்து உம்மாச்சி படத்தஎல்லாம் எடுத்துண்டு வந்து கூடத்து ல பரத்தி கட்டிண்டு கூத்தடிச்சுண்டுருக்கு. கேட்டா பூஜ பண்ணரதாம்! ஏதோ ஒரு episode ல ராவணன், ஷிவனுக்கு கர்பூரமெல்லாம் காட்டி, பாட்டு பாடி பூஜ பண்ணறத பாத்துடுத்து. அவ்வளவுதான்- புடிச்சுண்டுடுத்து!
வாங்கின கர்பூரமெல்லாம் காலி! எல்லாத்தியும் கொளுத்தி போட்டு- மேல-கீழ பட்டு சுட்டுதுன்னா "அம்மே-அம்மே"னு நம்புள்ட தானே ஓடி வரணும்கற புத்தி இருக்கணும். அட அத விடுங்கோ! ஆத்துக்கு வரவா யாராது பாத்தா என்ன நெனப்பா? நாலு செலைய வெச்சுண்டு, அதுக்கு அபிஷேகமென்ன, பூவென்ன! ஆனா சும்மா சொல்லப்டாது! வாய முணுமுனுத்துண்டு- ஒரு கைக்கு கீழ இன்னொண்ண வெச்சுண்டு- அழகா தான் பண்ணித்து!
அது என்னமோ தெரியல! எத பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும். அன்னிக்கு யாரோ எங்காத்துக்கு வந்துருந்தா. இவரா, யாரு வந்தாலும் இத கூப்டு- "மாமா/மாமி கு ஒரு பாட்டு பாடி காமி"ம்பார். எல்லாருக்கும் ஒரே பாட்டு தான். எல்லாரும் அத தான் கவனிக்கணும். ஒரு துணிய தலேல சுத்திண்டு அத ribbon வெச்சு கட்டிண்டு "நான் அந்த டி.வி. ல வந்த sheik" ங்கும். அதே துணிய வேற மாறி போட்டுண்டு "பாரதியார்"ங்கும்.
இது 1st std. படிக்கறச்ச- craft miss எதோ கலர் paper எல்லாம் வெட்டி ஓட்ட கத்துகொடுத்தாளாம். கத்ரிகோல வெச்சு வெட்றதுக்கு practice பண்ணறேன் பேர்வழின்னு எம்பொடவலேர்ந்து கொட வரைக்கும் எல்லாத்தியும் வெட்டி வச்சிருந்துது!
இன்னொரு நா எங்கயோ கீழ விழுந்து அடி பட்டு ஒரே அழுக. என்ன பண்ணினன்நேன். "ஸ்ரீநாத் மாதிரி பண்ணினேன்"நுது. என் தங்க புள்ள ஸ்ரீநாத் வினோதமா தூங்குவான், சின்ன வயசுல. அந்த posture அ இது try பண்ணிருக்கு. அத படி கட்ல நின்னுண்டா பண்ணும்? கீழ விழுந்துடுத்து!
இது எல்லாம் நன்னா பண்ணரதேன்னு, அவா school drama ல லாம் சேத்துப்பளா- என்ன வேஷம் நு ஒரு தடவ கேட்டேன். "ஊர்மக்கள்"நுது. அவ்வளவுதான். ஒரு மாசம் அன்ன ஆகாரமில்லாம, ராப்பகலா- class எல்லாம் மட்டம்- practice practice practice தான். ஜெக ஜெக ன்னு பட்டு பொடவைய கட்டி விட்டுருந்தா. இத்தனூண்டு கொழந்தைய அவளோ பெரிய பொடவைல பொட்லமா கட்டியாச்சு! அழகாதான் இருந்துது.
இது எப்படா வரும்-வரும் னு stage ஏ பாத்துண்டு உக்காண்டுருன்தேன்! மீராபாய் கு கல்யாணம் நடக்கறது. அதுல "ஊர்மக்கள்" நாலு பேர் கலந்துக்கறா. அந்த நாலு பேர்ல ஒண்ணு, இது! மைக்க புடிச்சுண்டு, ஒரு ஒத்த வரி வசனம்-
"என்ன இருந்தாலும் மீரா கொடுத்துவெச்சவ. அவ அதிர்ஷ்டசாலி. மீராவின் பாக்யமே பாக்கியம்"
னுட்டு போய்டுத்து. "ஏண்டா இதைத்தானா சிந்து miss உனக்கு ஒரு மாசமா 'நல்ல பாவத்தோட சொல்லும்மா' ன்னு உன்ன திட்டி திட்டி சொல்லி கொடுத்தா"? ன்னு கேட்டேன். அதுக்கு இதெல்லாம் பத்து எங்க கவல? stage ல போய் பேசியாச்சு. அவ்வளவுதான்! ஒரே குஷி!
"எங்கேர்ந்து எடுத்தியோ- அங்கியே கொண்டோய் வை" னு ஒத்தி காலேலேர்ந்து கத்திண்டுருக்காளே! பாவம் இவ ஒத்தி கத்தராளே- அவ சொல்ற பேச்ச கேப்போமே, ஒரு நா நல்ல கொழந்தையா இருப்போமேன்னு இருக்கா? இன்னும் அந்த பூஜ சாமானெல்லாம் எடுத்து வெச்ச பாடில்ல.
ஸ்லோக class note book ல good deeds எழுதும்போது மட்டும் "அம்மா கு இட்லி கு அரச்சு கொடுத்தேன், கால அமுக்கி விட்டேன், வைர மூக்குத்தி வாங்கி கொடுப்பேன்"நு paper கிழிய எழுத தெரியறது...
இது என்னதான் எல்லாம் அழகா பண்ணினாலும், கடேசில எல்லாத்தியும் எடுத்து அடுக்கி வைக்க மட்டும் வர மாட்டேங்கறது. அதுதான் எப்பிடி ன்னு நேக்கு புரியறதில்ல! போட்டது போட்டபடி அப்புடியே கெடக்கு! ஆனா இதத்தான் ஆள காணும்! தேடிப்போய் பாத்தா- வேலைக்காரி துணி தோய்க்கரத உக்காந்து வேடிக்க பாத்துண்டுருக்கு.
மொதல்ல- இந்த surf , brush எல்லாத்தியும் எடுத்து, மேல் தட்டுல ஒளிச்சு வெக்கணும்!