அத்தி  

Posted by Matangi Mawley


"...அக்காவுக்கு வரிசையா தங்கைகள். அவா எல்லாரும் அக்காவாத்துல தான் வளருவா. So, அவா எல்லாரும் 'அத்திம்பேர்'- 'அத்தி'-'அத்தி' ன்னு கூப்டுவா. அதனால தெரு முழுசுக்கும் அவர் "அத்தி". எங்க அப்பாவுக்கும் 'அத்தி', எனக்கும் 'அத்தி'.!..."

அப்பா எனக்கு எப்படி ஒரு 'Idol'ஓ- அது போல 'அத்தி'- அப்பாவினுடைய 'Idol'. அப்பா அத்தியைப் பற்றி பேசாத நாளே கிடையாது. அவர் சாப்பிடும் பெரிய வெள்ளித்  தட்டு முதல்- நெற்றியின்  கோபி சந்தனம் வரை, எல்லாமே அத்தியின் ப்ரபாவம் தான்... நான் அத்தியைப் பார்த்தது கிடையாது. பார்க்காத ஒன்றினைப் பற்றிய கதைகளில் தான் சுவை அதிகம்- என்பது எனது கருத்து. கற்பனையில் அத்திக்கு ஒரு உருவம் கொடுத்து, அப்பாவின் வர்ணனைகளிற்கேர்ப்ப- அந்த உருவத்திற்க்கு ஒரு தன்மை கொடுத்திருப்பேன்- சிறு வயதில். அவரைப் பற்றி கதைகள் கேட்கும் பொழுது. இன்று அப்பா- அத்தியின் ஒரே ஒரு புகைப்படம் எங்கோ இருப்பதாகச் சொன்னார். அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

"...Very practical man, அத்தி. யாரோ ஒருத்தர் ஆத்துக்கு ஒரு தடவ போனவர். அவருக்கு letter எழுதணும். 'Bus stand பக்கம் ஸ்ரீனிவாசன் தெரு.  பச்சை கேட் வீட்டிற்கு பக்கத்து வீடு'ன்னு address எழுதுவார். கேட்டா 'post man க்கு வீடு தெரியணும்- அவ்வளவுதானேடா'- அப்டீம்பார். அக்காவோட மாமா வக்கீல் குமாஸ்தாவா இருந்தார். அப்பல்லாம் 'வக்கீல் குமாஸ்தா' ன்னா ரொம்ப ஒசத்தி. எதோ 'point எடுத்து கொடுத்தார்- Justice Wallace ஏ பாராட்டினாராம்' ன்னு எல்லாம் சொல்லுவா... அவருக்கு பேனா லேர்ந்து ink எல்லாம் ஒழுகி கையெல்லாம் மையா இருக்கும்--  அப்பல்லாம் எல்லா பேனாவும் அப்படிதான் ஒழுகும்.  --அத்தி சொல்லுவார்- 'நீங்க சம்பாதிக்கறதே பேனாவினால தான். நல்லதா வெச்சிக்கக் கூடாதோ'- அப்டீன்னு. ஒரு film- - photo film ஒண்ண  எடுத்து- அவர் பேனாவோட கழுத்துக்கு கீழ சொருகி ஒழுகாத படி பண்ணிக் கொடுத்தார், அத்தி. தந்தி அனுப்பணும்னா 8 வார்த்தைக்கு முக்கால் ரூபான்னா 12 வார்த்தைக்கு ஒரு ரூபாய் ரெண்டு அணா-ன்னு correct ஆ பணம் எடுத்து வெச்சிப்பார்".

"சனிக்கிழமையானா தலைலேர்ந்து கால் வரைக்கும் எண்ணைய தடவிண்டு, ஒரு கோமணத்தையும் கட்டிண்டு வசல்லேர்ந்து கொல்ல வரைக்கும், குறுக்கையும் நெடுக்கயுமா அலைஞ்சுண்டு இருப்பார். அது ஒரு மணி நேரம் ஊரணும். அத சொல்லறதில்ல அப்படி... ஆனா 'எண்ண உள்ள போய்ட போறதோ.?.. இதுகள் சொன்னா கேட்கரதில்ல- ஜடம்' அப்டீன்னு மாமிய- அக்காவ திட்டிண்டே  உலாத்திண்டு இருப்பார். அக்கா அதெல்லாம் கண்டுக்க மாட்டா... 'கிடக்கு போ...' அப்டீன்னுட்டு எண்ணைய காச்சி வெச்சுடுவா.. தேச்சிண்டு ஆகணும்... கொல்லைல ஒரு தொட்டி நிறையா வெந்நீர் போட்டு வெச்சிருப்பார். நன்னா குளிப்பார். க்லுப்தமா சனிக்கிழமை எண்ண தேச்சுப்பார். ஆனா தனக்கு இஷ்டமில்லைன்னாலும் ஏதோ மாமி சொல்றதுக்காக தேச்சிக்கராப்ல பாவலா பண்ணிப்பார்!"

"..குழந்தைகளோட  குழந்தையா  நன்னா  ஈடு  கொடுப்பார்.. Encourage  பண்ணுவார். கிணறு முழுகரவன பார்த்து நானும் கிணறு  முழுக .. இவர் தான் எனக்கு support. அவாத்து கிணறு ரொம்ப famous. 'ஒரு ஆள் ஆழம்' ன்னு சொல்லுவா. ரெண்டு-மூணு  தெரு ல - இருக்கிற எல்லாரும் இந்த கிணற்றிலிருந்து தான் குடிநீர் எடுத்துண்டு போவா. நான்   practice-காக முழுகும் போது ,எங்க அம்மா வந்தான்னா.. 'அம்மா வரா டோய்'... ன்னு warning கொடுப்பார் ! சின்ன  பசங்க  மாதிரியே .! அம்மா பாத்துடுவா. என்ன பண்ணறது? இந்த அப்பாவுக்கு தெரியாம cigarette பிடிச்சா- வாய்ல இருக்கற புகைய வெளீல விட்டு தானே ஆகணும்... அத மாதிரி தான். எங்க அம்மா அவர indirect ஆ திட்டுவா. 'குழந்தைகள் இருந்தா தானே குழந்த அருமை தெரியும்'ன்னு. (அவளுக்குத்தெரிந்தது  அவ்வளவுதான்). என் handwriting அப்போலேர்ந்தே மோசமா தான் இருக்கும். அத்தி 'உன் handwriting இவ்வளவு மோசமா இருக்கேடா' அப்டீம்பார்... எங்க அம்மா உடனே- 'எல்லாம் தலையெழுத்து நன்னா இருந்தா போரும்'- அப்டீம்பா".

"அத்தி, பக்கா Rationalist. ஆனா அவருடைய இந்த முகம் எல்லாருக்கும் தெரியாது... For example, 'குழந்தைகுட்டி -இல்லாத பால்ய-விதவை -னா  அவளுக்கு புனர் -விவாஹம்  பண்ணி வக்கர்து  தான் சரி'- ன்னு  என்கிட்ட ஒரு private - conversation போது அத்தி  சொல்லிருக்கா... அதே போல  அத்திக்கு 'பக்தி-பைத்தியம் ' கிடையாது.. எங்க ஊர் பெரிய கோவிலுக்கு தினமும் போறவா உண்டு. கோவில்ல உற்சவத்தின் போது ஒரு நாள் அத்தியோட உபன்யாசம் நடக்கும். அன்னிக்கு  கோவிலுக்குப் போரதோட சரி. மீதி நாட்கள்ளாம் போகமாட்டார். 'அதே சிலையை தினம் தினம் பாக்க என்ன இருக்கு? மார்கழி மாத குளிரில் லொக்கு லொக்கு ன்னு இருமிண்டு போய் (விச்வ  ரூப)தரிசனம் பண்ணிட்டு, பெருமாளுடைய கல்லிழைத்த மாங்கா  மாலையை பாத்தியோடி -ன்னுதான் பேசுங்கள் ( ! )' ..என்று  பாமர பக்தியை விவரிப்பார். எங்க அம்மா சொல்லுவா, அவர பத்தி- 'படிக்கறது ராமாயணம்-இடிக்கறது பெருமா கொவில'ன்னு".

 "அத்திக்கு சம்பாத்தியமே இராமாயண ப்ரவசனம் தான். Sanskrit வாத்தியாரா இருந்து retire ஆனார். Finlay School ஓ- ஒரு school ல. 9:20 க்கு கார்த்தால டான்னு கிளம்புவார். Speed ஆ நடப்பார். "காந்தி" சினிமா ல Dandi யாத்ர போது அவர் நடப்பாரே- அத மாதிரி".

"உங்க ஊர்ல  எப்படி 'சேர்த்தி' உத்சவமோ அதுக்கு equivalent எங்க ஊர்ல 'ஏக சிம்மாசனம்'. அதுக்கு 'couple' ஆ கோவிலுக்கு போணும்னு ஒண்ணு உண்டு. எங்க அம்மா கூட எங்க அப்பாவ கெஞ்சி- அவர அழைச்சிண்டு போக சொல்லுவா. எங்க அப்பாவோட சட்டைய சுருட்டி கைல வெச்சிண்டு அவர் பின்னாலேயே நடந்து போவா, என் அம்மா. அப்பா- அங்கவஸ்திரம் போட்டுண்டு கொவில்லேர்ந்து கிளம்பும்போது அம்மா கிட்டேர்ந்து shirt அ வாங்கி மாட்டிண்டு office க்கு போவார். அத்தி அதெல்லாம் எதுக்கும் போக மாட்டார். பெரியவர் ஒரு குருக்கள் ஊர்ல இல்ல. சின்ன பையன்- அவன்தான் பிள்ளையாருக்கு பூஜ பண்ணனும். பிள்ளையாரோட வேஷ்டி அங்க சன்னதிக்குள்ள காயும். அத எம்பி எடுக்கப் போய் பையன் விழுந்துட்டான். 'பிள்ளையார் மேலேயே ஏறி எடுக்க வேண்டியதுதானேடா...'- அப்டீம்பார்".

"... 'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா... ரகோத்தமனில்லை... ன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறான் பாரு.. மாத்வனோல்யோ... அது அவ்வளவுதான்...' அப்டீம்பார். அதே போல ஸ்த்ரீ ஜனங்களுக்கும் intellectual flowering ஏற்படலாம்- அப்டீங்கரதுலயும் நம்பிக்கை கிடையாது அவருக்கு.... 'அதுகளுக்கு என்ன தெரியும்' அப்டீம்பார்! However disturbing may this argument be to you- but  you know, male chauvinism is after all part of our traditional intellectualism"!

"அத்தியோட உபன்யாசத்துக்கு  poster லாம் நான் தான் எழுதுவேன். Carbon paper வெச்சி அழுத்தி- ரெண்டு மூணு copy வராப்ல எழுதி- சாத பருக்கைய வெச்சு- தெருல அங்கங்க நான் தான் போய் ஓட்டிட்டு வருவேன். இத மாதிரி 'மஹாலிங்க ஸாஸ்த்ரிகளுடைய "வால்மிகி ராமாயணம்"- உபன்யாசம்..." ன்னு இருக்கும்- அந்த notice ல. அவர் பேரு மஹாலிங்க ஸாஸ்த்ரி. இராமாயண ப்ரவசனம் பண்ணரதுனால அவர் பேரே 'இராமாயண ஸாஸ்த்ரிகள்' ன்னு ஆயுடுத்து. 'ராமாய ராம பத்ராய..' அந்த ஸ்லோகம் தான் notice ல மேல எழுதியிருக்கும். 'வால்மிகி ராமாயணம்'- அதுலையும் ஒரு விஷயம் இருக்கு. அப்போலாம் சிவானந்த விஜயலக்ஷ்மி, எம்பார்- இவாள்லாம் ரொம்ப famous. சிவானந்த விஜயலட்சுமி ங்கரவா "த்ரிவேணி ராமாயணம்" ன்னு சொல்லுவா. 'கம்பர்-வால்மிகி-துளசிதாஸ்'- மூணு போரையும் compare பண்ணி சொல்லுவா. அவா குரலும் ரொம்ப நன்னா இருக்கும்- பாக்கவும் அழகா இருப்பா- அலை மோதும் கூட்டம். அக்கா கூட அத்திகிட்ட சொல்லுவா. 'நீங்களும் இந்த திருக்குறள்- கம்பர போல எதையாவது படிச்சுட்டு ப்ரவசனத்துல சேத்துக்கலாமோன்னோ' அப்டீம்பா. அவருக்கு திருக்குறள் லாம் ஒண்ணுமே தெரியாது. அவர் சொல்லுவார் அக்கா கிட்ட- 'இதுல -வால்மீகி -ல இல்லாத அழகா? இதுலேர்ந்து மீண்டு வர முடியாது... இத முடிச்சுட்டுன்னா நீ இன்னும் ஒண்ணுத்துக்கு போகணும்...' அப்டீம்பார்... ஒரு தடவ அப்பு sir உம் இவருமா 'ப்ரதி ஸ்லோக ராமாயணம்' சொன்னா... அதாவது ஒவ்வொரு ஸ்லோகமும் சொல்லுவா. 1 1/2--2 வருஷமா சொன்னா".

"காலம்பர  நின்னுண்டு சந்தன கல்லுல சந்தனம் அரைப்பார். அப்போ 'ஹரே ராம',- ன்னுசொல்லிண்டே அரைப்பார். அப்போலாம் எனக்கு கொஞ்சமும் ராகமெல்லாம் தெரியாது. ஆனா நான் அவர் கிட்ட 'கல்யாணி ல சொல்லுங்கோ அத்தி... மோஹனத்துல சொல்லுங்கோ...'ன்னு சொல்லுவேன். அவர் அதுக்கேத்தாப்ல ராகத்த மாத்துவார். குரல் ரொம்ப நன்னா இருக்கும்".

"அத்தி ராமாயணம் சொல்ல போறப்போ ஒரு குதிர வண்டியோ மாட்டு வண்டியோ வரும். நானும் போவேன் அவர் கூட. பாதி உபஞாசத்துல stage பின்னாடி போய் படுத்து தூங்கிடுவேன்... முடிஞ்சப்ரம் 'வாடா மாலி'ன்னு என்ன எழுப்பி அழச்சுண்டு போவா. சில சமயம் வெளியூரெல்லாம் போவார். சப்தாஹம்-நவாஹம் ன்னுலாம் அங்கேயே இருப்பார். அவா நடத்தரவா- நறையா வேஷ்டி, புடவையெல்லாம் கொடுப்பா. கணையாழி கொடுப்பா. தங்கத்துல ஒரு chain கொடுப்பா. அக்கா எல்லாத்தையும் பீரோ ல வைச்சுப்பா. அக்கா தான் செலவெல்லாம் பாத்துப்பா... 'நீ பாட்டுக்கு செலவு பண்ணறியே- நான் retire ஆயாச்சு தெரியுமோ'- அப்டீம்பார் அத்தி. 'அதான் நீங்க அதுக்கப்றம் நன்னா சம்பாதிக்கறேளே...' அப்டீம்பா, அக்கா. ஒரு Magistrate- அத்தியோட friend. அவர் தான் "Financial Assistance to Eminent Sanskrit Scholars" ன்னு ஒரு central government scheme ஏதோ இருக்குன்னு சொல்லி, அதுலேர்ந்து அத்திக்கு pension வராப்ல ஏற்பாடு பண்ணி கொடுத்தார். அத்தி போனதுக்கப்றம் அக்காவுக்கும் அது வந்துண்டு இருந்துது".

"1976-80 குள்ள எப்போயோ தான் அத்தி போனார். 82 வயசுக்கு மேல இருக்கும் அப்போ அவருக்கு. நான் வேலைக்கு போனதுக்கப்றம் வருஷா வருஷம் ராம நவமிக்கு அவருக்கு 10 ரூபாய் money order அனுப்புவேன். ஒரு தடவ நான் பெரியவனா வேலைல இருக்கும் போது அவர பாக்க போயிருந்தேன். படுத்த படுக்கையா இருந்தார். 'நம்ப மாலி வந்திருக்கானே'- அப்டீன்னார்"...

"அவாத்திலையே தான் எப்போபாரு நான் சின்ன வயசில இருப்பேன். அத்தி சாப்டும் போதெல்லாம் நான் உக்காந்து எதாவது பேசிண்டே இருப்பேன். அப்படியெல்லாம் இன்னொருத்தர் ஆத்துக்கு போகக்கூடாது-சாப்டும்போது இருக்கக்கூடாது அப்டீன்னு எல்லாம் தெரியவே தெரியாது எனக்கு. அவாளும் ஏதோ ஒரு குழந்த நம்பாத்துலேயே இருக்கே ன்னு நான் அங்க இருந்தத விகல்பமா நினைக்கல... அது ஒரு காலம்...".

அப்பா-அம்மா வின் சின்ன சின்ன சம்பாஷணைகளை கூட கவனிக்க முடியாத- கவனிக்க சமயமில்லாத இன்றைய காலத்தில்- அப்பா-அம்மாவையும் தாண்டி ஒருவரின் ப்ரபாவம்  அந்த சிறு வயதில் என் அப்பாவிற்கு கிடைத்தது. அத்தியின் தாக்கம்- அப்பவிர்க்கு மட்டுமல்ல, அப்பாவின் மூலமாக எனக்கும் தான்... உரு இல்லாத அவரது முகம். அதை உன்னிப்பாக கவனித்தால், அதில் தெரிவது என் அப்பாவாக இருக்கலாமோ...?

This entry was posted on 19 May, 2013 at Sunday, May 19, 2013 . You can follow any responses to this entry through the comments feed .

12 comments

The influence of ATHTHI on Mali உங்கள் எழுத்துக்களில் நன்றாக வெளிப்படுகிறது. அவருடைய எல்லாச் செயல்களும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போய் இருக்கவேண்டும்.சில மனிதர்களின் குணாதிசயங்களைக் கூறும் நல்ல பதிவு.

19 May 2013 at 16:01

நல்லதொரு பதிவு... ஆனால் வட்டார தமிழில் இருப்பதால் எனக்கு பாதிக்கு மேல் புரியவில்லை.. பொது தமிழில் மொழி பெயர்த்து இன்னொரு பதிவு போடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

19 May 2013 at 20:19

சுவாரசிமான நினைவுகளை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

20 May 2013 at 08:35

அழகான அத்தி.
அதைச் சொல்ல அழகான மாதங்கி.
அநேகமாக அனைவருக்கும் ஏதாவது சித்தப்பாவோ,மாமாவோ
கட்டாயம் இருப்பார். அப்பாவிடம் இல்லாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கும். அதுக்காக நம்ம அப்பா தாழ்த்தி இல்ல.அப்பாவே மதிச்ச சித்தப்பாவைத்தான் நாமும் அன்பு கொண்டாடுவோம்.அருமையான பகிர்வு மாதங்கி.

20 May 2013 at 08:55

என்ன சொல்றதுன்னே புரியல. அத்தி கேரக்டர் அப்படியே மனசுல இப்ப ஊஞ்சலாடுது. உங்க ரைட்டிங்க் பத்தி இனிமேல நான் என்ன சொல்ல.. சொல்ல வந்ததை அழகா..சரளமா சொல்லி.. கல் நெஞ்சன் கூட ரசிக்கிற மாதிரி பண்ணிடறீங்க.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. முடிச்சப்புறமும் அடி நாக்கு தித்திச்சுண்டு..

22 May 2013 at 13:16

அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

True !

'ஏக சிம்மாசனம்' aahaa இந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்கு மன்னார்குடி காரப்பங்காடு எல்லாம் ஞாபகம் வருது !

22 May 2013 at 13:20

'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா... ரகோத்தமனில்லை

திருக்கோவிலூர்ல அப்படித்தான் போட்டிருக்கிற ஞாபகம்.. ரகூத்தம ஸ்வாமிகள் பிருந்தாவனம்னுதான் போட்டிருக்கும்

22 May 2013 at 13:26

மிக ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் மாதங்கி.. மாதங்கி டச்!

27 May 2013 at 00:49

உங்க‌ளின் அப்பாவின் அத்தியால் எங்க‌ளுக்கு உங்க‌ளிட‌மிருந்து கிடைத்தது ஒரு அரிய‌(அறிய‌‌) "அத்திப்பூ"

27 May 2013 at 17:07

//when did the blogger's meet happen sir? has it already happened? or is it yet to happen? when and where if so--? could you pls let me know? can any one attend?//

Please refer the link below

http://www.philosophyprabhakaran.com/2013/08/blog-post_27.html

27 August 2013 at 19:25

பதிவர் சந்திப்பு சென்னையில்
செப்டெம்பர் முதல் நாள் நடைபெற உள்ளது
அதற்கான லிங்கை இணைத்துள்ளேன்
தாங்கள் கலந்து கொண்டால் அதிகம் மகிழ்வோம் http://www.amsenthil.com/2013/08/blog-post_27.html

27 August 2013 at 19:48

Thanks Ramani sir and school paiyan... :)

28 August 2013 at 20:18

Post a Comment