இதுக்கு இதே வேலையா போச்சு! எங்கயாவது போய், யார் கிட்டயாவது வாலாட்ட வேண்டியது. அவா குடுக்கற அடி, கடியெல்லாம் வாங்கிண்டு இங்க வந்து "மியாவ் ...." ங்க வேண்டியது! கழுத்து கிட்ட-லாம் ஏதோ கடி. முன்ன போல இல்ல, துப்பாண்டி. ஆகாரம் போறல. நாங்க குடுக்கரதையாவது திங்கணும். மேல் மாடியாத்து "Sunday Special" சாப்பாடு தான் வேணும்-னா நான் என்ன பண்ண முடியும்? நாள் முழுக்க அங்க நின்னுண்டு கத்தி என்ன ப்ரயோஜனம்? ஏதாவது தேரித்தா? திரும்பி வால தூக்கிண்டு இங்க தானே வந்த!
அதுவே இந்த Bushy -ய பாரு! எவ்வளோ சமத்து! "டா"ன்னு வந்து கேக்கறது. கொடுக்கறத சாப்படறது. கடிகாரத்த முழுங்கினாப்ல நாலு-ன்னா நாலு, ஆறு-ன்னா ஆறு மணிக்கு வந்து கேக்கும். 4:10 கு வந்து அதட்டும். என் ப்ரமையோ என்னவோ- கடிகாரத்த வேற காட்டி-காட்டி அதட்டராப்ல தோணும்.
கொஞ்ச நாளா பத்தியம் வேற. முறுக்கு- cup cake லாம் நப்பாச பிடிச்சு திங்கற பழக்கதெல்லாம் விட்டுடுத்து, Bushy! அதோட "புளியங்கொட்டை" cat food மட்டும் தான். வயறு வேற ஒரு தினுசா இருக்கு. முன்ன மாதிரி gate ல இடுக்குல நுழைஞ்சு வர முடியறதில்ல. வயறு இடிக்கறது. வெளீலேர்ந்து குரல் கொடுக்கும். Gate அ தொறந்து விடணும்.
இதுகிட்ட சொன்னா கேக்கறதா பாரு! அந்த "Pet Shop" கடைக்காரி என்ன சொன்னா? "குட்டி போட்டா அளகா இருக்கும். 2 மாசத்துக்கு ஒரு தடவ குட்டி போட்டுகிட்டே இருக்கும்"னு சொன்னாளா இல்லையா? பூனை பண்ணையா போய்டும் நம்பாம். அத இப்போவே எங்கயாவது விட்டுட்டு வந்தா தேவல. ஆனா பாவம், சாப்ட ஏதாவது கிடைக்குமோ, கிடைக்காதோ! ஸ்பஷ்டமா "ங்கா..." ங்கும், என் முகத்த பாத்து!
அது வயறு, அத விட பெருசா இருக்கு! அத தூக்கிண்டு அத்தன படி ஏறி "ஜிங்கு-ஜிங்கு"ன்னு ஓடி வரும்! பயம்மா இருக்கும், எனக்கு. அன்னிக்கு ஒரு நாள், அந்த கொழுப்பெடுத்த நாய் ஒண்ணு- Bushy ய பாத்து "உர்..." னு உறுமறது. பாவம் Bushy! எங்காத்லேர்ந்து அடுத்தாத்து மதில்- அத்தன உயரத்துல தாவறது! கீழ-கீழ விழுந்து ஏதாவது ஆச்சுன்னா?! என்ன தைரியம்!
ஒரு சில சமயத்துல, ரெண்டு நாய் படுத்துண்டுருக்கும். அதுகளுக்கு இடுக்குல பூந்து- இது வருது-ன்னு அந்த நாய்கள் கவனிக்கரதுக்குள்ள ஆத்துக்கு ஓடி வந்து "ங்கா.." ங்கும்! இந்த துப்பாண்டி- "வே...ஓ...ங்...வ்..." ன்னு ஒரு வித்யாசமா ஒரு குரல் கொடுக்கும். நம்ப பொய் நாய்கள விரட்டி விடணும். அதுகள் போயிடுத்தா-ன்னு 5 நிமிஷம் நின்னு பாத்துட்டு- அப்புறம் ஜம்முன்னு மினுக்கிண்டு வரும்!
ஈஷிக்கரதோட சரி! காரியத்துல ஒண்ணும் காணும். ஆனா Bushy- "கொஞ்சரியா? கொஞ்சிக்கோ... தூக்கரியா? தூக்கிக்கோ... ஆனா எல்லாம் பண்ணினப்ரம்- ங்கா- கொடுத்துடு..." ன்னு காரியத்துல தான் இருக்கும், அது கண்ணு!
மே 1st . நானும் வெளீல போயிருந்தேன். இவரும், எங்கயோ "லோ-லோ". இது மட்டும் தான் இருந்துது, ஆத்துல. Bushy ஒரே பொலம்பல். இதுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. ஆச்சு குட்டி போட போறது போலருக்கு. கொஞ்ச நாளாவே இடம் பாத்துண்டுருந்துது. Shelf குள்ள பொய் உக்காந்துண்டு வெளீல வரவே மாட்டேங்கறது! அத எப்படியோ வெளீல துரத்தி விட்டாச்சு. ரொம்ப நேரம் ஆத்து வாசல்ல நின்னுண்டு கத்திண்டே இருந்துது. அப்புறம் போய்டுத்து. எனக்கு வேற ஒரே கவலை!
அடுத்த நாள்- பழைய படி ஆய்டுத்து, வயறு. "ங்கா"- ங்கறது! புடுங்கி எடுத்துடுத்து. அதோட வயிர நிரப்பி அனுப்பினா போய்டும்-னு ஆய்டுத்து. அது குட்டி போட்டுதா? இல்லையா? ஒண்ணும் புரியல.
கொஞ்ச நாளா- சாப்டு-சாப்டு வெளீல ஓடி போய்டறது! குட்டிய எங்கயோ பத்தரமா ஒளிச்சு வெச்சுருக்கு போலருக்கு. இவருக்கு ரொம்ப தேவை! Bushy ய தூக்கி வெச்சுண்டு கொஞ்சராராம்! "உன் குட்டியலாம் அழைஷுண்டுவாடா... பாக்கணும் னு ஆசையா இருக்கு..." ன்னு ஒரே கொஞ்சல்.
அன்னிக்கு சாயந்தரம். எப்படி வந்துது? எப்ப வந்துது? ஒண்ணும் தெரியல. ரெண்டு குட்டிய தூன்க்கிண்டு வந்து, ஒரு மர பலகைக்கு இடுக்குல போட்டுருக்கு. இது வேற ஒரே "தை-தை"... "Photo எடுக்கறேன்.... Facebook ல போடறேன்..." ன்னு! "செத்த அமைதியா இரு"ன்னா கேக்கரதுகளா பாரு, ரெண்டும்! அது எத்தன கஷ்ட பட்டுதோ! இன்னும் கண்ணே சரியா தொறக்கல. நடக்க கூட தெரியல, அந்த குட்டிகளுக்கு! குரல் கூட எழும்பல! ஒண்ணு- துப்பாண்டி, Bushy-யாட்டமா கருப்பு-வெள்ள. ரொம்ப அழகா இருக்கு! பாட்டிய கொண்டுருக்கு... இன்னொண்ணு, அட்ட கரி! அது கண்ணு மட்டும் தான் தெரியறது! மீதி சமயத்துல அது இருக்கறதே தெரியல. அதுவும் அழகு தான்!
ரெண்டுத்தையும் கொண்டு வந்து இங்க போட என்ன அவஸ்த பட்டுதோ- Bushy! ஒவ்வொரு குட்டியா, ரெண்டு தடவ- மதில தாவணும், மாடில ஏறணும்! "ங்கா"... ன்னுது. தடவி கொடுத்தேன். அமைதியா செத்த நேரம் மூச்சு வாங்க படுத்துண்டுருந்துது. அதுவே குட்டியா இருக்கு! அதுக்கு ரெண்டு குட்டி! பாவம்... "ங்கா" தானே? தோ தரேன்...
PS: குட்டிகள் விளையாடற video பாக்க-- click here.
குட்டிகளை சுவீகரிக்க இஷ்ட பட்டால்- பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
14 comments
பூனையே தமிழில் ஒருவேளை இடுகை எழுதினால் இப்படித்தான் இருக்குமோங்கற மாதிரின்னா இந்த இடுகை இருக்கு.
குட்டிகள் தீர்க்காயுஸா இருக்கட்டும் அம்மாக்காரியோட.
//அதுவே குட்டியா இருக்கு! அதுக்கு ரெண்டு குட்டி! பாவம்... "ங்கா" தானே? தோ தரேன்...//
அழகான குட்டிப்பூனை போன்ற பதிவு.
பாராட்டுக்கள்.
//பூனையே தமிழில் ஒருவேளை இடுகை எழுதினால் இப்படித்தான் இருக்குமோங்கற மாதிரின்னா இந்த இடுகை இருக்கு.//
திரு. சுந்தர்ஜி வெகு அழகாகச் சொல்லிவிட்டார்.
[சுந்தர்ஜியா சும்மாவா!]
very cute as usual. good video coverage as well.
தன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே வைத்து புஷ்ஷியை போஷித்து வருவது எழுத்தில் அருமை..பாலுக்கும் உணவுக்கும் ஏங்கி கேட்கும் ..ங்கா படிக்க படிக்க பூனைக்குட்டியே நேரில் வந்த உணர்வு..
வீடியோ அருமை... அதன் அறைக்குள் தமிழ் புத்தகமெல்லாம் இருக்கிறது...
உங்களுடன் நேரில் உரையாடிய மாதிரி ஆத்மார்த்தமா இருக்கு பதிவு! உங்கள் நல்ல மனம் வாழ்க!
வீடியோ டாப்!!
புஷி எபிசொட் குஷியாக இருந்தது. வீடியோ ரொம்ப நல்லா இருந்தது. குட்டி போட்ட பூனைகிட்ட போனா கடிச்சுடும். ஜாக்கிரதை! ;-)
மியாவ்னு ஹாப்பியா கத்தினேன்.. குட்டிப் பூனை அழகைப் பார்த்து..
பூனாய்ச்சி சொல்ல சொல்ல எழுதினீங்களா ? இப்படி எழுத பூமதிரி மனசும் தயையும் ரொம்ப வேணும்.. வாழ்த்துக்கள் மாதங்கி
இந்த 'இது'வை நல்ல நாள்லையே கைல பிடிக்கமுடியாது, இந்த லக்ஷணத்துல இன்னும் 2 குட்டியா? அப்பாவுக்கும் பொண்னுக்கும் குஷிதான் இனிமே!!..:))) செத்தநாழி புஷியோட குஷியா சம்சாரிச்ச மாதிரி இருந்தது இதோட பதிவு...:P
மியாவ்....
நல்லா இருக்குனு "அதோட" மொழில சொன்னேன்...:))
// மேல் மாடியாத்து "Sunday Special" சாப்பாடு தான் வேணும்-னா
ஏதோ பாவம். கொஞ்சம் அவாகிட்ட சிபாரிசு பண்ணி special சாப்பாடு வாங்கி குடுக்கறதுதான? அப்படியே நீயும் taste பண்ணலாம். :-)
முறுக்கு திங்கற பூனையை இப்போ தான் பாக்கறேன் (கேக்கறேன், படிக்கறேன்). :)
அழகான வர்ணனை. நேர்ல பாக்கறா மாதிரி இருக்கு.
குட்டிகள் அழகோ அழகு. videoல பாக்கறப்போ பயங்கர (!) cuteட்டா இருக்கு. என் பொண்ணு ரொம்ப நாளா தை தைன்னு குதிச்சு kitty வாங்கி குடுன்னு கேட்டுண்டு இருக்கா. :)
Very nice! :-)
good one..:)
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
20 hours ago
-
1 day ago
-
1 week ago
-
1 week ago
-
4 weeks ago
-
4 weeks ago
-
4 weeks ago
-
1 month ago
-
7 months ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
2 years ago
-
3 years ago
-
3 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".