இது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, "மாதங்கி மாலி" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு "வல்லியசிம்ஹன்" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல "பெயர் காரணம்" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் "நாமளும் எழுதணும்" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.
Mr. X: பேரு?
நான்: மாதங்கி
Mr. X: மாதவி-யா?
நான்: மாதங்கி-மாதங்கி...
Mr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா?
நான்: மா-த-ங்-கி, sir...
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர்! Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல! 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.
"தில்லானா மோகனாம்பாள்" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. "என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா!
எனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம "குறிஞ்சி மலர்" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த "மாதங்கி" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு! (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம்! "நல்ல வேள" ன்னு நினைச்சுப்பேன்...)
உலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். "சித்ரா-பௌர்ணமி", "புத்த பூர்ணிமா", "சித்ர ஸ்வாதி"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு "தோ- இருக்கேன்-இருக்கேன்" ங்கரதுகள்! எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....
சின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் "மாடங்கி" ("Mod-dong-gee") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும்! School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல "pause" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்!
நாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. "மாதன்கி" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு? "போடா-- ! எவ்வளவு ஒசத்தியான பேரு! எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ"? ன்னு அளப்பா! எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்!
Calcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது "perspective" கடைச்சுது. Perspective என்ன perspective? ஒரு புது "கோணம்" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன்! அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். "மாதங்கி" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- "மாதொங்கி"! "மாதொங்கினி" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த "தொங்கலுக்கு" முன்னாடி இந்த "தொங்கல்" எடுபடல.
ஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல "அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்" னு ஒரு பறவைய பத்தி வரும். "மாதங்கி" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு "D" sound use பண்ணுவா- "த" க்கு பதிலா. இல்ல "Ki" சொல்லுவா "Gi" க்கு பதிலா. "மா-த (त)-ங்-கி (गी)" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- "ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.
Blog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் "Matangi Mawley" கடைச்சுது. "Mahalingam" short-form "Mali" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் "Mali" ன்னா "தோட்டக்காரன்" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா "Mali" யோட phonetic spelling-ஆன "Mawley" use பண்ணுவா, sign பண்ண. "Mathangi" ல 'h' எடுத்துட்டு "Matangi Mawley" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.
4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. "மாதங்கி மாலி" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் "எனக்கும் எழுத தெரியறது" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...
Tag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...
45 comments
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர்! Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல! 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.//
நம்ம பெயருக்கும் இதே நிலமை தான். நிரூபன்... நிருபன். இப்படியே குழப்பிடுவாங்க.
தில்லானா மோகனாம்பாள்" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. "என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா!//
ஆஹா.. உங்களின் அத்தியாயம் சீனப் பெருஞ்சுவர் அளவிற்கு நீளமா இருக்கும் போல இருக்கே:))
ஆகா வரலாற்று மனிதர்கள் வரிசையில் உங்களின் வரலாற்றையும் நம்மாளுங்க சேர்த்திடுவாங்க.. ஜாக்கிரதை.
நாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. "மாதன்கி" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு? "போடா-- ! எவ்வளவு ஒசத்தியான பேரு! எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ"? ன்னு அளப்பா! எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பெரும் படும்!//
உங்க பெயருக்குப் பின்னாடி, இப்படி ஒரு பிரளயமே இருக்கா... அப்பாடா. இப்பத் தான் மூச்சே வருகிறது சகோதரி.
Blog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் "Matangi Mawley" கடைச்சுது. "Mahalingam" short-form "Mali" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் "Mali" ன்னா "தோட்டக்காரன்" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா "Mali" யோட phonetic spelling-ஆன "Mawley" use பண்ணுவா, sign பண்ண. "Mathangi" ல 'h' எடுத்துட்டு "Matangi Mawley" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.//
எங்க போனாலும் நம்ம பெயரைப் பொறிக்கிறதிலை ஒரு தனிச் சுகம் என்று தான் சொல்ல வேணும். பள்ளிக் கூடத்திலை படிக்கும் போது மதிற் சுவரிலை பேர் எழுதி வாத்தியாரிட்டை கை வீங்கி கண்டிப் போகும் வரைக்கும் அடி வாங்கின நினைவுகள் இப் பதிவினைப் படிக்கையில் வந்து போனது. நன்றிகள் சகோதரம்.
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா-
......ஹா,ஹா,ஹா,ஹா... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.
மாதங்கி அம்பாளோட பெயர்னு நினைக்கிறேன். படிக்கும்பொழுது பல இடங்களில் சிரிச்சேன்....
தேங்க்ஸ் மாதங்கி மௌலி
நீங்க சித்திரை ஸ்வாதியா?
மாதங்கி யூ ஆர் ஸொ ஸ்வீட்.
சொன்னதும் எழுதின பொண்ணுக்கு என் ஆசிகள்.
மீனாக்ஷி ஸ்தோத்ரத்தில இந்த பெயர் வரும்பா.
எவ்வளவு அழகான பெயர்.
மாதா மரகத ஸ்யாமா மாதங்கினு எல்லாம் வரும்.
ஞாபகம் தான் இல்லை.
ரொம்ப ரொம்ப நல்ல பேர். அதைப் படிச்சுட்டு நான் சிரிச்சு முடிக்கலை. சகல சௌபாக்கியங்களுடன் இருக்க என் ஆசீர்வாதங்கள்.
உங்க பதிவு ரொம்ப நன்னா இருந்ததுபா! கூகிள்ல அடிச்ச முதல் பேரா வரனுமா??..:)lol
வல்லிம்மா வாயால அமோகமான ஆசிர்வாதம் வேற வாங்கியிருக்கேள்! மாமியோட வாக்கு பலிக்கட்டும்!..:) எது எப்பிடியோ ஒரு வழியா பேர் காரணம் எழுதிட்டேள்! வாழ்த்துக்கள் மாதவி...மன்னிக்கவும் மாதங்கி!..:P
ரசித்துப் படித்தேன்!
குழந்தைக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அதைக் கேட்டுட்டு தான் பேர் வைக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்!!
good explanation
'மாதங்கி', சரியாக யாரும் உங்கள் பெயரை உச்சரிக்காத ஆதங்கம்
அழகாய் பதிவில். ஆந்திராவில் இந்த பெயர் கொஞ்சம் பாப்புலர்.
இங்கும் கொஞ்சம் ஐயங்கார் ஏரியாவில் கேட்டு இருக்கிறோம்.
உங்கள் பெயர் தமிழும் ஆங்கிலமும் கலந்து படித்தால் உச்சரிப்புக்கு சவாலாக இருக்கும்... மாடங்கி ...மாதங்கி ...மாடன்கி.....
பெயர் தேர்வு செய்தது ... வைத்தது .. அழைத்தது எல்லாம் நல்ல நகைச்சுவை வர்ணனையாக உங்கள் பதிவு அமைந்தது ...
பெயரும் புகழுமாக இருக்க வாழ்த்துக்கள்....
மாதங்கி! பெயர்க் காரணம் ரொம்பவே சுவாரஸ்யம். ஒரு நாலெழுத்து பேரிலே நம்ம வாழ்க்கையே இல்ல தொங்கிக்கிட்டு இருக்கு.. நாளேலேருந்து உன் பேர் "ஜம்பகா'ன்னு அந்த சுவாமியே சொன்னாலும் ஒத்துப்பீங்களா? எனக்கு எங்கம்மா வச்ச மாதங்கியே போறும்னு தானே சொல்வீங்க?
அது தான் சொந்தப் பேரோட மகிமை மாதொங்கி! கூப் பாலோ நாம்
மாதங்கி
உங்கள் பெயரான மாலி தக்குடு blog இல் பார்த்து உள்ளேன். மஹாலிங்கம் தான் மாலியா?
மாதங்கி என்ற பெயர் ஷ்யாமளா தண்டகம் ஸ்லோகத்தில் வருவது. அதன் வரியை தான் மேலே ஸ்ரீமதி வல்லிசிம்ஹன் எழுதி உள்ளார்கள்.
மத்தவா இந்த பெயரை சரியாக உச்சரிக்கலைகறதுக்காக வருத்தப்பட வேணாம். Unique பெயர் என்று சந்தோசப் பட்டுக்கலாமே?
பெயர்ப் புராணம் சூப்பர் மாதங்கி. (த வை त ன்னு தான் சொல்லியிருக்கேன்)
நடுப்பர நம்ம வைத்தி பத்தி சொன்னீங்க பாருங்க.. இன்னிக்கி எப்படியும் ஒரு தடவை தில்லானா மோகனாம்பாள் பார்க்கணும்... ஜில்ஜில் ரமாமணி. என்ன சிக்கலாரே... சொல்லும் போதே... அடாடா.. மறைந்திருந்து பார்க்கும்....
தஞ்சாவூர் ஜில்லாவா பூர்வீகம்... தாக்குங்க.. காவேரி ஜலத்தோட மகிமை... ;-)))
//சாகம்பரி தேவி//
இது கூட நல்லா இருக்கே மாதங்கி... ஜஸ்ட் கிட்டிங்.... :))
உன்னோட பேர்ல எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம்...யாரும் அவ்ளோ சுலபத்துல சுருக்கி கூப்பிட தோணாது... மது or மாதுனு may be close ஆ இருக்கறவா கூப்பிடுவாளா இருக்கும்... எனக்கு ரெம்ப பிடிச்ச பேர்கள்'ல மாதங்கியும் ஒண்ணு... ஐஸ் எல்லாம் வெக்கலப்பா... seriously....:)
//வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும்//
என் க்ளாஸ்'ல கூட நான் மட்டும் தான்... பட் ஐ லைக் தட் fact somehow ... கீதா சீதா எல்லாம் நெறைய பேரு இருப்பா... நம்ம பேரு என்னமோ uniqueness னு ஒரு நெனப்பு... அப்பவே கொஞ்சம் நெனப்பு ஓவர் தான்...ஹா ஹா...;))
//அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து//
சிம்ப்ளி சூபர்ப்... என் பேரையும் மக்கள் கடிச்சு குதறும் போது கோபம் வரும்...அதுவும் இந்த ஊருக்கு வந்தப்புறம் I'm tired of explaining and stopped at a point... ha ha ha..:)
ரெம்ப அழகா எழுதி இருக்கே மாதங்கி... ரசிச்சேன்...:)
பெயர்ப்புராணம் க்ளாஸ் மாதங்கி.
விலாவாரியா அலசித் தள்ளிட்டீங்க. சபாஷ்.
//இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம்.//
இந்த வரியை ரொம்பவும் ரசித்தேன்.
ரொம்பவும் அர்த்தபூர்வமான சொற்றோடர். இந்த ஒரு வரிக்கு ஒரு பக்கம் விளக்கம் எழுதலாம். பதிவு பூராவம் இப்படி அங்கங்கே நிறைய பளிச்சிட்டுப் போனது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
மாதங்கி கூட புரிஞ்சது. Mawley-யை தமிழ்லே உச்சரிக்கறது எப்படின்னு தடுமாறிண்டிருக்கறச்சே, ரொம்ப நாளைக்குப் பின்னாடி தான் தெரிஞ்சது, ஓ, மாலி என்றலல்லவோ சொல்ல வேண்டும்?
தமிழில் மஹாலிங்கம் என்று பெயர் வைத்து விட்டு செல்லமாக மாலி என்று அழைப்பார்கள். தங்கள் தந்தையார் பெயர் தஞ்சைப் பகுதியில் பிரபலமானமான ஒன்று.
எதை எழுதினாலும் அனுபவித்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
அத்தனைக்கும் ஊடே உங்கள் பெயர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதும் புலனானது..
எங்கள் அலுவலக நண்பரின் பெண் பெயரும் மாதங்கி.. அழகாய் பாடுவாள்.. நிறைய பரிசுகளும் வாங்கி இருக்காள்..
Humorous LOL post!
Surprised that your name had to struggle. எதுக்குங்க Elizabeth Taylor, KK எல்லாம் இழுக்கறீங்க. அவங்க ஏதோ தேமேன்னு இருந்தாங்க (இருக்காங்க)
Shakhambari நல்ல பேர்தான? (another name for Durga, Shakham-vegetables, ambari-clothed) During Navarathri, on one of the days, at the Sringeri Sharada Peetam in Bengaluru, there is a 'Shakhambari' அலங்காரம், which is beautiful to behold. :-)
நல்ல வேளை, உங்க cousins 'mad-dog-nee'ன்னு பேர் வெக்காம இருந்தாங்களே! :-P ;-)
The bong extension to your name!, hilarious. ROTFL
மாதங்கி என்பது நல்ல பெயர்..
நல்ல தமிழ்ப் பெயர் இல்லை என்றாலும் தமிழகத்திற்கென அமைந்த சிறப்பான பெயர்களில் ஒன்று.
வட மாநிலங்களில் மாதங்கி என்று யாரும் பெயர் வைத்து நான் கேள்விப்பட்டதில்லை..
தமிழுக்கான அல்லது தமிழகத்துக்கான சிறப்பான பெயர்களில் ஒன்றை உங்களுக்கு வைத்த அம்மா பாராட்டுக்குரியவர்.
உங்கள் தனித்தன்மையில் நீங்கள் பெருமைதான் கொள்ள வேண்டுமே ஒழிய ஆதங்கப்படக்கூடாது.
தேசிகன் தனது மகளுக்கு ஆண்டாள் என்று பெயர் வைத்த கதையை எழுதிய என் பெயர் ஆண்டாள் படித்திருக்கிறீர்களோ ?!
அப்புறம் இந்த டெம்ப்ளேட்..
மிகவும் பிடித்திருந்து ரொம்ப நாள் வைத்திருந்தேன்..ஆயினும் தொடுப்புகளிலும்,பழைய பதிவுகளைப் பார்ப்பதிலும் இருந்த சிக்கலால் மாற்றினேன்...
பட் ஸ்டில் ஐ லவ் திஸ்.
உங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் பென்சில் ஓவியம்,அழகாக இருக்கிறது...
வரைந்தது நீங்கள் எனில் பாராட்டுக்கள்...அல்லது வரைந்தவருக்கு..
எனது பெரியப்பா வெகு அநாயாசமாக இவ்வித படங்களை சில சிறிய ஸ்ரோக்குகளில் வரைவார்..எனக்கும் படங்கள் வரைவதில் ஆர்வம் உண்டெனினும் அவரது எளிமையும்,இலாகவமும் பிரமிப்பூட்டும்..;நான் உட்கார்ந்து 2 மணி நேரம் எடுத்து வரைவதை 20 நிமிடங்களில் வரைந்து விடுவார்..
உங்களது புரொபைஃல் படத்திலும் அந்த எளிமை காணப்படுகிறது..
@ niroopan...
thanks! :) 23 varusha manubavam... aththana pazhakkam intha peyaroda enakku... :) cheena perun chuvar ellaam emmaaththiram?
@ chithra...
thanks! :)
@ LK...
:) shyamala thandakathla varuthaam... enga appa athulernthu thaan choose panninaaraam... thanks!
@ valliyasimhan...
:) tag koduththathukku romba romba thanks! :D i really enjoyed writing it...
@ thakkudu...
thanks!! :)
@ middle class madhavi...
:D LOL! unmai...
@ kalyaan...
thanks!
@ vasan...
"Meendum kokila"-nnu oru cinema. neenga paaththiruppel-nu ninaikkaren. oru actress ku 9 yard saree katta sridevi-ya azhaichchundu povaar hero-kamal. "smaartha kattaa, vaishnavaa kattaa"-nnu keppaa sridevi. "athellaam theriyaathu... aanaa character peru 'vishaalam'..." apdeennu solluvaa antha actress... "appo-smaarthaa thaan..."nnu sridevi solluvaa...
atha pola... aiyangaar area-la irukkara iyer-aa irunthiruppaa.. 'mathangi' nnu per irukkaravaa... :D :P
thanks sir!
@ padmanaban...
thanks! :)
@ mohanji...
haa ha! :D thanks!! :) athu ennamo nijam thaan....
@ srinivas...
unique perellaam sari thaan... correct-panninapramum thappaa sollaravaala thaan nammalaala sakichchukka mudiyala! thanks! :)
@ rvs...
:) thanks!! :D
@ appaavi...
u know-- school-leye oruththarukku thaan intha per-naa athula adv. um irukku... dis adv. um irukku.... for eg. naan leave pottaa ellaarukkum theriyum... ithe saranya leave pottaa--- athu A.saranyavaa... S. saranyaavaa... illa 'new' saranya vaa... itha pola niraiyaa adv. irukkum avaalukku! :(
colege-la en peroda short-form-- Mat... :)
thanks!
@ sundarji....
thanks! :)
@ jeevi...
Sir.. neenga antha variya purinjindathu muzhumaiyaa correct... :)
romba thanks sir!!! :)
@ rishaban...
thanks! :)
@ ramm...
:) mathangi-ye iththana trouble... cant think what would 'sakambari' undergo.... thanks! :)
@arivan...
'aathangam' peyar naala kidayaathu.. antha peyar sariyaaka upayogap padaathathinaal...
intha template enakkum mikavum pidikkum... naan ezhuthara themes oda intha template mattume reflect aakirathu...
sketch naan pannala... but enakku mikavum pidiththa sketch athu... i identify with it...
thanks! :)
Very Nice Post. I read it early But,my comment is late ,I wanted to comment eventhough it is too Late.
@ ganesan...
:) thanks, sir!
தொடர் பதிவு :
http://gmbat1649.blogspot.in/2013/07/blog-post_27.html
தொடர வாழ்த்துக்கள்... GMB ஐயாவிற்கு நன்றி...
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
18 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".