அப்போலாம் இது சாப்படணும்னா ஒண்ணு டிவி ஓடனும், இல்ல ஏதாவது ஆடு, மாட கட்டி போட்டு வேடிக்க காட்டணும், இல்ல- கத சொல்லணும். கதையும், சும்மா "பாட்டி இருந்தா... காக்கா வந்துது"ன்னு லாம் இருக்கப்டாது. பேய், பிசாசு, ராஜகுமாரி, பூதம், மந்த்ரவாதி- இத போல சில characters அந்த கதைல கண்டிப்பா இருக்கணும். எல்லாம் அதோட பாட்டி பண்ணின வேல. இதுக்கு பேய்-பிசாசு கதையா சொல்லி சொல்லி பழக்கி விட்டுருக்கா, நன்னா! எனக்கா, கதையே சொல்ல வராது. இது அடுத்த வாய்-க்கு வாய துறக்காத "உம்... உம்..." ங்கும். நான் எங்க போவேன், கதைக்கு?
"அப்புறம் கிச்சு என்ன பண்ணித்து, டொய்ங்.... னு அந்த அஞ்சு தல பாம்பு தலேல குதிச்சுது. சோனி கிட்ட-'டேய், நீ போய் எல்லாரயும் கூட்டிண்டு வாடா'ன்னு சொல்லித்து..." ன்னே நானும் எத்தன நாள் சொல்லி ஓட்ட முடியும்? இது அப்பா நன்னா அளப்பார். செத்த இது சாப்படற வரைக்கும் ஏதாவது சொல்லுங்கோ-ன்னா ஒழியாது. நாம சொன்னாதான் கேக்கப்டாதே! ஆனா நான் office போய்டா, ரெண்டும் ஒத்துமையா plate ல சாப்பாடெல்லாம் எடுத்து வெச்சுண்டு கத பேசிண்டே சாப்டும்!
என்னென்னமோ கத! இன்னிக்கு என்னடா கத சொன்னா, உங்கப்பா? ன்னா, "நடகம்-சொக்கம்" ங்கும். அது என்ன கதையோ... "நரகத்துல என்ன இருக்கும், சொர்கத்துல என்ன இருக்கும்"- இது தான் கத. அதுலயும் "நரகம்" தான் இதோட favourite! ஏன்னா அதுல தான் பூதம், பிசாசு-லாம் வரும். "அலிபாபா..." சினிமா ல வராப்ல "எண்ண கொப்பற"லாம் வரும். இந்த கத கேட்டு-கேட்டு, அப்புறம் இந்த "முன்ஷி தோதா ராம்" னு "அமர் சித்ர கதா" ல ஒண்ணு இருக்கும். அது பிடிக்கும். அதுல பாத்தேள்னா இந்த தோதா ராம் நரகத்துல போய் அவனோட கணக்குல-லாம் fraud பண்ணறாப்ல லாம் வரும்.
"சத்யமூர்த்தி" கத தான் அடுத்த favourite. அதுல மோஹினி பிசாசெல்லாம் வரும். கொழந்தேள்- னா "ராமர்", "கிருஷ்ணர்", "தேவதை"-ன்னு ஏதாவது சொல்லணும். இது பேய்-பிசாசு கத தான் கேப்பேன்-ங்கறது! அது பாட்டி பழக்கி விட்டது, அத்தனையும். அவா ஊர் கதையெல்லாம் இப்புடி தான் 'மந்த்ரம்-மாந்த்ரீகம்'னு லாம் இருக்கும். எங்க அம்மா ஆனா- சும்மா சொல்லப்டாது. ரொம்ப நன்னா கத சொல்லுவா! பாட்டி கதையெல்லாம் வேற மாதிரி இருக்கும். காளி கோவில், பலி, தல தலையா தொங்கறது, மந்திர வாள், யந்த்ரத்துக்கு நடுப்ற கறுப்பு பொம்ம- இப்புடி இருக்கும். பேய்-பிசாசு-லாம் அப்பா. மந்த்ரமெல்லாம் பாட்டி!
"கொழந்த பயபடும், சொல்லாதேள்" னா, பேச்ச கேட்டா தானே! அது கேக்கறது-ன்னு இவரும் சொல்றாராம். நான் evening duty போனாலும் போனேன், கொழந்த ஒரு வாரமா ராத்ரிலாம் சரியாவே தூங்கல. ஒரே ஜுரம். அப்புறம் தான் விஷயம் வெளீல வருது.
"ராத்திரி 12 மணி. வெள்ள screen லாம் மெது உ உ வா ஆடறது. உனக்கு தெரியாம வரும். பெருஸ்ஸ்ஸ்ஸா இருக்கும். வெள்ள வெள்ளேர்னு இருக்கும். கருப்ப்ப்பு dress போட்டுண்டுருக்கும். இதோ இந்த இடத்துல, கழுத்துல கடிச்சு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிடும். அதோட முன் பல் ரெண்டுத்தோட mark மட்டும் இருக்கும், தொ- இந்த இடத்துல இருக்கும்- Draculla ..." ன்னு கத சொல்லிருக்கார் மனுஷர். இதுவும் பயந்து நடுங்கிண்டு, தூங்காம ராத்திரி முழுக்க ஜன்னல் பக்கத்ல உக்காண்டு "Draculla வருதா வருதா" ன்னு பாத்துண்டுருந்திருக்கு!
இனிமே பேய்-பிசாசு ன்னு யாராவது இந்தாத்ல சொன்னேளோ தெரியும்! பாய்-ல design பாத்தப்போவே நேக்கு ஸம்ஷயம். மருந்து மாத்தர கொடுத்து தூங்க பண்ணிருக்கு, பாவம்- இப்போதான். கொழந்தைக்கு இப்புடியா கத சொல்லுவா? Office -லேர்ந்து வரட்டும், பேசிக்கறேன்... கதையா சொல்றேள் கத...?
26 comments
எல்லா குட்டி குழந்தைகளையும் அழைத்து பேய்க்கதை சொன்ன நாட்கள் ஞாபகம் வருது.
இதில் வரும் “இது” எந்த இது.?
@ GMB...
ippothaikku ore oru 'ithu' thaan sir irukku! athu thaan intha blog-a ezhutharathu...
@ rishaban...
:D intha kathaikala kekkarathula oru thrill thaan!
@ parvaiyaalan...
haa ha! :D LOL...
சின்ன வயதில் பயந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன...
:-))
yen kozhandainga ellaam paey kathaiyaiyae romba virumbaraanga? very nice narration.
//"நடகம்-சொக்கம்// ha ha ha i enjoyed your writing as usual...:) esp this is my favrt @#ki mami kadhai illaiyaa...:))
I HAVE POSTED AN ARTICLE. YOU MAY READ THAT AND COMMENT PLEASE. THAT MIGHT BE OF USE TO YOU , IN CASE YOU HAD NOT READ THE ORIGINAL BOOK.
இதுவின் நினைவுகள் அற்புதம்ங்க..
அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு
இது எல்லாத்தையும் அந்த
இதுவே ஞாபகம் வைச்சிண்டு
ஒண்ணு விடாம
ஒவ்வொண்ணா சொல்றதுன்னா..
ஒண்டர்புல்ங்க..
இது வரைக்கும் யாருமே
இதுமாதிரி எழுதி
இதுவரைப் படிச்சதில்லைங்க..
nice writeup as usual
அன்பு மாதங்கி, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
என் இன்றைய பதிவு 'பேரைச் சொல்லவா'. அதில் உங்கள் பெயரைப் போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து அழைக்கிறேன்.
அதனால் மாதங்கிக் குழந்தையின் பெயர்க் காரணம் அது சம்பந்தமான நிகழ்வுகள் எல்லாம் எழுதணும்னு கேட்டுக்கிறேன். சரியாம்மா.
இது உங்க வீட்டுக்காரர். இன்னோரு இது உங்க குழந்தை.
இவர்கள் இரண்டு பேரையும் பார்த்து அந்த ட்ராகுலா ஓடிப் போயிருக்கும் பயப்பட வேண்டாம் மாதங்கி;)
@ middleclassmadhavi...
thanks!
@ athithya...
avanga imagination-a antha thoonduvathinaaleyo ennavo... :) thanks!
@ thakkudu...
thanks, boss! :)
@ GMB...
great sir! :) done that...
@ jeevi...
"ithuvarai padiththathillai" nnu neenga sonnathe enakku mika mika mika mika periiiya compliment! :)
@ kalyan...
thanks!
@ valliyasimhan...
besha, mam! :) ezhuthiyaachchu....
@ valliyasimhan...
:) veettukkaar-- kuzhandhaiyaa???
katha kettuthu, pongo.... athu renduththukkume innum konjam kaalam irukku...
ithula "ithu"-- naan... en amma, enna paththi sollaraapla oru post ithu...
உன்னோட இந்த nativity நிறைந்த அழகான எழுத்தை படிக்க எனக்கு ரெம்ப பிடிக்கும் மாதங்கி... இந்த போஸ்ட் சூப்பர்... மழலை பேச்சை எல்லாம் அப்படியே அழகு மாறாம சொல்ற விதம் சூப்பர்..... "நடகம்-சொக்கம்" போல... ;)) கியூட் போஸ்ட்...;)))
நானும் நைட்ல பூனை கண்ணை பாத்து பயந்து காய்ச்சல் வந்த கதை எல்லாம் உண்டு... அந்த ஞாபகம் தான் வத்து உன் போஸ்ட் பாத்து...:))
Ha Ha Ha Ha. Brilliant, I'd say for getting the viewpoint right up here. Reminded me of the spun stories of yore to keep one engaged and also of Missus for whom stories were a great escape and a reminder of grandparents. :-) :-) [Also reminds me of Kaadhalikka Neramillai where Nagesh tells a story to Baliah]
@ appaavi...
:D thanks a ton!
@ramm...
LOL! i love that scene in kaathalikka neramillai... :D
thanks!
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
6 days ago
-
2 weeks ago
-
1 month ago
-
1 month ago
-
2 months ago
-
4 months ago
-
1 year ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".