கல்யாண் இந்த tag அ எனக்கு August ல கொடுத்தார்! இப்போ அப்போ ன்னு இப்போ தான் போடறேன்! English ல தான் கேள்வி இருக்கு. அதனால என் English blog ல தான் போடணும் னு நெனச்சிண்டிருந்தேன். ஆனா அதுல நெறைய Tag போட்டாச்சு. அதான் இங்க போடலாமேன்னு போடறேன்! கல்யாண்- இவளோ late reaction கு My Apologies ! Tag க்கு போலாமா?
1. Were you named after anyone?
நம்ம ஊர்ல எல்லாருமே ராமனோ கிருஷ்ணனோ தான்! இல்ல பாட்டி/தாத்தா பேர வெச்சிருப்பா! எங்க பாட்டி பேரு சீதாலக்ஷ்மி. எங்க அம்மாக்கு இராமாயண சம்பந்த பட்ட எந்த பெரும் வெக்க வேண்டாம் அப்டீங்கற strong opinion . ஒரே கஷ்டமாம் அதுல! எங்க அப்பா ஒரு 12 பேர select பண்ணி list போட்டுருந்தா! கௌரி, கீதா ன்னு நெறையா பேர். அதுல இந்த மாதங்கி ங்கற பெரும் ஒண்ணு. முன்ன பின்ன கேள்வி படாத பேரா இருக்கே ன்னு எங்க அம்மா இத select பண்ணிட்டா! இந்த பேர் "ஷ்யாமளா தண்டகம்" அப்டீங்கற ஒரு sanskrit text ல வருமாம்!
2. When was the last time you cried?
1st std . ல பேனா/pencil வாங்கி தரல ன்னு இப்போ எப்போவாவது நெனச்சிண்டு அழுதிருப்பேன். இதெல்லாமா ஞாபகம் வெச்சுப்பா?
3. Do you like your handwriting?
எனக்குன்னு ஒரு கையெழுத்தே கெடயாது! 'Signature ' என்னோடது நன்னாவே இருக்கும்!
4. If you were another person, would you be friends with you?
கண்டிப்பா!
5. Would you bungee jump?
Mood அ பொறுத்து இருக்கு! இப்போ 'பண்ணுவேனே' ன்னு எழுத தோணறது!
6. Do you untie your shoes when you take them off?
இப்படிப்பட்ட நல்ல பழக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி தான்!
7. If you were to pick your own first name, what would it be?
வாய்ல நுழயராப்ல ஏதாது வெச்சுப்பேன். மதங்கி/மதங்கினி/மாதாங்கீ லேர்ந்து மந்தாகினி வரைக்கும் எல்லா மருவல் வருவலையும் பாத்துடுத்து, பாவம் என் பேரு!
8. What is the first thing that you notice about people?
அத பத்தி யோசிச்சதில்ல! யோசிக்கணும்!
9. Red or Pink?
20 வருஷம் முன்னாடி Pink . இப்போ Neither !
10. What is the least favorite thing about yourself?
எங்க அம்மா என்ன "உரிச்ச வாழப்பழம்" னு திட்டுவா! அத சொல்லலாமோ என்னவோ! ஆனா பல அறிய பெரிய மஹான்கள எல்லாம் கூட அவா அப்பா/அம்மா எல்லாரும் "நீ காபி ஆத்த தான் லாயக்கு" ன்னு திட்டிருக்கா! அதனால இதெல்லாம் போய் சொல்லிண்டு! ச ச!
11. Whom do you miss the most?
பாட்டி! Esp. பாட்டி சமையல்!
12. What are you listening to right now?
கதவு தொரக்கும் போதும் மூடும்போதும் "க்ரீச் க்ரீச்" ங்கறது!
13. Favorite smells?
Petrol, new shoes, new books/note books.
14. Do you wear contacts?
இல்ல பா!
15. Favorite foods?
பாட்டி சாம்பார், அவியல், திருச்சி ரகுநாத் Hotel ரவா தோச, Degree coffee...
16. Last movie you watched
எந்திரன்
17.What book are you reading right now?
Hype கொடுக்க வேண்டாம் னு பாத்தா விட மாட்டேங்கறாங்கப்பா! "Discovery of India" by Jawaharlal Nehru.
18. Summer or Winter
Winter! நல்ல குளிர்-ல மூணு போர்வை போத்திண்டு A/C போட்டுண்டு தூங்கபுடிக்கும்!
19. Hugs or Kisses
Neither!
20. What music are you into?
List பெரிசு! Profile பாத்துக்கொங்கோளேன்!
21. What did you watch on TV last night?
ஒரு channel பாக்கற வழக்கமே கெடயாது! எல்லா channel யும் ஒண்ணா பாப்பேன்! அதனால சரியா ஞாபகமில்ல!
22. Favorite sound(s)
Bronze bells tinkling, பஞ்சு பிரிச்சு விடுவானே- அவன் அத ektaar ஆட்டம் தட்டிண்டேபோகும்போது வர சத்தம் பிடிக்கும்!
23. Do you sing or play an instrument?
எங்காத்து pipe-தண்ணியோட ஸ்ருதி சேர்ந்து நன்னாவே பாடுவேன்! Key Board வாசிப்பேன்..
24. Favorite piece of jewelery.
அவ்வளவா jewelery லாம் புடிக்காது! ஜிமிக்கி புடிக்கும் கொஞ்சம். அவ்வளவு தான்.
25. How did you meet your spouse/significant other?
இன்னும் பாக்கல பா!
Tag: பிடித்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்!
அந்த வீதிகள் முழுவதுமே- பல்வேறு விதமான மலர்களின் மணம் வீசிக்கொண்டு, மனமே ஒரு புது மணம் உணர்ந்த மகிழ்ச்சியில் அமைதி கண்டு- மகிழ்ந்திருக்கும். புடலங்காய்- கொடிகளில் தொங்கிக்கொண்டு நிற்பது போல, பூக்களும் அழகாக நாருகளில் கட்டப் பட்டு தங்களை சூடப்போகும் எஜமானர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். அது ஒரு அழகு. ஒரு சரம் சந்தன முல்லையை எடுத்து- நீர் துளிகள் படிந்த- காய்ந்து போன தாமரை இலையில் மடித்து, வாழை நாரில் கட்டிக் கொடுப்பார்கள். நிறம் இழந்த அந்த தாமரை இலையும்- அந்த சந்தன முல்லையின் வாசத்தை தழுவிக்கொண்டு- தூக்கி எறியப் படுவதற்கு முன்னர், ஒரு சில நொடிகள், அதன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போகும்.
அங்கே கால் எடுத்து வைத்த நொடியே- புது வெண்ணையின் மணம், ஆழ் மனம் வரை பாய்ந்து- பல ருசிகளையும் நாவில் தூண்டச் செய்யும். பல அடுக்குகளில் வெள்ளை வெளுப்பாக, ஓரிரு இடங்களில் வெளிச்சம் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த வெண்ணை. மெல்லிய தாள் ஒன்றை எடுத்து- மரத்தால் ஆன ஒரு வட்டக் கரண்டியால் வழித்து எடுத்து- அந்த வெண்ணையை தாளின் மீது வைத்து இடை பார்த்து சரி செய்வர். அந்த மெல்லிய தாளில் அந்த வெண்ணையை மடித்துக் கட்டுகையில்- அது அந்த தாளை கிழித்துக் கொண்டு வெளி வந்துவிடும் போன்ற எண்ணம் என்னைத் தழுவியதுண்டு. சணல் கொண்டு கட்டிப் போட்டு விடுவர். தாளை விட்டுப் பிரிய மனம் இல்லாத வெண்ணை- அதில் ஒட்டிக் கொள்ளும்- பிரியா விடை கொடுக்கும்.
அப்பொழுதுதான் அறைக்கப்பட்டதனால் கிளம்பியது- சூடு. அந்த சூட்டுடன் கலந்த காபி விதையின் வாசம். அந்த நிறத்திலேயே ஒரு தனித்துவம். அதை நுகர்ந்த உடனே அதைப் பருக வேண்டும் என்ற ஒரு உள் உணர்வு. பல்வேறு விஷயங்கள், மனதினுள் அங்கேயும், இங்கேயும் அலைந்து கொண்டு ஒரு விதமான வெறுப்பை உற்பத்தி செய்யும் சமயத்தில்- எங்கிருந்தோ வரும் புத்துணர்ச்சியாக, எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும் ஒரு நறுமணம் அது. காகித போட்லத்திளிருந்து அதைத் தனியே பிரித்த பிறகும்- அந்த காகிதத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும் காபி துகள்கள். அந்த நறுமணத்தை விட்டு பிரிய முடியாத காகிதம்- அதனுடையே வீசி எறியப் பட்டுவிடும்.
போட்லங்களுக்கு அதன் உள் இருப்பதின் தன்மை பற்றிக் கொண்டு விடுகிறது. ஆயினும், அந்த பொட்லங்களுக்கு தனியே மதிப்பு இல்லை. என்னதான் அது சந்தன முல்லையின் மணம் தழுவிக்கொண்ட தாமரை இலையாக இருந்தாலும்- முல்லையின் மணம் வீசுகிறதே என்று அதை யாரும் தலையில் சூடப் போவதில்லை.
ஒரு ஜீவன் ஜனித்தது என்று நாம் எப்போது கூறுகிறோம்? அந்த ஜீவனின் பிறப்பின் தருணத்தில். ஆனால்- பிறப்பு என்பது எதைக் குறிக்கிறது? கண்ணுக்குத் தெரியாத அரூப நிலையில் இருந்து ஏதோ ஒரு சக்தி அதை பற்றி வந்து- உடல் என்னும் பொட்லத்தினுள் அடைத்து விடுகிற அந்த தருணமே உண்மையான "பிறப்பு" என்று எடுத்துக் கொள்வோம். உடலினுள் அடைக்கப் படுவதற்கு முன்னர் அதன் தன்மை என்ன? அதனால் சிந்திக்க முடியுமா? பிரபஞ்சத்தின் ரகசியங்களையும், உண்மைகளையும் அது அறிந்திருக்கக் கூடுமோ என்று பல்வேறாக நினைக்கத் தோன்றுகிறது! அப்படி தெரிந்திருக்கக் கூடும் என்றே வைத்துக் கொள்வோம்.
மனிதர்களால் "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தை மீறி சிந்திக்கவே முடியாது. எனவே- "ஜீவன்" என்ற ஒன்றை "உடல்" என்ற பொட்லத்தினைக் கொண்டே அவர்களால் அறிய முடியும். ஏனெனில் "உடல்" என்ற ஒன்றே "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தினுள் அடங்கி நிற்கிறது. அவர்களால் புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளும் "ஜீவன்" எனப்படுவதை இப்படி ஒடுக்கி- நமக்கேற்றார் போன்று மாற்றிக்கொண்டு பார்ப்பதே தவறு!
"மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டும்" என்று சிலர் கூறுகிறார்கள். ஏனோ- இப்படிச் சொல்வது வினோதமாகத் தோன்றுகிறது! காரணம்- மனதின் இயல்பு அது கிடையாது! "மனஸ் ஸஞ்சலம் அஸ்திரம்". மனதின் தன்மையை புறிந்து கொள்ளாமல்- அதை "உடல்" என்னும் பொட்லத்தினுள் அடக்க வேண்டும் என்பது- அதனுடைய இயல்பை மீறியதொரு செயல். "மனம்" அதன் இயல்பான உருவத்தைத் தேடி அலைகிறது. அவ்வாறு தேடுகையில் அதற்க்கு பல்வேறு உண்மைகள் புலப் படுகின்றன. அதன் ஜனனத்தைத் தேடி அது அலைந்தாலே- உண்மைகளை உணரும். அதற்க்கு அதை இந்த உடல் எனும் பொட்லத்திலிருந்து விலக்க வேண்டும்.
ஆழ்ந்த ஒரு பிணைப்பு உருவானதாலோ என்னவோ- உள் மனதின் சிந்தனைக் கடலில் எந்தவித அலை அடித்தாலும்- அதன் தாக்கம் வெளியில் தேகத்திலும் தெரிகிறது. மனதை தேகத்தின் அடிமையாக்காமல் காத்தல் அவசியம்.
மனம் பறக்கட்டும். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் அது தனக்கென்று ஒரு தனி கோட்டைக் கட்டட்டும். அதைத் தடுத்துப் போடா வேண்டாம். அதை இந்த உடல் என்ற பொட்லத்தினுள் அடைக்க வேண்டாம். அப்படி அடைத்தால்- உடல் அதைப் பற்றிக்கொள்ளும். உடல், மனதை மறக்கச் செய்யும். தன்னைப் புகழச் செய்யும். மனதை உடல் என்னும் பொட்லத்தினுள் பூட்டிப் போட்டு விட்டு விடாமல்- அதன் சிறகுகளைத் தீட்டி விட்டேன்... அது உயரப் பறக்கக் கண்டேன். களித்தேன்...
நம்பாத்ல தினமும் சரஸ்வதி பூஜ தான். விஜயதசமி உட்பட! யாரோ சொல்லிட்டா- சரஸ்வதி பூஜ அன்னிக்கு சரஸ்வதிக்கு rest- படிக்கப்டாது-ன்னுட்டு! அவ்வளவுதான். நல்ல நாள்லேயே நாழிப் பால்! படிக்கற நேரத்துல தான் வேற என்னல்லாமோ பண்ணத் தோணும். இன்னிக்கு கேக்கணுமா?
அதோட desk மேல சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சு- புஸ்தகத்து மேல லாமும் எல்லாம் வச்சு- அடுக்கி வச்சுடணும். Holiday Homework குடுத்துருக்கரத இன்னும் தொட்டு கூட பாக்கல! கேட்டா- "இன்னிக்கு படிச்சா அந்த subject -ல நல்ல mark வராது"-ன்னு வேற ஒரு பதில்!
இந்த exam பொது எல்லாம் ஒரு பெரிய "சந்திரலேகா" cinema-வே ஓடும்! "Lucky பேனா", "Lucky pencil", "Lucky set uniform", "Lucky.." எல்லாமே! இதோட "Lucky uniform"- வேற daily தோய்ச்சு போடணும்! Office-லேர்ந்து வந்து இதோட அடுத்த பரீட்சைக்கு மன்னாடரதோட சேந்துண்டு இந்த தோக்கற வேல வேற! "Lucky பாட்டு" கூட உண்டு தெரியுமோ? சொன்னா சிரிப்பேள்! தெனம்- ஒரு மூணு பாட்டு ஏதோ- அத பாடிட்டு போனா தான் exam நன்னா எழுதுமாம்! இப்டி கடேசி ஒரு நாள், அர நாள் ஏன் படிக்கணும்? எல்லாத்தியும் முன்னாடியே படிச்சு வச்சிக்க ப்டாதா? ப்டாதே! அதெப்படி முடியும்? எத்தன வேல கெடக்கு!? TV பாக்கணும், notebook- ல கிறுக்கனும், புதுசா வாங்கி குடுத்த sketch பேனா அத்தனையும் colour அடிச்சு காலி பண்ணனும்!
அன்னிக்கு எதையோ சுத்தம் பண்ணிண்டு இருக்கறச்ச இதோட L.K.G. Progress Report கடச்சுது! "Spelling" நு போட்டு 86% நு போட்டுருந்துது! இது அவளோலாம் Mark வாங்கிருக்குன்னே எங்களுக்கெல்லாம் ஞாபகமில்ல! நெஜத்த சொல்லனும்னா- இது serious-ஆ உட்கார்ந்து படிச்சதையே நாங்க என்னிக்குமே பாத்ததே இல்ல! ஆனா Rhymes-லாம் நன்னா சொல்லும். அங்க ஒரு sister-dance ஆடிண்டே Rhymes சொல்லிக்கொடுப்பா. அதுக்கு ரொம்ப புடிக்கும் அதெல்லாம்.
"Humpty Dumpty" Rhyme- அ drama வாட்டம் போட்டாளாம். இது தான் "Humpty Dumpty"யாம். ஒரே அழுக! ஏண்டா அழற? அதானே டா Main Role னா- இது சொல்றது- வெறும் அந்த குட்டி chair- ல ஏறி நின்னுண்டு உழறது மட்டும் தான் இது பண்ணுமாம். ஆனா, Lalith, Vasanth- எல்லாரும் அந்த மர- குதிர ல ஏறிண்டு ஆடுவாளாம். இது அந்த குதிர மேல ஏறணும்-னு அவாள்ட கேட்டுதாம். அவாள்லாம்- "Practice பண்ணனும்" னு இதுக்கு தரவே இல்லையாம்!
வந்துது அங்கேர்ந்து. "அம்மா, இன்னிக்கு பாட்டு class-க்கு லீவு தானே"? ன்னுது. ஏன்னா- இன்னிக்கு பாடினா பாட்டு நன்னா வராதாம். அது நான்னா வரலேன்னாலும் பரவா இல்லன்னு இத தர-தர ன்னு இழுத்துண்டு போயாச்சு! "மாமாவது ஸ்ரீ சரஸ்வதி"ன்னு ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தா பாட்டு மாமி! அந்த சரஸ்வதி-ய நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?
நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்... இதுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க- கதைய நீங்க மொதல்லேர்ந்து தெரிஞ்சுக்கணும்.
மூணு பூனை குட்டி இருந்துதொல்யோ? அதுல இந்த Vasco- அது என்ன பேரோ! நான் அத துப்பாண்டின்னுதான் கூப்படறது- அது எங்காத்துல நன்னா settle ஆய்டுத்து. ஏதோ நம்பாந்தான் ங்கராப்ல ஒரு சுவாதீனம். பந்தங்கள் வேண்டான்னு பாத்தா- நம்பள அது தேடி தேடி வருது! நாங்க அத adopt பண்ணிக்கல, அது தான் எங்கள adopt பண்ணிண்டுருக்கு. அது பசி ன்னு கேட்டா வெரட்ட மனசு வரதில்ல. என்னமோ தின்னு கிழிக்கராப்ல- கால்-கால்-கால் னு கத்தும். பால கொண்டோய் ஊத்தினா ரெண்டு வா சாப்டு அப்படியே வச்சுடும். மறுபடியும் கத்தும். மஹா வாலு! துரு-துறுன்னு ஏதாது பண்ணிண்டே இருக்கும். Fridge - அ தொறக்கற சத்தம் கேட்டா போரும்- ஓடி வரும் உள்ள. அத தொரத்தரதுக்கு அத்தன பிரயத்ன படணும். அவர் கிட்ட தான் ரொம்ப கொஞ்சல். காலுக்கு இடுக்குல பூந்து பூந்து வரும்.
ஒரு நாலு-அஞ்சு கொரல் வச்சுருக்கு அது. அப்ப-அப்ப சமயத்துக்கேத்தாப்ல ஒவ்வொண்ணு அவுத்து உடும். பசில கத்தரதுக்கு ஒண்ணு. அது கத்தும்போதே அப்டியே உலகத்தல இருக்கற அத்தன பாவப்பட்ட ஜீவன்களோட அழுகுரலையும் சேத்து பெசஞ்சு பண்ணினாப்ல ஒரு கொரல் அது. அத கேட்டா அதுக்கு ஏதாது போட்டே ஆகணும். போடாம இருக்க முடியாது. இன்னொண்ணு- அப்டியே கொஞ்சிண்டு- என்ன கொஞ்சு-ங்கராப்ல ஒரு கொரல். இன்னொண்ணு- இந்த சாப்ட அப்புறம்- என்ன disturb பண்ணாம உன் வேலைய நீ பாரு-ங்கராப்ல அலுத்துண்டு ஒரு கொரல்.
இதுக்கு ஒரு தங்கச்சி இருக்கோன்னோ! தங்கச்சியோ, தம்பியோ. தெரியல! Mosco ன்னு பேர் வச்சிருந்துது. இந்த China காராளும் சரி. பூனையும் சரி. எல்லாருமே ஒரே மாதிரி தான் இருப்பா என் கண்ணுக்கு. ஆனா வால் மட்டும் துப்பாண்டிக்கு மொழுக்குன்னு இருக்கும். இதுக்கு அணிலாட்டமா பொம்முன்னு இருக்கும். அதனால இத நான் Bushy ன்னு தான் கூப்படறது. ரொம்ப சமத்து. துப்பாண்டி என்னெல்லாம் இல்லையோ அதெல்லாம் Bushy . அதுக்கு கெட்ட பழக்கமெல்லாம் பழக்கி விடறதே இந்த துப்பாண்டி பய தான். "நீ என் கூட வாடா. உனக்கு நான் சாப்பாடு வாங்கி தரேன்"ன்னு சொல்லி இந்த Bushy ய கூட்டிண்டு வந்துடுத்து. இந்த Bushy அவளோ சமத்து. போட்டத ஓட்ட நக்கி சாப்டுடும் பாவம். இந்த துப்பாண்டி தான். அதுக்காவும் எதுவும் தேடிக்க தெரியாது- போட்டதையும் ஒழுங்கா சாப்டாது. இந்த Bushy யும் துப்பாண்டியும் அத்தன அன்யூன்யம். ரெண்டும் அப்டியே ஈஷிண்டு தான் படுத்துக்கும். அடிச்சிக்கும், புடிச்சுக்கும். ஆனா- ஒண்ணுக்கொண்ணு அத்தன கொஞ்சலும் நடக்கும்! ரெண்டும் ஜோடியா ஒண்ணுக்கொண்ணு மூக்க ப்ராண்டுண்டு வந்து நின்னுதுகள் அன்னிக்கு!
ஒரு நாள், என்னடாது- ரொம்ப நேரமா ஆள காணுமேன்னு நெனச்சுண்டே இருந்தேன். சௌக்யமா chair மேல ஏறி- நாலு காலையும் ceiling-அ தாங்கி புடிச்சுக்கற தோரணல, அவரோட dress-கு மேல நல்ல மெத்-மெத் ன்னு, சொஹுசா- சாவகாசமா தாச்சிண்டு, ஜம்முன்னு தூங்கிண்டுருக்கு இந்த துப்பாண்டி! அப்புறம் என்ன- தொரத்தி விட்டோம். திரும்ப வால தூக்கிண்டு இங்க தான் வரணும். என்ன பண்ணும்- அதுக்கு தெரியும். நம்ப ஏதோ தப்பு பண்ணிருக்கோம்னு. இந்த Bushy -ய அனுப்சு "டேய்! மொதல்ல நீ போய் கேளு டா. அப்புறம் நான் வரேன்" ன்னு சொல்லி அனுப்பும். Bushy வந்து கேட்டா இல்லன்னா சொல்ல போறோம். அதுக்கு போட்டப்ரம்- இது அப்டியே ஒண்ணுமே தெரியாத மாதிரி- வந்து சாப்டும். பயங்கர ஆளு!
அது பாட்டுக்கு இருந்துட்டு போறது போ! எம்பொண்ணுக்கும் போட்டி வேண்டிருக்கு. உனக்கு அது செல்லமா- நான் செல்லமா-ன்னுண்டு, அந்த பூனயோட வளயாடிண்டு- அது கூட சண்டையும் போட்டுண்டு கெடக்கட்டும்- னு விட்டுட்டோம்.
ஆனா நேத்திக்கு லேர்ந்து- துப்பாண்டி ஒரே dull ! ராத்திரி ஆனா ஒரு கத்து கத்தும். சாப்பட. ஆனா அது கூட கேக்கல. இந்த Bushy யும் ஆள காணும். அதுக்கு ஏதாது ஆயடுத்தா- அதனால தான் இது dull -ஆ ன்னு வேற கவலை. ராத்திரி எல்லாம்- முழிப்பு வரும் போதெல்லாம் இவர்- வெளீல பொய் பாத்துண்டே இருந்தார். துப்பாண்டி தூங்கவே இல்லையாம்! காலம்பரையும் சத்தத்தையே காணும். ஒரே கவலயாடுத்து! இப்படி எல்லாம் இருக்கவே இருக்காது. துரு துறுன்னு தான் எப்போதும் இருக்கும். கஷ்டமா இருக்கோன்னோ- பாக்கரவாளுக்கு!
நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்...
அப்புறம் இது போய் அத எழுந்துரு ன்னு சொல்லி பாத்துது. நிக்க வைக்க பாத்த பொது தான்- அதால நிக்கவே முடியலன்னு தெரிஞ்சுது! பின்னாடி கால் ஒன்னு- நன்னா வளைஞ்சு இருந்துது! எங்கேர்ந்தோ தாவி குதிக்க பாத்து- அடி பட்டுண்டுருக்கு! அதான் அத்தன சோர்வு! ஒரு வா சாப்படல! அதுவும் எழுந்துருக்க அத்தன பிரயத்ன படறது! அந்த கால் அத புடிச்சு பின்னாடி இழுக்கறது. ஒரு step நகர முடியல! இப்டி அவஸ்த படறதே இதுன்னு நெனச்சாலே ஒரே வருத்தம்.
எம்பொண்ணு இந்த mobile -ல map வருமே- அதுல Blue Cross எங்கயாது இருக்கான்னு பாத்துது! Besant Nagar Theosophical Society கு உள்ள இருக்குன்னு கண்டுபிடிச்சாச்சு. துப்பாண்டிய ஒரு பை-ல போட்டு- வண்டி பின்னாடி இது புடிச்சுண்டு, அங்க கூட்டிண்டு போனா இவா ரெண்டு பேரும். யாருக்கு இப்டி தோணி ஒண்ணுபண்ணினாளோ ன்னு தெரியல. அத்தன மிருகங்கள் அங்க இருந்துதாம்! ஆட்டோ ல லாம் அவா அவா நாய் குட்டிய எல்லாம் அழச்சுண்டு வந்துருந்தாளாம். யாரு பண்ணினாலும்- அவாளுக்கு மஹா புண்ணியம்!
சாதாரண விஷயம் தான் போலருக்கு. ஒரு injection போட்டாளாம். அப்புறம் ஒரு மருந்து வாய்ல விட்டாளாம். அத எப்புடி புடிக்கணும் னு கூட தெரியாதா எங்களுக்கு! அங்க hospital -அ இது கழுத்த புடிச்சு தூக்கறா- அதுவும் பேசாத காட்டிண்டு இருந்துதாம்! ஒரே பயம் போலருக்கு அதுக்கு. கால்-எல்லாம் நடுங்கிண்டே இருந்துதாம்! அப்புடியும் injection போட்டப்ரம் அதோட பல குரல்-ல ஒரு குரல்-ல கத்திருக்கு! அந்த doctor அத தடவி குடுத்தாளாம்- "ஒண்ணுமில்ல"ன்னு! அப்புறம் பேசாத இருந்துதாம்!
ஆத்துக்கு கூட்டிண்டு வாந்தாயாச்சு! அந்த டாக்டர் அங்க- Whikosi ன்னு ஒரு fish flavour பூனை சாப்பாடு இருக்குன்னாளாம். அத வாங்கிண்டு வந்து சாதத்துல கலந்து குடுத்தாச்சு. ரெண்டு spoon சாப்டு போரும்-நுடுத்து! ஆனா காலேல யோட better ! இப்போ நொண்டறது! நொண்டிண்டே அதோட அட்ட பெட்டில பொய் படுத்துண்டுடுத்து! தூங்கிண்டு இருக்கு இப்போ!
வளந்துடுத்து! பொட்டி சின்னதா இருக்கு... பெரிய பொட்டி வாங்கணும்!
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
1 day ago
-
2 days ago
-
6 days ago
-
1 week ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".