துரு துரு துப்பாண்டி
மியாவ்-மியாவ் - Part 2 நான் சொன்னேனா- கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கோம் இந்த பூனகளாலன்னு? ஒண்ணு விட்டா ஒண்ணுன்னு எதையாவது புடிச்சுண்டு நிக்கறது! டி.வி இல்லையா. பூனை!
தெனம் இது வெளீல போம்போதும் வரும்போதும் எட்டி எட்டி, அந்த பூனைகள் தூங்கறதா என்னன்னு பாத்துண்டே போகும். ஆத்துல இருக்குன்னா பூனைகள் எப்ப வரும் எப்ப வரும்னு கேட்டுண்டே இருக்க வேண்டியது!
அந்த குட்டிகளா- படு சமத்து! அதுல இந்த கருப்பு- Bosco இருக்கே! "கருமமே கண்ணா" இருக்கும். மொதல்ல அதுதான் வந்து கோரல குடுக்க ஆரம்பிக்கும். அது எதோ ஒரு பரி பாஷ வச்சிண்டுருக்குகள். இது சாப்ட வந்து கோரல கொடுத்தாலே மத்ததுகளும் வந்துடும். chorus-ஆ மியாவ்-மியாவ்-ங்கும், எல்லாமே. Vasco வும் துரு-துரு தான். ஆனா Bosco பூனை தான் சாப்படரதுல correct- ஆ இருந்துக்கும்.
அது வந்து கூப்டு நம்ப கேக்கலேன்னா இவர் உக்காந்து வேலபாக்கர computer room கு நேரா இருக்கற மதில்ல ஏறிண்டு இவற பாத்து கேக்கும்! நன்னா தெரியும் அதுகளுக்கு எங்க எப்டி யார கேட்டா விஷயம் நடக்கும்னு. இவர் உடனே பால் ஆச்சா- கொண்டாம்பார்! அதுகளுக்குன்னு ஒரு cup வச்சிருக்கோம். இது இருக்கே! அதுகள் சத்தம் கேட்டா போரும்! நா-நா- நான்தான் பால் ஊத்துவேன்னு ஒரே தை-தை. இது எங்க அதுகளுக்கு பால் கொடுக்க போய்- அதுகள பாத்து பயந்து விழுண்டதுடுமோன்னு ஒரே பயம் எனக்கு.
அதுகளா- நம்முளுக்கு தான் பால் வருதுன்னு தெரிஞ்சா போரும்! மியாவ்-மியாவ்ங்கும். நம்ம மோகத்த பாத்துக்கும். ஒன்னும் சொல்லலைன்னா- ரெண்டு படி ஏறி மேல வரும். மறுபடியும் கோரல கொடுக்கும். நம்மள பாத்துக்கும். ரெண்டு படி ஏறும். அதுகள கீழ போங்கன்னு சொல்லி பால எடுத்துண்டு போய் விடரதுக்குள்ள அதுகளுக்கு தாங்காது. காலையே சுத்தி சுத்தி வரும். cup- அ கீழ வைக்கரதுக்குள்ள Bosco பூனை இருக்கே- அது முன் கால் மேல தூக்கிண்டு ஒரு jump ஒண்ணு பண்ணும். விட்டா கை லேர்ந்து தட்டி குடிக்கும் போலருக்கு.
ஆனா- ரொம்ப கொழுப்பு தெரியுமோ..? பால் விடற வரைக்கும் தான் இந்த கொஞ்சலெல்லாம். விட்டப்ரம், அதுகள் குடிச்சு முடிச்சப்ரம்- பெப்பே-ங்கும்.
அதுல- இந்த Mosco இருக்கே- செரியான அம்மா-கோண்டு. அம்மாவோட தான் வரும், போகும். ஆனா ஒரு நா என்னாச்சு, எல்லா பூனைகளும் அத தனியா உட்டுட்டு எங்கயோ போய்டுத்துகள், பாவம். சாப்ட ஏதுமில்லாம- காலேல 5 மணி. Hall- ல light- அ போட்டுட்டு வெளீல வந்து பாக்கறேன்! பாவமா வெளீல நின்னுண்டு கோரல கொடுத்துண்டுருக்கு. அதுக்கேன்னமோ double கொரலா இருக்கும். அது மியாவ்-மியாவ் ங்கும் போதெல்லாம், ஒரு கண்ணு வேற முடிக்கும். அந்த கொரலும், அது மொகமும்! அத்தன பாவமா இருக்கும்! பால காச்ச கூட இல்ல! அது பசின்னு கேட்டுடுத்து பாவம். அப்டியே கொடுத்தேன். முழுக்க குடிச்சுடுத்து. மீதி பூனை- especially அந்த Bosco துப்பாண்டி இருந்தா, இதுக்கு துளியோண்டு தான் கடைக்கும். பாவம்!
ஏதோ! மூணும் நல்ல ஒத்துமையா இருக்குகள். எம்பொண்ணு- பால் விட போகும்போதெல்லாம் அதுகள தடவி உட்டுட்டு- "தொட்டேனே- தொட்டேனே" ங்கும். "நீ தொட்டுக்கோ, கொஞ்சிக்கோ- என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆத்துக்குள்ள வந்து அழுக்கு பண்ணித்துன்னா நீதான் clean பண்ணனும்" னு பயமுறுத்தி வச்சிருக்கேன். அதனால அமைதியா இருக்கு.அன்னிக்கு, எங்காத்துலேர்ந்து என் உடன் பிறப்புகளெல்லாம் phone பண்ணி பேசித்துகள். இது எங்காத்ல மூணு பூனை இருக்குன்னு வேற டமாரம் அடிச்சுது, இது. உடனே எம் பரம்பரையே phone பண்ணி- ஆத்துக்குள்ள வராம பாத்துக்கோ. Allergy- அது, இது ன்னு free advice- ஆன free advice!
ஆனா அதுகள் எத்தன நாளேக்கு தான் இப்டி துரு-துரு துப்பாண்டியாவே, குட்டிகளாவே இருக்க போரதுகள்! அதுகளும் பெருசா போய்டும்! நாமள எல்லாம் நெனச்சுக்குமோ, நெனச்சுக்காதோ! எங்காத்து துப்பாண்டியும், எத்தன நாளேக்கு தான் இப்டியே இருந்துடும்! தோ! வாசல்ல கொரல் கேட்டுடுத்து.. பால் ready பண்ணனும்...