மியாவ் - மியாவ்  

Posted by Matangi Mawley


இப்போதான் செத்த அக்காடான்னு அப்டியே உக்காந்தேன். ஒரே ஏறச்ச காடா இருக்கு! அந்த டி.வி. பொழுதன்னிக்கும் கத்திண்டே இருக்கணுமா? Off பண்ணுன்னா கேக்கரதா பாரு! யாராது வாசல்ல வந்து கூப்டா கூட தெரியாது. அக்கம் பக்கத்ல இருக்கறவாள்லாம் சண்டைக்கு வருவா. ஆனா வெளீலையே ஏதோ சத்தம் கேக்கறாப்ல இருந்தது. என்னடான்னு எட்டி பாக்கலாம்னா முடியல! இத போய் பாருடான்னேன். இது அப்டியா-இப்டியான்னு மொனகிண்டே மெதுவா நகந்து வாசலுக்கு போய் பாத்துது!

"
அம்மா! அம்மா! ஓடி வா... சீக்கரம்... " னு கத்தித்து!

நானும் கஷ்டப்பட்டு எழுந்து போய் பாத்தா, மூணு பூனை குட்டி! பசி பாவம். எங்காத்து படிக்கட்டு பக்கத்ல நின்னுண்டு "மியாவ்- மியாவ்" னு chorus- கத்திண்டுருந்துதுகள்!

பாரதியாராத்து பூனகளாட்டமா- ஒன்னு சாம்பல் நிறம், ஒன்னு கரும் பாம்பின் நிறம், இன்னொண்ணு பாலின் நிறம். மூணும் மூஞ்சிய பாவமா வெச்சுண்டு எங்காத்தயே நோட்டம் உட்டுண்டுருந்துதுகள்!

எம்பொண்ண பத்திதான் கேக்கணுமா! செரியான ஆள கண்ட சமுத்ரம்! ஒரே "தை தை" தான். தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம். அது அழுக்கு பண்ணித்துன்னா மட்டும் clean பண்ண அம்மா வரணும். இது தான் ஒரு துறும்ப கிள்ளி அண்ணண்ட போடாதே!

பாவம். பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும் போலருக்கு. நல்ல பசி அதுகளுக்கு. பால தூக்கி fridge- வெச்சுட்டேன். ஜில்லுன்னு இருக்கு. அதுகளுக்கு ஒத்துக்குமோ, ஒத்துக்காதோ! லேசா சூடு பண்ணி ஜில்லுப்ப மாத்தலாம்னு அடுப்புல வெச்சேன்.

"
அம்மா... உள்ள வருது.. உள்ள வருது.." னு கத்தித்து!

பாத்தா- அதுல இந்த சாம்பல் குட்டி- grill- தாண்டி ஜம்முன்னு உள்ள வருது. அத பாத்துட்டு இது ஒரே ஓட்டம். "தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம்" இந்த அழகுல! இது பயந்தத பாத்து அந்த குட்டி பயந்து போய்- ஓடி போய்டுத்து வெளீல! மித்த ரெண்டு குட்டிகளும் நடுங்கிண்டு வெளீலயே நின்னுண்டு கத்திண்டுருந்துதுகள்!

பால் ஜில்லுப்பு போய்டுத்து. குட்டிகள் எங்கடான்னு பாத்தா- காணல!

மழை!

பாவம்- எங்கயோ ஓடி போய் ஒளிஞ்சுடுத்துகள். பக்கத்தாத்து மாமி- அங்கேர்ந்து வந்து- அக்கறையா சொன்னா- "எதுத்தாத்து மாமி இப்டிதான் ஒரு நா பூனைக்கு பால் வெச்சா! அதுகள் அவாத்லயே permanent- டேரா போட்டுடுத்துகள்" னு! அதுக்காக வாசல் வந்து கேக்கற குட்டிகள வெரட்டவா முடியும்?

மழை நின்னப்ரம், குட்டிகள் மெதுவா வெளீல வந்துதுகள். பால் விடறதுக்கு இவர் போனார். இவர் வரத பாத்துட்டு- எல்லாம் தூரக்க ஓடி போய் நின்னுண்டு பாத்துண்டே இருந்துதுகள். அவர் விட்டுட்டு போனப்றம் போய் குடிச்சுதுகள்.


அதுக்குள்ள எம்பொண்ணு அதுகள photo எடுக்கறேன் பேர்வழின்னு- ஒரு camera தூக்கிண்டு வந்து "சலங்கை ஒலி" வர photo எடுக்கற குண்டு பையனாட்டம் வித- விதமா எப்டி எப்டியோ photo எடுத்துது!

அன்னிலேர்ந்து தெனம் டான்னு- 6:45 க்கு சாயந்தரம் வந்துடும், மூணும். வந்து வாசல்ல நின்னுண்டு குரல் குடுக்கும். அதுகளுக்கு இது பேரு வெச்சுருக்கு.

அதுல ஒண்ணு உள்ள வந்துதே- சாம்பல்குட்டி- அது பேரு "Vasco" வாம் (Vasco da Gama மாதிரி அது explore பண்ணறதாம்). இன்னொண்ணு கருப்பு- அது "Bosco" (சினிமா வில்லன்லாம் Boss- தானே- கருப்பு பூனை வில்லன் பூனையாம்). மூணாவது "Mosco". அது என்னதுன்னு நேக்கு தெரியாதுடாப்பா!

ஏதோ! அதுகள் புண்ணியத்ல பொழுது போறது! ஒரு அர மணி நேரத்துக்குஆத்துல டி.வி. சத்தம் இருக்காது!

This entry was posted on 29 July, 2010 at Thursday, July 29, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

24 comments

நன்னா இருக்கு .. செத்த நேரம் பொழுது போச்சு நேக்கு இந்த கதைய படிச்சதுல :)

29 July 2010 at 23:27

@ ramasamy kannan...

:) thanks!

29 July 2010 at 23:31

ரொம்ப நன்னா எழுதறேள்...
உங்க அம்மாவ பார்க்கணும் போல இருக்கே...

29 July 2010 at 23:54

Yeppovumpola super. :) Vasco, Bosco and Mosco per kooda dhool :)

30 July 2010 at 00:26

அதுல ஒண்ணு உள்ள வந்துதே- சாம்பல்குட்டி- அது பேரு "Vasco" வாம் (Vasco da Gama மாதிரி அது explore பண்ணறதாம்). இன்னொண்ணு கருப்பு- அது "Bosco" (சினிமா ல வில்லன்லாம் Boss- தானே- கருப்பு பூனை வில்லன் பூனையாம்). மூணாவது "Mosco". அது என்னதுன்னு நேக்கு தெரியாதுடாப்பா!

.... very cute! :-)

30 July 2010 at 01:21

அருமை. வழக்கம் போல் நல்ல நடை...
//. செத்த நேரம் பொழுது போச்சு நேக்கு இந்த கதைய படிச்சதுல :)//
அதே அதே

30 July 2010 at 06:15

இதப்படிச்சதுல செத்த நேரம் நன்னா போது போச்சு.. கேட்டேளா :-)

30 July 2010 at 07:32

@ ramakrishnan..

:) thanks! ha!

30 July 2010 at 08:49

@nithya...

:) :D thanks!

30 July 2010 at 08:50

@chithra...

:) thanks!

30 July 2010 at 08:50

@ LK..

thanks!

30 July 2010 at 08:50

@amaithichaaral...

:) thanks!

30 July 2010 at 08:51

பூனைகளோடு பழகுபவர்கள் மட்டுமே அறிய முடியும் உங்கள் இடுகையின் சிறப்பை. நல்ல இடுகை.

ஸ்ரீ....

30 July 2010 at 09:08

Cute post.

30 July 2010 at 09:17

@ sree...

:) unmai!! thanks!

30 July 2010 at 10:50

@ kalyan...

:) thanks!

30 July 2010 at 10:51

நாங்களும் பூனை வளர்த்து இருக்கிறோம்

30 July 2010 at 16:27

@ sownder...

:) nice!

30 July 2010 at 17:55

பொல்லாத சேட்டக்கார கொழந்தையா இருந்தாலும் இந்த கதைல வரும் அந்த பொண்கொழந்தைக்கும் அவாளோட அம்மாவுக்கும்(அம்மா சமத்துதான்) பரமகாருண்யமான மனசு....:))

31 July 2010 at 13:21

@thakkudu..

:D hee..hee...

31 July 2010 at 14:03

ஏதோ! அதுகள் புண்ணியத்ல பொழுது போறது! ஒரு அர மணி நேரத்துக்குஆத்துல டி.வி. சத்தம் இருக்காது!


ஹா.. ஹா.. என்ன ஒரு ரிலீப்.. இதுதானே வேணும்..

4 August 2010 at 21:16

@rishabhan..

:) ya.. athukal kooda pozhudu porathaey theriyaathu!

5 August 2010 at 09:02

// எம்பொண்ண பத்திதான் கேக்கணுமா! செரியான ஆள கண்ட சமுத்ரம்! ஒரே "தை தை" தான். தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம். அது அழுக்கு பண்ணித்துன்னா மட்டும் clean பண்ண அம்மா வரணும்.

Ha Ha Ha. :-) Can relate very closely to that. பூனை உக்காந்துக்கற அழகே அழகு. அதோட வாலை மடிச்சு முன்னங்கால் கிட்ட வெச்சுண்டு தலைய ஒரு பக்கம் சாய்ச்சு பாக்கும். அழகு! அது தூங்கறதும் அப்படித்தான். :-)

// ஏதோ! அதுகள் புண்ணியத்ல பொழுது போறது!
Definitely. :-) Small, but apt observation on pets. You feel very happy on your time with them.

4 November 2010 at 14:03

@ ramm...

:D i used to think that the line 'having pets brings a change in you' a cliche! but i have found it to be absolutely true!!

thanks a ton!! :)

4 November 2010 at 20:09

Post a comment