ஆடி அமளி  

Posted by Matangi Mawley


எங்க ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படிதொறேல- கும்பல் ஒன்னும் புதுசு கெடயாது! எப்போதும் உள்ளதுதான். சும்மா 'ஜே ஜே ஜே' ன்னு இருக்கும். 'ரங்கன சேவிக்க' வரும் உள்ளூர் ஜெனங்க ஒரு பக்கம்னா, எப்போதும் வெளியூர் வந்டிகளிலேர்ந்தும் ஜெனங்க கூட்டங்கூட்டமா வந்துண்டுதான் இருப்பா! இந்த கும்பலெல்லாம் நமக்கு ஆகாது! ஆனா இந்தாத்துல நாஞ்சொன்னா யாரு கேக்கரா? எல்லாருக்கும் நாட்டாமதான். தோ! இந்த வாண்டுட்பட!

"இந்த க்ஷணம் காவேரில குளிக்கணும்னு" ஏதோ தோணிடுத்து! வீடே ஒரே அமளி! குளிக்க போறதுக்கு எதுக்கு இத்தன 'மேக்கப்'னு தான் நேக்கு புறியல. அந்த புடவை கூடாது, இந்த வள சேராது! தலேல துளி எண்ணைய வெச்சுண்டு ஒரு முழுக்கு போட போறதுக்கு எதுக்கு இத்தன கூத்து!?

நான் ஒரு வார்த்த சொல்லப்டாது! ஆடி பதுனெட்டு தேதிக்கு யாராவது ஆத்தங்கரைக்கு போவாளா? "லோகத்ல எல்லாரும் ஆடி பதினெட்டு தேதிக்கு தான் ஆத்தங்கரைக்கு போற வழக்கம்"- அப்படின்னு ஒரு கொரல் உள்ளேர்ந்து கேக்கும்! அது நேக்கு தெரியாதா? இத்தன கும்பலுக்கு மத்தில போய் அவஸ்த படணும்னு தலேல எழுதிருந்தா அது நடந்துதானே ஆகும்! போராக்கொறைக்கு இந்த வாண்டு வேற! எல்லாம் அவ அப்பா குடுக்கற எடம்! பொண்ணரசிய ஒரு வார்த்த சொல்லப்டாது! புது ட்ரெஸ்ஸ போட்டுண்டு காவேரில குளிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கறது! ஆரம்பத்லேர்ந்தே நாலு சாத்து சாத்தி வளக்காதது தப்பா போச்சு!

'தோ' இடுக்கு ஆம்; குளிச்சுட்டு பேசாம ஆத்துக்கு வந்து ட்ரெஸ்லாம் மாத்திக்கலாம்னா- "ம்ஹ்ம்ம்..." அதுக்கொரு பை! செரி! தொலஞ்சுபோன்னா- சாப்பாடும் அங்கதாங்கரதுகள்! அதுக்கொரு பை! எல்லா மூட்டையையும் கட்டிண்டு ஒரு வழியா கெளம்பியாயுடுத்து! ஒரு ஆட்டோ புடிச்சு போணும். பண்டிக நாள் வேரயா? ஆட்டோகாராளுக்கு குஷிதான். இருபது ரூபா கொடுக்கலாம். விருச்சிக ராசி காராளுக்கு "செலவு"ன்னு போட்ருக்கொன்னோ? அறுபது ரூபா கொடுத்து ஒரு வழியா போய் சேந்தாச்சு. நேரா போய் குளிச்சொமா வந்தோமான்னு உண்டா? அதுவும் கிடையாது! "யான பாக்கணும்னு" ஒரே அடம். வரும்போது பாக்கலாம்னா- "ப்டாது! இப்பவே..." எல்லாம் "இப்பவே"தான். போ! எல்லாத்தையும் தூக்கிண்டு நட...

அந்த யானைய சுத்தி ஒரே கும்பல். அது குட்டியா இருக்கரச்செலேர்ந்து அத பாத்துண்டு தான் இருக்கோம். அதுக்குமே நம்பள அடையாளம் தெரிஞ்சா கூட ஆச்சர்யபடரதுக்கில்ல. கொழுக்கு-மொழுக்குன்னு, ஜம்முனு இருக்கும். அழகா நாமம் போட்டுவிட்ருப்பா! கொழந்தைள், சரி, பாக்கரதுகள்னாகூட; அந்த யானைய பாக்க, நம்புளுக்கே ஒரு சந்தோஷமாதான் இருக்கும். கொஞ்சம் பாவமா கூட இருக்கும். ஆனா, அது கைல ஒரு ரூபாய வெச்சு, அது துப்பர எச்சலவேற வாங்கிக்கணும்கர போதுதான்! அதுல என்ன சந்தோஷமோ இவாளுக்கு! நேக்கென்னமோ, இதெல்லாம் கொஞ்சம் பயம்தான்!

படிகட்ல நின்னுண்டு "தை தை"னு குதிக்கதேன்னா கேக்கறதா பாரு! கூட்டமான கூட்டம் வேற! ஒரு எடத்துல நிக்கவே எடமில்ல. அக்கம்பக்க கிராமமெல்லாம் இந்த படித்தொறேலன்னா பாத்துக்கொங்கோளேன்! இப்போதான் படுத்த வேற தோணும்! இதுக்கு! "ஆளகண்ட சமுத்ரம்"னா அது சரியாதான் இருக்கு- அவர்கூட சேந்துண்டு நீஞ்சணுமாம்! அவருக்கென்னடாப்பா! புண்யாத்மா! தேமேன்னு நீஞ்ச போயாச்சு! இத கட்டிண்டு இப்போ நான்னா அல்லாடவேண்டிருக்கு!

ரொம்ப நேரம் தண்ணில ஊராதேன்னா, இங்க என்ன யாரு மதிக்கரா? அப்ரம் ஜுரம் வரும். 'லீவு' போடணும். "மிஸ்ஸு திட்டினா, அடிச்சான்னா" நான் ஒன்னும் பண்றதுக்கில்ல. "நன்னா திட்டுங்கோ"ன்னு தான் சொல்லணும். அப்பவாவது புத்தி வராதான்னு பாக்கலாம்!

எல்லாரும் பூ, மாலை, இலையெல்லாம் தண்ணில விடுவா. எங்காத்து பொடுசு செருப்ப விட்டுட்டு வந்து நிக்கறது. வாங்கி ஒருவாரமால! நூறு ரூபா தண்டம்! நான் அப்பவே அடிச்சுண்டேன்... இந்த கூத்தெல்லாம் வேண்டான்னு! ஏதோ, போய்டு போறது! போனா போட்டும், போ! இப்ப அழுது என்ன புண்யம்? அதுக்கு பசி வந்துடுத்து! வேற ஒண்ணுமில்ல! அது வாய்ல நாலு வா தேங்கா சாதமும், தயிருஞாமும் அடச்சு, ஆத்துக்கு ஒரு வழியா கூட்டிண்டுவந்தாச்சு! அப்பாடான்னு இருக்கு....

This entry was posted on 20 February, 2010 at Saturday, February 20, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

22 comments

நன்னா இருக்குங்க.

21 February 2010 at 00:48

@ chitra...

thanks!!!

21 February 2010 at 00:51

அருமையா எழுதியிருக்கிறீர்கள்!! தொடருங்கள்!!!

21 February 2010 at 11:34

படித்துறையும் குளியலும் அப்ப்டியே கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்!!

21 February 2010 at 11:34

oh yes :) saapta yellam seriya poidum :) getting reminded of my patti :) gud work

22 February 2010 at 07:31

@ thevan...

thanks!! :)

22 February 2010 at 22:09

@aish..

u wont belive, once i put it, i was also so much reminded of u'r paatti!!!!! :) minu n me were chatting abt the same thing the day i postd.. :)

22 February 2010 at 22:11

super details madam!
actually i need to ask u, abt the VASTTT difference in ur english and tamil styles!

23 February 2010 at 23:40

வருகைக்கு நன்றி..:)
உங்கள் எழுத்து நடை அருமை.
வாழ்த்துகள்..:))

24 February 2010 at 07:26

@tk..

thanks!

24 February 2010 at 07:29

@shankar..

thanks!

24 February 2010 at 07:29

சித்த நேரம் அக்கடான்னு சாஞ்சுக்க வேண்டியதுதான்னே.. அதுக்குள்ளையும் எழுதியாயிடுத்தா? இந்த எழுத்துக்கு மனசு அப்படி ஒரு அடிக்ஷன் பாருங்கோ. :))
(btw, nice post. keep penning)

24 February 2010 at 09:56

பலாபட்டறை ஷங்கர் சொல்லித்தான் இங்கே வந்தேன். நன்றி ஷங்கர். :)

--வித்யா

24 February 2010 at 10:07

@vidhoosh..

thanks! :)

6 March 2010 at 15:27

:)

8 March 2010 at 08:35

@sharpudeen..

thanks!

8 March 2010 at 11:44

நடை அருமை. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் எனத் தொன்றியது. சட்டென்று ஒரு அவசர விடைபெறல்.

20 March 2010 at 17:46

ஸ்ரீரங்கம்?! ஆஹா!
ரங்க ”பாஷ்யம்” அருமை..
என் பிளாக் வந்தது தன்யனானேன்

20 March 2010 at 18:07

@ sundarji..

:D ithu oru thodarum payanam.. enavey intha avasara mudivu..

21 March 2010 at 12:21

@rishaban..

nandri.. :D

21 March 2010 at 12:21

அருமைங்க!

18 April 2010 at 23:35

@ rajaram..

thanks!

19 April 2010 at 00:28

Post a comment