கார்தும்பி  

Posted by Matangi Mawley

அப்பொழுதே பெய்ந்து ஓய்ந்த மழையின் ஈரம். அழகான காலை. சூரியனும் தன் வெட்பத்தை மறந்து, அந்த காலைத் தென்றலின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தான் போலும். துரு பிடித்த அந்த சங்கிலியின் மீது தங்கியிருந்த நீர் துளிகள்- அதன் மீது என் விரல்கள் பட்டவுடன் அந்த நீருடன் கலந்த இரும்புத்துருக்களும் என் விரலில் ஒட்டிக்கொண்டன. அந்த ஊஞ்சலின் பலகை மிகவும் பழுதடைந்து விட்டது. பிள்ளைகளின் சுமையைத் தாங்கி ஓய்ந்த பெற்றோரைப்போல!

ஈரமான இரும்பை ருசித்த அனுபவம் இருக்கிறதா? அதன் குளுமைக்கு நிகரே கிடையாது. அதன் ருசி- உப்பை விட ருசி அதிகம். வேடிக்கையான உணர்வு. எப்பொழுதோ சுவைத்த நினைவு- இப்பொழுது என் நாவில் தோன்றி மறைந்தது! என் காலின் கீழ் ஊறிக்கொண்டிருக்கும் அந்த மண்ணின் ஈரம்- என் பாதங்களில் மென்மை கூட்டியது!

அந்த ஊஞ்சலின் சங்கிலிகள் வழியே- சற்று தொலைவில் உள்ள கட்டிடங்களைப் பார்த்தேன். அந்த கட்டிடங்களின் உயர்வில் அமைதி இல்லை. நிரந்தரம் இல்லை. அது இன்னும் உயரும். உயர்ந்து உயர்ந்து விண்வெளியின்எல்லையே தொட்டுவிடும். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சல் தெரியுமா? தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சலைப் பார்க்க வேண்டிய அவசியம்? பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஊஞ்சலின் மீதிலிருந்து அந்த உயரத்தின் மேதுள்ளதைக் காணலாமோ? முடியும். ஊஞ்சலின் வேகத்தைப் பொறுத்து- அதன் உயர்வைப் பொறுத்து... ஆனால் அதன் சங்கிலிகளின் வலுவின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ஆர்வம்.

அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி சிந்தித்துத்க்கொண்டிருன்தேன். அது வரையில் தனிமையின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த
என் அருகில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. எங்கிருந்துதான் அதன் மீது அத்தனை வண்ணங்களோ! அதன் இறகுகளின் படபடப்பினால் அந்த வண்ணங்கள் என் ஊஞ்சலின் மீது சிந்தத் தொடங்கியது. இந்த பிரபஞ்சத்தின் அத்தனை வண்ணங்களையும், தன் மெல்லிய இறகுகளில் சுமந்துகொண்டிருந்த அந்த பட்டாம்பூச்சி, அவ்வபோது தனது பாரத்தை, அங்கும் இங்கும் சிதற விடுகிறது போலும்...

அதன்
படபடப்பில் எதோ ஒரு மொழி. எனக்கு மட்டுமே எதையோ சொல்லத்துடிக்கும் அந்த இறகுகளின் மொழியை அறிய முயன்றேன். ஆம். அதனால் முடியும். அந்தச் சிறகுகளால் அந்த வண்ணத்துப்பூச்சியை, கட்டிடங்களின் உச்சி வரை கொண்டுசெல்ல இயலும். அது கண்டு வரும்- விண்ணின் உச்சத்திலிருந்து இந்த ஊஞ்சல் தெரிகிறதா என்று. தன் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அதன் வண்ணங்களின் ஒருசில துளிகளை என் மீதும் தெளித்துக் கொண்டு- அதன் பயணத்தை துவங்கியது- அது! சிறிது நேரம் வரை என் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்த அந்த வண்ணங்களின் படபடப்பு மறைந்தது. பிறகு சிறிது நேரத்தில், அதன் இறக்கைகளின் படபடப்பின் அதிர்வுகளும் ஓய்ந்தன. ஊஞ்சலில் அமர்ந்தபடி பட்டாம்பூச்சியின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஊஞ்சலின் அசைவின் ஒலி அதன் வயதை உணர்த்தியது. காலத்தின் வேகத்தை அதுவரை உணர்ந்திடாத எனக்கு- அங்கு காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் அவஸ்தையே! ஊஞ்சலின் ஒலியில் ஆறுதல் கண்டேன்.

ஒரு லி. தொலைவிலிருந்து பட்டாம்பூச்சியின் சிறகுகளின் அதிர்வுகளை உணர்த்தியது. ஆர்வத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எனக்கு, என் வேகத்தைத் தடுக்க இயலவில்லை. ஊஞ்சலின் பலகை கீழே விழுந்ததை கவனியாது, பட்டாம்பூச்சியின் வருகையின் களிப்பில் மூழ்கினேன்!
அந்த வண்ணத்துப்பூச்சி என் கைகளில் வந்து அமர்ந்தது. அதில் வண்ணங்கள் இல்லை. கருமையே உருவமாகவும், களைப்பாகவும் தோன்றியது. அதன் வண்ணங்கள் அனைத்தும், அந்த உயரத்தை அடையும்போது சிதரிப்போயிருந்தன. அதன் இப்பொழுதைய சிறகின் படபடப்பின் மொழி வேறானது!

"கட்டிடத்தின் சிகரத்திலிருந்து ஊஞ்சல் தெரிந்ததா"? என்று கேட்கவிழைன்தேன். கார்தும்பி, என் கையின் மீதிலிருந்து பறந்து, என்னை விலகிச் சென்றது. உடைந்துபோன ஊஞ்சலின் சங்கிலிகள் மட்டுமே, தாங்குவதற்கு ஏதுமில்லாமல் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் வழியே, பறந்து சென்றுகொண்டிருந்த என் கார்தும்பியை கண்டிருந்தேன்...


திண்ணையில் "கார்தும்பி": http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=11007049&edition_id=20100704&format=html

This entry was posted on 18 May, 2010 at Tuesday, May 18, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

37 comments

நல்லா எழுதிருகிங்க.

18 May 2010 at 23:35

ஒரு ஒலி. தொலைவிலிருந்து பட்டாம்பூச்சியின் சிறகுகளின் அதிர்வுகளை உணர்த்தியது. ஆர்வத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எனக்கு, என் வேகத்தைத் தடுக்க இயலவில்லை. ஊஞ்சலின் பலகை கீழே விழுந்ததை கவனியாது, பட்டாம்பூச்சியின் வருகையின் களிப்பில் மூழ்கினேன்!


...... அருமையா எழுதி இருக்கீங்க. :-)

18 May 2010 at 23:57

@iramasamy..

nanri!

19 May 2010 at 00:06

@chitra...

nanri! :D

19 May 2010 at 00:06

@மாதங்கி

//அந்த ஊஞ்சலின் பலகை மிகவும் பழுதடைந்து விட்டது. பிள்ளைகளின் சுமையைத் தாங்கி ஓய்ந்த பெற்றோரைப்போல!//

அருமையான வரிகள். ரொம்ப இயல்பா நல்ல எழுதி இருக்கீங்க உங்க டெம்ப்ளட் நல்ல இருக்கு

19 May 2010 at 07:03

@lk..

nanri! :)

19 May 2010 at 09:33

:))) periyaaa aaluthaan poolarukku!! kumbtukkaren yejaman!!..:)

19 May 2010 at 12:26

@thakkudu..

ha..ha! :D namaskaaram!

19 May 2010 at 12:51

தத்துவம் தோய்ந்த வரிகள்-அபூர்வமான உவமைகள்-கவிதை நடை-உயரத்தைத் தொடுகையில் நேரும் இழப்பு-எல்லாமே ஈரத்தில் ஊறிய இரும்பின் ருசி போல அபாரம் மாதங்கி.சிலர் நிறைய எழுதுகிறார்கள்.வெகு சிலர்தான் நிறைவாக எழுதுகிறார்கள்.

19 May 2010 at 16:40

@sundarji...

ezhuthubavarkalukku ezhuthukayil 1000 ennangal vanthu povathundu. ippadippatta kuzhappangal uuttum ennangalin maththiyil irunthu- oru sila kaatchigalai manathil niruththikkondu vaarthaigalaal athanai pathivu seiyum pothu- antha vaarthaikal entha alavirku antha ennangalai gyayappaduththum enbathu en aiyam. athu endrumey ennai vittu neengiyathu kidayaathu! eththanai athikapatcha mega pixel camera kkal vaanginaalum- ennakku ennamo- en kankal kandu- rasiththu anubhaviththa nijangaley pidiththamaanavai! aangilaththil niraya abstract writing ezhuthiya anubhavam undu. aanaal thamizhil- athai entha alavu kaiyaala mudiyum endru ninaiththirunthaen! ungalin intha comment.. enakku oru nalla encouragement! nanri ungalukku.. ippadi ennai uukkuviththamaikku!

19 May 2010 at 17:37

உங்களோட எழுத்து ஒரு அனுபவம். நாளுக்கு நாள் அதோட ஆழமும் அழகும் கூடிகிட்டே இருக்கு. பெரிய எழுத்தாளர்களிடம் (பெயர் சொல்ல வேண்டாம்) நான் கண்ட வர்ணனையை உங்க எழுத்துல கண்டிப்பா தெரியுது. என்னோட எழுத்தையும் நான் மறு பரிசீலனை செய்யத் தோணுது.

நன்றி. தொடர்ந்து எழுதுங்க.

20 May 2010 at 01:37

I don't know what to say but I liked the way you write.
Padikka padikka thevittaadha suvai tharugiradhu.
Enakkum tamizhil ezhudha vaendum engira aavalai undaakki ulladhu
kpartha12@gmail.com

20 May 2010 at 05:25

வண்ணத்துப்பூச்சியை ஒரு செல்லப்பறவை யாக பார்த்து, அதன் வர்ணங்களில் நானும் மயங்கிய காலங்கள் உண்டு... உங்கள் கவிதை மிகு ``கார்தும்பி`` அந்நினைவுகளுக்கு அழைத்து சென்றது..அருமையான எழுத்து பாணி..வாழ்த்துக்கள்.

20 May 2010 at 06:49

@ramakrishnan..

ezhuththil enna irukkirathu! ennaip poruththa varaiyil, sinthanaigalil valu irunthaal- ezhuththugalai athuvey thedip pidiththu korthuk konduvidum! avvalavu thaan! my dad says- "when you write- you get possessed" endru. athu- ennaip poruththa varayil oru perum unmai endrey thondrugirathu! Madam Blavetsky ezhuthiyikkiraarkal endru kelvi undu- "this author-nay, writer" endru-- athuvey ithuvum!

20 May 2010 at 06:59

@parthasarathy..

thamizh mozhi appadi.. yaar ezhuthi padiththaalum antha mozhiyil namakkum ezhuthath thondrum! :) en "thideer" thamizh payanaththirkum ithu thaan kaaranam!

20 May 2010 at 07:01

@padmanabhan..

nanri! :)

20 May 2010 at 07:02

ungalai ennoda pathivula introduce panni irukken

http://lksthoughts.blogspot.com/2010/05/ii_20.html

20 May 2010 at 12:56

@LK...

ennudaya intha "blog"(tamil) oru "muyarchi"- oru experiment endra nokkaththudan thaan naan ezhuthath thuvanginaen. thamizhil itharku mun ezhuthiyathey kidayaathu! ithuvey mudhal murai. in fact, enuukum seri-en veettil ullavarkalukkum seri, ippadi naan ezhuthumpothu thaan enakku thamizh theriyum endrey therinthathu! thamizh puththagangalum padiththathu kidayaathu! ippdipatta nilayil, ennaalum ezhutha mudiyumaa thamizhil, endra or aarvaththinaaleye naan intha "maiththuligalai" thuvanginaen!

en ezhuththugalai yaarum padippaarkalaa endru ennikkondiruntha enakku- ippadi oru angeekaaram aliththu, intha pathivaiyum padikkalaam endru ennai arimukap paduththiyamaikku- nanri! uukkuviththamaikku nanri!

20 May 2010 at 18:02

தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers http://www.tamilpenkal.co.cc/

21 May 2010 at 08:17

@tamilpengal..

interesting...

21 May 2010 at 16:32

உங்க‌ள் எழுத்தின் ருசி ஈர இரும்பின் உப்பில்.
கால‌த்தின் க‌ண‌க்கை ஊஞ்ச‌லின் ஓசையிலறியும் நுட்ப‌ம்.
எழில் நிற‌ம் தூவும் வ‌ண்ண‌த்துபூச்சி, பழமை வீடு விட்டு
வின்னெகும் புதுமை க‌ட்டிட‌ம் க‌ண்டு கருத்த‌தில்
புவி மாசெனச் சொல்லிப் போகிற‌து நிக‌ழ்வின் ப‌ய‌ண‌த்தை
அறுந்து தொங்கும் ச‌ங்கிலி அசைவாய்.

22 May 2010 at 15:29

@ vasan..

nanri! by far the best comment tht i could get for this post!

22 May 2010 at 22:06

hello mathangi, secnd part pootachu!! iyengar famly is waiting for u..:)

24 May 2010 at 12:12

@thakkudu...

beshaa irunthuthu.. comment pannirukkaen.. enga ur vasanthothsavam gyabagam vanduduththu!
ennathaan unga oor perumaal casual dress la irunthaalum, enga ranganukku azhagaa, madhura kavi aazhvaar thottathlernthu thoduththu vantha oththa vaijeyanthi maala saaththiruppaa- athu onnuththeley avar jammunu minukkuvaar!

24 May 2010 at 18:52

@LK..

thanks for award.. m honored!

24 May 2010 at 19:00

சூப்பருங்க....

25 May 2010 at 16:54

@annamalai..

thanks!

26 May 2010 at 18:54

I can feel the fragrance of feminine, it’s a soft narration, gud one Matangi,and romba yosichu titles choose pannuvingha nu ninkuren (கார்தும்பி)nala iruku cheers,,,

27 May 2010 at 18:41

கவிதை நடைல இவ்வளவு பெரிய பதிவு எழுதறது ரெம்ப கஷ்டங்க.. அதுக்கே இதோ புடிங்க பெரிய பாராட்டு... நல்ல பதிவு...

27 May 2010 at 20:28

@jai..

title yosikka vendaam.. ennangalukkum ezhuththirkum eththaarpondru thalaippum athuvaaka vanthuvidum..

feminine? there are no masculine or feminine when it comes to thoughts.. there are only thoughts! neutral! don't divide them..

27 May 2010 at 21:56

@appaavi..

nanri! :)

27 May 2010 at 21:57

Feminine- sry I am not certainly dividing gender,,, It is jus my Presumption on this specific post ,,, thnks...

28 May 2010 at 10:29

@jai...

np..

28 May 2010 at 10:46

Ms. Matangi Mawley,
Agreed to disagree your 'Thoughts have neutral' nature and do not vary either as genter based.
A male can never feel what the Females can on some (Not all) issues ans vise versa.

29 May 2010 at 16:35

@vasan..

i agree with u.. but i objected to jai's statement on thoughts involved in the this particular subject. it had nothing to do with gender..

bt i still stand by wht i said.. "thoughts are neutral".. given a stream of thoughts.. just thoughts.. no subjective nature given to it.. say.. thoughts are not always person going somewhere nowhere.. thoughts can be colours.. they can be frogs.. light..darkness.. anything.. i mean ANYTHING! point out the gender!

i don think people always think of same things.. reflections of reality.. though most times they do.. bt thoughts- comprises of something more than reality.. metaphors coming together to depict something that may mean nothing whatsoever in reality but so many things in the world of thoughts. and it was these thoughts that i was referring to.an

thoughts of men n women may differ.. thts subjective.. bt thoughts as such.. in teir raw form, i have known, that they have no gender..

but as u have said.. let's agree to disagree.

30 May 2010 at 15:49

Appreciate your 'THOUGHT'.

31 May 2010 at 17:45

@ vasan...

thanks!

31 May 2010 at 18:27

Post a Comment