கார்தும்பி  

Posted by Matangi Mawley

அப்பொழுதே பெய்ந்து ஓய்ந்த மழையின் ஈரம். அழகான காலை. சூரியனும் தன் வெட்பத்தை மறந்து, அந்த காலைத் தென்றலின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தான் போலும். துரு பிடித்த அந்த சங்கிலியின் மீது தங்கியிருந்த நீர் துளிகள்- அதன் மீது என் விரல்கள் பட்டவுடன் அந்த நீருடன் கலந்த இரும்புத்துருக்களும் என் விரலில் ஒட்டிக்கொண்டன. அந்த ஊஞ்சலின் பலகை மிகவும் பழுதடைந்து விட்டது. பிள்ளைகளின் சுமையைத் தாங்கி ஓய்ந்த பெற்றோரைப்போல!

ஈரமான இரும்பை ருசித்த அனுபவம் இருக்கிறதா? அதன் குளுமைக்கு நிகரே கிடையாது. அதன் ருசி- உப்பை விட ருசி அதிகம். வேடிக்கையான உணர்வு. எப்பொழுதோ சுவைத்த நினைவு- இப்பொழுது என் நாவில் தோன்றி மறைந்தது! என் காலின் கீழ் ஊறிக்கொண்டிருக்கும் அந்த மண்ணின் ஈரம்- என் பாதங்களில் மென்மை கூட்டியது!

அந்த ஊஞ்சலின் சங்கிலிகள் வழியே- சற்று தொலைவில் உள்ள கட்டிடங்களைப் பார்த்தேன். அந்த கட்டிடங்களின் உயர்வில் அமைதி இல்லை. நிரந்தரம் இல்லை. அது இன்னும் உயரும். உயர்ந்து உயர்ந்து விண்வெளியின்எல்லையே தொட்டுவிடும். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சல் தெரியுமா? தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சலைப் பார்க்க வேண்டிய அவசியம்? பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஊஞ்சலின் மீதிலிருந்து அந்த உயரத்தின் மேதுள்ளதைக் காணலாமோ? முடியும். ஊஞ்சலின் வேகத்தைப் பொறுத்து- அதன் உயர்வைப் பொறுத்து... ஆனால் அதன் சங்கிலிகளின் வலுவின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ஆர்வம்.

அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி சிந்தித்துத்க்கொண்டிருன்தேன். அது வரையில் தனிமையின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த
என் அருகில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. எங்கிருந்துதான் அதன் மீது அத்தனை வண்ணங்களோ! அதன் இறகுகளின் படபடப்பினால் அந்த வண்ணங்கள் என் ஊஞ்சலின் மீது சிந்தத் தொடங்கியது. இந்த பிரபஞ்சத்தின் அத்தனை வண்ணங்களையும், தன் மெல்லிய இறகுகளில் சுமந்துகொண்டிருந்த அந்த பட்டாம்பூச்சி, அவ்வபோது தனது பாரத்தை, அங்கும் இங்கும் சிதற விடுகிறது போலும்...

அதன்
படபடப்பில் எதோ ஒரு மொழி. எனக்கு மட்டுமே எதையோ சொல்லத்துடிக்கும் அந்த இறகுகளின் மொழியை அறிய முயன்றேன். ஆம். அதனால் முடியும். அந்தச் சிறகுகளால் அந்த வண்ணத்துப்பூச்சியை, கட்டிடங்களின் உச்சி வரை கொண்டுசெல்ல இயலும். அது கண்டு வரும்- விண்ணின் உச்சத்திலிருந்து இந்த ஊஞ்சல் தெரிகிறதா என்று. தன் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அதன் வண்ணங்களின் ஒருசில துளிகளை என் மீதும் தெளித்துக் கொண்டு- அதன் பயணத்தை துவங்கியது- அது! சிறிது நேரம் வரை என் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்த அந்த வண்ணங்களின் படபடப்பு மறைந்தது. பிறகு சிறிது நேரத்தில், அதன் இறக்கைகளின் படபடப்பின் அதிர்வுகளும் ஓய்ந்தன. ஊஞ்சலில் அமர்ந்தபடி பட்டாம்பூச்சியின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஊஞ்சலின் அசைவின் ஒலி அதன் வயதை உணர்த்தியது. காலத்தின் வேகத்தை அதுவரை உணர்ந்திடாத எனக்கு- அங்கு காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் அவஸ்தையே! ஊஞ்சலின் ஒலியில் ஆறுதல் கண்டேன்.

ஒரு லி. தொலைவிலிருந்து பட்டாம்பூச்சியின் சிறகுகளின் அதிர்வுகளை உணர்த்தியது. ஆர்வத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எனக்கு, என் வேகத்தைத் தடுக்க இயலவில்லை. ஊஞ்சலின் பலகை கீழே விழுந்ததை கவனியாது, பட்டாம்பூச்சியின் வருகையின் களிப்பில் மூழ்கினேன்!
அந்த வண்ணத்துப்பூச்சி என் கைகளில் வந்து அமர்ந்தது. அதில் வண்ணங்கள் இல்லை. கருமையே உருவமாகவும், களைப்பாகவும் தோன்றியது. அதன் வண்ணங்கள் அனைத்தும், அந்த உயரத்தை அடையும்போது சிதரிப்போயிருந்தன. அதன் இப்பொழுதைய சிறகின் படபடப்பின் மொழி வேறானது!

"கட்டிடத்தின் சிகரத்திலிருந்து ஊஞ்சல் தெரிந்ததா"? என்று கேட்கவிழைன்தேன். கார்தும்பி, என் கையின் மீதிலிருந்து பறந்து, என்னை விலகிச் சென்றது. உடைந்துபோன ஊஞ்சலின் சங்கிலிகள் மட்டுமே, தாங்குவதற்கு ஏதுமில்லாமல் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் வழியே, பறந்து சென்றுகொண்டிருந்த என் கார்தும்பியை கண்டிருந்தேன்...


திண்ணையில் "கார்தும்பி": http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=11007049&edition_id=20100704&format=html

As I'm Suffering from...  

Posted by Matangi Mawley


காலங்காத்தால மூஞ்சிய இப்படி வெச்சுண்டு வந்து நின்னா, பின்ன கோவம்வருமா வராதா? நீங்களே யோஷ்சு பாருங்கோ! அதெப்டி நெனச்சொடனே fever வருமோன்னுதான் நேக்கு புறியல! மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு, கண்ண தொறக்கவே முடியாதெக்கி வந்து நிக்கறது! தொட்டு பாத்தா ஒண்ணும் சூடா இல்ல. ஆனா உள்ளுக்குள்ள "கொண கொண" ன்னு இருக்கும்போல தான் தோணறது!

தெருக்கோடில clinic ஒண்ணு இறுக்கு. ஆனா இத கெளப்பி கூட்டிண்டு போணுமே! அப்றம் சமயல யாரு கவனிப்பா? துளி மெளகு தட்டி போட்டு
கொட்ரசம் வேச்சாச்சுன்னா ஆச்சு! பின்னாடியே என் வால புடிச்சுண்டு அப்போலேர்ந்து அலைஞ்சுண்டுருக்கு. "Leave Letter" கையெழுத்து போடணுமாம்! எம்பொண்ணு என்ன சமத்துன்னு நெனச்சுண்டேன்!

அவர் ஆபீஸ் போற வழீல school- குடுத்துட்டு போய்டலாம். நோட்புக்- லேர்ந்துபேப்பர கிழிச்சு, ink பேனாவால அழகா எழுதிருக்கு, கொழந்த!

From
M. Mathangi
II, 'A'

To
The Class Teacher
II, 'A'

Miss,
As I am suffering from fever, I am unable to attend class. Please grant leave for one day only.

Thanking You
Yours Faithfully,
M. Mathangi

M. Pushkala
(Parent's Signature)

ஏதோ! இது school-லுக்கு
போலேன்னா அவா class ஒரு நா அமைதியாதான் இருக்கும். தினத்துக்கு ஒரு 'complaint'. டைரி- "Always talking", "Beating other children"- னு ஏதாவது ஒண்ணு இருந்துண்டுதான் இருக்கும். என்ன பண்ணமுடியும்? ஆத்துல அதுக்கு யார் இருக்கா பேசறதுக்கு? சண்டபோடரதுக்கு? அங்கதானே எல்லாம் பண்ணியாகணும்!

ரசன்ஜாமும், நார்தங்காயும், நாலுவா ஊட்டி உட்டுட்டு- டாக்டர்- கூட்டிண்டுஓடியாயுடுத்து! அவரான்னா- ஊசி ஊசி-ன்னு பயமுறுத்துவார் கொழந்தைய! ஒரே அழுக! அந்த fever பாட்டுக்கு அதுவா போயிருக்கும், இந்த மனுஷன் இப்படிஅழவிடாம இருந்தா! மருந்து மாத்தறைய தவிர, சாக்லேட் வேற வாங்கணும் இப்போ! இந்த அழுகைய நிறுத்த!

போன வாரத்லேர்ந்து
சேத்துண்டுருக்கு! ஏதோ இந்த "ஆசை" சாக்லேட் அட்ட ௨0 சேத்தா, வாய்ல மாட்டிக்கற பல்லு தருவாளாம். மெனக்கட்டு, ஒரு வாரமா தின்னு தீத்து, ஒரு வழியா ௨0 அட்ட சேத்து வச்சிண்டுருந்துது! அதையும் கையோட வாங்கிண்டு, மருந்து மாத்தற எல்லாத்தையும் வாங்கிண்டு, ஆத்துக்கு வந்ததுதான் கொறச்சல்! ஒடனே குதிச்சுண்டு பொய் டிவியபோட்டாயிடுத்து!

நமக்கு ஒடம்பு செரியில்லையே, பேசாம தூங்குவோமே கொள்ளுவோமே- ன்னு உண்டா! ஒண்ணு டிவி, இல்ல பேச்சு! ஏதாவது ஒரு சத்தம் இருந்துண்டே இருக்கணும் போலருக்கு! அந்த டிவில "வயலும் வாழ்வும்" தான் பொழுதன்னிக்கும் ஓடும் வேற! அதையும் உக்காந்து "சந்திரகாந்தா" பாக்கராப்லையே பாத்துண்டுருக்கு!

"Yours Faithfully"- ன்னு மட்டும் எழுத தெரியறது! எல்லாம் school- கு போகாம இருக்கறதுக்கு ஒரு சாக்கு! ஆனா சும்மா சொல்லப்டாது! என்னமா மூஞ்சியவெச்சுண்டு நின்னுது காலேல! இந்த ஒரு விஷயத்துக்குதான் வருஷா வருஷம் எம்பொண்ணுக்கு "fancy dress"- "first prize" கொடுக்கறது! ஒரு வாரம் முன்னாடிதான், ஆதி சங்கராச்சார்யா வேஷம் போட்டுண்டு, "பஜ கோவிந்தம்" சொல்லித்து! "First prize"-னா சந்தோஷபடாதோ? "Second Prize"- கு ஒரு pencil box கொடுத்துருக்கா! அதுதான் பாக்க அழகா இருக்காம். அதுதான் வேணுமாம். இப்பகொடுத்துருக்கற cup வேண்டாமாம்! ஒரே அழுக! "டேய் இதாண்டா ஒசத்தி" ன்னா- அதுக்கென்ன தெரியும், பாவம்! அதுக்கு pencil box, கப்- னு தான் தெரியும்! எம்பொண்ணு ஒரு படி மேல! "1" விட "13" தான் பெரிசுன்னு, அங்கேர்ந்து பெருமையா ஓடி வந்து- "அம்மா! நான் 13th rank வாங்கிருக்கேனே
" ன்னு- சிரிச்சுண்டே சொல்லும்! அத திட்ட தான் மனசு வருமா, அடிக்கத்தான் கைவருமா?!

ஒரு வழியா அந்த டிவி- கு உத்தரவு கொடுத்து- இத தூங்க பண்ணியாச்சு! கிழிஞ்சநாரா கெடக்கு- பாவம்! அது அந்த "பஜ கோவிந்த"த்த ஸ்பஷ்டமா சம்ஸ்க்ருதத்துல சொன்னதுலேர்ந்தே நான் நெனச்சுண்டுதான் இருந்தேன்! எல்லார் கண்ணும் பட்டுடுத்து பாவம் கொழந்த மேல! தூங்கட்டும்... நானும் செத்த அப்டியே
கட்டய சாய்க்கறேன்...