நான்கு வருடங்கள்!  

Posted by Matangi Mawley


இதை மறதி என்று கூற இயலாது. அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால்-  திடீரென்று தோன்றியது.

"மைத்துளிகள்" blog -  நான்கு ஆண்டுகளை கடந்து விட்டது (ஜனவரி 2010)! சுமாராக 80 பதிவுகளும் பதிவாகிவிட்டது! 

இந்த blog துவங்கும்போது- இது ஒரு "experiment" என்று குறிப்பிட்டிருந்தேன். "மைத்துளிகள்" என்பது என்ன- என்று என்னுடைய முதல் பதிவில் விளக்கியிருந்தேன் (Click Here). 

"மைத்துளிகள்" என்ற இந்த "experiment" ஒரு மாதம் கூட நிலைத்திருக்குமோ என்று  எண்ணியதுண்டு. "தமிழ்"- இல் நான் இதற்க்கு முன்பு எழுதியது கிடையாது. நான் என்ன எழுதப்போகிறேன் என்பதையும்  முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவில்லை. 

ஆனால் ஒரு மொழி- அதன் பயணத்தை தானே முடிவு செய்துகொள்ளும்- என்பது இந்த நான்கு வருடங்களில் ஓரளவு புறிந்து கொள்ள  முடிந்தது. 

பல பதிவர்களின் பதிவுகளை படித்து, ரசித்து மகிழ- மற்றும் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது- "மைத்துளிகள்".

"மைத்துளிகளின்" சில பதிவுகள் (எனக்குப் பிடித்தவை):

(1) ரப்பர் பந்து

(2) மஞ்சகாப்பு , பரமபதம் 

(3) கார்தும்பி 

(4) Degree காபி Series 

(5) துப்பாண்டி / Bushy Series  

(6) குக்குளு குளு குளு குளு 


பதிவவுகளை தொடர்ந்த அனைவருக்கும் நன்றி!