"தலாஷ்"  

Posted by Matangi Mawley


"தலாஷ்" சினிமா பார்க்க போயிருந்தோம். அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் அது "பேய்"/"பிசாசு" போன்ற விஷயங்கள் பற்றிய படமாம். இருந்தால் என்ன? இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கு "பேய்","பிசாசு" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா? மந்திர மாந்த்ரீகங்கள் நிறைந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ- அவள் சொல்லும்போதே காட்சிகள் நம் மனக் கண் முன் உண்மை நிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கேட்பவர்களை பிரமிக்க வைக்கும், பாட்டியின் கதை சொல்லும் விதம்!

"தலாஷ்"- ஆனால் "பேய் கதை" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் "தலாஷ்" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.

இந்த பதிவை "திரை விமர்சனம்" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், "தலாஷ்" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- "குறுக்குப் பாதை" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும்! கடேசியில் "ஆனதாண்டாபுரம் ஐயங்கார்" போல ஒரு மாந்த்ரீகர் அந்த "குறுக்கு வழியின்" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!

அன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். "பேய் மீது நம்பிக்கை உண்டா"? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் "கடவுள்" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.

இன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். "நேரப் பற்றாக்குறை" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், "சந்திரலேகா", "ஹரிதாஸ்" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும்? இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை "வாழ்கை" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...

Pt. RAVI SHANKAR...  

Posted by Matangi Mawley


Solidaire CAT 1000 TV ல், பல நாட்கள் காலை Doordharshan ல் நான் கேட்ட முதல் இசை- இவரது "Bhaje Sargam" என்ற Desh ராகத்தின் துவக்கம் தான்... ஹிந்துஸ்தானி இசை இன்னது என்று எனக்கு இவரின் இசையைத் தான் அடையாளமாகக் காண்பிக்கப் பட்டது. 


Pt . Ravi Shankar may not be with us any more. But his music would stay forever... 

Bhaje Sargam... Click Here

கார்திகை 2012  

Posted by Matangi Mawley



கார்திகை திருநாள் வாழ்த்துக்கள்!


KASAB HANGED  

Posted by Matangi Mawley

Kasab hanged: Kudos to the officials for carrying out the execution quietly, thank you President Pranab for being decisive and thank you India- finally the victims get some kind of justice!

Remembering my beloved maternal uncle, Shri. P.K. Gopalakrishnan, who lost his life on the fateful day- 26/11: Click Here

OMG : OH MY GOD  

Posted by Matangi Mawley


இன்று மதியம் Colors channel ல் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.

தீபாவளி வந்தாச்சு!  

Posted by Matangi Mawley


Photo ல இருப்பது தேஜஸ்வினி, நம்ம friend. எங்க தெரு-ல தீபாவளி 2 வாரமா நடந்துண்டே இருக்கு. எக்கச்சக்க அரை டிக்கெட்ஸ். இந்த தடவ எங்க வீட்டுல வெடி கொஞ்சம் கம்மி தான். பாட்டி இருந்த போது- ஒரு வீட்டுல மொத்தம் 20 பேர் இருப்பா கிட்ட தட்ட. Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண  வெச்சு விடுவா. 1 வாரம் 10 நாளைக்கு முன்னாடியே சமையல்காராள்லாம் ஜாங்கிரி, மைசூர் பாக், பாதுஷா, mixture எல்லாம் பாட்டி ஆத்து பின் புறத்துல செய்ய ஆரம்பிச்சுடுவா. நாங்க எல்லாரும் ஊருக்கு கெளம்பும் போது- 2-3 tin நிறையா தீபாவளி தின்பண்டம் கொடுத்தனுப்புவா!
Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....

Kaleidoscope -இன் ஊடே  

Posted by Matangi Mawley

ஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும் உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத் தெரிந்திருக்கக் கூடுமா? நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா? அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? என் பதத்தை நான் அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம் தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும் வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு திட்டம் இருக்கிறது.

சில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து  வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.

ஆனால் இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான் அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும் அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது?  எண்ணங்களையும்  kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள்! அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி? கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின் நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.

கோணல்-நேர் என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ! ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா? எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே? எப்படித் தாக்கம் ஏற்படும்? Science Fiction கதையைப் போல- ஒரு  எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்" போல, தோன்றிவிட்டால்? மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால்? யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்!

புத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து கொண்டிருக்கிறது! எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது! அவனுக்கும் தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...?

Azmat யாரு? - Degree காபி 4  

Posted by Matangi Mawley

பாட்டி- க்கு சொந்த ஊர் எரணாகுளம். சின்ன வயசில ஒரு அழகான தாலாட்டு பாடுவா- மலையாளத்துல. "ஓமன திங்கள் கிடாவோ"- ரொம்பவே popular ஆன தாலாட்டு பாட்டு தான். ஆனா-- எங்க பாட்டி பாடின அந்த tune ல- அதுக்கப்றம் யாரும் பாடி நான் கேக்கல! அத்தன அழகான குரல், அந்த வயசுக்கும். பாட்டிக்கு கிட்ட தட்ட- 70 வயசு இருக்கும் போதும், "நகுமோமு" பாடும் போது அவ்வளோ அழகா இருக்கும், குரல். "Real , earthiness"!

ஒரு சில சமயத்துல, குரல்-ல divinity ய விடவும் earthiness தான் முக்கியம் னு தோணும். இந்த எண்ணம் எனக்கு எங்க பாட்டியோட குரல் கேட்டு வளந்ததால கூட இருக்கலாம். ஆனா- சில நேரங்கள்-ல, "கீச்" னு high -pitch குரல் இருக்கும் "heroine" அ விட, deep- sensual குரல் ல பாடும் "vamp" ஓட voice ரொம்பவே அழகா தோணும், எனக்கு. ஒரு சில குரல்கள்- நம்ம சினிமாக்கள் ல அபூர்வமான கண்டுபிடிப்புகள் தான். "நீல வண்ண கண்ணா வாடா" பாட்டு முதல் தடவ கேட்ட போது, அன்னிக்கு full day அந்த பாட்ட மட்டும் தான் கேட்டேன். What a voice! அத விட பத்மினி என்ன அழகு!

எனக்கு அதே போல பானுமதி அம்மா குரல் ரொம்பவே பிடிக்கும். பாட்டிக்கு அப்புறம் இவங்க பாடின "நகுமோமு" தான் A1! அழகான "light" touch ஓட- fabulous சங்கதிs! Especially "nanu brOvaga rA -dA" அந்த "rA -dA" transition! "கண்ணிலே இருப்பதென்ன", "அழகான பொண்ணு நான்" இதெல்லாமே என் favourites! எங்க வீட்டுல நிறையா cassettes உண்டு. Second hand cassettes ல AIR ல வரும் சில நல்ல programmes அ அப்பா record பண்ணி வெச்சிருப்பார். அதுல ஒரு cassette ல, பானுமதி அம்மா வோட ஒரு தெலுங்கு பாட்டு இருந்தது. ரொம்பவே அழகான பாட்டு! "உய்யால ஜமபால", "சக்ரபாணி" movie லேர்ந்து.

அப்பா க்கு ஜிக்கி குரல் ரொம்ப பிடிக்கும். Incidentally, அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டும் ஜிக்கி யுடைய "துள்ளாத மனமும் துள்ளும்" பாட்டு தான். M.S. ராஜேஸ்வரி குரலுக்கும் தனி அழகு உண்டு. என் favourite "ஓ ரசிக்கும் சீமானே"! இந்த list ல ஒரு ரொம்ப முக்கியமான பெயர்- S. வரலக்ஷ்மி. பானுமதிக்கு அடுத்தது truly unique voice, south Indian film music ல இவங்களுக்கு தான்! "வெள்ளி மலை மன்னவா", "பச்சை கிளிக்கொரு" ன்னு தமிழ் பாடல்கள் இருந்தாலும் அவங்களோட இந்த தெலுங்கு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்! அவங்க voice க்கு முழு justice கொடுக்கும் பாட்டு இது (click here). On this subject- மனோரமா அம்மா voice பத்தி mention பண்ணாம இருக்க முடியல (click here)! அவங்களோட endless list of talents,  never ceases to amaze me!

TMS விட PBS பிடிக்கும்! இவங்க ரெண்டு பேரையும் விட கண்டசாலா பிடிக்கும்! அவரோட "தேசுலவுதே" வும் "அமைதியில்லா மனமே"- என்னோட music player ல most played songs list ல இருக்கும். இந்த ரெண்டு பாட்ட தவிர "oohalu gusagusalaade" தெலுங்கு பாட்டும் sounds great!

Rafi is an amazing singer! ஆனா- அவர விடவும் ரொம்பவே இனிமையான குரல்- Talat Mohammad கு ங்கரது என் opinion. "AE gham e dil" -பாட்ட கேட்டு பார்தப்ரம் உங்க opinion சொல்லுங்க. சில சமயங்கள் ல- எதிர்பாராத சில குரல்கள் நம்ம கவனத்த தன் பக்கம் ஈர்க்கும். S D Burman - Guide படத்துல title song பாடியிருப்பார். அது இந்த வகைய சேர்ந்தது தான். ஒரு சமயம் நாங்க கல்கத்தாவில இருந்த போது- ஒரு குரலை கேட்ட அம்மா- "மழை கொட்டினாப்ல இருந்துதுடா"  அப்டீன்னு சொன்னா! அம்மா கேட்ட பாட்டு- "Rudaali" ங்கர சினிமா la Bhupen Hazarika பாடின "Dil hum hum kare" பாட்டு. லதா மங்கேஷ்கர் version உம் உண்டு. ஆனாலும்- Hazarika குரல் suits better. அவருக்கு இத பாடும் போது கொஞ்சம் வயசு ஆயாச்சு. இந்த பாட்டோட original Bengali version - "Megh thom thom kori" sounds brilliant!

Begum Akhtar குரல் - such a heavy classical voice! "Aye Mohabbat Tere Anjam Pe Rona Aaya"- ஆஹா.. என்ன பாட்டு! அந்த கால குரல்-னாலே  டக்குன்னு ஒரு flash வரும் மனசுல- அந்த flash Shamshad Begum குரலா தான் இருக்கும். இவங்க குரல ரொம்ப அழகா, நிறையா use பண்ணின O.P.Nayyar க்கு தான் thanks சொல்லணும்! "Leke pehla pehla pyaar", "Kajra mohabbat wala", "Teri mehfil mein kismat" ன்னு என் list ரொம்பவே பெருசு! Salma Agha ("Dil ke Armaan"), Reshma ("Lambi Judaai") போன்ற singers அ எனக்கு introduce பண்ணின எங்க பத்ரிநாத் trip ல வண்டி ஓட்டின taxi driver- Mahendra Singh, க்கு ஒரு BIG thank you! 

ரொம்ப stereotypical ஆ போச்சோ Tamil film music ன்னு நினச்ச போது Malaysia Vasudevan, ஜென்சி போன்ற singers gave me a relief! இப்போ music directors நிறையாவே experiments பண்ணறாங்க. Khailash Kher- WOW! அவரோட "Allah ke bande" கேட்டதிலேர்ந்து- I've become his fan! "Teri Deewani", "Saiyyan"..... Best of them - ஒரு surprise package! Shubha Mudgal குரலும் off beat list ல ஒண்ணு. அவங்க compose பண்ணி , அவங்களும் Kher உம் சேர்ந்து பாடின ஒரு "Mega Serial", Star Plus ல telecast ஆகும் "Diya aur bati hum" serial song அது. AMAZING music!

ரஹ்மான் குரல் கூட is very unique. அவரோட "Yeh jo des hai tera" பாட்டுல அவர் குரல் ரொம்பவே நல்லா இருக்கும். "Peepli Live" ன்னு ஒரு சினிமா. அதுல Raghuveer Yadav பாடின "Mehangai Dayian Khaye Jaat Hai" - such an 'out of the world' experience. அவர் originally actor. "Dilli 6" படத்துல ராம்லீலா நடக்கற காட்சிகள் ல இவர் தான் பாடியிருப்பார்! Sona Mohapatra -- Such a fresh voice! "Aaja ve", "Bedardi Raja"...

Music Industry உடைய இந்த "different voices" use பண்ணற experiment successful ஆகணும் அப்டீங்கறது என் hope. Swaroop Khan போன்ற "Indian Idol" contestants அ பாத்தா (click here)- successful ஆகும் ன்னு தான் தோணறது! இப்போ ஆரதோ இல்லையோ -- Azmat காலத்துல கண்டிப்பா ஆகும்! (Azmat யாரு?-- Click Here

PS: Degree காபி Series: சினிமா பாடல்களில் ராகமாலிகை -- மி மராதி -- GR -- Degree காபி


Paper ல பேரு...- RELOADED!  

Posted by Matangi Mawley

"The Hindu"- 2nd July ., 2012 - "Letters to the Editor"... (Previous letter- click here!)


Letter ஐ படிக்க, image ஐ click செய்யவும்...

"அரக்கி"  

Posted by Matangi Mawley


சாதாரண ஒரு விஷயத்திற்கு, கற்பனை வடிவங்கள் பல கொடுத்துப் பெரிய விஷயமாக மாற்றுவதற்கு நம் அரசியல் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் "அம்பேத்கர்" கார்டூன் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள NCERT  புத்தகத்தை புரட்டிப் பார்த்த நம் தலைவகளுக்கு ஒரே குஷி! "தமிழ் மொழி"/"ஹிந்தி agitation" சம்பந்தப் பட்ட ஒரு கார்டூனும் கிடைத்து விட்டது, இப்போது!  சில காலமாக "2G Scam", "ராடியா tapes" என்று பிரச்சனைகள் பலவற்றினுள்  சிக்கியிருந்த தலைவர்களுக்கு மக்களது கவனத்தை திசை திருப்ப ஒரு நல்ல வாய்ப்பு! 
சம்பவம்:- இன்று காலை... எங்கள் இல்லத்தில்-

அப்பா: நானும் "ஹிந்தி agitation" ல participate பண்ணினேன் தெரியுமா உனக்கு?
நான்: நீயா?!
அப்பா: ஆமாம். நேஷனல் college, திருச்சி-ல final year B Com படிச்சுண்டிருந்தேன். ஊர்வலம், கொடி தூக்கறது எல்லாம் நடக்கும். Basically ஒரு students' agitation இல்லையா? அதான், நானும் இருந்தேன் அதுல...

அந்த கால கட்டத்தில், அது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தல் 'என்ன ஒரு முட்டாள் தனம்' என்று தான் எனக்குத் தோன்றுகிறது! Central station ஐ தாண்டினாலே "chai" என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலையில், இப்படி ஒரு absurdity ஐ எப்படி இவர்களால் ஏற்றுக் கொண்டு "ஹிந்தி agitation" போன்ற ஒரு விஷயத்திற்கு ஆதரவு அளிக்க முடிந்தது?

அப்பா: 'ஆதரவு', 'ideology' எல்லாம் ஒண்ணும் இல்லை. அது ஒரு வயசு டா! Anna Hazare போது students கோஷம் போடலையா? அத மாதிரி தான்.
நான்: Anna Hazare வும் "ஹிந்தி agitation" உம் ஒண்ணா? "Corruption" ஒரு genuine issue. 
அப்பா: Issue, non-issue லாம் கிடையாது. அந்த வயசு அப்படி. Easy யா எதப் பத்தி வேணும்னாலும் emotional ஆ incite பண்ணலாம். தவிர 'power'. College ல இருக்கற discipline லாம் கிடையாது.  நாங்க ஒரு 50-60 பேர் கைல கொடிய பிடிச்சுண்டு road ல போனா எல்லாரும் பயந்து ஒதுங்கி போவா! 'ஐ... பயப்படரா'ன்னு ஒரு சின்ன சந்தோஷம். 
நான்: என்னப்பா இவளோ simple ஆ சொல்லர! அந்த 'cause' ல நீயும் involve ஆகணும் னு ஏதாவது ஒரு strong motivation இருந்திருக்கும்ல? ஒண்ணு கூட இல்லையா? பின்ன எந்த basis ல நீ கோஷம் போட்ட?
அப்பா: Cause என்ன cause? DMK meeting நடக்கும். Top level leaders லாம் கொஞ்சம் decent ஆ பேசுவா. கூட்டத்த கிளப்பறது போல பேச ஒரு சில கீழ் தள தலைவர்கள் இருப்பா. "ரசம்"ஆ பேசுவான். ராத்திரி 9 மணிக்கு மேல தான் பேச ஆரம்பிப்பான். 'இனிமே உன் அப்பா வை 'baba' என்றும் அம்மாவை 'மா' என்றும் தான் அழைக்கவேண்டும்! உன் வீட்டிலும் தமிழ் பேச முடியாது! வட இந்திய தலைவர்களின் சதி...' அப்டீம்பான். இத கேட்டு ஒரு சில பேருக்கு நரம்பெல்லாம் புடைக்கும்! "தலைவர் வாழ்க" ன்னு கத்துவான்..."
நான்: இவளோ sarcastic ஆ சொல்லர! அந்த நரம்பு பொடைச்ச case ல நீயும் உண்டா? 
அப்பா: எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அனா அந்த context அப்படி! இன்னிக்கு நினைச்சு பாத்தா இது ஒரு issue வே இல்லன்னு உனக்கு தொனரதுல்ல? Retrospective approach அப்படி தான் எப்பவுமே. History is to be seen in its context. என்கூட நாலைஞ்சு junior லாம் இருப்பா. 'sir-sir' ன்னு எம்பின்னாடியே சுத்திண்டிருப்பா, என்ன hero worship பண்ணிண்டு. அதுதான்  motivation. நான் procession கு போறேன் ன்னா அவா கண்ணுல எம்மேல ஒரு 'பக்தி' தெரியும். அவ்வளவுதான்.
 நான்: LOL!! என்ன பண்ணுவேள் 'agitation' ன்னா?
 அப்பா: என்ன பெருசா? Road ல கத்திண்டு போவோம். "ஹிந்தி Down Down " ன்னு! 
 நான்: தமிழ் ல கத்த வேண்டியது தானே?
அப்பா: நாங்கள்லாம் college பசங்கலோன்னோ? English ல தான் கத்துவோம். "தமிழுக்கும் அமுதென்று பேர்"... "TAMIL NECTAR" ன்னு English ல கத்துவோம்...
நான்: ROFL!!! "Nectar" ஆ???!!?
அப்பா: பின்ன? Bus எல்லாம் நிறுத்துவோம். பிட் நோட்டீஸ் லாம் அடிச்சு வச்சிருப்போம். அந்த leader கைது. இவன் கைது. தாய் மொழியாம் தமிழ் மொழி...ன்னுலாம் இருக்கும் அதுல. Bus ல distribute பண்ணுவோம். Bus கு பின்னாடி chalk ஆல அடுத்த group பசங்களுக்கு message எழுதி அனுப்புவோம்.
நான்: Driver லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
அப்பா: அவாளுக்கு instructions வந்திருக்கும். Students ஏதாவது பண்ணறான்னா பண்ணட்டும் ன்னு.  அதனால react பண்ண மாட்டா. In fact, திருச்சி ல அப்போ ஒரு ரொம்ப நல்ல collector இருந்தார்! Meeting போட்டு students எல்லாரையும் கூப்டு வெச்சு பேசினார்.... என் பையனும் student தான் ன்னு கூட சொன்னார், சிரிச்சுண்டே. அவர் பேரு கூட சொக்கலிங்கம்.
நான்: ச! என்னப்பா இது! சப்புன்னு இருக்கு! Students' agitation ங்கற... Violent ஆ radical ஆ ஒண்ணுமே பண்ணலையா?!
அப்பா: அப்படிதாண்டா இருக்கும். Govt. orders இருந்துது. Peaceful ஆ இருக்கணும் ன்னு. அப்போ கூட DK members லாம் இந்த railway station ல station பேர ஹிந்தி ல எழுதியிருக்கறத எல்லாம் தார் வச்சு அழிக்கணும்னு ஆரம்பிச்சா. Strict orders அப்போ- resist பண்ண வேண்டாம்- ன்னு. எங்க சித்தப்பா ஒருத்தர், குடுமி லாம் வெச்சிண்டு இருப்பார்- ஸ்டேஷன் மாஸ்டர் ஆ இருந்தார். அவர் சொன்னார். நாலு பேர் தார் tin அ தூக்கிண்டு வந்தானாம். "சாமி அளிக்கப்போறேன்" ன்னானாம். "அழிச்சுட்டு போயேண்டா" ன்னாராம்!
நான்: ச! அவன் வெறுத்து போயிருப்பானே! இப்படி யாருமே resist பண்ணலன்னா...
அப்பா: சில பேர் கூட அவர் கிட்ட வந்து கேட்டாளாம். நீங்க ஏதாவது சொல்லக் கூடாதான்னு. "அதனால என்ன... வேற paint அடிச்சு  மறுபடியும் எழுதிட்டா போச்சு" ன்னாராம், அவர்- சர்வ சாதாரணமா...
நான்: நான் கூட soda bottle, cycle chain ஏதாவது இருக்கும் ன்னு நினைச்சேன்!
அப்பா: Violent protests உம் இருந்தது. ஒரு சில students' leaders லாம் இருந்தா. பேரு ஞாபகமில்லை. திருச்சி ல 5-6 பேரு prominent leaders இருந்தா. ஜமால் முஹம்மத் college பையன் ஒருத்தன் இருந்தான். They were deeply involved. DMK leaders used to mention them in their speeches.  போலீஸ் கூட அவாள தேடும். They had to hide.  மத்தபடி திருச்சி ல violence இல்ல. But மன்னார்குடி ல I've seen violence.
நான்: அங்க எப்புடி போன? College இல்லையா உனக்கு?
அப்பா: Agitation அது இதுன்னா மொதல்ல hostel அ மூடுவா. Administrative tactis அது. கூட்டம் குறையும். பசங்கள்லாம் வீட்டுக்கு போகும். எங்க principal VR-  விஸ்தாரமா இருப்பார். Maths professor.  எங்கள  கூப்டு வெச்சு பேசினார்.  "4 நாள் ல சரியா போய்டும்டா" ன்னு சொல்லி பாத்தார். நீ சொல்றாப்ல- யாரும் மதிக்கல... எங்க college லேர்ந்து  Junction  வழியா town வரைக்கும் procession நடக்கும். இந்த St. Joseph's girls school, Holy Cross Convent school வழியா வரும்போதெல்லாம் சத்தம் தூக்கலா இருக்கும். Girls லாம் ஜன்னல் வழியா பாக்கும். கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுண்டு கத்துவோம். அப்பறம் சில nuns லாம் வ- "சரி... போரும்... Very Good... போயிட்டு வாங்கோ" ன்னு சொல்லுவா. அப்புறம் போய்டுவோம். எங்க College பக்கத்துல 8225 வா(?) ஏதோ ஒரு bus வரும். அது வரும்போது "8225 bus வாழ்க" ன்னு கத்துவான் சில பசங்க. அதுல regular ஆ போற சில girls ஓட பழக்கம் பசங்களுக்கு. அதுகள் இவாள பாத்து சிரிக்கும்!

நான்: LOL! நீயும் உண்டா அந்த set ல? 
அப்பா: நான் லாம் 'Down Down' ஓட சரி. அதுலயும் ஒரு நாள் எங்க சொந்தகாரர் ஒரு police, நான் bus ல போய் பிட் நோட்டீஸ் குடுக்கறத பாத்துட்டு ஆத்துல பொய் சொல்லிட்டார்...
நான்: ஹி ஹி ... நல்ல டோஸ் ஆ?
அப்பா: என் அம்மா-அப்பாக்கெல்லாம் துளி கூட involvement கிடையாது politics ல லாம். சின்ன வயசுல பெரியார், அண்ணாத்துரை meeting லாம் முதல் row ல உக்கார்ந்து கேட்டிருக்கேன்.
நான்: நான் ஒரு கட்சி meeting கூட பார்த்ததே இல்லையே!
அப்பா: இப்போலாம் பாக்கறா மாதிரியும் இல்ல. அப்போ பெரியார் லாம் பெரிய ரதத்துல வருவார்... M.R.ராதா குதிரைல வருவார். Interesting ஆ இருக்கும்!
நான்: என்ன பேசுவா?
அப்பா:  "நீங்கள்லாம் பத்தினிங்களா" ? அப்டீம்பார் பெரியார். கூட்டத்துல இருக்கரதுகல்லாம் 'ஆமாம்...ஆமாம்' ங்கும். "மள பெய்ய சொல்லுங்க பாக்கலாம்", அப்டீம்பார். எல்லாம் பேசாம இருக்கும். "நான் சொல்லல... அப்படி தான் எளுதி வெச்சிருக்காங்க..." ம்பார்...
நான்: ROFL!!! WOW! Superb!
அப்பா: அந்த movement நல்ல movement தான். But in due course, its leaders lost their integrity.

நான்: ஏ! சரி... Violence பார்த்தேன்னியே! என்ன நடந்துது?
அப்பா: அதுவா? மன்னார்குடி ல School பசங்க procession ல சில anti-social elements லாமும் செர்ந்துண்டுடுத்துகள். Police வந்து- ஒரு level கு மேல போகக்கூடாதுன்னு block பண்ணினா. "நாங்க அமைதியா போறோம்" ன்னு  இவா சொன்னா. ஆனா போலீஸ் கு தெரியும் ல இதுல students மட்டும் இல்லன்னு. அதுல சிலதுகள் street light அ கல்லால அடிச்சு ஒடச்சுதுகள். Firing start ஆச்சு. ஒருத்தர் bullet பட்டு போய்ட்டார் போலருக்கு.
நான்: ஓ!
அப்பா: இப்படியும் ஒரு சில இடத்துல நடந்துது. ரொம்ப ஜாஸ்தி brainwash ஆன பசங்க மூணு பேர் immolation பண்ணிண்டா, வேற ஊர்ல. But agitation ன்னா இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். Dr. ராதாக்ருஷ்ணன் வீட்டுக்கு போய் ஒரு கும்பல் books லாம் எரிச்சிட்டு வந்துதுகள். Paper ல வந்துது. கேட்டா ஹிந்தி book ஆம் அதெல்லாம். அதுல பாதி sanskrit books. அது வே தெரியாது அந்த கும்பல் ல இருந்தவாளுக்கு... இதுவும் report ஆச்சு.

நான்: What about women? 
அப்பா: What about them?
நான்: I mean, didn't they participate in the agitation?
அப்பா: அதுகள எல்லாம் கொஞ்ச நாள் ஆளையே காணும், road ல.
நான்: என்னப்பா இப்படி சொல்லர...?!
அப்பா: ஆமாம். "College லாம் போகாதே! அங்க road ல ரௌடி பசங்கள்லாம் சுத்திண்டிருப்பான்னு" அவாத்துல பாட்டி/அம்மா லாம் சொல்லி இருப்பா...


நான்: அப்போ College நடந்து நீ bunk அடிச்சியா? இல்ல லீவா?
அப்பா: 2 மாசம் affect ஆச்சு. ஒண்ணும் நடக்கல. March ல நடக்க வேண்டிய final exam May end ல தான் நடந்துது. July ல தான் result வந்துது.
நான்: அப்போ நீலாம் ஹிந்தி படிச்சதே இல்லையா?
அப்பா: படிச்செனே! B Com 1st Year additional language paper. "अ ... आ " லேர்ந்து நடத்தினா. ஏன்னா class ல யாருக்குமே தெரியாது.  பிராத்மிக் கூட எழுதினேன். ப்ரதம் ஷ்ரேணி மே பாஸ் ஹுஆ!

நான்: நான் ஏதோ பெரிய level ல இருக்கும்னு நினைச்சேன். நீ இத ஒரு joke ஆட்டம் சொல்ர!
அப்பா: இது தாண்டா பெரிய level. அப்படி தான் இருக்கும். இப்படியெல்லாம் சொல்லி சொல்லி தான் ஆட்சிக்கு வந்ததே! ஆனா அப்போ அப்படி பேசின யாரோட வாரிசு இப்போ தமிழ் படிக்கறது? அவாள விடு! பொதுவா இப்போலாம் எந்த குழந்தை தமிழ்ல பேசறது? படிக்கறது? "Don't touch that Adi" ன்னு தமிழ் அம்மா சொல்லரா. "Sorry Mom" ன்னு தமிழ் பையன் பதில் சொல்லரான். 'என்னோட தமிழ் பேசறது நின்னுடும்' ங்கற மாதிரி அப்பாதுரை கூட எழுதிருக்கார் பாத்தியா? This is a cause for worry. கல்கி, ஜயகாந்தன், சுந்தர ராமசாமி லாம் எந்த தமிழ் மக்கள் படிக்கறா இப்போ? This is a lost cause. Even amongst their own party!
நான்: நான் படிப்பேன். 
அப்பா: சந்தோஷம்.

நான்: அம்மா! நீ என்ன பண்ணிண்டு இருந்த agitation போது?
அப்பா: அம்மாலாம் school ல படிச்சிண்டு இருந்திருப்பா டா! இப்படி ஒண்ணு நடக்கறதே தெரிஞ்சிருக்காது!
அம்மா: இப்படி ஒண்ணு நடக்கரதுன்னு தெரியும். அனா involve லாம் ஆகல.
நான்: ஓ! ஏன்? But you must have had some impact right?
அம்மா: நாங்க பாட்டுக்கு ஏதோ "மேஜ் பர் க்யா ஹை"? "மேஜ் பர் கிதாப் ஹை" ன்னு படிச்சுண்டு இருந்தோம். அத படிக்க உடாம பண்ணியாச்சு... அவளோ தான் agitation! "ஹிந்தி அரக்கிய" ஒழிச்சாச்சு! போ... போய் வேலைய பாரு போ... காலங்காத்தால...

You might also like: Tamil Comedy- Click Here!