பாட்டி- க்கு சொந்த ஊர் எரணாகுளம். சின்ன வயசில ஒரு அழகான தாலாட்டு
பாடுவா- மலையாளத்துல. "ஓமன திங்கள் கிடாவோ"- ரொம்பவே popular ஆன தாலாட்டு
பாட்டு தான். ஆனா-- எங்க பாட்டி பாடின அந்த tune ல- அதுக்கப்றம் யாரும்
பாடி நான் கேக்கல! அத்தன அழகான குரல், அந்த வயசுக்கும். பாட்டிக்கு கிட்ட
தட்ட- 70 வயசு இருக்கும் போதும், "நகுமோமு" பாடும் போது அவ்வளோ அழகா
இருக்கும், குரல். "Real , earthiness"!
ஒரு சில சமயத்துல, குரல்-ல divinity ய விடவும் earthiness தான் முக்கியம்
னு தோணும். இந்த எண்ணம் எனக்கு எங்க பாட்டியோட குரல் கேட்டு வளந்ததால கூட
இருக்கலாம். ஆனா- சில நேரங்கள்-ல, "கீச்" னு high -pitch குரல் இருக்கும்
"heroine" அ விட, deep- sensual குரல் ல பாடும் "vamp" ஓட voice ரொம்பவே
அழகா தோணும், எனக்கு. ஒரு சில குரல்கள்- நம்ம சினிமாக்கள் ல அபூர்வமான
கண்டுபிடிப்புகள் தான். "நீல வண்ண கண்ணா வாடா" பாட்டு முதல் தடவ கேட்ட போது, அன்னிக்கு full day அந்த பாட்ட மட்டும் தான் கேட்டேன். What a
voice! அத விட பத்மினி என்ன அழகு!
எனக்கு அதே போல பானுமதி அம்மா குரல் ரொம்பவே பிடிக்கும். பாட்டிக்கு
அப்புறம் இவங்க பாடின "நகுமோமு" தான் A1! அழகான "light" touch
ஓட- fabulous சங்கதிs! Especially "nanu brOvaga rA -dA" அந்த "rA
-dA" transition! "கண்ணிலே இருப்பதென்ன", "அழகான பொண்ணு நான்" இதெல்லாமே
என் favourites! எங்க வீட்டுல நிறையா cassettes உண்டு. Second hand
cassettes ல AIR ல வரும் சில நல்ல programmes அ அப்பா record பண்ணி
வெச்சிருப்பார். அதுல ஒரு cassette ல, பானுமதி அம்மா வோட ஒரு தெலுங்கு
பாட்டு இருந்தது. ரொம்பவே அழகான பாட்டு! "உய்யால ஜமபால", "சக்ரபாணி" movie
லேர்ந்து.
அப்பா க்கு ஜிக்கி குரல் ரொம்ப பிடிக்கும். Incidentally, அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டும் ஜிக்கி யுடைய "துள்ளாத மனமும் துள்ளும்" பாட்டு தான். M.S. ராஜேஸ்வரி குரலுக்கும் தனி அழகு உண்டு. என் favourite "ஓ ரசிக்கும் சீமானே"! இந்த list ல ஒரு ரொம்ப முக்கியமான பெயர்- S. வரலக்ஷ்மி. பானுமதிக்கு அடுத்தது truly unique voice, south Indian film music ல இவங்களுக்கு தான்! "வெள்ளி மலை மன்னவா", "பச்சை கிளிக்கொரு" ன்னு தமிழ் பாடல்கள் இருந்தாலும் அவங்களோட இந்த தெலுங்கு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்! அவங்க voice க்கு முழு justice கொடுக்கும் பாட்டு இது (click here). On this subject- மனோரமா அம்மா voice பத்தி mention பண்ணாம இருக்க முடியல (click here)! அவங்களோட endless list of talents, never ceases to amaze me!
TMS விட PBS பிடிக்கும்! இவங்க ரெண்டு பேரையும் விட கண்டசாலா பிடிக்கும்! அவரோட "தேசுலவுதே" வும் "அமைதியில்லா மனமே"- என்னோட music player ல most played songs list ல இருக்கும். இந்த ரெண்டு பாட்ட தவிர "oohalu gusagusalaade" தெலுங்கு பாட்டும் sounds great!
Rafi is an amazing singer! ஆனா- அவர விடவும் ரொம்பவே இனிமையான குரல்- Talat Mohammad கு ங்கரது என் opinion. "AE gham e dil" -பாட்ட கேட்டு பார்தப்ரம் உங்க opinion சொல்லுங்க. சில சமயங்கள் ல- எதிர்பாராத சில குரல்கள் நம்ம கவனத்த தன் பக்கம் ஈர்க்கும். S D Burman - Guide படத்துல title song பாடியிருப்பார். அது இந்த வகைய சேர்ந்தது தான். ஒரு சமயம் நாங்க கல்கத்தாவில இருந்த போது- ஒரு குரலை கேட்ட அம்மா- "மழை கொட்டினாப்ல இருந்துதுடா" அப்டீன்னு சொன்னா! அம்மா கேட்ட பாட்டு- "Rudaali" ங்கர சினிமா la Bhupen Hazarika பாடின "Dil hum hum kare" பாட்டு. லதா மங்கேஷ்கர் version உம் உண்டு. ஆனாலும்- Hazarika குரல் suits better. அவருக்கு இத பாடும் போது கொஞ்சம் வயசு ஆயாச்சு. இந்த பாட்டோட original Bengali version - "Megh thom thom kori" sounds brilliant!
ரொம்ப stereotypical ஆ போச்சோ Tamil film music ன்னு நினச்ச போது Malaysia Vasudevan, ஜென்சி போன்ற singers gave me a relief! இப்போ music directors நிறையாவே experiments பண்ணறாங்க. Khailash Kher- WOW! அவரோட "Allah ke bande" கேட்டதிலேர்ந்து- I've become his fan! "Teri Deewani", "Saiyyan"..... Best of them - ஒரு surprise package! Shubha Mudgal குரலும் off beat list ல ஒண்ணு. அவங்க compose பண்ணி , அவங்களும் Kher உம் சேர்ந்து பாடின ஒரு "Mega Serial", Star Plus ல telecast ஆகும் "Diya aur bati hum" serial song அது. AMAZING music!
ரஹ்மான் குரல் கூட is very unique. அவரோட "Yeh jo des hai tera" பாட்டுல அவர் குரல் ரொம்பவே நல்லா இருக்கும். "Peepli Live" ன்னு ஒரு சினிமா. அதுல Raghuveer Yadav பாடின "Mehangai Dayian Khaye Jaat Hai" - such an 'out of the world' experience. அவர் originally actor. "Dilli 6" படத்துல ராம்லீலா நடக்கற காட்சிகள் ல இவர் தான் பாடியிருப்பார்! Sona Mohapatra -- Such a fresh voice! "Aaja ve", "Bedardi Raja"...
Music Industry உடைய இந்த "different voices" use பண்ணற experiment successful ஆகணும் அப்டீங்கறது என் hope. Swaroop Khan போன்ற "Indian Idol" contestants அ பாத்தா (click here)- successful ஆகும் ன்னு தான் தோணறது! இப்போ ஆரதோ இல்லையோ -- Azmat காலத்துல கண்டிப்பா ஆகும்! (Azmat யாரு?-- Click Here)
PS: Degree காபி Series: சினிமா பாடல்களில் ராகமாலிகை -- மி மராதி -- GR -- Degree காபி
This entry was posted
on 22 July, 2012
at Sunday, July 22, 2012
. You can follow any responses to this entry through the
comments feed
.