"அரக்கி"  

Posted by Matangi Mawley


சாதாரண ஒரு விஷயத்திற்கு, கற்பனை வடிவங்கள் பல கொடுத்துப் பெரிய விஷயமாக மாற்றுவதற்கு நம் அரசியல் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் "அம்பேத்கர்" கார்டூன் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள NCERT  புத்தகத்தை புரட்டிப் பார்த்த நம் தலைவகளுக்கு ஒரே குஷி! "தமிழ் மொழி"/"ஹிந்தி agitation" சம்பந்தப் பட்ட ஒரு கார்டூனும் கிடைத்து விட்டது, இப்போது!  சில காலமாக "2G Scam", "ராடியா tapes" என்று பிரச்சனைகள் பலவற்றினுள்  சிக்கியிருந்த தலைவர்களுக்கு மக்களது கவனத்தை திசை திருப்ப ஒரு நல்ல வாய்ப்பு! 
சம்பவம்:- இன்று காலை... எங்கள் இல்லத்தில்-

அப்பா: நானும் "ஹிந்தி agitation" ல participate பண்ணினேன் தெரியுமா உனக்கு?
நான்: நீயா?!
அப்பா: ஆமாம். நேஷனல் college, திருச்சி-ல final year B Com படிச்சுண்டிருந்தேன். ஊர்வலம், கொடி தூக்கறது எல்லாம் நடக்கும். Basically ஒரு students' agitation இல்லையா? அதான், நானும் இருந்தேன் அதுல...

அந்த கால கட்டத்தில், அது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தல் 'என்ன ஒரு முட்டாள் தனம்' என்று தான் எனக்குத் தோன்றுகிறது! Central station ஐ தாண்டினாலே "chai" என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலையில், இப்படி ஒரு absurdity ஐ எப்படி இவர்களால் ஏற்றுக் கொண்டு "ஹிந்தி agitation" போன்ற ஒரு விஷயத்திற்கு ஆதரவு அளிக்க முடிந்தது?

அப்பா: 'ஆதரவு', 'ideology' எல்லாம் ஒண்ணும் இல்லை. அது ஒரு வயசு டா! Anna Hazare போது students கோஷம் போடலையா? அத மாதிரி தான்.
நான்: Anna Hazare வும் "ஹிந்தி agitation" உம் ஒண்ணா? "Corruption" ஒரு genuine issue. 
அப்பா: Issue, non-issue லாம் கிடையாது. அந்த வயசு அப்படி. Easy யா எதப் பத்தி வேணும்னாலும் emotional ஆ incite பண்ணலாம். தவிர 'power'. College ல இருக்கற discipline லாம் கிடையாது.  நாங்க ஒரு 50-60 பேர் கைல கொடிய பிடிச்சுண்டு road ல போனா எல்லாரும் பயந்து ஒதுங்கி போவா! 'ஐ... பயப்படரா'ன்னு ஒரு சின்ன சந்தோஷம். 
நான்: என்னப்பா இவளோ simple ஆ சொல்லர! அந்த 'cause' ல நீயும் involve ஆகணும் னு ஏதாவது ஒரு strong motivation இருந்திருக்கும்ல? ஒண்ணு கூட இல்லையா? பின்ன எந்த basis ல நீ கோஷம் போட்ட?
அப்பா: Cause என்ன cause? DMK meeting நடக்கும். Top level leaders லாம் கொஞ்சம் decent ஆ பேசுவா. கூட்டத்த கிளப்பறது போல பேச ஒரு சில கீழ் தள தலைவர்கள் இருப்பா. "ரசம்"ஆ பேசுவான். ராத்திரி 9 மணிக்கு மேல தான் பேச ஆரம்பிப்பான். 'இனிமே உன் அப்பா வை 'baba' என்றும் அம்மாவை 'மா' என்றும் தான் அழைக்கவேண்டும்! உன் வீட்டிலும் தமிழ் பேச முடியாது! வட இந்திய தலைவர்களின் சதி...' அப்டீம்பான். இத கேட்டு ஒரு சில பேருக்கு நரம்பெல்லாம் புடைக்கும்! "தலைவர் வாழ்க" ன்னு கத்துவான்..."
நான்: இவளோ sarcastic ஆ சொல்லர! அந்த நரம்பு பொடைச்ச case ல நீயும் உண்டா? 
அப்பா: எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அனா அந்த context அப்படி! இன்னிக்கு நினைச்சு பாத்தா இது ஒரு issue வே இல்லன்னு உனக்கு தொனரதுல்ல? Retrospective approach அப்படி தான் எப்பவுமே. History is to be seen in its context. என்கூட நாலைஞ்சு junior லாம் இருப்பா. 'sir-sir' ன்னு எம்பின்னாடியே சுத்திண்டிருப்பா, என்ன hero worship பண்ணிண்டு. அதுதான்  motivation. நான் procession கு போறேன் ன்னா அவா கண்ணுல எம்மேல ஒரு 'பக்தி' தெரியும். அவ்வளவுதான்.
 நான்: LOL!! என்ன பண்ணுவேள் 'agitation' ன்னா?
 அப்பா: என்ன பெருசா? Road ல கத்திண்டு போவோம். "ஹிந்தி Down Down " ன்னு! 
 நான்: தமிழ் ல கத்த வேண்டியது தானே?
அப்பா: நாங்கள்லாம் college பசங்கலோன்னோ? English ல தான் கத்துவோம். "தமிழுக்கும் அமுதென்று பேர்"... "TAMIL NECTAR" ன்னு English ல கத்துவோம்...
நான்: ROFL!!! "Nectar" ஆ???!!?
அப்பா: பின்ன? Bus எல்லாம் நிறுத்துவோம். பிட் நோட்டீஸ் லாம் அடிச்சு வச்சிருப்போம். அந்த leader கைது. இவன் கைது. தாய் மொழியாம் தமிழ் மொழி...ன்னுலாம் இருக்கும் அதுல. Bus ல distribute பண்ணுவோம். Bus கு பின்னாடி chalk ஆல அடுத்த group பசங்களுக்கு message எழுதி அனுப்புவோம்.
நான்: Driver லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
அப்பா: அவாளுக்கு instructions வந்திருக்கும். Students ஏதாவது பண்ணறான்னா பண்ணட்டும் ன்னு.  அதனால react பண்ண மாட்டா. In fact, திருச்சி ல அப்போ ஒரு ரொம்ப நல்ல collector இருந்தார்! Meeting போட்டு students எல்லாரையும் கூப்டு வெச்சு பேசினார்.... என் பையனும் student தான் ன்னு கூட சொன்னார், சிரிச்சுண்டே. அவர் பேரு கூட சொக்கலிங்கம்.
நான்: ச! என்னப்பா இது! சப்புன்னு இருக்கு! Students' agitation ங்கற... Violent ஆ radical ஆ ஒண்ணுமே பண்ணலையா?!
அப்பா: அப்படிதாண்டா இருக்கும். Govt. orders இருந்துது. Peaceful ஆ இருக்கணும் ன்னு. அப்போ கூட DK members லாம் இந்த railway station ல station பேர ஹிந்தி ல எழுதியிருக்கறத எல்லாம் தார் வச்சு அழிக்கணும்னு ஆரம்பிச்சா. Strict orders அப்போ- resist பண்ண வேண்டாம்- ன்னு. எங்க சித்தப்பா ஒருத்தர், குடுமி லாம் வெச்சிண்டு இருப்பார்- ஸ்டேஷன் மாஸ்டர் ஆ இருந்தார். அவர் சொன்னார். நாலு பேர் தார் tin அ தூக்கிண்டு வந்தானாம். "சாமி அளிக்கப்போறேன்" ன்னானாம். "அழிச்சுட்டு போயேண்டா" ன்னாராம்!
நான்: ச! அவன் வெறுத்து போயிருப்பானே! இப்படி யாருமே resist பண்ணலன்னா...
அப்பா: சில பேர் கூட அவர் கிட்ட வந்து கேட்டாளாம். நீங்க ஏதாவது சொல்லக் கூடாதான்னு. "அதனால என்ன... வேற paint அடிச்சு  மறுபடியும் எழுதிட்டா போச்சு" ன்னாராம், அவர்- சர்வ சாதாரணமா...
நான்: நான் கூட soda bottle, cycle chain ஏதாவது இருக்கும் ன்னு நினைச்சேன்!
அப்பா: Violent protests உம் இருந்தது. ஒரு சில students' leaders லாம் இருந்தா. பேரு ஞாபகமில்லை. திருச்சி ல 5-6 பேரு prominent leaders இருந்தா. ஜமால் முஹம்மத் college பையன் ஒருத்தன் இருந்தான். They were deeply involved. DMK leaders used to mention them in their speeches.  போலீஸ் கூட அவாள தேடும். They had to hide.  மத்தபடி திருச்சி ல violence இல்ல. But மன்னார்குடி ல I've seen violence.
நான்: அங்க எப்புடி போன? College இல்லையா உனக்கு?
அப்பா: Agitation அது இதுன்னா மொதல்ல hostel அ மூடுவா. Administrative tactis அது. கூட்டம் குறையும். பசங்கள்லாம் வீட்டுக்கு போகும். எங்க principal VR-  விஸ்தாரமா இருப்பார். Maths professor.  எங்கள  கூப்டு வெச்சு பேசினார்.  "4 நாள் ல சரியா போய்டும்டா" ன்னு சொல்லி பாத்தார். நீ சொல்றாப்ல- யாரும் மதிக்கல... எங்க college லேர்ந்து  Junction  வழியா town வரைக்கும் procession நடக்கும். இந்த St. Joseph's girls school, Holy Cross Convent school வழியா வரும்போதெல்லாம் சத்தம் தூக்கலா இருக்கும். Girls லாம் ஜன்னல் வழியா பாக்கும். கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுண்டு கத்துவோம். அப்பறம் சில nuns லாம் வ- "சரி... போரும்... Very Good... போயிட்டு வாங்கோ" ன்னு சொல்லுவா. அப்புறம் போய்டுவோம். எங்க College பக்கத்துல 8225 வா(?) ஏதோ ஒரு bus வரும். அது வரும்போது "8225 bus வாழ்க" ன்னு கத்துவான் சில பசங்க. அதுல regular ஆ போற சில girls ஓட பழக்கம் பசங்களுக்கு. அதுகள் இவாள பாத்து சிரிக்கும்!

நான்: LOL! நீயும் உண்டா அந்த set ல? 
அப்பா: நான் லாம் 'Down Down' ஓட சரி. அதுலயும் ஒரு நாள் எங்க சொந்தகாரர் ஒரு police, நான் bus ல போய் பிட் நோட்டீஸ் குடுக்கறத பாத்துட்டு ஆத்துல பொய் சொல்லிட்டார்...
நான்: ஹி ஹி ... நல்ல டோஸ் ஆ?
அப்பா: என் அம்மா-அப்பாக்கெல்லாம் துளி கூட involvement கிடையாது politics ல லாம். சின்ன வயசுல பெரியார், அண்ணாத்துரை meeting லாம் முதல் row ல உக்கார்ந்து கேட்டிருக்கேன்.
நான்: நான் ஒரு கட்சி meeting கூட பார்த்ததே இல்லையே!
அப்பா: இப்போலாம் பாக்கறா மாதிரியும் இல்ல. அப்போ பெரியார் லாம் பெரிய ரதத்துல வருவார்... M.R.ராதா குதிரைல வருவார். Interesting ஆ இருக்கும்!
நான்: என்ன பேசுவா?
அப்பா:  "நீங்கள்லாம் பத்தினிங்களா" ? அப்டீம்பார் பெரியார். கூட்டத்துல இருக்கரதுகல்லாம் 'ஆமாம்...ஆமாம்' ங்கும். "மள பெய்ய சொல்லுங்க பாக்கலாம்", அப்டீம்பார். எல்லாம் பேசாம இருக்கும். "நான் சொல்லல... அப்படி தான் எளுதி வெச்சிருக்காங்க..." ம்பார்...
நான்: ROFL!!! WOW! Superb!
அப்பா: அந்த movement நல்ல movement தான். But in due course, its leaders lost their integrity.

நான்: ஏ! சரி... Violence பார்த்தேன்னியே! என்ன நடந்துது?
அப்பா: அதுவா? மன்னார்குடி ல School பசங்க procession ல சில anti-social elements லாமும் செர்ந்துண்டுடுத்துகள். Police வந்து- ஒரு level கு மேல போகக்கூடாதுன்னு block பண்ணினா. "நாங்க அமைதியா போறோம்" ன்னு  இவா சொன்னா. ஆனா போலீஸ் கு தெரியும் ல இதுல students மட்டும் இல்லன்னு. அதுல சிலதுகள் street light அ கல்லால அடிச்சு ஒடச்சுதுகள். Firing start ஆச்சு. ஒருத்தர் bullet பட்டு போய்ட்டார் போலருக்கு.
நான்: ஓ!
அப்பா: இப்படியும் ஒரு சில இடத்துல நடந்துது. ரொம்ப ஜாஸ்தி brainwash ஆன பசங்க மூணு பேர் immolation பண்ணிண்டா, வேற ஊர்ல. But agitation ன்னா இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். Dr. ராதாக்ருஷ்ணன் வீட்டுக்கு போய் ஒரு கும்பல் books லாம் எரிச்சிட்டு வந்துதுகள். Paper ல வந்துது. கேட்டா ஹிந்தி book ஆம் அதெல்லாம். அதுல பாதி sanskrit books. அது வே தெரியாது அந்த கும்பல் ல இருந்தவாளுக்கு... இதுவும் report ஆச்சு.

நான்: What about women? 
அப்பா: What about them?
நான்: I mean, didn't they participate in the agitation?
அப்பா: அதுகள எல்லாம் கொஞ்ச நாள் ஆளையே காணும், road ல.
நான்: என்னப்பா இப்படி சொல்லர...?!
அப்பா: ஆமாம். "College லாம் போகாதே! அங்க road ல ரௌடி பசங்கள்லாம் சுத்திண்டிருப்பான்னு" அவாத்துல பாட்டி/அம்மா லாம் சொல்லி இருப்பா...


நான்: அப்போ College நடந்து நீ bunk அடிச்சியா? இல்ல லீவா?
அப்பா: 2 மாசம் affect ஆச்சு. ஒண்ணும் நடக்கல. March ல நடக்க வேண்டிய final exam May end ல தான் நடந்துது. July ல தான் result வந்துது.
நான்: அப்போ நீலாம் ஹிந்தி படிச்சதே இல்லையா?
அப்பா: படிச்செனே! B Com 1st Year additional language paper. "अ ... आ " லேர்ந்து நடத்தினா. ஏன்னா class ல யாருக்குமே தெரியாது.  பிராத்மிக் கூட எழுதினேன். ப்ரதம் ஷ்ரேணி மே பாஸ் ஹுஆ!

நான்: நான் ஏதோ பெரிய level ல இருக்கும்னு நினைச்சேன். நீ இத ஒரு joke ஆட்டம் சொல்ர!
அப்பா: இது தாண்டா பெரிய level. அப்படி தான் இருக்கும். இப்படியெல்லாம் சொல்லி சொல்லி தான் ஆட்சிக்கு வந்ததே! ஆனா அப்போ அப்படி பேசின யாரோட வாரிசு இப்போ தமிழ் படிக்கறது? அவாள விடு! பொதுவா இப்போலாம் எந்த குழந்தை தமிழ்ல பேசறது? படிக்கறது? "Don't touch that Adi" ன்னு தமிழ் அம்மா சொல்லரா. "Sorry Mom" ன்னு தமிழ் பையன் பதில் சொல்லரான். 'என்னோட தமிழ் பேசறது நின்னுடும்' ங்கற மாதிரி அப்பாதுரை கூட எழுதிருக்கார் பாத்தியா? This is a cause for worry. கல்கி, ஜயகாந்தன், சுந்தர ராமசாமி லாம் எந்த தமிழ் மக்கள் படிக்கறா இப்போ? This is a lost cause. Even amongst their own party!
நான்: நான் படிப்பேன். 
அப்பா: சந்தோஷம்.

நான்: அம்மா! நீ என்ன பண்ணிண்டு இருந்த agitation போது?
அப்பா: அம்மாலாம் school ல படிச்சிண்டு இருந்திருப்பா டா! இப்படி ஒண்ணு நடக்கறதே தெரிஞ்சிருக்காது!
அம்மா: இப்படி ஒண்ணு நடக்கரதுன்னு தெரியும். அனா involve லாம் ஆகல.
நான்: ஓ! ஏன்? But you must have had some impact right?
அம்மா: நாங்க பாட்டுக்கு ஏதோ "மேஜ் பர் க்யா ஹை"? "மேஜ் பர் கிதாப் ஹை" ன்னு படிச்சுண்டு இருந்தோம். அத படிக்க உடாம பண்ணியாச்சு... அவளோ தான் agitation! "ஹிந்தி அரக்கிய" ஒழிச்சாச்சு! போ... போய் வேலைய பாரு போ... காலங்காத்தால...

You might also like: Tamil Comedy- Click Here!

This entry was posted on 11 June, 2012 at Monday, June 11, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

11 comments

Romba nanna irukku!!Flow arumaiyoo arumai...Excellent :) A silent reader of your blog for a long time, hwever this post made me pen down a comment :) Kudos!

12 June 2012 at 11:21

அந்த கால கட்டத்தில், அது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தல் 'என்ன ஒரு முட்டாள் தனம்' என்று தான் எனக்கும் தோன்றுகிறது

12 June 2012 at 11:45

Dr. ராதாக்ருஷ்ணன் வீட்டுக்கு போய் ஒரு கும்பல் books லாம் எரிச்சிட்டு வந்துதுகள். Paper ல வந்துது. கேட்டா ஹிந்தி book ஆம் அதெல்லாம். அதுல பாதி sanskrit books. அது வே தெரியாது அந்த கும்பல் ல இருந்தவாளுக்கு... இதுவும் report ஆச்சு.


Ha ha ha..

12 June 2012 at 12:45

உங்களது இந்த உரையாடல் எனக்கு ஒரு பதிவுக்கு விஷயம் அளித்திருக்கிறது. அடுத்த பதிவு அதுதான். நன்றி.

12 June 2012 at 19:01

ப்ரிய மாதங்கி! அப்பாவுக்கும் உனக்குமான உரையாடலில் அன்னியோன்னியமும்,பரிமாறலும் ரொம்பவே இயல்பு.

மிக யதார்த்தமாய் என் மனசை அள்ளியது.

இந்தவொரு ஓட்டம் எழுத்து நடையில் வர நல்ல தேர்ச்சி வேண்டும். உனக்கு வரப் பிரசாதமாய் வாய்த்திருக்கிறது. எழுத்தை விடாதே.

அப்பாவுக்கு என் அன்பு.

12 June 2012 at 23:10

அரசியல் அறிவு எனக்கு பூஜ்யம். இருப்பினும் உங்களது இந்த பதிவில் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது. அடிக்கடி வருவேன்.

14 June 2012 at 17:14

வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.
மாணவர்கள் போராட்டம் பெரும்பாலும் sheeple மனப்பான்மை தான். உண்மையே.
அண்ணாதுரையின் 1946-48 வருட எழுத்தை சமீபத்தில் படித்துக் கொண்டிருந்தேன். தேதியை 2012னு மாத்திப் போட்டா விஷயம் அப்படியே 100% match ஆவது பெரிய ஆச்சரியம். பெரியார் அண்ணா வழி வந்தவர்கள் இதையெல்லாம் புரட்டிப் படித்துப் பார்த்தால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ? மக்கள் (நாம்பளும் தான்) எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு உண்மையிலேயே வருத்தத்தைக் கொடுக்கும் என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
on the other hand, நேரு was a wicked man என்றே நினைக்கிறேன். அன்றைய central govt had no interest south of deccan plateau என்றே நினைக்கிறேன். மொழி என்பது கலாசாரத்தின் ஒரு முக்கிய வேர். அந்த நிலையில் தமிழ் மொழி எத்தனையோ தொன்மையானது - அதை சுலபமாக ஹிந்தித் திணிப்பு அழித்திருக்கும் என்றும் தோன்றுகிறது. ஹிந்தி எதிர்ப்பு was a tool. ஆட்சியைப் பிடிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும். மொழி வளர்ப்பு இந்தத் தலைவர்களுக்கு ஒரு பாசாங்கு. மக்களை முட்டாளாக்கும் திசை திருப்பும் வழி. ஆனால் அது கிளப்பிய ஒரு unintended awareness தமிழுக்கு கொஞ்சம் ஆக்சிஜன் கொடுத்தது. காலாகாலத்தில் அந்த ஆக்சிஜனும் வற்றும். (எனக்குப் பிறகு என் வழியில் தமிழ் பேச ஆளில்லை என்பது எனக்கு வருத்தம்னாலும் அந்த வருத்தம் முட்டாள்தனம்னும் நினைக்கிறேன் :)
விடியோ நல்ல சிரிப்பு.

14 June 2012 at 18:28

இப்ப இந்திப் போராட்டம் திடீர்னு தலை தூக்குவானேன்? ரெண்டு மூணு blogல இதைப் பத்திப் படிச்சதும் i am curious (concerned)..

14 June 2012 at 18:36

பாடப்புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் - வெகு காலம் முன்பு பத்திரிக்கைகளில் வெளிவந்த --கார்ட்டூன் களையே,
ரசிக்க / tolerate பண்ண முடியாத ஜந்துக்கள் , இப்படி satirical லாக ,உன்னால் விவரிக்கப்பட்டிருப்பதை படிக்க
நேர்ந்தால் , நீ தொலைந்தாய் ! நல்ல வேளை ! உன் blog அவர்கள் கண்களில் படாது என்று நம்புகிறேன் ...ஆனால்
யார் வேண்டுமானாலும் , என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும் ; உன் " அரக்கி " பதிர்வில், நம் சம்பாஷணையில்
கூறப்பட்டிருக்கும் நிகழ்வுகள் யாவையும் உண்மை, உண்மை ;உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை ..என்னை nostalgia விற்கு
இழுத்துச்சென்ற இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன் ; மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் ..இந்த உன்னுடைய பதிர்விர்காக
என்னுடைய பிரத்யேக வாழ்த்துக்கள் ..
அன்புடன் ..மாலி

18 June 2012 at 21:34

" History is to be seen in its context" என்று உங்கள் அப்பா சொன்னது முத்தான வரி.
நம்மிடம் முழுமையான தலைவர்கள் என்று எவருமே என்றுமே இருந்ததில்லை. ஒரு விஷயத்தை பற்றி அற்புதமான கருத்து சொல்பவர் மற்றொரு விஷயத்தில் "இவரா இப்படி" என்று நினைக்க வைக்கும் வண்ணம் நடந்து கொள்வது தான் நம் ச்மூகத்தின் சாபக்கேடு.

21 June 2012 at 18:53

ஆசிரிய‌ர்க‌ளே, மாண‌வர்க‌ளை ஸ்டிரைக்குத் த‌ள்ளிய விநேத‌ம் க‌ண்டிருக்கிறேன்.
ப‌க்த‌வ‌ச்ச‌ல‌‌ம் த்மிழ்நாட்டின் முத‌ல்வ‌ர் அப்போது. சாஸ்திரி பிர‌த‌ம‌ர். நேருவின் மும்மொழி திட்ட‌ம் கைவிட‌ப்ப‌ட்டு, எங்கும் இந்தி, எதிலும் இந்தி வ‌ந்துவிடும் என இந்த‌ திமுக‌ த‌ங்க‌ளை நிறுவிக்கொள்ள‌ ப‌யன்ப‌டுத்தி கொண்ட‌ ஆயுத‌ம் "இந்தி எதிர்ப்பு". மாண‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ அர‌சிய‌லுக்குள் த‌ள்ள‌ப் பட்ட‌ன‌ர். ஸ்டிரைக் செய்யாத‌ ப‌ள்ளிக‌ளுக்கு, ம‌ற்ற‌ ஸ்டிரைக் செய்யும் ப‌ள்ளியிலிருந்து வ‌ளைய‌ல், ரிப்ப‌ன், ம‌ஞ்ச‌ள் ஆகிய‌வை அனுப்பி வைக்க‌ப்பட்ட‌தாக புர‌ளிவ‌ரும். உட‌னே இந்த‌ ப‌ள்ளியிலும் வெளிந‌டப்பு ஆர‌ம்பித்து விடும். சுத‌ந்திர‌ போராட்ட‌த்தை பார்க்காத‌, அந்த‌ த‌லைமுறை இந்த‌ போராட்ட‌த்தை, ப‌ஸ்க‌ளை எரித்தும், க‌ண்ண‌டிக‌ளை உடைத்தும், கோஷங்க‌ளை எழுதியும் கொண்டாடின‌. "ப‌க்த‌வ‌ச்ல‌ குர‌ங்கே, ப‌த‌வியை விட்டு இற‌ங்கே'
"க‌க்கா, மாணவ‌ர்க‌ர்க‌ள் என்ன‌ கொக்கா?" போன்ற‌ எதுகை, மோனை டிஆர் வ‌ச‌ன‌ங்க‌ளின் மூல‌ம் அங்கே தொட‌ங்கிய‌து தான். அப்போதைய‌ ஒலிப‌ர‌ப்பு துறை ம‌ந்திரியாய் இருந்த‌ இந்திரா, பிர‌த‌ம‌ரின் அனுமதியின்றி, வ‌ழிமுறைமீறி சென்னை வ‌ந்திருந்தார் என்க் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
சின்ன‌சாமி தீக்குளித்து,1967ல் திமுக ஆட்சிக்கு வ‌ர‌ அடித்த‌ள‌ம் அமைத்தார். இந்தி எதிப்பு இல்லையெனில் க‌ழ‌க‌ம் இந்த‌ நிலைக்கு வ‌ந்திருக்கவே முடியாது. இவ‌ர்க‌ளின் "தண்டியாத்திரை" இதுதான்.

23 June 2012 at 16:49

Post a Comment