Degree காபி  

Posted by Matangi Mawley


Engineering படிக்கற பொது- இந்த final year ல Project - Project னு ஒண்ணு பண்ணுவா. 6 மாசம், college கு போகாம, வேற ஊருக்கு பொய் கொட்டம் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு அது. என்னோட போறாத காலம், என்கூட கூட்டு சேந்துண்ட கேசெல்லாம் "படிக்கற" கும்பல்! அஷோக் நகர் ல ஒரு firm ல "project" பண்ணினோம். பக்கத்லையே ஒரு hostel ல room எடுத்துண்டு மூணு பெரும் தங்கினோம். "போணும், படிக்கணும், வரணும்"- னு எனக்கு என் நண்பி உபதேசம் பண்ணித்து. என்னோட இந்த சொகக்கதைல எனக்கிருந்த ஒரே ஆறுதல்- hostel சாப்பாடு தான்.

Hostel சாப்பாடெல்லாம் பொதுவா நன்னா இருக்காது ன்னு ஒரு ஐதீகம் நம்ப மக்கள் மத்தில உண்டு. ஆனா, என் ஜாதக விசேஷம்-னு நெனைக்கறேன்- எங்க போனாலும் எனக்கு சாப்பாடு பிரச்சன மட்டும் இருந்ததே இல்ல. ஒரு பாட்டி-தாத்தா தான் சமையல். 4 am கு எழுந்துண்டு எல்லா பசங்களுக்கும் சமைப்பா. காரைக்குடி style சமையல். "எம்.ஜி.ஆர் வூட்டுல சம்சிருக்கேன்" ன்னு அந்த பாட்டி பேசறதையும் காத கொடுத்து கேக்கற ஒரே ஜீவனான என்கிட்ட சொன்னா அந்த பாட்டி. அதுக்கப்றம், ரசமாட்டம் கார கொழம்ப தாராளமா உடுவா அந்த பாட்டி, எனக்கு மட்டும்!

சரி. இப்போ இந்த விஷயமெல்லாம் OK. ஆனா, என் சோக கதையோட இன்னொரு அங்கம்- இவளோ சாப்பாடெல்லாம் நன்னா இருந்தும், coffee கு வழியில்ல. "எல்லாம்- இது போதும்"னு என் கூட இருந்ததுகள்-லாம் அந்த instant coffee ய எப்புடி தான் குடிச்சுதுகளோ, ரங்கனுக்கு தான் வெளிச்சம். ஒரு வாய் கூட என்னால குடிக்க முடியல. "Hindu Paper + Degree காபி + 8:45 A.I.R கச்சேரி" கேக்க வெச்சு வளத்தாளே- எல்லாம் அவாள சொல்லணும்!

எப்படியோ 15 நாள் ஒட்டிட்டேன். ஒரு நாள் evening, hostel வர வழில - அஷோக் நகர் "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்" வாசல்-ல, ஒரு நிமிஷம் அப்பிடியே நின்னுட்டேன். Usually, அந்த area வந்தாலே நான் சீக்கரமா நடப்பேன். ஏன்னா அங்க ஒரே நெய் smell வரும் - எனக்கு தல வலிக்கும். But அப்ப தான் அந்த "கும்பகோணம் Degree காபி இங்கு கிடைக்கும்"னு எழுதி வெச்சிருந்த board என் கண்ணுல பட்டுது. "தவிச்ச வாய்க்கு coffee கொடுத்த" அந்த கட நன்னா இருக்கணும்-னு மனசுல நெனைச்சுண்டு, கூட இருந்ததுகளையும் "நான் sponsor" பண்ணறேன் னு (இல்லேன்னா வராதுகள்) அழஷிண்டு பொய் 15 days கு அப்புறம் ஒரு நல்ல coffee சாப்டேன்! நல்ல coffee சாப்ட effect ஓ என்னவோ, அதுகளுக்கும் அந்த hostel காபி அதுக்கப்றம் பிடிக்கல. Daily evening , அங்க பொய் coffee சாப்டுவோம் நாங்க.

ஸ்ரீரங்கம் கோவில் வாசல்-ல "முரளி காபி"ன்னு ஒண்ணு உண்டு. நானும். என் அப்பாவும் சும்மாவே அங்க பொய் coffee சாப்டுவோம். Excellent Quality ! 5 ரூபாய்-லேர்ந்து படி படியா 8 ரூபாய் ஆச்சு இப்போ. ஆனா அதே நல்ல standard maintain பண்ணறா. அதே போல, சத்திரம் bus stand ரகுநாத் hotel லையும், ரவா தோசை and coffee ரொம்ப நன்னா இருக்கும். அர சக்கர போட்ட சுத்தமான degree coffee குடிக்க முடியலன்னா என்ன சம்பாதிச்சு என்ன ப்ரயோஜனம்?

"நன்னா வளந்திருக்கு இந்த பொண்ணுக்கு நாக்கு"ன்னு நீங்க நினைக்கலாம். "சத்து மாவு" பால் ஒரு tumbler அ கைல வெச்சுண்டு 1.5 மணி நேரம் ஒயட்டுவேன். "இது கிளம்பினா போரும் டாபா" ன்னு "ஒரு மொணர்" திருட்டு coffee கொடுப்பா என் அப்பா எனக்கு. அதோட result தான் இது.

என்னதான் Narasu 's /Bru /Nescafe /Coffee Day /Udhayam னு ஏகப்பட்ட Coffee market ல இருந்தாலும், தஞ்சாவூர்-ல "Nathan's " னு ஒண்ணு உண்டு. அந்த Coffee போல வேற எங்கயுமே கிடையாது அப்டீங்கறது என்னோட expert opinion! விளையாட்டுக்கு சொல்லல. எப்பயாவது தஞ்சாவூர் போனாலோ, இல்ல அங்கேர்ந்து தெரிஞ்சவா வந்தாலோ, வாங்கிண்டு வர சொல்லி Coffee போட்டு சாப்டு பாருங்கோ. அப்புறம் தெரியும் என் taste பத்தி!

சரி. இப்போ திடீர்னு ஏன் Coffee பத்தி இந்த post னு நீங்க கேக்கலாம். "Degree காபி" ங்கறது "Metaphor " ஆ சங்கீதத்துக்கும் உபயோகப் படுத்தற வழக்கம் உண்டு. Music Blog ஒண்ணு வெச்சுக்கணும் னு எனக்கு ரொம்ப வருஷமா ஆசை. ஆனா, அத start பண்ணி, அதுக்கு readership ஏற்படுத்தரதெல்லாம் முடியுமான்னு தெரியல. அப்புறம், "Music , Method and Madness" னு ஒரு group blog ல அழுத எனக்கு தெரிஞ்சவா அழைச்சா. அப்புறம் அங்க யாருமே இல்லாத கடைக்கு நாங்க கொஞ்சம் பேர் மட்டும் டீஆத்திண்டு.... sorry ... காபி ஆத்திண்டு இருந்தோம். அதுக்கப்றம் தான், "நம்ம கிட்ட தான் இங்க 2 blog இருக்கே"ன்னு தோணித்து. சரி- அதெல்லாம் இதுல ஏதாவது ஒண்ணுத்துல போட்டுக்கலாம்-னு decide பண்ணினேன். அப்டிதான் இந்த "Degree காபி" genre எனக்கு தோணித்து. அப்போ அப்போ ஏதாவது music related என்னோட ideas இந்த genre கீழ வரும், "மைத்துளிகள்"ல. எல்லாரும் படிக்கலாம். (செலபா, "காதலிக்க நேரமில்லை"ல ஒரு dialogue சொல்லுவார்-"நான் என்ன எடுக்கறேனோ அதான் படம். நீ என்ன நடிக்கறியோ அதான் நடிப்பு. இந்த ஜனங்க பாத்து தீரணும், அது அவங்க தலை எழுத்து..." ன்னு. ஏதோ தோணித்து, திடீர்னு...) கூடிய சீக்கரம், என்னோட ஒரு "Degree காபி" post -ஓட உங்கள சந்திக்கறேன்...

This entry was posted on 15 January, 2011 at Saturday, January 15, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

28 comments

டிகிரி காஃபி சூப்பர் டேஸ்ட் ஆக இருந்தது.

காஃபின்னா கொஞ்சம் குடித்தாலும், நாக்கைச் சுழட்டுவதாக நல்ல தரமானதாக இருக்கணும்.

சிலர் வீடுகளிலும், பெரும் பாலான ஹோட்டல்களிலும், ரெயில் பயணத்திலும் முன்பெல்லாம் காஃபி டம்ளரை அலம்பிய தண்ணி போலத் தருவார்கள். ஒரு சொட்டு குடிப்பதற்குள் குமட்டிக்கொண்டு வரும். இப்போது கொஞ்சம் பரவாயில்லை.

அனுபவித்து எழுதிய அருமையான பதிவுக்குப் பாராட்டுகள்.

16 January 2011 at 01:08

பேஷ்...பேஷ் ...டிகிரி காஃபி அறிமுகமே நல்லாருக்கு ..

இனி இசை ரசனை டிகாஷன் இறக்குங்க...

16 January 2011 at 05:28

பில்டர் காபிக்கு இணை ஏதும் இல்லை.

16 January 2011 at 10:57

காஃபி குடிக்கணும்னா ப்யூர் காஃபியாக இருக்கணம். இந்த சிக்கரி கலப்பு இருக்கக்கூடாது.அந்த காலத்தில எங்க வீட்டுல ஹாண்ட் க்ரைண்டர்ல காஃபிகொட்டை வாங்கி அப்பப்பொ அரைச்சு காஃபி போட்டுக் குடிச்சா ஆஹா பேஷ் பேஷ் -னு ஹூம் அது அந்தக் காலம். என்ன.. உங்களை மாதிரி எழுதறேனா.?

16 January 2011 at 11:16

நன்னா இருந்தது

16 January 2011 at 15:29

முரளி கடை காஃபி இப்ப சுமார் தான். உங்க டிகிரி காஃபி அளவுக்கு இல்ல!
இங்க சிந்தாமணியில் மதுரா காஃபினு
போடறா..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னா
இருக்கு!

16 January 2011 at 18:57

முன்னால டவுன்ல ஒரு இடத்துல காபிக்கு கூட்டம் மொய்க்கும். பில்டர் அடில அபின் தடவி இருக்கானு தகவல். (பொய்யா.. நிஜமா தெரியாது) இப்ப ஒரு கடைல கூட்டம் அதிகம்தான். அவர்ட்ட கேட்டா ‘சிக்கரி கூட.. அதான் சீக்ரட்’னு சிரிச்சார். நல்ல காபின்னா அது சிக்கரி போட்டா.. இல்ல போடாமலா?!

16 January 2011 at 19:30

nice reminiscing post abt Srirangam coffee.agreed.Trichy people struggle a lot if they dont get gud coffee.

16 January 2011 at 21:45

காபி புராணம் நல்லா இருந்துது. எல்லாம் Pavlovian Conditioning. :-) As long as it is coffee, as long as it is slightly bitter and dark, it is fine. :-) நம்ம காபி எல்லாம் முதன் முதலா Yemenலேந்து வந்தது தெரியுமோ!

"ஒரு group blog ல அழுத எனக்கு " இந்த தன்னிச்சையான தவறுக்கு LOL. எதுக்கு அழுதீங்க? :-D

குடிக்கற காபில ஆரம்பிச்சு பாடுற காபிக்கு போறீங்க. பேஷ் பேஷ், ரொம்ப நன்னா இருக்கு !

17 January 2011 at 11:38

நல்ல பதிவு. என்ன இருந்தாலும் நம்ம ஊர் காஃபி மாதிரி வராது என்பதால் என் அப்பா மாசாமாசம் தான் பையனும் ஆத்துல நல்ல காஃபியா குடிகட்டம்னு என் தம்பிகளை விட்டு கும்பகோணதிலிருந்து கோவாவிற்கு தவறாமல் அனுப்ப சொல்கிறார் .ஆனால் எனக்கு தான் அதிஷ்டம் இல்லை .டாக்டர் காஃபி வேண்டாம் என்கிறார்.

17 January 2011 at 19:59

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு காஃபி உண்டு.

நாதன்-அய்யனார்-லக்ஷ்மி-லியோ-இப்பிடி.

ஃபில்டர் காபி குடிச்ச நாக்கு வேறெதுக்கும் பணியாது.

அதுலயும் டிகாக்‌ஷனும் இறக்கின சூட்டோட அரைச் சக்கர போட்டுக் காய்ச்சின பால்ல கலந்து நாக்குப் பொசுக்கப் பொசுக்கக் குடிக்கற பாந்தம் வேறெந்த பானத்துக்கும் வராதுதான்.

ஆனாலும் சோகம் என்னென்னா ஹோமியோபதிக்காக நான் காஃபிய விட்டுட்டு டீக்கு மாறிட்டாலும் நடூநடூல கைவிட்ட காதலியைப் பாக்கிற பாவத்தோட காஃபியக் குடிச்சுக்கறேன்.

சபாஷ் பதிவு மாதங்கி.

புது ப்ளாக்லயும் கச்சேரி களை கட்டட்டும்.

17 January 2011 at 21:05

//"இது கிளம்பினா போரும் டாபா" ன்னு "ஒரு மொணர்" திருட்டு coffee கொடுப்பா என் அப்பா எனக்கு. அதோட result தான் இது// ha ha..:)

good one matangi and waiting for that post also..:)

18 January 2011 at 01:33

//ஆனாலும் சோகம் என்னென்னா ஹோமியோபதிக்காக நான் காஃபிய விட்டுட்டு டீக்கு மாறிட்டாலும் நடூநடூல கைவிட்ட காதலியைப் பாக்கிற பாவத்தோட காஃபியக் குடிச்சுக்கறேன்//

sunderjii, classic comment..:)

18 January 2011 at 01:35

நன்றி தக்குடு.

என்னோட ப்ளாக்குக்கும் வாங்க நேரங்கிடைக்கும் போது.

20 January 2011 at 21:18

//எங்க போனாலும் எனக்கு சாப்பாடு பிரச்சன மட்டும் இருந்ததே இல்ல//
அப்போ இன்ன வரைக்கும் சொந்த சமையல் இல்லைன்னு சொல்லுங்கோ...கரெக்டா? ஹா ஹா ஹா...

//நான் என்ன எடுக்கறேனோ அதான் படம். நீ என்ன நடிக்கறியோ அதான் நடிப்பு. இந்த ஜனங்க பாத்து தீரணும், அது அவங்க தலை எழுத்து..." ன்னு. ஏதோ தோணித்து, திடீர்னு...) //
ஹா ஹா ஹா...சூப்பர்ப்பா மாதங்கி... இந்த அழகு தமிழ் படிக்கணும்னு தோணறப்ப
எல்லாம் உங்க ப்ளாக் பக்கம் நான் ஆஜர் ஆய்டுவேன்...(நீங்க நல்ல காபிக்கு காபி கடை தேடி போனாப்ல)... ஏற்கனவே படிச்ச பழைய போஸ்ட் ரிபீட் படிச்சு இருக்கேன்...

21 January 2011 at 02:45

@ vai. gopalakrishnan....

:) true... raiway station la tea thaan nannaa irukkum. coffee sumaar thaan...

thanks!

22 January 2011 at 23:28

@ padmanabhan...

thanks! :)

22 January 2011 at 23:28

@ LK...

:) true!

22 January 2011 at 23:29

@ gmb...

sir-- intha hand grind laam naan saaptathilla... :) en appa bachelor-aa iruntha kaalaththula vechchu 'paathukaaththu'vanthaaraam atha... amma vanthapram athu 'engeyo kanaama pochchu' nnaar! :D

chicory-- keduthal thaann.. aanaa oru lesa 10% pola atha seththukarathula coffee taste enhance aagum! appa sonnathu, ithu...

22 January 2011 at 23:31

@ parvaiyalan...

thanks!

22 January 2011 at 23:31

@ aranya nivas...

:) thanks!

murali coffee is good sir... aanaa naan intha mathura coffee saaptathilla... aduththa trichy trip-la saapdalaam! :) athukkapram murali coffee paththi verdict kodukkaren...

22 January 2011 at 23:33

@ rishaban...

:) naan filter coffee thaan sir saaptirukken... abeen coffee la laam namakku pidiththam illa!

chocory-lesa taste enhance pannum... aanaa athu seththaa keduthal thaan-nnu sollaraa...

22 January 2011 at 23:34

@ kalyan...

thanks! :) true!

22 January 2011 at 23:35

@ramm...

:) unintetional thaan antha error... but nannaa vanthu vizhunthuduththu!

thanks!

22 January 2011 at 23:36

@ ganesan...

:) thanks!

22 January 2011 at 23:36

@ sundarji...

:D LOL .... super! coffee layum kaaviyam pazhagittel pongo! very nice sir! :)

22 January 2011 at 23:37

@ thakkudu...

:) varum boss... atha paththiyum varum... kathaikkaa panjam... namma thaan romba varushamaa 'valanthudeeeeeeee' thaane irukkom!

22 January 2011 at 23:39

@ appaavi...

:D naan ethukku paa samaikkanum? namakku panna eppothum aal irukkum! :) .... thanks!

22 January 2011 at 23:39

Post a Comment