இது LKG படிச்சது - Holy Cross St. Antony's Nursery School-la. "Christmas போது நிறைய programs இருக்கு- நீ என்ன பண்ணுவ"? ன்னு miss இது கிட்ட வந்து கேட்டப்போ- "பேசுவேன்" அப்டீன்னுருக்கு. Class ல இதுதான் நிறையா பேசும் னு , miss எப்போ பாரு complaint தான் என்கிட்டே. நன்னாருக்கே! கொழந்த class ல friends-ஓட பேசாம- வேறெங்க பேசும்? ஆனா இது இப்டி சொன்னத- அங்க ஒரு ரொம்ப நல்ல HM sister இருந்தா- நல்ல spirit-ல எடுத்துண்டு இத "Vote of thanks சொல்லு" அப்டீன்னு சொல்லிட்டா. அவ்வளவுதான். ஆத்துக்கு வந்து- "நான் mike ல பேசுவேன்.. mike ல பேசுவேன்" னு ஒரே குஷி!
அன்னிக்கு அடுத்த நாள் ஆத்துக்கு வந்து ஒரே அழுக. ஏன்னா- dance ஆடற கொழந்தைகளுக்கெல்லாம் frock வாங்கி கொடுத்திருக்காளாம். "எங்கு மட்டு ஒண்ணுமே ஆங்கி தல்ல"-னு ஓ-ன்னு அழுக. அப்புறம் என்ன? கட கடையா ஏறி- இதுக்கொரு dress-அ "ஆங்கி" கொடுத்துது. இதோட "costume" என்ன-ன்னு நாங்களும் இதோட மீஸ், HM sister எல்லாருமா கலந்தாலோசிச்சு- பைஜாமா-ஜிப்பா- white color-னு decide பண்ணினோம். அதுக்கப்றம் தான் முக்கியமான விஷயமான "vote of thanks" சொல்லறதே வந்துது. இவர் உக்காந்து அழகா எழுதிகொடுத்து- சொல்லிகொடுத்தார். அத கத்துண்டு சொல்லறதுல அத்தன ஒயட்டல். இது ஒரு தடவ சொல்லி, நான் ஒரு தடவ சொல்லி, அது அப்பா ஒரு தடவ சொல்லி- tape ல record பண்ணி, அப்புறம் "நா இனொன்னு இன்னொன்னு"ன்னு இது இன்னொரு தடவ சொல்லி... (இதுக்கு சொல்லிகொடுத்து ஓஞ்சு போனத tape பண்ணிநோமொல்யோ? அந்த sample இங்க கேளுங்கோ!-click here )
அப்டியா-இப்டியா-ன்னு Christmas-உம் வந்தது. "participants"-லாம் காலேலையே வரணும்-னு சொல்லிட்டா. காலேல இத கொண்டோய் விட்டாச்சு. இதுக்கு "costume"-ஓ ஒரு வெள்ள color 'பைஜாமா-ஜிப்பா'. மத்த கொழந்தைகளுக்கு frock-choli-pant-shirt னு அத்தன variety. அதுகள்-எல்லாம் make-up room-ல உக்காந்து இருந்துதுகள். எலி புழுக்க கணக்கா இதுக்கு அங்க என்ன வேல? 4 inch கூட தலேல முடி கெடயாது. இது தாத்தாவாத்துக்கு போரபோதெல்லாம்- தாத்தாக்கு hair-cut பண்ணும்-போதெல்லாம் இதுக்கும் ஒரு 'summer-crop' உண்டு. எதோ இதுவும் பாவம் உக்காந்திருக்கே-ன்னு free-யா இருந்த miss- இது தலையையும் நாலு வார வாரி, ஒரு lip-stick ஒண்ண ஈஷி விட்டா. (அது எந்த சீப்ப போட்டாளோ! அந்த நாலு வாரல்-ஓட பலன்- அடுத்தநா காலேல- நான் அந்த நாலு inch கூந்தல நாலாயிரம் தடவ வாரினேன்!) அங்கேர்ந்து வந்து- "எனக்கும் make-up போட்டாளே"-ன்னு ஒரே பீத்தல். lip-stick போய்டும்-னு தண்ணி கூட குடிக்காம உக்காண்டுருந்துது. என் தம்பி ஊர்லேர்ந்து வந்திருந்தான். School கு program பாக்க வந்தவன் சும்மா இல்லாம- "ஐயைய.. ஒதட்டுல லாம் என்ன இது சேப்பு சேப்பா-"? ன்னு நன்னா துணியால புடிச்சு தொடச்சு விட்டுட்டான், கடங்காரன்! அத்தன கோவம் இதுக்கு! காதெல்லாம் செவந்துடுத்து. எங்க இது அழுதுடுமோ-ன்னு பயந்துண்டு உக்காண்டுருந்தேன். நல்ல வேள. miss வந்து- "front ல உக்காந்துக்கோ" ன்னு சொன்ன ஒடனே கோவம் லாம் போச்சு.Christmas நா என்ன-ன்னு அங்க எல்லா கொழந்தைகளுக்கும் சொன்னா. இது எதோ ரொம்ப கவனமா கவனிச்சுண்டு இருந்துதேன்னு- கூப்டு- இது கிட்ட "அப்டீன்ன என்னடா"? ன்னு கேட்டப்போ- "அப்ப்டீன்ன எனக்கு நெறைய 'gift' வாங்கி தருவாளே ஏ ஏ ஏ "- ன்னுது. இது ஆசய ஏன் கெடுப்பானேன்-னு தான் " 'மாக்கான்' னு ஒண்ணு இருக்கு. கருப்பா இருக்கும். சேப்பு color மூக்கு இருக்கும். பெரிய கண்ணு இருக்கும். எப்போலாம் நீ சமத்தா இருக்கியோ- 'மாக்கான்' உனக்கு chocolate தரும்"-னு சொல்லி வெச்சேன். அன்னிக்கு இருந்தாப்ல இப்போ வரைக்கும் என்னிக்குமே அவளோ சமத்தா இருந்ததே இல்ல! அதோட அப்பா office லேர்ந்து வந்த ஒடனே- நாற்காலி எடுத்துண்டு வந்து வெச்சுது. தூத்தம் எடுத்துண்டு வந்து குடுத்துது. Rhymes லாம் correct-ஆ சொல்லி காட்டித்து. அடுத்த நாள் காலேல- எங்காத்து வாசல்-ல இருக்கற வேப்ப மரத்து கெளைல ஒரு plastic bag-ல நாலு chocolate தொங்கிண்டுருந்துது. "கொஞ்சம் நெறையா வாங்கிருக்கலாமோல்யோ"-ன்னு 'மாக்கான்'-ட சொன்னேன். "பல்லு கெட்டு போய்டும்"நுடார்.
அதுக்கப்றம்- 'மாக்கான்' chocolate லாம் தர அளவுக்கு ஒண்ணும் நடக்கல.