இப்போதான் நடந்தாப்ல இருக்கு. பாத்தா வருஷம் ஓடிடுத்து! ஆச்சு- மூணு வயசாயாச்சு Bushy-க்கு! துப்பாண்டி தான் எங்காத்துக்கு முதல்ல வந்துது. Bushy ய அப்றமா அது தான் அழச்சுண்டு வந்துது. ரெண்டு ஈத்துல- நாலு குட்டியும் போட்டுடுத்து பாவம் Bushy. 2012 April மாசம் துப்பாண்டி எங்கேயோ ஓடி போனது தான். அப்புறம் ஆளையே காணும்... Bushy க்கு தான் ஒரே கவலை. ஆனா துப்பாண்டி போனப்றம்- எங்காத்தையே அதோடதாக்கிண்டுடுத்து இந்த Bushy. அதோட ஒயிலென்ன... ஒய்யாரமென்ன... இந்த புது ஆத்துல- தெருல இருக்கற அரை ticket எல்லாம் எங்க Bushy யோட fans! ஆனா இந்த புது ஆத்துக்கு கொண்டுவர நாங்க பட்ட பாடிருக்கே....
போன 2012 ஜூன் மாசம் வீட மாத்தினோம். Bushy க்காகவே flats வேண்டாம்-ன்னு தனி வீடா பாத்திருந்தோம். வீட மாத்தணும்னு பேசிண்டு இருக்கும்போதே Bushy ய என்ன பண்ணலாம் னு தான் எங்க எல்லாருக்குமே யோசனையா போச்சு. Bushy ய நாம எங்க போறோமோ அங்க அழைச்சிண்டு போணும் னு- இது சொல்லிடுத்து. Bushy என்ன நாயா? பூனையலாம் அவ்வளோ easy யா இடத்த மாத்த வைக்க முடியுமா? அது எந்த இடத்துல பழகித்தோ அங்கேயே தான் இருக்கும். சொன்னா கேக்கவே மாட்டேங்கறது.
ஆனா பாவம்-- Bushy க்கு இப்போ துணைக்கு துப்பாண்டியும் இல்ல. தெரு-ல
விட்டுட்டு போனா சாப்பாட்டுக்கு எத்தன கஷ்ட படுமோ! அதுவும் இந்த sterilization operation பண்ணினதுலேர்ந்து அதோட 'புளியங்கொட்டை' cat feed அ தவிர வேற எதையுமே அது சாப்ட்ரதில்லை வேற. அதுவும் இல்லாம அந்த area தெரு பூனைகளெல்லாம் வேற அத வந்து சீண்டும். அதையும் கூட்டிண்டு புது ஆத்துக்கு போகலாம்ன்னு decide பண்ணியாச்சு.
ஆனா- பொட்டி படுக்கையெல்லாம் மூட்ட கட்டும் போது, Bushy க்கு ஒரே பயம். எல்லா அட்டை டப்பாவையும் பாக்கறது. பீரோக்குள்ள லாம் போய் என்னத்தையோ தேடறது. ரொம்ப uncomfortable/tensed ஆ feel பண்ண ஆரம்பிச்சுடுத்து. இது உடனே internet ல - "Behavioral changes in cats" ன்னு லாம் தேடி பாத்து- அதுக்கு என்ன பண்ணனும்-னு லாம் பாத்துது. ஒண்ணும் பலிக்கல. நாங்க வீட்ட விட்டு களம்பும்போது Bushy ய ஒரு பை-ல போட்டு எடுத்துண்டு போலாம்னு plan பண்ணினோம். கிளம்பற நேரத்துக்கு ஆளையே காணும். கூப்படறோம், கூப்படறோம்- கிட்டயே வர மாட்டேன்னுடுத்து. ஒரு மூலைலேர்ந்து எங்கள பாத்துண்டே இருந்துது. "என்ன மட்டும் இங்க விட்டுட்டு நீங்கள்லாம் போறேளே... என்ன யார் பாத்துப்பா"? ன்னு கேக்கறாப்ல இருந்துது, அது பார்வை... ஒரு பயம் அது முகத்துல. எங்களுக்கா- அழுகையா வருது! அத எப்படி எங்க கிட்ட வர வைக்கறதுன்னே தெரியல. அக்கம் பக்கத்துக் காராள்லாம் அத அப்பறமா வந்து கூட்டிண்டு போங்கோன்னா... ஒரு டப்பால அதோட சாப்பாட கொஞ்சம் போட்டு, பக்கத்தாத்து மாமி கிட்ட குடுத்து அது கேக்கும் பொது கொஞ்சம் போட சொல்லிட்டு- நாங்க கிளம்பினோம்.
புது ஆத்துக்கு வந்தப்றம்- கொஞ்சம் சாமானெல்லாம் அடுக்கி வச்சிட்டு Bushy ய கூட்டிண்டு வரலாம்ன்னு plan பண்ணினோம். ஏன்னா அது இந்த suitcase, box எல்லாம் பாத்து தான் பயப்பட்டுது. மறுபடியும் அதே போல சூழல் ல அது
எப்படி feel பண்ணுமோ! நாங்க shift பண்ணி ஒரு வாரம் கழிச்சு இவரும், இதுவுமா பழையாத்துக்கு போனா. Bushy ய கூப்டு பாத்தாளாம். அது வந்துதாம். சாப்டுதாம். இவா தடவி குடுத்தாளாம். அத தூக்கி பைக்குள்ள போடப்போரான்ன ஒடனே எடுத்தாங்கட்டைன்னு ஓட்டமா ஓடி பொயிடுத்தாம்! பக்கத்தாத்து மதில் மேல உக்காந்துண்டு பாத்துண்டே இருந்துதாம். எப்போதுமே அது தொடப்பத்த எடுத்து பெருக்கினா வரும். அந்த தொடப்பத்தால அத தடவி விடச்சொல்லும். இது அங்க இருந்த ஒரு தொடப்பத்த எடுத்து Bushy கிட்ட காட்டித்தாம். மதில் மேலேயே நின்னுண்டு "வெளக்கமாறு பூஜை" எல்லாம் வாங்கிண்டுதாம். ஆனா கூட வர மாட்டேன்னுடுத்தாம்.
கிட்டத் திட்ட ஒரு 42 நாள் ஆகியிருக்கும். 4-5 தடவ மாத்தி மாத்தி போய் அத அழைச்சுண்டு வர try பண்ணிப் பாத்தாச்சு. வர மாட்டேன்-ன்னு வீம்பு பண்ணினா நாம என்ன பண்ண முடியும்? பக்கத்தாத்து மாமியும் எத்தன நாளைக்கு தான் சாப்பாடு போடுவா? பசி ல காஞ்சு போய், கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு போய், சோர்ந்து போய் இருந்துதாம். அன்னிக்கு இவா ரெண்டு பேரும் போய் அத கூப்ட போது அதுக்கு நடக்க கூட த்ராணியில்லையாம்! மெதுவா வந்துதாம். ஆகாரம் போட்டாளாம். சாப்டுதாம். எத்தன நாளா பட்டினியோ-பாவம்... சாப்டு முடிச்ச கையோட அத தூக்கி bag ல போட்டாளாம். கைய தள்ளி விட்டுட்டு ஓட கூட தெம்பில்லை அதுக்கு. "சரி. இவா கூடையே போயிடலாம்" ன்னு அதுக்கே எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ...
புது ஆத்துக்கு கூட்டிண்டு வந்தாச்சு. இது, முனாடியே- பூனைய இடம் மாத்தினா என்னல்லாம் precautions எடுத்துக்கணும்னு internet ல படிச்சு வெச்சிருந்துது. 10-15 நாளைக்கு அத வெளீலையெ விடப்டாது. ஆத்துக்குள்ளையே வெச்சிருக்கணும். Bathroom உம் "litter training" பண்ணி
ஆத்துக்குள்ளையே போக வைக்கணும் னு போட்டுருந்துதாம்-net ல. Bushy ய கொண்டு வந்து ஒரு room ல வச்சாச்சு. பைக்குள்ளேர்ந்து மெதுவ்வ்..வா வெளீல வந்துது. எங்கள எல்லாம் அடையாளம் கண்டுண்டுது. அந்த பயம் போகல இன்னும்! Room அ எல்லாம் நோட்டம் விட்டுது. எத்தன நேரம் ஒரே இடத்துல அடைச்சு வைக்கறது- பாவம்! Room கதவ திறந்த ஒடனே மெதுவா வீடு முழுக்க எல்லா இடத்துக்கும் போய் மோந்து பாத்துண்டுது. நன்னா சாப்டுது. எத்தன நாளா பசியோ- பாவம்... சமயகட்டுல cylinder க்கு பின்னாடி ஒரு இடுக்குல போய் படுத்துண்டுடுத்து, சோர்ந்து போய்!
அன்னிக்கு ராத்திரி- அதுக்கு பாத்ரூம் போக எல்லாம் ஏற்பாடெல்லாம் பண்ணினா இவா ரெண்டு பெரும். அதுக்கு பிடிக்கல. சரி- வெளீல கொண்டு போய் விட்டு பாக்கலாம்-ன்னு வெளீல கூட்டிண்டு போனா- அவ்வளவுதான். எங்க போச்சுன்னே தெரியல! Bushy...Bushy ன்னு கூப்டு பாக்கறா. தெரு ல இருக்கரவாள்லாம் வெளீல வந்து வெடிக்க பாக்கறா... இத கூட்டிண்டு வந்திருக்கக் கூடாதோ. At least அதுவான்னா அது பழகின இடம். புது இடத்துல இது எப்புடி இருக்குமோன்னுலாம் ஒரே கவலை. அடுத்த நாள் முழுக்க ஆளையே காணும்! அப்பரமா இவர் மொட்ட மாடிக்கு போய் பாத்துட்டு- parapet ல தான் படுத்துண்டு இருக்குன்னு சொன்னப்ரம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துது. அன்னிக்கு சாயங்காலம் வந்து நன்னா சாப்டுது. ஒரு வாரமாச்சு- settle ஆக.
இதுக்கு நடுவுல- "ஒரு புது girl பூனை வந்திருக்கு"ங்கற விஷயம் இந்த area ல இருக்கற மத்த பூனைகளுக்கெல்லாம் தெரிஞ்சுடுத்து. இது இங்க வந்த மூணாவது நாள்- எங்காத்து வராண்டாவுல ரெண்டு மஸ்தான் பூனைகளுக்குள்ள ஒரே சண்டை. அக்கம் பக்கத்ல இருக்கரவாள் -லாம் வேற- புதுசா வந்திருக்கரவா வீட்டு பூனை தான் சத்தம் போடறதுன்னு complaint பண்ண ஆரம்பிச்சுட்டா. Bushy வாயே தெறக்கல- ன்னு அவாளுக்கெல்லாம்
சொல்லறதுக்குள்ள போறும்-போறும் ன்னு ஆயுடுத்து!
ஒரு "இஞ்சி color" பூனை ஒண்ணுத்த Bushy friend புடிச்சுண்டுது. அது இது கூட இருந்தா இந்த மஸ்தான் பூனைகளெல்லாம் வராதுன்னு நினைச்சுதோ என்னவோ... எப்படியோ! ஒரு வழியா பழைய Bushy யா மாறிடுத்து... ஆனா- இப்பயும் அதோட குட்டிகள video எடுத்தத போட்டு பாக்கும் போது- அதுகள் கத்தர சத்தம் கேட்டா தேடிண்டு ஓடி வரும்... சுத்தி-முத்தி பாக்கும்... பழைய வீட்டையும், துப்பாண்டியையும், அதோட குட்டிகளையும் நினைச்சுக்குமோ என்னவோ...
The Story so far... Episodes: 1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7 (Click on the numbers to read the post)