OMG : OH MY GOD  

Posted by Matangi Mawley


இன்று மதியம் Colors channel ல் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.

This entry was posted on 18 November, 2012 at Sunday, November 18, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

4 comments

மாதங்கி! சுவையாக விமர்சித்திருக்கிறீர்கள். அலசலை எல்லாம் பார்த்தால் ஒரு சினிமாவையே எடுப்பீர்கள் போலிருக்கிறதே? அப்படி எடுத்தால் 'ஹீரோ'வைத் தேடி அலையாமல் என்னைத் தொடர்பு கொள்ளவும். நேற்று தான் பக்கத்து வீட்டு பாட்டி 'அந்தக்கால சோபன்பாபு போலிருக்கிறாய்' என்றாள். முன்பதிவுக்கு பத்து பர்சண்ட் தள்ளு படியும் உண்டு.. சொல்லிட்டேன்..

19 November 2012 at 00:57
Anonymous  

படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம். நிச்சயம் பாக்கறேன். ஏற்கெனவே 'Barfi' படம் பாக்கறதுல பெண்டிங் இருக்கு. இதையும் சேர்த்து பார்த்துட வேண்டியதுதான்.

19 November 2012 at 09:34

நிச்சயம் பாக்கறேன்
Oh! My God !!

subbu rathinam

21 November 2012 at 14:58

National award kedaichirukku! நீ ஒரு தீர்க்க தரிசி டா!

19 March 2013 at 14:27

Post a Comment