நடுநிசி நாய்கள்  

Posted by Matangi Mawley


- 'இது Movie Review கிடையாது"

ஒரு season ல என்னோட book shelf முழுசா crime stories ஆ இருக்கும். அங்கேர்ந்து கொஞ்சம் உயர்ந்து thriller movies கு என்னோட progression ஏற்பட்டது. தமிழ்-ல நான் முதல் முதலா பார்த்த thriller 'பொம்மை' ன்னு ஒரு S. Balachander படம். ஆனா அந்த cinema எனக்கு அவ்வளவா நினைவு இல்ல. எதோ ஒரு பொம்மை உள்ள bomb இருக்கும். அதுக்கப்றம் அந்த cinema நான் பாக்கவும் இல்ல. அதுக்கப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு thriller movie, அதே director எடுத்த 'அந்த நாள்'. பாட்டு எல்லாம் இல்லாம, characters ஓட psychological aspect அ ரொம்பவே subtle ஆ 1954 ல எடுத்தது- நிஜமாகவே ஒரு ரொம்ப பெரிய விஷயம். அதுக்கப்றம் எவ்வளவோ books, movies ... இந்த 'Unsolved True Crime Stories' ல வர கதையெல்லாம் படிச்சு அவ்வளோ ரசிச்சிருக்கேன்.

'Detective' னு ஒரு Arthur Heily யோட novel. அந்த book ல தான் முதல் முதலா Serial Killers பத்தி படிச்சேன். எந்த field பத்தி தெரிஞ்சுக்கணும்-நாலும் அத பத்தின Arthur Heily book படிச்சா போரும்-னு என் அப்பா மட்டுமில்ல, நிறையா பேர் சொல்லி கேள்வி பட்டிருந்தேன். ஒரு Crime investigation, serial killing ல இருக்கற pattern பத்தி- என்னவெல்லாம் ஒருத்தருக்கு தெரியனுமோ- அத்தனையும் அந்த book படிச்சா ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்றம்- Alfred Hitchcock. எப்படி mafia movies எல்லாத்துக்கும் 'Godfather' தான் inspiration ஓ, அதே போல thriller எல்லாத்தக்கும் இவரோட movies.

Gautham Menon ஓட 'நடுநிசி நாய்கள்' cinema இன்னிக்கு பாக்கும் பொது எனக்கு தோணினது- Hitchcock ஓட 'Psycho' movie ய ரொம்பவே சுமாரா - சுமார் கூட இல்ல, ரொம்பவே மட்டமா தமிழ் ல எடுத்த ஒரு படம் னு தான் நினைக்க தோணித்து. Menon 'Psycho' வ மட்டும் அவரோட inspiration ஆ எடுத்திருந்தா கூட பரவாயில்ல. 'Psycho' மற்றும் 'சிகப்பு ரோஜாக்கள்'- ரெண்டையும் சேத்ததுதான் இங்க பிரச்சனையே. 'Psycho' எப்படி ஒரு phenomenon ஓ, அதே போல 'சிகப்பு ரோஜாக்கள்' உம் ஒரு phenomenon. 'சிகப்பு ரோஜாக்கள்' ஒரு அருமையாக எழுதப்பட்ட/execute செய்யப்பட்ட ஒரு படைப்பு. Crime Thrillers ல interest இருக்கற எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பெயர்- 'Ted Bundy'. Ted Bundy யோட 'charm', அவனோட trial போது கூட அத்தன பெண்களோட கவனத்த அவன் தரப்பு ஈர்த்தது. இது history. America வோட one of the most notorious serial killers ல இவனுக்கு தான் முதல் இடம். அவன் எத்தன பேரை கொன்னான் ங்கறது இப்போ வரைக்கும் ஒரு mystery தான். Serial killers கு இருக்கற ஒரு main advantage- அந்த element of surprise தான். Unassuming ஆன- unexpected nature வெளிப்படுத்துதல். Ted Bundy பத்தி நீங்க தயவு செஞ்சு internet ல படிக்கவும். அப்ப தெரியும், கமல் ஹாசன், 'சிகப்பு ரோஜாக்கள்' ல அந்த role அ எவ்வளவு நல்லா பண்ணிருக்கார்-னு!

'Gautham Menon' ங்கற brand name பாத்துட்டு அந்த cinema கு போனது என் தப்பு-தான். ஆனாலும், எனக்கு மத்தவங்க 'reviews' கேட்டுட்டு cinema பாக்கறது பிடிக்காது. "Mobile வாங்க மட்டும் அத்தன review படிக்கற"! ன்னாங்க என் அம்மா. உண்மை தான். யோசிக்க வேண்டிய விஷயம். Realism கடைபிக்கவேண்டிய தருணங்களில்- psychological transition ரொம்பவே 'smooth' ஆ இருக்கணும். சரி. இது ஒரு 'commercial movie' ன்னு ஒப்புக்கொள்வதாக இருந்தால்- அந்த transition ல இருக்கும் drama, effective ஆக இருந்திருக்க வேண்டும். 'அந்நியன்' ல இருந்தது போல. ஆனா- இந்த cinema வில வரும் அந்த 'transitions' எனக்கு சிரிப்பு தான் வந்தது. Screen குள்ள குதிச்சு போய் ஒரு 'Vicks Inhaler' வாங்கி கொடுக்கலாமோ-ன்னு நினைக்க வெச்சது.

ஒரு அவலத்தை 'romanticize' பண்ணுவதின் பெயர் 'art' கிடையாது.

படத்தில், anti-hero, தான் கொலை செய்த பின் அந்த சடலங்களை 'acid' இல் கரைக்கிறார். இப்படி ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா? Nithari killings இல் சடலங்களை மறைக்க பயன்படுத்தப்பட்ட முறை இது. அவரது வாழ்க்கையில் ஒரு 'mother- figure' ஆக இருக்கும் பெண்ணின் உடல் நெருப்பில் வெந்து போகிறது. அப்படி வெந்து போன அந்த பெண்ணை அந்த 'anti-hero' வின் கண்களால் நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் காண்கிறோம். அதை பார்க்கும் போது- கும்பகோணத்தில் school குழந்தைகளுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் நிழல் உருவங்கள் மனதில் புழுக்கத்தை அதிகரித்தது. கோரத்தின் கொடூரங்களில் ஈர்ப்பு கண்ட இயக்குனரின் வக்கிரமான பார்வைகளை, அவரது நடிகர்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த கோரங்களை மறக்க முடியாமல்- அதை நினைத்து-நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்தும் என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பை தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல. அவரது எண்ணங்களின் மீது...

ரெண்டு மணி நேரம் theater ல உக்கார முடிஞ்சதுக்கு - Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்!

This entry was posted on 19 February, 2011 at Saturday, February 19, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

12 comments

எல்லாருமே கிழிச்சு தொங்க விட்டு இருக்காங்க ஒருத்தரைத் தவிர

19 February 2011 at 20:48

// Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்!//
சந்தோஷமா இருக்கு! மேற்கண்ட வரிக்கும்,அந்தப் படத்தை நான் பார்க்காதத்துக்கும்..

19 February 2011 at 22:24

ரிவ்யூ இல்லைன்னு சொல்லிட்டு அலசி ஆராய்ந்து ஒரு அற்புதமான விமர்சனம். கடைசி வாசகம் 'நச்'.
இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்று போஸ்டரில் போட்டிருந்தார்கள். உறுதியாக உள்ளவர்களுக்கு பலகீனமாகப் போய்விடுமோ? ;-)

19 February 2011 at 22:47

//இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பைத்தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல; அவரது எண்ணங்களின் மீது...//

சரியாகச் சொன்னீர்கள். இந்தப் படத்துக்கு எழுதப்பட்டதொரு பொறுப்பான விமர்சனம் இது. மேலும், 1954-இல் ஆக்கப்பட்டதொரு படத்துக்கு நிகராகக் கூட 2011-இல் எடுக்கப்படவில்லை என்றால் அது என்ன படம் என்பதையும் நுணுக்கமாகப் புரியவைத்துள்ளீர்கள்.

20 February 2011 at 00:15

good review

20 February 2011 at 03:18

Not seen the movie yet..

after reading the review.. Not to see!

20 February 2011 at 16:40

நான் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. ஒரே எக்செப்ஷன் காந்தஹார். அது எனக்கு ப்ரிவியு காண கிடைத்த அழைப்பினால் நேர்ந்தது. என் நிலைப்பாடு மே பி பிகாஸ் ஆஃப் ஜெனரேஷன் காப்.

20 February 2011 at 17:33

A review called by any other name (or refuted) is still a review. :-)

Gautam Menon is maybe sinking in his own aura. I cannot comment on this movie as his last movie I saw was Vinnaithaandi Varuvaaya, which I have to say is a decent take.

உங்க அம்மா கேட்டது சரிதான். And with the closing நன்றி to Mr.Anonymous, you should have shouted (or at least murmured) on the movie as you come out.

21 February 2011 at 09:40

Ticket kasu galiya?? Olunga un Poonai kutiku cat food vangirkalam with that money :) :) Heard many people are continuously drinking coffee after watching this Movie(avlo head ache!! )
Intha weekend ticket book panalam nu irrunthen una pola friends elarum "Antha padathuku mattum Pogatha nu solitanga!! My money saved this time !! :) :)
But i agree with you, Review Padikama film pakarthula than swarasiam irruku, Film nalla irruntha no problem, Nalla illana amma kita thittu vangardu uruthi Una pola!!! :D :D

21 February 2011 at 11:13

இந்த‌ கண்றாவி ப‌ட‌த்தை உங்க‌ புண்ணிய‌த்தில் தியேட்ட‌ருக்குப் போய் பாக்க‌மா இருந்திர‌லாம்.
ஆனா இந்த‌ த‌மிழ் தொலை..க‌ளில் ஐஞ்சு நிமிஷத்திற்கு இரு முறை வ‌ந்து கொடூர‌மாய் க‌த்திக்கொண்டு வ‌ன்முறையை ந‌மது வீட்டு ஹாலில் டிரைலாராக‌ வந்து தொலைக்கிறார்க‌ளே. என்ன‌ செய்ய‌?

21 February 2011 at 14:13

படத்தை விடுங்க.( நான் பாக்க மாட்டேன்)
Arthur Heily இன் Airport, Final Diagnosis இரண்டும் படிச்சிருக்கேன். Airport படிச்சப்ப Heily ஒரு விமாநியோன்னு நினைச்சேன். Final Diagnosis படிச்சப்போ அவர் ஒரு பெரிய டாக்டரோன்னு நினைக்கத் தோனுச்சு. அப்படியே புகுந்து வெளியே வந்திருப்பார். இந்த ஸ்டைல பாலகுமாரன் நிறைய நாவல்ல பின்பற்றி இருப்பார்.

22 February 2011 at 11:54

எது எப்படியோ கர்ணகடூரமா அதைப் பற்றி ஒரு கமர்ஷியல் வருதுமா. அருவருப்பும், உடம்பே தூக்கிப் போடறது. விஜய்,கலைஞார் இரண்டு சானலிலும் இந்த ட்ரெயிலர் வருது. அதனாலியே எனக்குப் பிடிக்கலை. இப்ப நீங்களும் சொல்லிட்டீங்களா. மஹா திருப்தி.

24 February 2011 at 21:34

Post a Comment