வண்டல்  

Posted by Matangi Mawley

தெளிவில் தெளிந்த நீர். அதன் ஆழத்தில் அமைதி கண்டிருந்தது மணலும், கற்களும்- வண்டல் . நீரின் தெளிவில் தெரிந்ததாம் அதன் ஆழத்து வண்டல். ஒரு சிறிய கல் கொண்டு வண்டலை மேலே எழுப்ப முயற்சித்துப் பார்த்தால் என்ன? வேண்டாம். அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி.

வண்ணம் பொடிந்து கீழே விழுந்த சுவற்றை வேறொரு வண்ணம் கொண்டு மூடி விடுகிறோம். அந்த சுவற்றை அப்படியே விட்டு விட்டால் தான் என்ன? கூடாது! அப்படி எப்படி விட்டு விட முடியும்? அதன் மீது வேறு வண்ணம் பூசுவதிலேயே நன்மை. சுவற்றிற்கும் சரி- நமக்கும் சரி.

குழப்பங்களை தாழ்த்திக்கொண்டு விடுகிறோம். அதன் தாக்கங்கள் மனதின் ஆழங்களில் படிந்து விடுகின்றன. அதை நாம் தட்டி விட முயற்ச்சிப்பதில்லை. அச்சம். கண்களின் பார்வைகளின் ஒளி எங்கே அந்த குழப்பங்களின் தாக்கத்தினால் மங்கிப் போய் விடுமோ என்ற அச்சம். இருட்டில் பார்க்கும் திறன் தெரியாதவர்கள் மனிதர்கள். இருட்டிற்கு ஒரு உன்னத குணம் உண்டு. எல்லாவற்றிலும் அது தன்னைப் படரச் செய்துவிடும். இருட்டு- தம்மையும் தாக்கி விடும் என்ற அச்சத்தில் இருட்டை தம்முள் பூட்டி விடுவர் மனிதர்கள்.

மனதின் ஆழங்களில் படிந்து போன அந்த இருட்டை, படர விடாமல் தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்து விடுவர் அவர். அவர்களின் "சிறிய வெற்றிகளில் மகிழ்ச்சி அடையும்" இந்த குணத்தை- அந்த இருட்டு நன்கு புரிந்து கொண்டிருந்தது. அவர்களையும் மீறி அந்த இருட்டு அவர்களுள் பரவுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

காற்றின் வேகம் தாள முடியாமல் தன கூட்டிலிருந்து கிழித்து எறியப்பட்ட ஒரு இலை- கலக்கமில்லாத நீரில் விழுந்தது. இது காற்றின் தவறல்ல! இலையின் பிழையல்ல! நீரின் விதியுமல்ல! இயற்கை.

வண்டல்- வெளிச்சம் காணும் பொருட்டு ஆர்வத்துடன் மேல் எழும்பியது. வண்டலின் வாழ்க்கையில் அது வெளிச்சத்தை கண்டதே இல்லை. அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அதற்க்கு ஆர்வமாக இருந்தது. அதன் ஆர்வத்தால், நீரில் ஒரு சில சலனங்கள். "நீரையும் மீறி விட வேண்டும்; வெளிச்சத்தை கண்டு விட வேண்டும்"- என்று அது துடித்தது. வண்டலின் சுயம் அதை எதிர் கொண்டது. அதை மீறி வெளிச்சம் நீரை எட்டாது- என்று தெரியுமா என்ன வண்டலுக்கு! வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை.

நீரின் எல்லைகளைக் கடந்தது. எழும்பியது. நீரைத் துள்ளச் செய்தது. ஆயினும், வெளிச்சத்தை அதனால் காண முடியவில்லை. ஏங்கியது. தன்னையே சலித்துக் கொண்டது. சில காலம் காத்திருந்தது- வெளிச்சம் தோன்றும் நம்பிக்கையில். ஏமாற்றம் அடைந்தது. நீரின் ஆழத்தில் தாழ்ந்து போனது. வண்டலானது.

This entry was posted on 10 September, 2010 at Friday, September 10, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

24 comments

சிந்தனையை தட்டி விட்டது உங்கள் கட்டுரை. .நமது நீச எண்ணங்களை வண்டலுடன் ஒப்பிட்டு பார்த்தேன்..
அவைகளும் ஆழ் மனதில் வண்டல் போன்று படிந்து உள்ளது. வண்டல் போலவே தள்ளபட்டவை.அந்த எண்ணங்களும்
மேலே வெளி வர முயற்சிக்கும் அடிக்கடி. ஆனால் வண்டலை போல வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது நமக்கும் நல்லது அவைகளுக்கும் கூட

11 September 2010 at 06:27

மிக நன்றாக இருந்தது. இப்படி மனதிலும் பல வண்டல்கள் உள்ளன.

11 September 2010 at 08:48

wow! Simply Superb! சிந்திக்க வைக்கும் அருமையான இடுகை. பாராட்டுக்கள்!

11 September 2010 at 17:55

உங்கள் சிந்தனை புதிய பரிமாணங்களைத் தொடுகிறது..

11 September 2010 at 19:07

வெளிச்சம் பல திரைகளும் முகமூடிகளும் கொண்டது.இருள்தான் சாஸ்வதம்.இருள்தான் மனங்களுக்கு மருந்தாகிறது.வண்டலும் அப்படியே.இருள் மெய்யானது.இருள் கண்களுக்குப் பழகுதல் கண்களுக்கு மையிடுதல் போலத் தோன்றுமெனக்கு.இருளைக் கொண்டுதான் போர்வை போல பல விஷயங்களை மூட முடிகிறது.இப்படி ஓடுகிறது என் மனதின் பாதை.ஓட வைத்தது இந்த அழகு வண்டல்.நிறைவாக இருக்கிறது நல்ல எழுத்தை வாசிப்பது.வாழ்த்துக்கள் மாதங்கி.

11 September 2010 at 20:40

mind-blowing post. epdi ipdi ellam ezhuthara?

12 September 2010 at 14:46

கரைக்குப் பக்கத்திலான ஆற்றின் தெளிந்த நீரோட்டத்தினிடையே சூரியக் கதிர்கள் ஒரு 'Dazzling' பீறிடலோடு
பளபளக்கையில் அந்த வெளிச்சத்தினூடாக ஆற்றின் அடிமணலைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!

நல்ல எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டாலே போதும்.சூரியக் கதிர்கள் போன்ற அதன் ஆற்றல் செயல்பட ஆரம்பிக்கையில் இயல்பாகவே அதற்கு எதிரான எண்ணங்களைச் சுட்டுப் பொசுக்கி சுத்திகரித்து சுத்தப்படுத்தி விடும். நல்லx தீதான. ஒன்றை replace பண்ணி இன்னொன்று நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் Process-ஸே இது. தீமையான எண்ணங்கள் அதன் இயல்பான தீமை விளைவிக்கும் பலங்களைத் தரும் பொழுதும் தன்னிச்சையாக தன்னிலிருந்து விலகி போகும். தீயதுக்கு மாற்று நல்லதைத் தவிர வேறொன்று மில்லை. செயல்படுதலின் நன்மையோ, தீமையோ அததற்கு ஏற்ப அவையே அவற்றிற்கான குண இயல்புகளைக் கொண்டிருப்பது தான் விசேஷம்.

வண்டலைக் குறித்தான உங்கள்
யோசனை நிறைய சேதிகளைச் சொல்கிறது.

14 September 2010 at 21:56

சிந்திக்க வைக்கும் பதிவுங்க மாதங்கி

15 September 2010 at 22:13

//அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி//அழகான வரிகள் மாதங்கி.

கவிதை வரிகள் வாசித்ததுண்டு, வரிகளே கவிதையாய் பரிமளிக்கும் அழகை இங்குதான் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

16 September 2010 at 23:41

/வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை./
அதனிடையே நிற்‌கிற‌தே அலைய‌ற்ற‌ "நீர்"

22 September 2010 at 16:46

@parthasarathy...

nalla take on the subj!
thanks!

22 September 2010 at 22:29

@ sk..

thanks!

22 September 2010 at 22:29

@chithra...

thanks!

22 September 2010 at 22:29

@RISHABHAN...

thanks!

22 September 2010 at 22:30

@sundarji...

thanks a ton!

22 September 2010 at 22:30

@kalyan..

athellaam athuvaa varuthu! :D

thanks!

22 September 2010 at 22:31

@jeevi...

ungal ennangalum mika azhakaaka ullathu!

nanri!

22 September 2010 at 22:32

@ priya...

thanks!

22 September 2010 at 22:32

@thakkudu...

thanks sir!!

22 September 2010 at 22:33

@vasan...

"wah" sir!

22 September 2010 at 22:33

வணக்கம் மாதங்கி. நலமா? ரொம்ப நாள் ஆச்சு உங்க தளத்த வாசிச்சு. இந்தியா வந்திருந்தேன். ஆனா உங்கள சந்திக்க வாய்ப்பு கிடைக்கல. அடுத்தமுறை கண்டிப்பா சந்திக்கணும்.

கொஞ்சம் தெளிவாத்தான் எழுதுங்களேன்... ஒரே வண்டலா இருக்கு...;) :P சுவையும் சத்தும் வண்டல்ல தான் இருக்கு.. அதுக்கென்ன செய்றது?

எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம். நன்றி.

24 September 2010 at 11:36

@ramakrishnan...

thanks!

25 September 2010 at 11:15

அடித்தளத்தில் இருப்பவை எல்லாம் வண்டலுமல்ல.
வண்டல் எனச்சொல்பவை எல்லாம் அல்லதும் அல்ல.

உலகத்தே வாழும் பெரும்பாலானோர் தம் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே
முனைந்து காணப்படுகின்றனர். இலக்கை நோக்கிச் செல்கையில் தாம் செல்லும்
வழியின் அறத்தைப்பற்றி அவர்கள் பெரிதும் நினைப்பதில்லை.
அவர்கள் மனதிலே பெரும்பாலும் பொறுமை இல்லை. பொறாமை இருக்கிறது.
அடக்கம் குறைந்து ஆணவம் மேலோங்குகிறது.
இன்பத்தில் எல்லைகள் நீண்டுகொண்டே செல்கையில்
ஈகை என்பதே பொருளற்று போய்விட்டது.
இந்நிலையில், இக்காலத்தில் , பொதுவாக, ஒரு சராசரி மனிதனின் மனதில்
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவை யாவும்
மேலோங்கும் எண்ணங்கள் .
மேல் தளத்தில் நிற்கின்றன. .
அன்பும் அறனும் அடக்கமும்
இசையும் ஈகையும்
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்
வாடுகின்ற மனித நேயமும்
வண்டலாய் அடிமனதில்
மறைகின்றன.
மடிந்துவிடுகின்றன் பின்
மறந்துவிடுகின்றன.

கடலின் அடித்தளத்தில் தான்
முத்து கிடைக்கிறது.
பாற்கடலின் வண்டலில் தான்
அமுதம் கிடைத்தது.

சுப்பு ரத்தினம்.

27 September 2010 at 08:47

@suri...

thanks!

5 October 2010 at 22:33

Post a Comment