"வீடு வாடகைக்கு"  

Posted by Matangi Mawley


"நம்ம 127 வாடகைக்கு விட்டாச்சு, தெரியுமோன்னோ"?
சாந்தா மாமிக்கு மட்டும் எல்லா விஷயமும் அத்துப்படி! "ரேடியோ மாமி" ன்னு தான் அவாளுக்கு பேரே, தெருல!
"யாரு வரப்போறாளாம்"?
"யாரோ Bank Manager -ஆம். ஒரே பொண்ணாம். அதனால தான் உன் காதுல போட்டு வச்சேன். நம்ப கிஷ்ணனுக்கும் வயசாறதே" அப்டின்னா ரேடியோ மாமி.
"நல்ல காரியம் பண்ணினேள் மாமி! நானும் இந்த வருஷம் எப்படியும் கிருஷ்ணன் கல்யாணத்த முடிச்சுடணும்னு ஒரு வைராக்யத்தோட இருக்கேன். இவரான்னா- நடக்க வேண்டியது நடக்கும்-னு இருக்கார். நம்ப புள்ளைக்கு நம்ப பண்ணலேன்னா யாரு பண்ணுவா? நீங்களே சொல்லுங்கோ"!
"வாஸ்தவம் தான்". அப்டின்னா ரேடியோ மாமி. அந்த மாமிக்கு வந்த வேல முடிஞ்சுது.
"அது சரி..! அவா நம்பளவாளா"? ஆச்சு! சாவி மாமிக்கு அடுத்த கவலை.
"அப்டிதான் நெனைக்கறேன். வரட்டுமே! இங்க தானே இருக்கப் போறா! தெரிஞ்சுண்டா போச்சு..."- அதானே! ரேடியோ மாமியா கொக்கா!

***

"பொண்ணு நல்ல துரு துரு-ன்னு இருப்பாளாம். எல்லாம் நம்மளவாதான். இப்போதைக்கு அவ அப்பா மட்டும்தான் ஜாக வந்துருக்காராம். அம்மாவும் பொண்ணும் அப்பறமா வருவாளாம்"- இது ரேடியோ மாமியோட latest news !
"நீங்க Manager -அ பாத்தேளா மாமி"? ன்னு சாவி மாமி கேட்டா.
"இல்ல-இல்ல. 128 ல நம்ம சுஜி இருக்கோன்னோ? அது சொல்லித்து"!
"அம்மாவும் பொண்ணும் எப்ப வராளாம்"?- சாவி மாமி கவலை அவாளுக்கு.
"அடுத்த வாரமே வந்துடறதா கேள்விப் பட்டேன். நீ எதுக்கும் கிருஷ்ணன் காதுல போட்டு வை. நம்ப பண்ணறத பண்ணிண்டு- அப்புறம் அவன் மாட்டேன்னுட்டான்னா"?- அப்டின்னு நூறு வார்த்தைக்கு ஒரு வார்த்தையா சொன்னா ரேடியோ மாமி!
"தோ! இன்னிக்கே கிருஷ்ணன ஒரு வார்த்த கேட்டுட்டா போச்சு..."- சாவி மாமி களத்துல எறங்கிட்டா!

***

"அவாள்ளாம் வந்துட்டாளா, மாமி"?- சாவி மாமி ஆர்வமா கேட்டா.
"எல்லாம் வந்தாயுடுத்து..."- அப்டின்னு சலிச்சுண்டா, ரேடியோ மாமி!
"ஏன் மாமி? என்னாச்சு? நம்பளவா இல்லையா என்ன"?- அப்டின்னா சாவி மாமி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல..."ன்னு இழுத்தா ரேடியோ மாமி!
"நீங்க சொன்னேளேன்னு கிருஷ்ணன் காதுல வேற போட்டு வெச்சேன்.. என்ன நடந்துதுன்னு சொல்லுங்கோ மாமி.."- சாவி மாமிக்கு suspense தாங்கல!
"நேத்திக்கு தான் அவாள பொய் பாத்துட்டு வந்தேன்..."- அப்டின்னு ஆரம்பிச்சா ரேடியோ மாமி...

***

இருவது வருஷம் கழிச்சு, ஒரு நாள்-

மாலி:
Bank Manager - அவரோட ஒரே பொண்ணோட, மாமிய அழைசிண்டு குடி வரார்னு தான் அவாளுக்கு தெரியும். அந்த பொண்ணு இப்போதான் L .K .G படிக்க போறதுன்னு அவாளுக்கு தெரியுமா என்ன...?
மாதங்கி: ச! Superb plot பா! Blog -ல போடலாம்....
மாலி: Serious - ஆ எழுதி- நீ எப்போதும் English ல எழுதும்போது பண்ணறாப்ல யாரயாது close பண்ணிடாதடா....

This entry was posted on 26 September, 2010 at Sunday, September 26, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

ஹஹஅஹா .. முடிவுல செம காமெடி

26 September 2010 at 14:57

எனக்கு பிடிச்சது இந்த வேடிக்கையான கதை.
தமிழ்லையும் சரி ஆங்கிலத்திலையும் சரி , நீங்க நன்னா சரளமா எழுதரேள்!!!.

26 September 2010 at 15:21

very funny

26 September 2010 at 18:02

@LK...

thanks!! :)

26 September 2010 at 18:27

@parthasarathy...

thanks a ton!! :)

26 September 2010 at 18:27

@kalyan..

:) thanks!

26 September 2010 at 18:27

முடிவில் கொடுத்த ட்விஸ்ட் எதிர்பாராதது. ரசித்தேன்

26 September 2010 at 18:54

@rishabhan...

:) thanks!

26 September 2010 at 18:56

பாவம் அந்த கிருஷ்ணன் நிலைமையை நினைச்சா சிரிப்பா வருது!!...:)) ரேடியோ மாமி எல்லா தெருலையும் உண்டு போலருக்கு!!..:) நன்னா இருந்ததுப்பா!
அப்பரம் இந்த சார்! மோர்! எல்லாம் போடாதீங்கோ! தக்குடு! மட்டும் போதும்..:P

27 September 2010 at 02:03

இல்ல.. அந்த கிருஷ்ணா முகம் எப்படி போய் இருக்கும்!!!!!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

27 September 2010 at 02:21

@thakkudu...

krishna character ellaam karpana thaan.. sambhavam aanaa unmai... keezha vara anga appa-kum, enakkum nadakkara conversation mattum nadanthathu.. nalla kathayaa irukkennu konjam kannu mookku kaathu seththu vittaen! :)

radio maami-nnu oru maami- ella oorleyum iruppathiley aachcharyam illa! :D ivaala polavalaalathaan namma vaazhkaye nagararathu!

27 September 2010 at 09:03

@chithra...

:) itha pola oru situation-la oru aal-oda face pora direction-a paakkanum-nu enakkum aasayaathaan irukku! :D

27 September 2010 at 09:04

இந்த வெறும் யூகத்துலயே நடக்கிற பேச்சுக்கள் இருக்கே-அதுக்கு கண்ணு மூக்கு இல்லேன்னாக் கூட ஒரு தனி கிக்.வழக்கம் போலவே ஒங்க உரையாடல் அக்மார்க் மாதங்கி ஸ்டைல்.

27 September 2010 at 11:14

நல்ல காமெடி...

27 September 2010 at 11:25

@sundarji..

:D true-true!

Thanks!

27 September 2010 at 14:38

@swarnarekha...

thanks!

27 September 2010 at 14:38

Reflects some K.B`s movie charectors. Radio maamy shall be called as TV maamy. Nanna padam Kattraa.

28 September 2010 at 14:27

முடிவு ரசிக்கும் விதத்தில் வித்தியாசமாக இருந்தது !

29 September 2010 at 14:10

ஹா ஹா ஹா... சூப்பர்... இப்படி ஒரு முடிவு எதிர்பாக்கல... ஹா ஹா ஹா... nice flow in dialogues... good write up Matangi

30 September 2010 at 20:30

எதார்த்தமாக இருந்தது சம்பவங்களாக கோர்த்த விதம்..127...128 பரிமாறல்கள் ரேடியோமாமியொடு வெகு எதார்த்தம்....அப்பா மகளிடம் கிண்டலாக சொன்னதும் வெகு வெகு..:)

2 October 2010 at 22:21

Superb..

http://thanglishpayan.blogspot.com

4 October 2010 at 18:40

@priya...

thanks!

5 October 2010 at 22:34

@ appaavi....

thanks! :D

5 October 2010 at 22:34

@ padmanabhan....

thanks!

5 October 2010 at 22:34

@thanglish....

thanks!

5 October 2010 at 22:35

@vasan..

hope thts a good thing! :)

thanks!

5 October 2010 at 22:35

Post a comment