பாட்டி சமையல்  

Posted by Matangi Mawley

இதுக்கெல்லாம் ஒத்தி சமைச்சு போடறேன் பாருங்கோ! மொதல்ல என்ன சொல்லணும்! நான் என்ன பண்ண முடியும்? நேக்கு தெரிஞ்சது இவ்வளவுதாண்டாப்பா! ஏதோ ஒரு உப்மாவ பண்ணி- "இது எங்க பேபியே அவ கையால செஞ்சது"-ன்னு பாவம் என்ன இவர் தலேல கட்டிட்டா- எங்காத்துல! இப்ப நான் பண்ணறது எல்லாம் நானா கத்துண்டு பண்ணறது தான்! ஒத்தி கஷ்ட பட்டு நாலு மணிக்கு எழுந்துண்டு சமைச்சு வெச்சுட்டு வேலைக்கு ஓடறாளே- செத்த நன்னா இருக்குன்னுதான் சொல்லுவோமே- ன்னு உண்டா? "பாட்டி சம்பாராட்டம் இல்லை"- யாம்!

இத மொதல்ல அது பாட்டியாத்துல லீவுக்கு உட்டதுதான் தப்பு! ஒண்ணர மொழ நீளத்துக்கு நன்னா நாக்க வளத்துண்டு வந்து நிக்கறது! எங்கம்மா ப்ரமாதமா சமப்பாதான். இல்லங்கல. சில பேர் கை பக்குவம் அப்டி. அப்டியே கண கச்சிதமா அமஞ்சுடும்! தோ! இவரும் அப்டிதான். எம்பொண்ண கேளுங்கோ! அதோட "Ranking" படி 1st rank பாட்டி சமையல், 2nd rank- அதோட அப்பா சமையல்!

சனிக்கழம சாயந்தரமா ரெண்டுமா கெளம்பி- ஸ்ரீரங்கம் தெக்கு சித்தர வீதி Market லேர்ந்து எல்லா காரிகாயும் வாங்கிண்டு வந்து- ஞாயத்தி கெழமயானா- காத்தால அவியல்! அவ அப்பா special! ஏதோ- அவர் புண்ணியத்துல நாலு கரிகா உள்ள போரதேன்னு சந்தோஷ பட்டுக்கணும். ஒரு சில அப்பா special இருக்கு- அப்புறம் பாட்டி special! அம்மாக்கெல்லாம் ஒண்ணும் கெடயாது! அதுக்கே எட்டூருக்கு இருக்கு நாக்கு! இவர் வேர கூட சேந்துண்டு நன்னா ஏத்திவிட வேண்டியது!

School போறதுக்கு முன்னாடி, பருப்புஞாம் சாப்டு போடான்னு hot pack ல வெச்சுட்டு போனா- எங்காத்து மஹானுபாவர் அதுல மிளகு, ஜீரகம்- அது இதுன்னு என்னன்னத்தையோ போட்டு- ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் பிரசாதமாட்டம் பண்ணி கொடுக்க வேண்டியது!

வீணை வாசிப்பாரே- சிட்டி பாபு- ரொம்ப வருஷம் முன்னாடி அவர ஒரு train ல போறச்ச பாத்து friends ஆய்ட்டாராம்! சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது! அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்! அவ்வளவுதான்! இதுக்கு பழக்கி விட்டாச்சு! இது farex சாப்ட காலத்லையே அதுல ரசத்த கலந்து குடுடீங்கும்! இப்டி காரமா சாப்டா கோவம் தான் வரும்!

நம்பளால இந்த வேலைளாம் செய்ய முடியாதுடாப்பா! நேக்கு தெரிஞ்சதுதான் நான் பண்ணுவேன்! ஏதோ- ஒரு தோசயாது பண்ணி இது கிட்ட ஒரு rank வாங்கிடலாம்னு பாத்தா- "தாயி தான் தோச நன்னா பண்ணுவா" ங்கறது! அதுக்கு சின்ன வயசுல "ர" வராது! அதனால அது பெரியம்மாவ தாயி-ன்னு கூப்டும். ஆனா இன்னி வரைக்கும் அந்த வார்த்த அதுக்கு எங்கேர்ந்து கடச்சுதுன்னு தெரியல!

போரும்! போரும்! எல்லாம் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சமச்சா போரும். நேக்கு கல்யாணமான புதுசுல "மீனாக்ஷி மாமி" புஸ்தகத்லேர்ந்து படிச்சு கத்துண்டதுதான் இப்ப இதுக்கு lunch box கட்டி தரது! அது போரும்! அதுக்கா என்ன தெரியும்? முருங்கக்கா மாங்கா போட்ட சாம்பார்-லேர்ந்து, முருங்கக்கீர தேங்கா போட்ட கரி வரைக்கும் பாட்டி சமையல் ருசி நாக்குல ஏறி கடக்கு, அதுக்கு! இதுக்கெல்லாம் இப்ப தெரியாது! இதுக்கு ஒண்ணு பொறந்து- அதுக்கு இது வடிச்சு கொட்டும்போது- அது- "எங்க பாட்டி சமையல் தான் ஒசத்தி"ங்கும் பாருங்கோ- அப்ப புறியும், என் அரும!

This entry was posted on 18 August, 2010 at Wednesday, August 18, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

37 comments

cute!!!

18 August 2010 at 22:30

பேச்சு வழக்கு சூப்பர்..

18 August 2010 at 23:26

மாதங்கி வழக்கம்போல் மிக மிக அருமை ... ஆமாம் அம்மா பாவம் இல்ல

19 August 2010 at 07:23
Anonymous  

மாதங்கி எங்க வீட்லே கூட பாட்டி பிசைஞ்சு தந்த பருப்பு சாதம் பத்தி எப்போதும் பேச்சு வரும் என்னவருக்கு என் பாட்டி சமையல் தான் ரொம்ப பிடிக்கும் ...

19 August 2010 at 11:28

சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது! அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்! அவ்வளவுதான்! இதுக்கு பழக்கி விட்டாச்சு! இது farex சாப்ட காலத்லையே அதுல ரசத்த கலந்து குடுடீங்கும்! இப்டி காரமா சாப்டா கோவம் தான் வரும்!
சபாஷ்.. பரிமளிக்கிறது..எழுத்து வாசனை ஆளைத் தூக்குகிறது.

19 August 2010 at 18:08

அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்//

ரொம்ப நல்லா இருக்கும், சாப்பிட்டுப் பார்த்திருப்பீங்க தானே?? ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா மிளகாய்ப் பொடி பண்ணும்போதே அதிலே முதல்லே மிளகாயை வறுத்து அரைக்கும்போது கொஞ்சம் வெல்லமும், சேர்த்துடுவேன் உப்போடு, அப்புறம் பருப்பு, கடைசிலே எள் போட்டு அரைச்சதும் அந்த மிளகாய்ப் பொடியை வெண்ணெய் போட்டு ப்ரெட்லே டோஸ்ட் பண்ணிட்டுத் தடவிட்டுச் சாப்பிடுங்க, சொர்க்கமே உங்க பக்கம் தான்!

19 August 2010 at 21:11

அது சரி, அது எப்படி எங்க வீட்டிலே வந்து ஒட்டுக் கேட்டுட்டு எழுதறீங்க?? :)))))))))) அப்படியே எங்க வீட்டுப் பேச்சுத் தான். நல்லா ரசிச்சேன்!

19 August 2010 at 21:11

Excellant!

இந்த மாதிரி எழுதறத்துக்கு நுணுக்கமான ஆப்ஸர்வேஷன் வேணும். அதுக்கு மொதல்லே மனுஷாளைப் படிக்கணும். அதோட, ஒவ்வொரு கேரக்ட்டரையும் பார்த்து வியக்கணும்.இந்த வியப்பு ரசனையாப் போய் இப்படி ஒரு ரசிப்பா மாறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கணும்.
அட்சரம் பிசகாம அப்படியே வந்திருக்கு.
வாழ்த்துக்கள், மாதங்கி!

19 August 2010 at 22:34
This comment has been removed by the author.
20 August 2010 at 10:03

அம்மாவின் பேச்சு மட்டுமல்ல , அம்மாவின் எண்ண ஓட்டங்களுக்கே உருக்கொடுத்து,
காவ்ய ரசனையோடு எழுதியிருக்கிறாய்.. மிகப் பிரமாதம் ...வாழ்த்துக்கள்
மாலி

20 August 2010 at 10:57

அழகு.

20 August 2010 at 15:11

//வீணை வாசிப்பாரே- சிட்டி பாபு- ரொம்ப வருஷம் முன்னாடி அவர ஒரு train ல போறச்ச பாத்து friends ஆய்ட்டாராம்! சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது!//
SUPER ADI, NETHI ADI
// அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்!//
LOOKS A VERY ODD COMPINATION,SHOULD BE DIFFERENT & TASTY.
/அவ்வளவுதான்!/
ச‌மைய‌ல், சுமாரா இருந்தா என்ன‌?
ப‌டைப்பு அம‌ர்க்க‌ள‌ம்.

20 August 2010 at 18:18

vasan, பொரிச்ச கூட்டு/வாசன்???? :)))))))

20 August 2010 at 20:37

@chithra...

:) thnx!

22 August 2010 at 11:13

@ jailani...

thanks!!!

22 August 2010 at 11:14

@ LK..

:D hee..he.. thanks!

22 August 2010 at 11:14

@ sandhya..

athu ennamo- paatti samayaley thani thaan! :D

22 August 2010 at 11:15

@ rishaban...

:) hee..he! thanks!!

22 August 2010 at 11:15

@ geetha....

mam! superb! yummy!!!! :D :D

22 August 2010 at 11:16

@geetha...

ottellaam onnum illai!! :D

22 August 2010 at 11:18

@ jeevi...

wow! thanks a ton sir!!

22 August 2010 at 11:18

@ appa...

:) thanks! thanks!! :D

22 August 2010 at 11:18

@ kamlesh..

thanks!!

22 August 2010 at 11:19

@ vasan...

:) thanks!

22 August 2010 at 11:20

@ appa..

nadula neeyum nannaa samappaennu sollirukkene- atha paththi onnumey sollalaye! :D

22 August 2010 at 11:21

மெல்லிசா ஒரு புன்னகை இல்லாம ஒரு வரி கூட படிக்க முடியல.... ரொம்ப நன்னா எழுதறேள்...

23 August 2010 at 02:21

@ ramakrishnan..

:) punnagaiyoda oru- thanks!

23 August 2010 at 11:45

//இதுக்கு ஒண்ணு பொறந்து- அதுக்கு இது வடிச்சு கொட்டும்போது- அது- "எங்க பாட்டி சமையல் தான் ஒசத்தி"ங்கும் பாருங்கோ- அப்ப புறியும், என் அரும!//

சூப்பர் words இது... அத்தனையும் நிஜம் நிஜம் நிஜம்... அம்மாவா இப்படி பொலம்ப விடலாமா மாதங்கி... இப்போ எப்படி? ஸெல்ப் கூகிங்ஆ? இப்போ அம்மா அருமை தெரியறதா? ஹா ஹா ஹா ஜஸ்ட் கிட்டிங்...nice post...

25 August 2010 at 21:25

@appavi...

:) intha dialogue-ku ellaam naanga asara maattom... ellam avanga amma enga amma kitta sonna dialogue-a thaan irukkum! :D

25 August 2010 at 22:27

பாட்டிகள் மார்க் வாங்கற ரகசியம் என்ன தெரியுமோ? அவா அவா கொழந்தைகளுக்குப் பண்ண விட்டத பேரன் பேத்திகள்ட்ட ஜமாவாக் காட்டிண்டு வரிஞ்சு கட்டி நல்ல ருஜிய ஸ்தாபிச்சுடுவா.எல்லா எடத்லயும் நடக்றதுதான் இது. (ஆனாலும் கொழந்த சொல்ற மாதிரி பாட்டிம்மாக்களோட சமையல்லேருந்து பொடவை வாசனை வரைக்கும் அதுக்கு ஈடா எதுவும் வராதுதான் மாதங்கி.)

2 September 2010 at 17:09

@sundarji...

:) unmai thaan.. aanaa en paatti en ammakkellaamum nannaa thaan samachchaa gnaratha en ammavey oththukkaraa...

2 September 2010 at 17:29

மாதங்கியும் பாட்டிப் பைத்தியமா:)
உண்மைதான். நானும் எங்க அம்மாவை நிறைய சீண்டி இருக்கேன்.:)

4 September 2010 at 20:14

@வல்லியசிம்ஹன்....

அமாம்... பாட்டி சாம்பார் தான் உலகத்திலேயே best!!! :D

7 September 2010 at 22:39

நல்ல பதிவுங்க மாதங்கி
பாட்டிம்மாவை நினைவுட்டியதற்கு நன்றி.

15 September 2010 at 21:58

நம்பாத்து பொல்லாத கோந்தை இவ்ளோ அழகா எழுதர்துக்கு பாட்டி சமையல்தான் காரணமா?? நடுல மாலி சாருக்கு ஐஸ் வேர இதுல!!...:)) தக்குடு எப்போதும் அம்மா கட்சி தான். பெங்களூருக்கு கிளம்பி வந்தபோது அம்மா புடவையை எடுத்துண்டு வந்த சமத்துக்கொடமாக்கும்...:)

நன்னா இருந்தது மாதங்கி.

18 September 2010 at 01:59

@ priya r...

thanks!

22 September 2010 at 22:26

@thakkudu..

ice-ellaam onnum vekkalai... ullatha ullapadi sonnen.. apdiyaathu nalla saappaadu kadaikkarathaa- rosham vanthu oruththar samaippaalaannu! :D

22 September 2010 at 22:27

Post a Comment