As I'm Suffering from...  

Posted by Matangi Mawley


காலங்காத்தால மூஞ்சிய இப்படி வெச்சுண்டு வந்து நின்னா, பின்ன கோவம்வருமா வராதா? நீங்களே யோஷ்சு பாருங்கோ! அதெப்டி நெனச்சொடனே fever வருமோன்னுதான் நேக்கு புறியல! மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு, கண்ண தொறக்கவே முடியாதெக்கி வந்து நிக்கறது! தொட்டு பாத்தா ஒண்ணும் சூடா இல்ல. ஆனா உள்ளுக்குள்ள "கொண கொண" ன்னு இருக்கும்போல தான் தோணறது!

தெருக்கோடில clinic ஒண்ணு இறுக்கு. ஆனா இத கெளப்பி கூட்டிண்டு போணுமே! அப்றம் சமயல யாரு கவனிப்பா? துளி மெளகு தட்டி போட்டு
கொட்ரசம் வேச்சாச்சுன்னா ஆச்சு! பின்னாடியே என் வால புடிச்சுண்டு அப்போலேர்ந்து அலைஞ்சுண்டுருக்கு. "Leave Letter" கையெழுத்து போடணுமாம்! எம்பொண்ணு என்ன சமத்துன்னு நெனச்சுண்டேன்!

அவர் ஆபீஸ் போற வழீல school- குடுத்துட்டு போய்டலாம். நோட்புக்- லேர்ந்துபேப்பர கிழிச்சு, ink பேனாவால அழகா எழுதிருக்கு, கொழந்த!

From
M. Mathangi
II, 'A'

To
The Class Teacher
II, 'A'

Miss,
As I am suffering from fever, I am unable to attend class. Please grant leave for one day only.

Thanking You
Yours Faithfully,
M. Mathangi

M. Pushkala
(Parent's Signature)

ஏதோ! இது school-லுக்கு
போலேன்னா அவா class ஒரு நா அமைதியாதான் இருக்கும். தினத்துக்கு ஒரு 'complaint'. டைரி- "Always talking", "Beating other children"- னு ஏதாவது ஒண்ணு இருந்துண்டுதான் இருக்கும். என்ன பண்ணமுடியும்? ஆத்துல அதுக்கு யார் இருக்கா பேசறதுக்கு? சண்டபோடரதுக்கு? அங்கதானே எல்லாம் பண்ணியாகணும்!

ரசன்ஜாமும், நார்தங்காயும், நாலுவா ஊட்டி உட்டுட்டு- டாக்டர்- கூட்டிண்டுஓடியாயுடுத்து! அவரான்னா- ஊசி ஊசி-ன்னு பயமுறுத்துவார் கொழந்தைய! ஒரே அழுக! அந்த fever பாட்டுக்கு அதுவா போயிருக்கும், இந்த மனுஷன் இப்படிஅழவிடாம இருந்தா! மருந்து மாத்தறைய தவிர, சாக்லேட் வேற வாங்கணும் இப்போ! இந்த அழுகைய நிறுத்த!

போன வாரத்லேர்ந்து
சேத்துண்டுருக்கு! ஏதோ இந்த "ஆசை" சாக்லேட் அட்ட ௨0 சேத்தா, வாய்ல மாட்டிக்கற பல்லு தருவாளாம். மெனக்கட்டு, ஒரு வாரமா தின்னு தீத்து, ஒரு வழியா ௨0 அட்ட சேத்து வச்சிண்டுருந்துது! அதையும் கையோட வாங்கிண்டு, மருந்து மாத்தற எல்லாத்தையும் வாங்கிண்டு, ஆத்துக்கு வந்ததுதான் கொறச்சல்! ஒடனே குதிச்சுண்டு பொய் டிவியபோட்டாயிடுத்து!

நமக்கு ஒடம்பு செரியில்லையே, பேசாம தூங்குவோமே கொள்ளுவோமே- ன்னு உண்டா! ஒண்ணு டிவி, இல்ல பேச்சு! ஏதாவது ஒரு சத்தம் இருந்துண்டே இருக்கணும் போலருக்கு! அந்த டிவில "வயலும் வாழ்வும்" தான் பொழுதன்னிக்கும் ஓடும் வேற! அதையும் உக்காந்து "சந்திரகாந்தா" பாக்கராப்லையே பாத்துண்டுருக்கு!

"Yours Faithfully"- ன்னு மட்டும் எழுத தெரியறது! எல்லாம் school- கு போகாம இருக்கறதுக்கு ஒரு சாக்கு! ஆனா சும்மா சொல்லப்டாது! என்னமா மூஞ்சியவெச்சுண்டு நின்னுது காலேல! இந்த ஒரு விஷயத்துக்குதான் வருஷா வருஷம் எம்பொண்ணுக்கு "fancy dress"- "first prize" கொடுக்கறது! ஒரு வாரம் முன்னாடிதான், ஆதி சங்கராச்சார்யா வேஷம் போட்டுண்டு, "பஜ கோவிந்தம்" சொல்லித்து! "First prize"-னா சந்தோஷபடாதோ? "Second Prize"- கு ஒரு pencil box கொடுத்துருக்கா! அதுதான் பாக்க அழகா இருக்காம். அதுதான் வேணுமாம். இப்பகொடுத்துருக்கற cup வேண்டாமாம்! ஒரே அழுக! "டேய் இதாண்டா ஒசத்தி" ன்னா- அதுக்கென்ன தெரியும், பாவம்! அதுக்கு pencil box, கப்- னு தான் தெரியும்! எம்பொண்ணு ஒரு படி மேல! "1" விட "13" தான் பெரிசுன்னு, அங்கேர்ந்து பெருமையா ஓடி வந்து- "அம்மா! நான் 13th rank வாங்கிருக்கேனே
" ன்னு- சிரிச்சுண்டே சொல்லும்! அத திட்ட தான் மனசு வருமா, அடிக்கத்தான் கைவருமா?!

ஒரு வழியா அந்த டிவி- கு உத்தரவு கொடுத்து- இத தூங்க பண்ணியாச்சு! கிழிஞ்சநாரா கெடக்கு- பாவம்! அது அந்த "பஜ கோவிந்த"த்த ஸ்பஷ்டமா சம்ஸ்க்ருதத்துல சொன்னதுலேர்ந்தே நான் நெனச்சுண்டுதான் இருந்தேன்! எல்லார் கண்ணும் பட்டுடுத்து பாவம் கொழந்த மேல! தூங்கட்டும்... நானும் செத்த அப்டியே
கட்டய சாய்க்கறேன்...

This entry was posted on 01 May, 2010 at Saturday, May 01, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

42 comments

நன்னா இருக்கு !!

:)

1 May 2010 at 17:27

@ nesamithran...

nanri! :)

1 May 2010 at 17:28

துளி மெளகு தட்டி போட்டு கொட்ரசம் வேச்சாச்சுன்னா ஆச்சு!
ஆஹா.. படிக்கும்போதே மணக்கிறது..

1 May 2010 at 18:54

@rishabhan..

hee..he! :D quite understandable! :)

1 May 2010 at 19:24

அருமையாக தமிழ் ல எழுதறீங்க.... ரசிச்சு படிக்க முடியுது...

ஆனால், ஆழமான விஷயங்களை ஏன் ஆங்கிலத்தில் எழுதுறீங்க ? ஒரு வேளை , ஆங்கில பதிவு , தமிழ் பதிவு இரண்டையும் எழதுவது வேறு வேறு நபரா ?

1 May 2010 at 19:26

I could relate with this post and memories of my younger days as a child and as a dad came rushing.
You write extremely well
kpartha12@gmail.com

1 May 2010 at 19:38

@ paarvayaalan..

thanks!


aangilam enakku iyalbaakavey varakkodiya oru mozhi. thamizhil intha "experiment" intha varuda thuvakkaththilirinthey! etho intha alavirku thamizh ezhutha mudikirathu enbathey oru viyappu, enakku!

1 May 2010 at 19:43

@ parthasarathy..

thanks!

1 May 2010 at 19:44

பேஷ், பேஷ்........ நன்னா இருக்கு!

1 May 2010 at 22:28

@ chitra..

thanks! :D

1 May 2010 at 22:49

கலக்கல்!
:)

1 May 2010 at 23:55

@ shankar...

thanks!

2 May 2010 at 00:04

Personal inspiration and experience??? :-) The mother's பட பட பட nature comes out well.

2 May 2010 at 00:31

@ ramm..

personal experience only... all the dialogues used are authentic.. belongs to my mom!

2 May 2010 at 00:34

அருமைய எழுதறீங்க. உங்கள் எழுத்தில ஒரு இயல்பு நடை இருக்கு. தொடர்ந்து எழுதுங்க .

2 May 2010 at 06:19

@lk..

thanks!

2 May 2010 at 10:04

சில காலங்களுக்கு பிறகு திரும்ப என் அய்யராத்து friends கிட்ட பேசியது போல இருந்தது...

நன்னாருக்கு... :-)

2 May 2010 at 14:37

நேக்கு ஒண்ணு புரிய மாட்டேங்றது.எப்பவும் நீங்க ஏன் அல்லோபதியவே மல்லுக்கட்றேள்.கொழந்தேளுக்கு இருக்கவே இருக்கு பேஷா ஹோமியோபதி.ஒரு தாட்டி ட்ரை பண்ணேள்னா அப்றம் விடவே மாட்டேள்.ஆமா.அருமை மாதங்கி மௌலீ.
தவிர நீங்க சொல்றாப்ல இல்லாம தமிழ் நன்னாத்தான் வருது ஒங்களுக்கு.இங்க்லீஷ் நன்னா வந்தாலும் கொட்ரசம் மாதிரி பீட்ஸா வருமான்ன?எழுதிண்டே இருங்கோ.தானா மடமடன்னு வந்துடும் மணிப்ரவாளமா.

2 May 2010 at 14:46

@ anbuththozhan...

thanks!

2 May 2010 at 15:17

@ sundarji..

alopathy enga amma enakku koduththathu... :) n it is not mouli.. it s maa-lii..(mawley)!

thanks for the encouragement! :D

2 May 2010 at 15:18

:-) :-)

Aahaa, paravaayillaiyae. Rendaan classlayae leave letter for self ellaam ezhudhiyirukkeenga. ;-)

2 May 2010 at 19:43

@ramm..

ya.. school was known for its rules.. no letter.. no leave! :D

2 May 2010 at 19:57

ROTFL :-)

உங்க நடை ரொம்ப சரளமா இருக்கு. simply superb and interesting.

ஆழமான அறிவையும், இலேசான பத்திகளையும், ஒரே மாதிரி அனுபவிப்பது போல எழுதுவது ரொம்ப கடினம். நீங்க அதை லாவகாமா செய்யறீங்க. அது, உங்களுக்கு தன்னிச்சையாகவே வரும் போலிருக்கு.

தொடர்ந்து எழுதுங்க... நன்றி.

3 May 2010 at 20:52

@ ramakrishnan..

:D nanri.. !

3 May 2010 at 22:06

the narration is too gud yar,,, indha madhiri nala yeludha vendiyadhu but i want to make a try in tamil nu sollavendiyadhu,,enna oru thaan adakam,,,lols,,,

cheers,,write more,,,

7 May 2010 at 23:07

@jai..

thnks!

8 May 2010 at 11:57

மைத்துளிகள் என் மேலும் தெறித்தது மாதங்கி அருமை...

10 May 2010 at 02:14

@thenammai..

nanri! :)

10 May 2010 at 06:24

So cute!!! ரொம்ப ரசிச்சு படிச்சேன்! உங்கம்மாவை ரொம்பத்தான் படுத்தி எடுத்திருக்கேள் போல இருக்கே! :))

19 May 2010 at 11:31

@ananya..

amma romba rora pattukkaraa.. "naan solratheyellaam intha kaathula vaangindu antha kaathula vittudara"nnu.. athaan.. ippadi avaa thittrathayellaam pathivu pannidaraen! :)

19 May 2010 at 12:52

Hey Matangi,

Been following your writings through Srishti. Inniku than blog pakkam vandhen. Nalla try. Super ah iruku padika. Keep it going. will be back often to read them :)Bhramana tamizh nalla irukku. :)

Nithya
www.4thsensecooking.com
www.nitsarts.blogspot.com

22 May 2010 at 00:02

@ nithya..

:) ..thnx!

22 May 2010 at 11:35

சூப்பர்...நாமளும் இப்படி எல்லாம் ஸ்கூல் கட் அடிச்சது தானே... போனா போறது விடுங்கோ.. கொழந்த ஒரு நா தானே... அம்மாவ தாச்சிண்டு தூங்கட்டும் நாள் பூரா....

27 May 2010 at 20:34

@appaavi..

:D hee..he

27 May 2010 at 23:10

ரொம்ப நேச்சுரலா இருக்கு உங்க எழுத்து...அருமை. இத்தனை நாட்கள் படிக்காம இருந்திருக்கேனே...

3 June 2010 at 15:07

@ madurayampathi..

nanri!

3 June 2010 at 16:41

Are u sure you are only 22? :0)

Oh! I want to meet yr mom.

நல்ல நடை.

உங்க அம்மா உங்கள் எழுத்தில் மீண்டும் அந்த நாட்களை வாழ்கிறார்.
க்ரேட் கோயிங்.

4 June 2010 at 15:36

22 வயசு தான். :) 23 ஆனா சரியா display ஆக மாட்டேங்கறது.. நீங்க சொன்னது அழகா இருக்கு.. எங்க அம்மாவுக்கு நீங்கள் எழுதியிருக்கும் இந்த பின்னூட்டத்தை படித்தேன். :) அவளுக்கு மிகவும் பிடித்தது.. அது உண்மை என்றே ஊப்புக்கொள்கிறாள்..

4 June 2010 at 18:08

i just love the language!...the series is perfect! :)

13 June 2010 at 16:45

@tk...

thanks!

13 June 2010 at 18:56

Super.ஒரு இயல்பு நடை இருக்கு.

27 June 2010 at 00:53

@jeswanthi..

thanks! :)

27 June 2010 at 12:09

Post a comment